We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning | English Meaning |
ரகசியக் காப்புப் பிரமாணம் | அமைச்சர்கள் பதவி ஏற்கும்போது, அமைச்சர் என்ற முறையில் தனக்குத் தெரியவரும் தகவல்களை யாருக்கும் தெரியப்படுத்துவதில்லை என்று ஆளுநர் முன்பாகச் செய்யும் பிரமாணம் | oath of secrecy (administered by the governor to a minister before he assumes office) |
ரகசியப் போலீஸ் | (தான் காவலர் என்பது தெரியாமல் இருக்க) சீருடை அணியாமல் சாதாரண உடையில் சென்று துப்பறியும் காவலர் (படை) | plain-clothes detective (for criminal investigation, etc.) |
ரகசியம் | தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி | secret |
ரகம் | (-ஆன) (பொதுவாகக் குறிக்கப்படுவதில்) சில வேறுபாடுகளால் தனித்து இனம் காணப்படுவது | variety |
ரகளை | நாகரிகமற்ற முறையில் கூச்சல் போடுவது போன்ற செயல் | affray |
ரங்கராட்டினம் | உயரமாக மேலெழுந்து வட்டப் பாதையில் சுற்றிவரும் ராட்டினம் | a type of giant wheel |
ரசகுல்லா | பாலில் மைதா மாவைப் பிசைந்து உருண்டையாக உருட்டிப் பொரித்து ஜீராவில் போட்டுச் செய்யும் இனிப்புப் பண்டம் | a kind of sweetmeat prepared by soaking fried flour balls in sugar treacle |
ரசம்1 | மிளகு, சீரகம் போன்றவற்றை அரைத்துப் புளிப்புச் சுவையுடைய நீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் செய்யும் திரவம் | a kind of soup prepared by adding certain condiments in tamarind or lime water |
ரசம்2 | (இலக்கியம், நாட்டியம் முதலியவற்றில்) உணர்ச்சி வெளிப்பாடு | aesthetic emotion |
ரசம்3 | கண்ணாடியைப் பிரதிபலிக்கும் தன்மையுடையதாக்க ஒரு பக்கத்தில் பூசப்படும் சிவப்பு நிற ரசாயனக் கலவை | a coat of amalgam |
ரசம்4 | இரத்தமாக மாற்றப்படுவதற்கு முன் உள்ள உணவின் சாரம் | (in Siddha medicine) the essence of food before it is transformed into blood |
ரசமட்டம் | ஒரு பரப்பின் சமநிலையை அறியப் பயன்படும் கண்ணாடிக் கூட்டினுள் பாதரசத் துளி கொண்ட சாதனம் | spirit-level (instrument used by the mason) |
ரசனை | விருப்பம் | taste |
ரசாயன உரம் | (தொழிற்சாலையில்) ரசாயனப் பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்படும் உரம் | chemical fertilizer |
ரசாயனம் | வேதியியல் | chemistry |
ரசி | (ஈடுபாடு கொள்ளும் அளவு) இனிமையாக இருத்தல் | relish |
ரசிகர் மன்றம் | (ஒரு நடிகரின் அல்லது நடிகையின்) ரசிகர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பு | fan club |
ரசிகன் | (கலை, இலக்கியம் முதலியவற்றில்) தேர்ந்த சுவை உள்ளவன் | connoisseur |
ரசிகை | ரசிகன் என்பதன் பெண்பால் | feminine of ரசிகன் |
ரசீது | (பணம் அல்லது பொருள்) பெற்றுக்கொண்டதைக் குறித்துத் தரும் சீட்டு | receipt |
ரஞ்சகம் | இன்பம் தருவது | delightful |
ரஞ்சிதம் | இன்பம் தருவது | pleasant |
