Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
நக்கீரத்தனம் | யாருக்கும் அஞ்சாமல் தவற்றைத் தவறு என்று சுட்டிக்காட்டும் குணம் | the quality of not fearing to criticize the authority |
நக்சலைட் | பொருளாதார ஏற்றத் தாழ்வைச் சீர்ப்படுத்த ஜனநாயக அமைப்பில் இயங்காமல் வன்முறைமூலம் பொதுவுடைமைக் கொள்கையை நிறைவேற்ற முயலும் தீவிரவாதி | extremist |
நகக்கண் | விரல் நுனிக்கும் நகத்துக்கும் இடைப்பட்ட பகுதி | the part between the tip of the finger and the nail |
நகச்சுற்று | நக ஓரத்தில் உள்ள சதைப் பகுதியில் ஏற்படும் வலியுடன் கூடிய வீக்கம் | whitlow |
நகச்சூடு | கை பொறுக்கக் கூடிய சூடு | heat that the finger nail can stand |
நகப்பூச்சு | விரல் நகங்களுக்கு நிறம் தருவதற்குப் பயன்படுத்தும் அழகுசாதனம் | nail polish |
நகம் | (கை அல்லது கால்) விரல் நுனியின் மேல்புறத்தில் வழுவழுப்பாகவும் வளரக் கூடியதாகவும் உள்ள பகுதி | (finger or toe) nail |
நகர்1 | மெதுவாக இடம் விட்டு இடம் பெயர்தல் | move slowly |
நகர்2 | நகரம் | city |
நகர்த்து | (தள்ளுவதன்மூலம் ஒன்றை) இடம்பெயரச்செய்தல் | move (an object by pushing) |
நகர்ப்புறம் | நகரமும் நகரத்தைச் சார்ந்த பகுதியும் | city and its suburbs |
நகரத் தந்தை | மாநகராட்சி உறுப்பினர்களால் ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நகரின் முதல் குடிமகனாக மதிக்கப்படுபவர் | mayor (of a city council, etc.) |
நகரம் | சில லட்சம் மக்கள் தொகை உள்ள, வசதிகள் மிகுந்த பெரிய ஊர் | city |
நகரா | (முற்காலத்தில் போர்க்களத்திலும் அரச ஊர்வலத்திலும் பயன்படுத்தப்பட்ட) பெரிய அரைக்கோள வடிவத் தோல் கருவி | big hemispherical drum (used formerly as battle drum and played in royal processions) |
நகராட்சி | நகரத்துக்கான உள்ளாட்சி அமைப்பு | municipality |
நகராட்சி மன்றம் | நகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவை | municipal council |
நகரியம் | குறிப்பிட்ட தொழிலை ஒட்டி உருவாகிய நகரின் பராமரிப்புக்காகத் தேர்தல்மூலம் அல்லாமல் அமைக்கப்படும் உள்ளாட்சி நிர்வாகம் | township |
நகல் | (ஓவியம், புகைப்படம், கடிதம் முதலியவை குறித்து வருகையில்) மூலத்திலிருந்து அதைப் போலவே உருவாக்கப்படும் அல்லது கருவியால் எடுக்கப்படும் மற்றொன்று | duplicate |
நகாசு வேலை | (நகை, புதிய கட்டடம் முதலியவற்றுக்கு) மெருகேற்றுதல், வர்ணமடித்தல் போன்ற அலங்கார வேலை | work of embellishment |
நகை1 | சிரித்தல் | laugh |
நகை2 | சிரிப்பு | laughter |
நகை3 | தங்கம், வெள்ளி முதலியவற்றால் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு அழகுக்காக அணிந்துகொள்ளும் சங்கிலி, வளையல் போன்ற அணிகலன் | jewels |
நகைச்சுவை | (-ஆக, -ஆன) சிரித்து மகிழக் கூடிய தன்மை | humour |
நகைநட்டு | நகையும் நகைபோன்ற பிறவும் | jewels and other valuables |
