Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
வக்கடை நீர் பாய்வதற்காக வயல் வரப்பில் வெட்டிவிடப்படும் ஓடைstreamlet in between the ridges of paddy-field
வக்கணை (சமைத்த உணவு) விரும்பி உண்ணும் வகையில் உள்ளதுtasty
வக்கரி வக்கிரம் அல்லது விகாரம் அடைதல்be perverse
வக்காலத்து ஒரு கட்சிக்காரர் வழக்கறிஞரை வழக்கில் தனக்குப் பதிலாக நீதிமன்றத்தில் ஆஜராகவும் விண்ணப்பிக்கவும் நியமிக்கும் எழுத்துமூலமான சான்றுpower of attorney given to an advocate by a party to a suit
வக்காலத்து வாங்கு ஒருவர் மற்றொருவருக்காகப் பரிந்துகொண்டு வருதல்hold a brief for
வக்கிரம் (ஒருவருடைய மனப்போக்கு, சிந்தனை, உணர்ச்சி முதலியவை) சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு, நியாயம், நியதி முதலியவற்றிலிருந்து திரிந்த நிலைperversity
வக்கீல் வழக்கறிஞர்advocate
வக்கு (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு) (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சக்திmeans
வகி1நிர்வகித்தல்manage
வகு ஏற்படுத்துதல் frame
வகுத்தல் ஓர் எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்கும் முறைdivision
வகுப்பு (கல்வி முறையில் மாணவர்கள் படித்துக் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும்) படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று(in schools) standard
வகுப்புவாதம் சாதி அல்லது மத அடிப்படையில் மக்களைப் பிரிக்க எண்ணும் போக்குsectarianism
வகை பொதுவான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்திக்கொள்ளும் பிரிவுclass
வகைசெய் (உரிய) ஏற்பாடுசெய்தல்devise a method
வகைப்பாடு வகைவகையாகப் பிரிக்கப்பட்டதுclassification
வகையறா (குறிப்பிடப்படுவதோடு) தொடர்புடைய மற்றவைand the rest
வகையாக வசமாகinescapably
வங்கி மக்கள் சேமிக்க உதவுவது, மக்களுக்குத் தேவைப்படும் கடன் தருவது முதலிய செயல்களை மேற்கொள்ளும் நிதி நிறுவனம்(commercial) bank
வங்கியியல் வங்கியின் செயல்முறைகளை விவரிக்கும் துறைbanking
வங்கு காய்ந்து வறண்ட செதிள்களைப் போல மேல்தோலை மாறச்செய்து வெடிப்பு ஏற்படுத்தும் சரும நோய்a kind of skin disease marked by dryness of the skin and cuts
வசதி செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பான நிலைmeans
வசந்த காலம் செடி, கொடி, மரம் ஆகியவை பூக்கத் தொடங்கும் பருவம்spring season
வசப்படு (குறிப்பிட்ட உணர்ச்சிக்கு அல்லது மனநிலைக்கு) ஆட்படுதல்be in the grip of
வசம்பு (மருந்தாகப் பயன்படும்) முறுக்கினாற்போல் அமைந்திருக்கும் ஒரு பூண்டின் வழுவழுப்பான வேர்sweet flag (used as a medicine)
வசமாக தப்பிக்க எந்த வித வாய்ப்பும் இல்லாத வகையில்inescapably
வசவு திட்டுabuse
வசனகர்த்தா (திரைப்படம், நாடகம் ஆகியவற்றுக்கு) வசனம் எழுதுபவர்script-writer (of a film, etc.)
வசனம் (திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசுவதற்காக எழுதப்பட்டதுthe lines assigned to a character in a play or film
வசி (மனிதர் ஓர் இடத்தில்) தங்கி வாழ்தல்live/dwell
வசிப்பிடம் குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்residence
வசியம் (மந்திரத்தால் அல்லது சக்தி வாய்ந்த பேச்சால் ஒருவரை) சுய விருப்பப்படி செயல்படவிடாமல் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல்laying a spell
வசீகரம் (அழகு, இனிமை முதலியவற்றால்) கவர்ந்து தன்வசப்படுத்தும் தன்மைattraction
வசீகரி (அழகு, இனிமை முதலியவற்றால்) கவர்தல்allure
வசூல் (கடன், வரி, கட்டணம், நன்கொடை என) வசூலித்தல் அல்லது வசூலிக்கப்படுவதுcollection (of taxes, payments, donations, etc.)