ரணகளம் | (ஆயுதங்களால் தாக்கப்பட்டு) இரத்தம் சிந்த வேண்டிய நிலை | bloodshed |
ரணசிகிச்சை | அறுவைச் சிகிச்சை | surgical treatment |
ரணம் | இரத்தக் கசிவு உள்ள புண் | bleeding wound |
ரண ஜன்னி | தசைவிறைப்பு ஜன்னி | tetanus |
ரத்தக் காட்டேரி | இரத்தம் குடிப்பதாகக் கூறப்படும் ஒரு வகைப் பேய் | bloodthirsty demon |
ரத்த நாளம் | இரத்தக் குழாய் | blood-vessel |
ரத்தாகு | ரத்துசெய்யப்படுதல் | be cancelled |
ரத்தினக் கம்பளம் | (சிவப்பு நிறம் சற்று அதிகமாகத் தெரியும்படி) பல நிறங்களோடு நெய்யப்பட்ட அலங்காரக் கம்பளம் | carpet of variegated colours (red being the dominant colour) |
ரத்தினச்சுருக்கம்-ஆக/-ஆன | குறைந்த சொற்களில் நேர்த்தியாக/குறைந்த சொற்களில் நேர்த்தியான | briefly |
ரத்தினம் | (அணிகலன்களில் அழகுக்காகப் பதிக்கும்) மரகதம், பவளம் போன்ற விலையுயர்ந்த இயற்கைப் பொருள் | gem |
ரத்து | (பெரும்பாலும் செய்தித்தாளில் தலைப்பாக) ரத்துசெய்யப்படுதல் | (often in headlines) cancelled |
ரத்துசெய் | (வரி, கடன் அல்லது சட்டம், தடை முதலியவற்றை) இல்லாமல்செய்தல்(நிகழ்ச்சி முதலியவற்றை) நடத்தாமல் விட்டுவிடுதல் | cancel |
ரதம் | (அரசர் முதலியோர் பயணத்திற்கும் போருக்கும் பயன்படுத்திய) குதிரைகளால் இழுக்கப்படும் வாகனம் | chariot (of a king) |
ரதி | (புராணத்தில்) மன்மதன் மனைவி | wife of மன்மதன் |
ரப்பர் | (ஒரு வகை மரத்தின் பாலிலிருந்து அல்லது செயற்கையாக ரசாயன முறையில் தயாரிக்கப்படும்) விசைக்குள்ளாகும்போது நீட்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் தன்மை கொண்ட பொருள் | rubber |
ரம்பம் | கூரான பற்களுடைய இரும்புத் தகடு பொருத்தப்பட்டு அறுப்பதற்குப் பயன்படுத்தும் பல வகையான கருவிகளின் பொதுப்பெயர் | a general term for different types of tools used for sawing |
ரம்மியம் | புலன்களுக்கு அல்லது மனத்திற்கு மகிழ்ச்சி தருவது | pleasant |
ரம்ஜான் | இஸ்லாமியரின் ஆண்டில் ஒன்பதாவது மாதத்தில் தினமும் காலைமுதல் மாலைவரை உண்ணாமல் இருந்து மேற்கொள்ளும் நோன்பு | fasting in the month of Ramadan |
ரயில் | புகைவண்டி | train |
ரயிலடி | புகைவண்டி நிலையம் | railway station |
ரவிக்கை | முழங்கைவரையிலான கைப்பகுதியுடன் உடம்பின் மேல்பகுதியை மறைக்கும் வகையில் பெண்கள் அணியும், கழுத்துப்பட்டி இல்லாத இறுக்கமான உடை | close-fitting upper garment for women |
ரவுடி | அடாவடித்தனம் அல்லது கலாட்டா செய்பவன் | rowdy |
ரவை1 | பொடியாக உடைக்கப்பட்ட கோதுமை | cream of wheat |
ரவை2 | (சில வகைத் துப்பாக்கிகளில் பயன்படும்) சிறு உருண்டை வடிவ ஈயக் குண்டு | small lead shot (used in guns of certain type) |
ரஜா | விடுமுறை | vacation |
ரஸ்தா | சாலை | road |
ரஸ்தாளிப்பழம் | மெல்லிய தோலை உடையதும் இனிப்புச் சுவை மிகுந்ததுமான ஒரு வகை வாழைப்பழம் | a thin-skinned plantain fruit |