நகைப்பு | சிரிப்பு | laughter |
நங்கிணம் | மைனா | mynah (bird) |
நங்கூரம் | (கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்கும்பொருட்டு நீருக்குள் இறக்கப்படும்) இரு கூர்மையான முனைகளை உடைய மிகக் கனமான இரும்பு சாதனம் | anchor |
நங்கூரம் பாய்ச்சு | (கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்பதற்காக நீருக்குள்) நங்கூரத்தை இறக்குதல் | cast anchor |
நங்கை | (இளம்) பெண் | young girl |
நச்சரி | (ஒருவரிடம் ஒன்றை வேண்டி) எரிச்சலைத் தரும் விதத்தில் தொடர்ந்து கேட்டல் அல்லது வற்புறுத்துதல் | pester |
நச்சிலக்கியம் | பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு மக்களின் உணர்வுகளைக் கீழ்த்தரமாகத் தூண்டும் வகையில் எழுதப்படும் நூல் | pulp literature |
நச்சு1 | (எரிச்சல் ஏற்படுத்தும் வகையில்) ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அதிக முயற்சி வேண்டுவதாக அமைவது | vexing |
நச்சு2 | (பெரும்பாலும் பிற சொற்களுடன் இணைந்து) நஞ்சு | (combining with other words) poison |
நச்சுநச்சு-என்று | (எரிச்சல் தரும்படியாக) விடாமல் தொடர்ந்து | exasperatingly |
நசநச-என்று | ஈரமாக | damply |
நசி1 | (ஓர் இனம்) எண்ணிக்கையில் குறைதல்/(குடும்பம், கலை முதலியவை) வளர்ச்சியில் பின்தங்கி அல்லது செல்வாக்கு, மதிப்பை இழந்து நலிவடைதல் | become extinct/decline |
நசி2 | குறைதல் | become extinct |
நசிவு | நலிவு | decadence |
நசுக்கு | (ஒன்றை ஒரு பரப்பில்) அழுத்தித் தேய்த்தல், (ஒன்றின் பரப்பை) இரு பக்கங்களிலும் விசையுடன் அழுத்துதல் | crush |
நசுங்கு | (விழுவதால், அழுத்தப்படுவதால்) சிதைதல் | get crushed |
நஞ்சு | விஷம் | poison |
நஞ்சுக்கொடி | குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து வெளியாவதும் கருப்பைக்குள் இருப்பதும் கடல் பஞ்சு போன்றதுமான சவ்வுப் படலம் | placenta |
நட்சத்திர இரவு | (நிதி திரட்டுவதற்காக) பிரபல திரைப்பட நடிகர்கள் கூடி இரவில் நடத்துகிற கலை நிகழ்ச்சி | star night (to raise funds for a charitable purpose) |
நட்சத்திர ஓட்டல் | தங்குதல் உள்ளிட்ட பல வசதிகளின் அடிப்படையில் தரத்தைக் காட்டும் வகையில் (பெரும்பாலும் மூன்று அல்லது ஐந்து) நட்சத்திரங்களைக் குறியீடாகப் பெற்ற உணவு விடுதி | star hotel |
நட்சத்திரக்குறி | உடுக்குறி | asterisk |
நட்சத்திரம் | பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதும் இரவில் கண்ணுக்குத் தெரியக் கூடியதும் தன்னிடத்திலேயே ஒளியையும் வெப்பத்தையும் கொண்டதுமான மின்னும் விண்வெளிப் பொருள் | star |
நட்சத்திர மண்டலம் | ஓர் இடத்தில் அடர்த்தியாகக் காணப்படும் நட்சத்திரங்களின் கூட்டம் | galaxy |
நட்டநடு | (காலத்திலும் இடத்திலும்) சரியான நடுப் பகுதி | the very middle (of time or space) |
நட்டாற்றில் விடு | (தன்னை நம்பி வந்த ஒருவரை) இக்கட்டான நிலையில் உதவாமல் கைவிடுதல் | leave (s.o.) in the lurchlet (s.o.) down. |
