We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning | English Meaning |
ஊக்க ஊ??தியம் | (பெரும்பாலும் தொழிற்சாலைகளில்) உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டுத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துக்கு மேல் அதிகமாகத் தரப்படும் தொகை | incentive |
ஊக்கச் சலுகை | தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் துவங்குபவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் வரி முதலியவற்றில் அரசு அளிக்கும் சலுகை | concessions (by the government to entrepreneurs) as incentives |
ஊக்கம் | (ஒரு செயலைச் செய்வதற்குப் பிறர் தரும்) உற்சாகமான தூண்டுதல் | inducement |
ஊக்கு | சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி இருக்கும்படி வளைக்கப்பட்ட கம்பி | safety-pin |
ஊக்குவி | (ஒரு வேலையைத் தொடங்குமாறு அல்லது செய்யும் வேலையைத் தொடர்ந்து செய்யுமாறு) தூண்டுதல் | induce |
ஊகம் | (தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும்) உத்தேசமான கணிப்பு | guess |
ஊகி | (இப்படி இருக்கலாம் அல்லது இப்படி நடக்கலாம் என்று) உத்தேசமாக எண்ணுதல் | guess |
ஊசல்1 | (பொருளின் அலைவு நேரம் அதன் நீளத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை விளக்குவதற்காக) முறுக்கற்ற மெல்லிய நூலில் உலோகக் குண்டு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் அமைப்பு | pendulum |
ஊசல்2 | பதம்கெட்டது | that which has become stale or rotten |
ஊசலாட்டம் | (முடிவெடுக்க முடியாத) தடுமாற்றம் | vacillation |
ஊசி | முள் போல் கூரிய முனையும் நூல் கோர்க்கச் சிறு துளையும் உடைய தைக்கப் பயன்படும் சிறு கம்பி | needle (for sewing) |
ஊசிக்காது | சிறு ஒலியையும் கேட்கும் திறன் படைத்த செவி | (very) sharp ear |
ஊசித்தொண்டை | காதைத் துளைக்கும் குரல் | a shrill or high pitched voice |
ஊசிபோடு | ஊசியால் குத்தி (உடம்பில் திரவ மருந்தை) உட்செலுத்துதல் | inject |
ஊசியிலைக் காடு | (குளிர்ப் பிரதேசத்தில்) ஊசி போன்ற கூரிய இலைகளை உடைய மரங்கள் வளரும் நிலப்பகுதி | coniferous forest |
ஊசிவெடி | (பட்டாசுகளில்) குறைந்த ஒலியை எழுப்பக் கூடிய குச்சி போன்ற வெடி வகை | a small slender cracker (producing a sharp shrill popping noise) |
ஊசு | (சமைத்த உணவுப் பொருள்) பதம் கெடுதல் | (of foodstuffs) become stale |
ஊஞ்சல் | உட்கார்ந்து காலால் உந்தி முன்னும் பின்னும் ஆடும் வகையில் உள்ள தொங்கும் அமைப்பு | swing |
ஊஞ்சலாடு | முன்னும்பின்னும் அசைதல் | move to and fro |
ஊட்டச் சத்து | (உடல் நலத்திற்கு அல்லது பயிர் வளத்திற்குத் தேவையான) சத்துப் பொருள் | nutrition |
ஊட்டம் | உடல் வளர்ச்சிக்கு வேண்டிய சத்து | nutrition |
ஊட்டு | (உணவைக் கையால் அல்லது கரண்டியால் எடுத்து) வாயில் கொடுத்தல்(பால்) குடிக்கத் தருதல் | put (small quantity of food) into the mouth (either by hand or by spoon) |
