Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
ஓ-என்று | வலி, துக்கம் ஆகியவற்றின் தீவிரத்தை வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்பு | a term to express extreme pain or agony |
ஓகோ | ஒருவர் புதிய செய்தி ஒன்றைக் கேட்கும்போதோ தான் புரிந்துகொண்ட ஒன்று தவறு என்று அறிந்துகொள்ளும்போதோ பயன்படுத்தும் சொல் | a term of exclamation used when one comes to know |
ஓகோ-என்று | (பிறர்) மெச்சும்படியாக | impressively splendid |
ஓங்காரம்2 | பலத்த சப்தம் | loud noise |
ஓங்கி | (உயரத்தைக் குறிப்பிடும்போது) உயரமாக | to a lofty height |
ஓங்கு1 | (அடிக்கவோ வெட்டவோ ஒன்றை) உயர்த்துதல் | lift |
ஓங்கு2 | வளர்நிலையைக் காட்டும் முதன்மை வினைகளின் செயல் மேலும் உயர்வான நிலை அடைதல் என்ற பொருள் தரும் ஒரு துணை வினை | an auxiliary verb to indicate that the state expressed in the main verb may become better still |
ஓசி | இலவசம் | free of cost |
ஓசை | (ஒன்று மற்றொன்றின் மீது படும்போது ஏற்படும்) சப்தம் | sound |
ஓசைப்படாமல் | (ஒரு செயலைச் செய்யும்போது) சப்தம் ஏற்படாதவாறு | without making noise |
ஓட்டப் பந்தயம் | (குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துக் குறிப்பிட்ட தூரம்வரை) ஓடும் போட்டி | running race |
ஓட்டம் | ஓடுதல் | running |
ஓட்டல் | (பெரும்பாலும் தங்கும் வசதி இல்லாத) உணவு விடுதி | restaurant |
ஓட்டாஞ்சல்லி | உடைந்த மண் பாத்திரத்தின் சிறு துண்டு | a small piece from a broken earthenware |
ஓட்டாண்டி | (நல்ல நிலையிலிருந்து) பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டவன் | one who has been reduced to begging |
ஓட்டி | (வாகனத்தைக் குறிக்கும் சொற்களுடன் இணைந்து வரும்போது) ஓட்டுபவர் | (when added to vehicles) one who operates |
ஓட்டு2 | (தேர்தலில்) வாக்கு | (in election) vote |
ஓட்டுநர்/ஓட்டுனர் | பேருந்து, கார் முதலிய வாகனங்களை ஓட்டும் பணி புரிபவர் | driver (of a bus, rickshaw, etc.) |
ஓட்டை | ஒன்று உட்சென்று வெளிவரக் கூடிய வட்ட வடிவ இடைவெளி அல்லது திறப்பு | leak |
ஓட்டைக்கை | எவ்வளவு பணம் இருந்தாலும் எளிதாகச் செலவு செய்துவிடும் தன்மை | the nature of being incapable of saving or conserving money |
ஓட்டையுடைசல் | (ஓட்டை விழுதல், உடைதல் போன்ற காரணங்களால்) உபயோகப்படுத்த முடியாத வீட்டுப் பாத்திரம் அல்லது தட்டுமுட்டுச் சாமான்கள் | scrap |
ஓட்டைவாய் | எதையும் பிறரிடம் எளிதாகச் சொல்லிவிடக் கூடிய தன்மை | blabbermouth |
ஓடம் | (ஆறு முதலியவற்றில் பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படும்) குறைந்த அகலமும் அதிக நீளமும் உடைய ஒரு வகைப் படகு | a kind of small boat to ferry passengers |
ஓடாக | உடல் மெலியும்படி | to the point of being worn out |
ஓடிப்போ | (மன வருத்தத்தால் வீட்டைவிட்டு) வெளியேறுதல்(காதலிப்பவருடன்) ரகசியமாக வெளியேறுதல் | run away (from home in protest) |
ஓடியாடு | (களைப்பு இல்லாமல்) அலைந்துதிரிதல் | be active and energetic |
ஓடு1 | (மனிதன், விலங்கு ஆகியவை கால்களை முன்னும்பின்னும் வேகமாக எடுத்துவைப்பதன்மூலம்) நடப்பதை விட விரைந்துசெல்லுதல் | run |
ஓடுகாலி | (முறைகேடாக) வீட்டைவிட்டுச் சென்றுவிடும் பெண் | girl or woman of loose morals who runs away from home |
ஓடுதளம்/ஓடுபாதை | விமானம் மேல் எழும் முன் அல்லது கீழ் இறங்கிய பின் சற்றுத் தூரம் ஓட வேண்டியிருப்பதால் அதற்கு அமைக்கப்படும் நீண்ட பாதை | runway (in an airport) |
ஓடை | (பெரும்பாலும்) இயற்கையாக ஆற்றிலிருந்து பிரிந்து வரும் (சிறிய) நீர்வழி | stream or rivulet |