நட்டுவனார் | மரபுப் பாணியில் நாட்டியம் கற்றுத் தருபவர் | dance master who teaches South Indian classical dance |
நட்டுவாக்காலி | அளவில் பெரிதாகவும் நிறத்தில் கருப்பாகவும் இருக்கும், தேள் இனத்தைச் சேர்ந்த உயிரினம் | a kind of large black scorpion |
நட்டுவாங்கம் | நாட்டியம் பயிற்றுவிக்கும்போது அல்லது ஆடும்போது தாளம் தட்டி நாட்டியத்தை இயக்கும் முறை | the technique of directing the dancer by delineating the rhythmic syllables with the help of cymbals |
நட்பு | ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் (பொதுவாக) உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு | friendship |
நட்புறவு | (நபர்கள் அல்லது நாடுகளுக்கு இடையிலான) நேச உறவு | amity or friendship (between persons or countries) |
நட | இடம்பெயரும் பொருட்டு இயல்பான வேகத்தில் கால்களை மாற்றிமாற்றி முன்வைத்தல் | walk |
நடத்து | (ஒன்றைக் குறிப்பிட்ட முறைப்படி அமைத்து) நிகழ்த்துதல் | conduct |
நடத்துநர் | பேருந்தில் பயணச்சீட்டுக் கொடுப்பது, பயணிகள் ஏறவும் இறங்கவும் வண்டியை நிறுத்தச்செய்வது முதலிய பணிகளைச் செய்யும் ஊழியர் | (in a bus) one who issues tickets, signals the driver to stop, etc |
நடத்தை | (சமூகத்தில்) நடந்துகொள்ளும் விதம் | behaviour |
நடப்பு1 | (குறிப்பிடும் இடத்தில்) நிகழ்வது | state of affairs |
நடப்பு2 | நிகழ்ந்துகொண்டிருக்கிற | current (year, etc.) |
நடம் | நடனம் | dance |
நடமாட்டம் | (மக்கள், விலங்கு, வாகனம் முதலியவற்றைக் குறித்து வருகையில்) (ஓர் இடத்தில்) செல்லுதல், வருதல் போன்ற செயல்பாடு அல்லது இயக்கம் | movement (of people, animals, etc.) |
நடமாடு | (மனிதர் தொடர்பாகக் கூறும்போது) நடந்து இயங்குதல்/(விலங்கு தொடர்பாகக் கூறும்போது) உலவுதல் | (of persons) walk |
நடமாடும் | பல இடங்களுக்கும் செல்லக் கூடிய வகையில் வாகனத்தில் அமைந்த | mobile |
நடராஜர் | நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் சிவன் வடிவம் | siva in a dancing pose |
நடவடிக்கை | (ஒருவரின்) செயல்பாடு | behaviour |
நடவு | நாற்றை அல்லது இளங்கன்றைப் பறித்துப் பண்படுத்தப்பட்ட நிலத்தில் நடுவது | (in agriculture) transplantation |
நடனம் | இசைக்கு ஏற்ற வகையில் உடல் உறுப்புகளை அசைத்து முகத்தில் தகுந்த பாவங்களை வெளிப்படுத்தி நிகழ்த்தும் கலை | dance |
நடாத்து | மேற்கொள்ளுதல் | conduct |
நடி | (திரைப்படம், நாடகம் முதலியவற்றில் ஒரு பாத்திரமாக வேடம் ஏற்று அந்தப் பாத்திரத்தின்) குண இயல்புகளை, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகச் செயல்படுதல் | act (in a film, drama, etc.) |
நடிகன் | திரைப்படம், நாடகம் முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிப்பவன் | (of film, theatre) actor |
