We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning | English Meaning |
ஞாபகப்படுத்து | (ஒன்றை) நினைவுக்குக் கொண்டுவருதல்/(ஒன்றை ஒருவருக்கு) நினைவுபடுத்துதல் | recollect |
ஞாபகம் | நினைவு (என்பதன் நான்காவது பொருள் தவிர்த்த எல்லாப் பொருளிலும்) | see நினைவு (except sense 4) |
ஞாபகமறதி | நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதையும் மறந்துவிடும் தன்மை | forgetfulness |
ஞாபகார்த்தம் | (ஒருவரை அல்லது ஒன்றை) நினைக்கச்செய்வதாக அமைவது | in memory of |
ஞாயிறு | சூரியன் | sun |
ஞாலம் | பூமி | earth |
ஞானக்கண் | (முகத்தில் இருக்கும் கண்ணுக்கு எதிர்மறையாகக் கூறப்படும்) எதிர்காலத்தையும் அறியக் கூடிய ஆற்றல் | vision |
ஞானக்குழந்தை | ஞானஸ்நானத்தின்போது வாக்களித்துப் பொறுப்பேற்றுக்கொள்ளப்படும் குழந்தை | godchild |
ஞானசூனியம் | அறிவில்லாத ஆள் | one who is totally ignorant |
ஞானத்தந்தை | ஞானஸ்நானத்தில் ஒரு குழந்தையைக் கிறித்தவ நெறியில் வளர்க்கும் பொறுப்பேற்கும் நபர் | godfather |
ஞானதிருஷ்டி | (ஞானி, யோகி போன்றோருக்கு இருப்பதாக நம்பப்படும்) மூன்று கால நிகழ்ச்சிகளையும் அறியக் கூடிய ஆற்றல் | ability to know the past, the present and the future |
ஞானப்பல் | கடைசியாக முளைக்கும் கடைவாய்ப் பல் | wisdom tooth |
ஞானம் | அனைத்தும் அறிந்த நிலை | wisdom |
ஞானவான் | ஞானி | man of wisdom |
ஞானஸ்நானம் | திருச்சபையின் அங்கத்தினராக ஏற்றுப் புனிதப்படுத்தும் சடங்கு | baptism |
ஞானி | ஆத்ம சிந்தனையில் நிறைந்த ஞானம் படைத்தவர் | sage |