ஊடகம் | ஒளி முதலியவற்றை ஊடுருவிச்செல்ல அனுமதிக்கும் (காற்று, நீர், கண்ணாடி முதலிய) பொருள் | medium (of any substance that allows light, etc |
ஊடல் | (காதலர்களிடையே அல்லது கணவன் மனைவிக்குள் ஏற்படும்) சிறு பிணக்கு | fit of sulkiness as (between lovers) |
ஊடாடு | ஊசலாடுதல் | vacillate |
ஊடு1 | (காதலனிடம் காதலி அல்லது கணவனிடம் மனைவி) பொய்க் கோபம் கொள்ளுதல் | (of lovers) sulk |
ஊடுகதிர் | உடலின் உள்ளுறுப்புகளைப் படம் பிடிக்கப் பயன்படும் ஓர் ஒளிக் கதிர் | x-ray |
ஊடுசுவர் | (அறையைப் பிரிக்கும்) குறுக்குச் சுவர் அல்லது இடைச் சுவர் | wall running across (a room, dividing it into two parts) |
ஊடுபயிர் | (பலன் தருவதற்குச் சற்றுக் காலமாகும்) பயிர் வரிசைகளுக்கு இடையே சாகுபடி செய்யப்படும் குறுகிய காலப் பயிர் | a short term crop farmed together with the long term crop |
ஊடுருவல் | ஊடுருவு என்னும் வினையின் (எல்லாப் பொருளிலும் வரும்) பெயர்ச்சொல் | verbal noun of the verb ஊடுருவு (in all the senses) |
ஊடுருவு | துளைத்தல் | pierce through |
ஊடே | (ஐந்தாம் வேற்றுமைக்குப் பின்) வழியே | (passing) through |
ஊடை | (தறியிலோ துணியிலோ) குறுக்குவாட்டில் செல்லும் இழை | weft or filling |
ஊண் | உணவு | food |
ஊத்தப்பம் | தோசைக் கல்லில் சற்றுப் புளித்த மாவை ஊற்றித் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தடித்த தோசை | a kind of thick தோசை |
ஊத்தை | (பொதுவாக) நாற்றமடிக்கும் (உடலின்) கழிவு(குறிப்பாக) நாற்றமடிக்கும் (பல்லின்) அழுக்கு | (generally) foul smelling (body) waste |
ஊதல்1 | (வாயில் வைத்து ஊதினால்) சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் சாதனம் | whistle |
ஊதல்2 | குளிர் காற்று | cold wind |
ஊதல்போடு | (வாழைக்காய் போன்றவற்றை) புகையில் பழுக்கச்செய்தல் | fumigate (green fruits to become ripe) |
ஊதா | (கத்திரிப் பூவைப் போன்று) சிவப்பும் நீலமும் கலந்த நிறம் | violet |
ஊதாங்குழல் | (அடுப்பில் நெருப்பு எரிவதற்காக) வாயினால் காற்றை ஊதப் பயன்படும் (பெரும்பாலும்) உலோகத்தாலான சிறு குழாய் | blow-pipe (to kindle fire or to raise flame) |
ஊதாரி | தனக்கு இருக்கும் பொறுப்பை உணராமல் பணத்தையோ காலத்தையோ வீணாகச் செலவிடுபவர் | spendthrift |
ஊதித்தள்ளு | (கடினமானது என்று கருதுவதை) சுலபமாகச் செய்தல் | with ease |
ஊதியம் | நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் தன்னுடைய உழைப்புக்காகக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பெறும் பணம் | pay |
ஊது1 | வாயைக் குவித்துக் காற்றை வெளிப்படுத்துதல் | blow (air) |
ஊது2 | (ஒருவரைப்பற்றி மற்றவரிடம்) ரகசியமாகக் குறைகூறுதல் | whisper |
ஊதுகாமாலை | உடலை வீங்கச்செய்யும் ஒரு வகைக் காமாலை நோய் | jaundice with dropsy |