ஓணான் | தடித்த சொரசொரப்பான தோலும் கூர்மையான வாயும் நீண்ட வாலும் கொண்ட பல்லி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி | garden lizard |
ஓதப்பள்ளி | இஸ்லாமியச் சிறுவருக்குக் குர்ஆன் கற்றுக்கொடுக்கும் இடம் | school where Koran is taught |
ஓதம்1 | மழைக் காலத்தில் சுவரிலோ தரையிலோ ஏற்படும் ஈரக்கசிவு | dampness drawn into the wall or floor (during rainy season) |
ஓதம்2 | விரைவீக்கம் | hydrocele |
ஓது | (வேதத்தை அல்லது மந்திரங்களை) முறைப்படி வாய்விட்டுச் சொல்லுதல் | recite (Vedas) |
ஓதுவார் | சிவன் கோவில்களில் பூசை நடக்கும் வேளையில் சைவத் திருமுறைகளிலிருந்து பாடல் பாடும் உரிமை உடையவர் | the person who has the right to sing Saiva devotional hymns in a temple |
ஓந்தி | ஓணான் | garden lizard |
ஓநாய் | நாய்க் குடும்பத்தைச் சேர்ந்ததும் கூட்டமாக வாழும் இயல்புடையதுமான காட்டு விலங்கு | wolf |
ஓம்பு | பேணுதல் | protect |
ஓமப்பொடி | பிசைந்த கடலை மாவை அச்சு முதலியவற்றின்மூலம் நூல்நூலாகப் பிழிந்து எண்ணெய்யில் இட்டுப் பொரித்துச் செய்யப்படும் காரமான ஒரு வகைத் தின்பண்டம் | a savoury (in the form of broken noodles) made by pressing the paste of chick pea through a perforated ladle or a press and frying in oil |
ஓய் | (தன் போக்கிலேயே நிகழ்ந்து தானாகவே) ஒரு முடிவான நிலைக்கு வருதல் | come to (its natural) end |
ஓய்ச்சல் | அசதி | tiresomeness |
ஓய்வு | (வேலையை முடித்த பின்) களைப்பை நீக்கிப் பெறும் அமைதி | relaxation |
ஓய்வுஒழிச்சல் | (பெரும்பாலும் எதிர்மறை வினைகளோடு) மிகக் குறைந்த நேர ஓய்வு | respite |
ஓய்வுக்காலம் | நிர்ணயிக்கப்பட்ட வயதுக்குப் பிறகு பணியிலிருந்து விலகிக் கழிக்கும் காலம் | period of retirement |
ஓய்வுநாள் | விடுமுறை நாள் | holiday |
ஓய்வுபெறு | (நிர்ணயித்த வயதுக்குப் பிறகு ஒருவர்) பணியிலிருந்து விலகுதல் | retire (from service) |
ஓய்வூதியம் | அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுபவருக்கு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிற ஊதியம் | pension |
ஓய்வெடு | (களைப்பு நீங்கும்படியாக) அமைதியுடன் இருத்தல் | take rest |
ஓயாமல் | இடைவிடாமல் | continuously |
ஓயாமல் ஒழியாமல் | எந்த நேரமும் | at all times |
ஓர்மம் | மன உறுதி | courage |
ஓரக்கண்ணால் | (நேராக அல்லாமல்) கடைக்கண்ணால் | sidelong |
ஓரங்க நாடகம் | (வழக்கமான நாடகங்கள் போல் பல பகுதிகளாகப் பிரிக்கப்படாமல்) ஆரம்பம்முதல் முடிவுவரை ஒரே ஒரு பகுதியை மட்டும் கொண்டு நிகழ்த்தப்படும் நாடகம் | one act play |
ஓரம்கட்டு | (வாகனத்தைப் பாதையின்) ஓரத்துக்குக் கொண்டுபோதல் | take (the vehicle) to the side (of the road) |
ஓரவஞ்சகம்/ஓரவஞ்சனை | ஒரு பக்கம் சார்ந்து செயல்படும் (வெளிப்படையான) புறக்கணிப்பு | discrimination (against) |
ஓரளவு/ஓரளவுக்கு | (முற்றிலுமாக அல்லாமல்) சிறிது | in some measure |
ஓராசிரியர் பள்ளி | (பெரும்பாலும் கிராமங்களில்) ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் கொண்ட ஆரம்பப் பள்ளிக்கூடம் | (mostly in villages) an elementary school manned by one teacher |
ஓரிரு | மிகவும் குறைவான | a few |
ஓரினச் சேர்க்கை | ஆண் ஆணோடு அல்லது பெண் பெண்ணோடு கொள்ளும் உடலுறவு | homosexuality |
ஓலம் | (துக்கம், வலி முதலியவற்றைத் தெரிவிக்கும் வகையில் எழுப்பும்) துயரமான சப்தம் | heart-rending cry |
ஓலை | பனை, தென்னை, ஈச்ச மரம் ஆகியவற்றின் இலை | leaf of palmyra, coconut and date trees |
ஓவியம் | (பெரும்பாலும் தூரிகையால் வரையப்படும்) கலையழகு உடைய சித்திரம் | painting or drawing |
ஓவியன் | ஓவியம் வரைபவன் | artist (who draws pictures or paints) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