ரா | (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) இரவு | (in combination) night |
ராக்கொடி | (பெண்கள் தலை உச்சியில் அணிந்துகொள்ளும்) கற்கள் பதித்த வில்லை வடிவ ஆபரணம் | a circular ornament studded with stones (worn by woman on the crown of the head) |
ராகம் | இசைக் கலைஞர் தன் கற்பனைப்படி விரிவுபடுத்தக் கூடிய வகையில் இருக்கும், ஸ்வரங்களைக் குறிப்பிட்ட மேலேறும் வரிசையிலும் கீழிறங்கும் வரிசையிலும் கொண்ட அமைப்பு | the network of ascending and descending scale of notes which give or determine the pattern |
ராகி | கேழ்வரகு | ragi |
ராகு | ஒன்பது கிரகங்களில் ஒன்று | (in astrology) one of the nine planets |
ராகுகாலம் | ஒவ்வொரு நாளிலும் மங்களகரமான காரியங்கள் முதலியவை நடத்த, செயல்கள் தொடங்க உகந்ததல்லாததாகக் கருதப்படும் ஒன்றரை மணி நேரப் பொழுது | a period of 1 ?? hours each day which is considered to be inauspicious |
ராசி2 | (மனஸ்தாபம், சண்டை முதலியவற்றினால் பிரிந்தவர் இடையே ஏற்படும்) சமரசம் | reconciliation |
ராட்சச | (ஒன்றின் அளவைக்குறித்து வருகையில்) மிகவும் பெரிய | (of size) giant- |
ராட்சசன் | (புராணங்களில்) பயங்கரமான தோற்றத்தையும் பிரமாண்டமான உருவத்தையும் உடையவனாகக் கூறப்படுபவன் | (in puranas) giant titan |
ராட்சசி | ராட்சசன் என்பதன் பெண்பால் | feminine of ராட்சசன் |
ராணி | அரசி | queen |
ராணி ஈ | தேன் கூட்டில் இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாததாகவும் பிற தேனீக்களுக்குத் தலைமையானதாகவும் இருக்கும் தேனீ | queen bee |
ராணுவம் | நாட்டைக் காப்பதற்காகவும் தேவையானால் பிற நாட்டைக் கைப்பற்றுவதற்காகவும் பயிற்சியளிக்கப்பட்ட படைகளின் தொகுப்பு | army |
ராத்தல் | (முன்பு வழக்கில் இருந்த) பதிமூன்று பலம் கொண்ட நிறுத்தலளவு | weighing measure of 13 பலம் (in use before the introduction of decimal system) |
ராத்திரி | இரவு | night |
ராந்தல் | அரிக்கன் விளக்கு | kerosene lamp |
ராப்பாடி | இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து பாடிப் பிச்சை வாங்குபவன் | one who goes around singing and begging during the night |
ராவு | அரத்தால் தேய்த்தல் | file |
ராஜ்ய சபை | மாநிலங்களவை | upper house (of the parliament) |
ராஜ்(ஜி)யம் | (குறிப்பிட்ட ஆட்சியின்) ஆளுகைக்கு உட்பட்ட நாடு அல்லது பகுதி | country |
ராஜகுமாரன் | அரசனின் மகன் | son of a king |
ராஜகுமாரி | அரசனின் மகள் | daughter of a king |
ராஜகோபுரம் | கோயிலின் (கிழக்கு வாயிலில் இருக்கும்) உயரமான கோபுரம் | the tallest tower (at the east gate) of a temple |
ராஜதந்திரம் | (பிரச்சினைகளைச் சமாளிக்க அரசியல்வாதி, அதிகாரி போன்றோரின்) முன்யோசனையும் சாமர்த்தியமும் நிறைந்த வழிமுறை | diplomacy |