ஊதுபத்தி/ஊதுவத்தி | நறுமணத்துக்காக எரிக்கும், வாசனைப் பொருள் பூசப்பட்ட குச்சி | incense stick |
ஊமச்சி | ஊமைப் பெண் | dumb woman |
ஊமத்தை | முட்கள் நிறைந்த உருண்டையான காயையும் குழல் வடிவப் பூவையும் உடைய ஒரு வகைச் செடி | datura plant |
ஊமை1 | (பெரும்பாலும்) பிறப்பிலேயே பேசும் திறன் இல்லாதவன்/-ள் | dumb person |
ஊமை2 | வெளியில் தெரியாத | latent |
ஊமைக்கோட்டான் | செய்த செயல் வெளியாகும்போது அதுபற்றி எதுவும் பேசாமல் (ஆந்தை போல் கண்ணை உருட்டி) விழிக்கும் நபர் | one who keeps mum |
ஊமைப்படம் | (ஒலிப்பதிவு வசதி இல்லாத காலத்தில் தயாரித்த) பேச்சோ பாட்டோ இல்லாத திரைப்படம் | silent movie (of the olden days) |
ஊமையடி | இரத்தக்காயம் ஏற்படுத்தாத அடி | contused wound |
ஊர்1 | (சில உயிரினங்கள்) பரப்பை ஒட்டியவாறே நகர்தல் | (of certain creatures) crawl |
ஊர்2 | மக்கள் வசிக்கும், எல்லைகள் வரையறுக்கப்பட்ட இடம் | village |
ஊர்க்கட்டுப்பாடு | (ஊர்ப்பஞ்சாயத்து அல்லது ஊர் மக்கள் ஒன்றுகூடி) விதித்திருக்கும் தடை | prohibition imposed (by a village community on its members) |
ஊர்க்கதை | ஊரில் இருப்பவர்களின் சொந்த வாழ்க்கை அல்லது ஊர் நடப்புகள்பற்றிய (தேவையற்ற) பேச்சு | gossip |
ஊர்க்காவல் படை | காவல் துறையினருக்கு உதவியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடப் பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளூர்க்காரர்களைக் கொண்டு அமைக்கப்படும் அணி | voluntary force to assist the local police in maintaining law and order |
ஊர்சுற்று | (ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டுப் பயனற்ற முறையில்) ஊரின் பல இடங்களுக்கு அல்லது பல ஊர்களுக்குப் போய்வருதல் | go gallivanting |
ஊர்தி | போக்குவரத்துக்குப் பயன்படுகிற வாகனம் | vehicle (of transport) |
ஊர்ப்பஞ்சாயத்து | ஊர்க்காரர்களுடைய சொத்து, குடும்பம் தொடர்பான பிரச்சினைகளை அல்லது ஊர்ப் பொது விவகாரங்களைப் பேசி விசாரித்து முடிவு செய்கிற ஊர்ப் பெரியவர்கள் கூடிய சபை | body of elders who mediate in the disputes of the village or villagers |
ஊர்ப்பட்ட | அளவுக்கு அதிகமான | more than usual |
ஊர்ப்புறம் | கிராமப்புறம் | rural area |
ஊர்மேய் | பலரிடம் உடலுறவுகொள்ளுதல் | have sex with (many) |
ஊர்வசி | (நாட்டியத்தில் சிறந்த) தேவலோகப் பெண் | a celestial dancer |
ஊர்வலம் | அணிஅணியாகச் செல்லுதல் | procession |
ஊர்வன | முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான (பாம்பு, முதலை போன்ற) பிராணி வகை | reptiles |
ஊர்வாய் | குற்றம்குறை காணும் ஊராரின் பேச்சு | gossip |
ஊர்ஜிதம் | (ஒன்று நடந்திருக்கும் அல்லது நடந்திருக்காது என்பதை முடிவுசெய்யும்) உறுதி | confirmation |
ஊரக | கிராமப்புற | rural |