நடிகை | நடிகன் என்பதன் பெண்பால் | actress |
நடிப்பு | திரைப்படம், நாடகம் முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிக்கும் செயல் | acting |
நடு1 | (மரம், செடி முதலியவை வளர்வதற்கு அவற்றின் வேர்ப் பகுதியை நிலத்தில்) செருகிவைத்தல் அல்லது ஊன்றுதல் | plant (a tree, seedling) |
நடு2 | இடைப்பட்ட பகுதி அல்லது நிலை | middle |
நடுக்கம் | (உடலில் அல்லது உடலின் பகுதியில் ஏற்படும்) கட்டுப்பாடற்ற அசைவு | trembling |
நடுக்கு | (உடலை) நடுங்கச்செய்தல் | make one tremble |
நடுகல் | (பழங்காலத்தில்) இறந்த வீரனின் நினைவாக (பெரும்பாலும்) அவன் பெருமையை எழுதி நடும் கல் | stone in memory of a dead hero usually with a citation |
நடுகை | நடவு | transplantation of seedlings |
நடுங்கு | (உடல் அல்லது உடலின் பகுதி) கட்டுப்பாடு இல்லாமல் அசைதல் | tremble |
நடுத்தர | ஏழை, பணக்காரன் என்ற இரு நிலைக்கு இடைப்பட்ட | middle (class) |
நடுத்தரம் | (தரம், தன்மை, அளவு முதலியவை குறித்து வருகையில்) அதிகம், குறைவு அல்லது நல்லது, மோசம் அல்லது சிறியது, பெரியது போன்ற எதிர் நிலைகளுக்கு இடைப்பட்டதாக அமைவது | (of quality, size, nature, etc.) medium |
நடுநடுங்கு | (பயத்தால்) அதிகமாக நடுங்குதல் | tremble greatly |
நடுநிசி | நள்ளிரவு | midnight |
நடுநிலை | விருப்பு, வெறுப்பு இல்லாத சம நிலை | impartiality |
நடுநிலைப் பள்ளி | எட்டாம் வகுப்புவரை உள்ள பள்ளி | middle school |
நடுவண் அரசு | மத்திய அரசு | (in India) central government |
நடுவர் | நீதிபதி | judge |
நடுவர் மன்றம் | இரு தரப்பினரும் பேசி முடிவு காணமுடியாத பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர்கள் ஏற்றுக்கொண்ட வகையில் நியமிக்கப்படும் நடுவர் குழு | tribunal |
நடுவழியில் | இரு இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் | midway |
நடுவிரல் | (கையில் அல்லது காலில்) மூன்றாவதாக உள்ள விரல் | middle finger or toe |
நடுவில்/நடுவே | (காலத்தில், இடத்தில்) இடையில் | in the middle |
நடை1 | நடந்து செல்லும் செயல் | walk |
நடை2 | தனக்கென ஏற்படுத்திக்கொண்ட முறை | style (in speech, writing) |
நடைப்பயணம் | கால்நடையாகவே செல்லும் பயணம் | travel on foot |
நடைப்பிணம் | இயல்பான வாழ்க்கைக்குத் தேவையான துடிப்பை இழந்தவர் | one who is weary of life |
நடைபயில் | மெதுவாக அல்லது நளினமாக நடத்தல் | walk gracefully or daintily |
நடைபாதை | (தெருவின் இரு ஓரங்களிலும் மக்கள்) நடந்து செல்வதற்கான (சற்று உயர்வாக இருக்கும்) பாதை | pavement |
நடைபாவாடை | (சில சடங்குகளில்) நடந்துசெல்வதற்காகப் பாதையில் விரிக்கும் துணி | cloth spread on the path (for s |
நடைபெறு | நட (என்னும் வினையின் 2, 3, 4, 5 ஆகிய பொருள்களில்) | see நட (in the senses of 2, 3, 4, 5 ) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