ராஜதந்திரி | பிற நாடுகளுடன் சீரான உறவு இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரி | diplomat |
ராஜபாட்டை | அரசர் செல்வதற்காக அமைக்கப்பட்ட அகன்ற பெரு வீதி | broad street meant for the use of kings |
ராஜபிளவை | முதுகின் நடுப்பகுதியில் உண்டாகிக் கடும் வலியை ஏற்படுத்தும் பெரிய கட்டி | carbuncle |
ராஜமரியாதை | (முக்கியமானவர்களுக்குத் தரப்படும்) சிறப்பான வரவேற்பு | rousing welcome |
ராஜா | அரசன் | king |
ராஜாத்தி | (பெரும்பாலும் ஒப்பிட்டுக் கூறும்போது) ராணி | (mostly in comparison) queen |
ராஜிய | (தூதர் வைத்துக்கொள்ளுதல், தூதரகம் அமைத்தல் போன்ற) அரசுத் தொடர்பு கொண்ட | diplomatic (relation) |
ராஜினாமா | (பதவி) விலகல் | resignation |
ராஷ்டிரபதி | குடியரசுத் தலைவர் | president (of a country) |
ரிக்ஷா | (இயந்திர விசையால் அல்லது மிதிப்பதால் நகரும்) இரண்டு பேர் அமர்ந்துசெல்லக் கூடிய மூன்று சக்கர வாகனம் | rickshaw |
ரிஷபம் | (சிவபெருமானின் வாகனமாகக் கூறப்படும்) காளை | bull (as the mount of Siva) |
ரிஷி | முனிவர் | sage |
ரிஷிமூலம் | ஒரு முனிவரின் பிறப்பு, குலம், குடும்பம் முதலிய விவரம் | ancestry and parentage of sages |
ரீங்கரி | (வண்டு, தேனீ போன்றவை) சீராகவும் தொடர்ச்சியாகவும் (காதைத் துளைப்பது போன்ற) ஒலியெழுப்புதல் | (of bees, etc.) hum |
ரீங்காரம் | (வண்டு, தேனீ போன்றவை எழுப்பும்) காதைத் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி | humming (of bees) |
ருசி1 | சுவைத்தல் | relish |
ருசி2 | சுவை | taste |
ருசு | ஆதாரம் | proof |
ருதுவாகு | (பெண்) பருவமடைதல் | (of girls) attain puberty |
ரூபம் | வடிவம் | form |
ரூபாய் | (இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும்) நாணயத்தின் அடிப்படை அலகு/மேற்குறிப்பிட்ட அடிப்படை அலகில் இருக்கும் தாள் அல்லது நாணயம் | unit of currency (in India and some other countries)/note or coin of that currency |
ரேக்கு | (தங்கத்தின்) தகடு | a thin strip (of gold) |
ரேக்ளா வண்டி | ஒருவர் அமர்ந்து வேகமாகச் செல்லக் கூடிய ஒற்றைக் குதிரை அல்லது ஒற்றை மாட்டு வண்டி | small, slim built, fast moving cart with one seat drawn by a horse or bullock |
ரேகை | மனிதர்களின் கை, கால் விரல்களின் உட்புறத்தில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு அமைந்திருக்கிற கோடுகள் | line (on the palm or on the sole) |
ரேந்தை | ரவிக்கை, பாவாடை முதலிய பெண்களின் ஆடைகளில் இணைக்கப்படும் வேலைப்பாடு கொண்ட பின்னல் துணி | lace |
ரேவதி | இருபத்தேழு நட்சத்திரங்களுள் கடைசி நட்சத்திரம் | the twentyseventh star |
ரேழி | முன் பக்கத்து வாசலுக்கும் முதல் கட்டுக்கும் இடையில் நடைபாதை போல அமைந்திருக்கும் பகுதி | narrow passage between the entrance and the living room (of old houses) |