ஊரடங்கு உத்தரவு | மக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று சட்டப்படியாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை | curfew |
ஊரல் | (உடலில்) சொறியத் தூண்டும் உணர்வு | itching sensation |
ஊராட்சி | கிராமத்துக்கான உள்ளாட்சி அமைப்பு | local self government for a village |
ஊராட்சி ஒன்றியம் | பல ஊராட்சிகளை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு | a union of panchayats |
ஊரார் | ஊரில் வசிக்கும் மக்கள் | inhabitants of a village |
ஊருணி | (பெரும்பாலும் கிராமப்புறத்தில் குடிநீருக்கான) குளம் | tank |
ஊழ் | விதி | fate |
ஊழல் | (ஆட்சி, நிர்வாகம், தொழில் முதலியவற்றில் லஞ்சம் வாங்குதல், வேண்டியவருக்கு உதவி செய்தல் போன்ற) முறைகேடு | corruption |
ஊழி | நீண்ட காலம் நிலைக்கும் ஒரு காலக் கணிப்பு | aeon |
ஊழியம் | (கடவுள், அரசன் தொடர்புடைய) தொண்டு | service (to god, king) |
ஊழியர் | பணியாளர் | employee (of an office, bank, etc.) |
ஊழியன் | (இறைவனுக்கு அல்லது அரசனுக்கு) தொண்டு செய்பவன் | servant (of god or king) |
ஊளை1 | (நரி, ஓநாய் போன்றவற்றின் இயற்கையான) ஓலம்(அடிபட்ட நாயின்) அழுகை ஓலம் | (of fox, jackal) howl |
ஊளை2 | புளித்த நாற்றம் | stink (of sour milk) |
ஊளைச்சதை | (ஒருவரின் உடம்பில்) அளவுக்கு அதிகமாகத் தொங்கும் சதை | flabby flesh (of a corpulent person) |
ஊற்று1 | (நீர் முதலிய திரவப் பொருள்களை) கீழே சாய்த்து வழியவிடுதல் | pour (water or other liquids) |
ஊற்று2 | (நிலத்திலிருந்து வரும்) நீர்ச் சுரப்பு | spring (of a well, pond, etc.) |
ஊற்றுக்கண் | (கிணறு முதலியவற்றின் அடியில் அல்லது ஓரங்களிலிருந்து) நீர் சுரந்து வரும் வழி | orifice of a spring |
ஊற்றெடு | (நீர், கண்ணீர்) பெருகிவருதல் | (of water, tears) well up |
ஊறல்1 | (சாராயம் தயாரிப்பதற்காக) ஊமத்தை, கடுக்காய்க் கொட்டை முதலியவையும் வேறு சில பொருள்களும் சேர்க்கப்பட்டு ஊறும் நீர் | ingredients of arrack soaked in water |
ஊறு1 | (நீர், எச்சில் முதலியன) வெளிவருதல் | (of water) spring |
ஊறு2 | தீங்கு | harm |
ஊறுகாய் | (எலுமிச்சம்பழம், மாங்காய் முதலியவற்றைத் துண்டுதுண்டாக நறுக்கி மிளகாய்ப்பொடி தூவி எண்ணெய்யில் ஊறவைத்து அல்லது மாங்காய் வடுவை உப்பு நீரில் ஊறவைத்து) உணவோடு சிறு அளவில் சேர்த்துக்கொள்ளப்படும் தொடுகறி | pickle |
ஊன் | உணவாக உட்கொள்ளப்படும் விலங்குகளின் அல்லது ஒருசில பறவைகளின் இறைச்சி | meat |
ஊன்றி | (கேட்டல், கவனித்தல் முதலிய வினைகளோடு வரும்போது) உற்று | keenly |
ஊன்றுகோல் | (நடக்கும்போது விழாமல் இருக்கப் பயன்படுத்தும்) கைத்தடி | walking stick |
ஊனக்கண் | (ஞானக்கண்ணோடு ஒப்பிட்டுக் கூறுகையில்) முகத்திலிருக்கும் கண் | physical eye (as opposed to ஞானக்கண்) |
ஊனம் | உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை | (physical) deformity |