Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
ஐ | ஐந்து என்பதன் பெயரடை வடிவம் | the adjectival form of ஐந்து |
ஐக்கியநாடுகள் சபை | போரைத் தடுக்கவும் மனித உரிமை, சுதந்திரம், பண்பாடு போன்றவற்றைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட, உலக நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட சர்வதேச அமைப்பு | united Nations Organization |
ஐக்கியம் | இரண்டும் தனித்தனியானவை என்ற வேற்றுமை மறைந்து ஏற்படும் ஒன்றிய நிலை | fusion |
ஐதிகம் | (காலம்காலமாக இருந்துவரும்) கருத்து(ஊறிய) நம்பிக்கை | (traditional) belief |
ஐது | அடர்த்திக் குறைவு | sparseness |
ஐந்தாண்டுத் திட்டம் | நாடு முன்னேற்றம் காண்பதற்காகச் சில குறிப்பிட்ட இலக்குகளை நிறைவேற்றும் நோக்கத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு வகுக்கும் திட்டம் | five Year Plan (of the central government for planned economic growth) |
ஐந்தாம்படை | (ஒரு நாட்டை அல்லது அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்துகொண்டே) எதிரிகளுக்கு உதவிசெய்யும் கும்பல் | fifth column |
ஐந்து | நான்கு என்ற எண்ணுக்கு அடுத்த எண் | (the number) five |
ஐந்தொகை | (கடை முதலியவற்றில்) வரவு, செலவு, கொள்முதல், விற்றுவரவு, இருப்பு ஆகிய ஐந்தையும் சரிபார்க்கும் கணக்கு விபரம் | balance sheet |
ஐப்பசி | ஏழாம் தமிழ் மாதத்தின் பெயர் | the name of the seventh Tamil month, i |
ஐம்பது | பத்தின் ஐந்து மடங்கைக் குறிக்கும் எண் | (the number) fifty |
ஐம்பொறி | (காண்பதற்கான) கண், (கேட்பதற்கான) காது, (முகர்வதற்கான) மூக்கு, (சுவைத்தறிவதற்கான) வாய், (தொட்டறிவதற்கான) உடல் ஆகிய ஐந்து உணர்வுகளுக்கான புலன்கள் | the five sense organs |
ஐமிச்சம் | சந்தேகம் | suspicion |
ஐயந்??திரிபு | சந்தேகமும் குழப்பமும் | doubt or misgivings |
ஐயப்பாடு | சந்தேகத்தைத் தோற்றுவிப்பது | reservation about sth |
ஐயம் | சந்தேகம் | doubt |
ஐயர் | வேதமந்திரங்கள் சொல்லிக் கோயில்களில் பூஜைசெய்பவர் அல்லது திருமணம் போன்ற சடங்குகளை நடத்திவைப்பவர் | a (brahmin) priest |
ஐயனார் | கிராமத்தின் எல்லையில் (மண் குதிரையில் அமர்ந்து) காணப்படும் ஒரு காவல் தெய்வத்தின் பெயர் | a village deity (on horseback) on the outskirts of the village |
ஐயுறு | சந்தேகம் அடைதல் | have a doubt |
ஐயோ | ஒருவர் தன்னுடைய வலி, துக்கம், இரக்கம் முதலியவற்றைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் ஒரு குறிப்புச் சொல் | an interjection expressing pain, sorrow, pity, etc ஐயோ, கால்வலி உயிர்போகிறதே!/ ஐயோ, எங்களையெல்லாம் இப்படி அனாதையாக விட்டுவிட்டுப் போய்விட்டாயே?/ ஐயோ, அவனுக்கு இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா? |
ஐவேசு | சொத்து | property |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