வசூலி (கடன், வரி, கட்டணம், நன்கொடை என) பணம் பெறுதல் அல்லது சேகரித்தல்raise (funds)
வசை இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் வகையிலான பேச்சுabuse
வசைபாடு இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் வகையில் பேசுதல்abuse
வஞ்சகம் (நம்பச்செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும்) நியாயமற்ற தந்திரம்deceit
வஞ்சப்புகழ்ச்சி (ஒருவரை அல்லது ஒன்றை) இகழ்வது போல் புகழ்வது அல்லது புகழ்வது போல் இகழ்வதுapparent praise or censure suggesting the opposite
வஞ்சம் தீர் பழி தீர்த்தல்take revenge
வஞ்சனை வஞ்சகம்deceit
வஞ்சி நம்பச்செய்து கைவிடுதல்betray
வஞ்சிப்பா நான்கு வகையான தமிழ்ச் செய்யுள்களுள் ஒன்றுone of the major metres of Tamil prosody
வட்டம்1மையப் புள்ளியிலிருந்து எல்லாப் பக்கங்களிலும் சம தூரத்தில் வளைவான கோட்டால் அமைந்த வடிவம்circle
வட்டம்2அரசின் வருவாய் நிர்வாக அமைப்பில் பிர்க்காவைவிடப் பெரிய நிர்வாகப் பிரிவுtaluk (a unit of a revenue division)
வட்டா டபராa saucer-like vessel
வட்டாட்சியர் தாசில்தார்tahsildar
வட்டாரம் குறிப்பிடப்படும் இடமும் அதைச் சுற்றிய பகுதியும்region
வட்டாரமொழி பொது மொழியிலிருந்து ஒலிப்பு முறையாலும் சொற்களாலும் இலக்கண அமைப்பாலும் சற்றே வேறுபாடு உடையதும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சார்ந்தவர்களால் மட்டும் பேசப்படுவதுமான மொழி வகைlanguage variety (spoken by the people of a region of a country or by a class of its people)
வட்டாரவழக்கு வட்டார மொழியில் உள்ள சொல் வழக்குusage in a language variety or dialect
வட்டி கடன் தொகைக்கு அல்லது முதலீடு செய்த தொகைக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்கிற விகிதத்தில் கூடுதலாகப் பெறப்படும் தொகைinterest (on loan, investment, etc.)
வட்டில் (சாப்பிடப் பயன்படுத்தும்) தட்டுplate (to hold food)
வட்டெழுத்து தமிழ் மொழிக்கு (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை) வழங்கிவந்த சற்று வட்ட வடிவில் அமைந்த வரிவடிவம்a script slightly circular in form which was used (till twelfth century A.D.) for Tamil language.
வட்டை வண்டிச் சக்கரத்தின் ஆரக்கால்கள் இணைக்கப்பட்டிருக்கும் மரத்தாலான வெளிப்பகுதிwooden rim of the wheel (of a cart)
வட வடக்கு என்பதன் பெயரடைadjective of வடக்கு
வடக்கத்திய வடக்கிலுள்ளnorthern
வடக்கு தெற்குக்கு எதிர்த்திசைnorth
வடகிழக்குப் பருவக்காற்று (இந்தியாவில்) குறிப்பிட்ட மாதங்களில் மழையைப் பெய்விக்கும் வகையில் வடகிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்றுnorth-east monsoon (in India)
வடநாடு (பெரும்பாலும் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு தென் மாநிலங்கள் தவிர்ந்த இந்தியாவின்) வட பகுதிnorthern part (of India)
வடம் (கோயில் தேரை இழுக்கப் பயன்படுத்தும்) கனமான பருத்த முறுக்குக் கயிறுthick twisted rope (to haul a heavy object like a temple car)
வடமொழி சமஸ்கிருதம்sanskrit
வடி1(திரவம்) கோடாக அல்லது சொட்டுச்சொட்டாக வெளியேறுதல்(of liquid) drip
வடி2(தாவரத்திலிருந்து பிசின், பால் போன்றவற்றை) சொட்டுச்சொட்டாக வெளியேறச்செய்து சேகரித்தல்/(சாற்றை) கொஞ்சம்கொஞ்சமாக இறங்கச்செய்தல்tap
வடிகட்டி திரவத்தை மட்டும் செல்ல விடுவதற்கு ஏற்ற வகையில் வலை அமைத்துச் செய்யப்பட்ட சாதனம்strainer
வடிகட்டின வேறு எதுவும் கலந்திராதdownright
வடிகட்டு (வடிகட்டியால்) கழிவு நீக்கிச் சுத்தம்செய்தல்(ஒன்றிலிருந்து நீரை) வெளியேற்றுதல்filter
வடிகால் நீர் ஒரு பரப்பில் தேங்கிநிற்காமல் செல்வதற்காக அமைக்கப்படும் கால்வாய்outlet
வடிதட்டு சாதத்திலிருந்து கஞ்சியை வடித்தெடுக்க உதவும் முறையில் பாதிப் பரப்பில் மட்டும் ஓட்டைகளைக் கொண்ட தட்டுa shallow metal plate with perforation used as strainer
வடிவகணிதம் வடிவங்களையும் உருவங்களையும் உருவாக்கும் கோடுகள், கோணங்கள் முதலியவற்றைக் கணித அடிப்படையில் விளக்கும் பிரிவுgeometry
வடிவம் புற உருவ அமைப்புform
வடிவமை (சிலை, கட்டடம் போன்றவற்றுக்குக் குறிப்பிட்ட) வடிவம் கிடைக்கும்படிசெய்தல்design
வடிவமைப்பு உருவாக்கப்பட்ட வடிவம் அல்லது தோற்றம்design
வடு1புண் ஆறிய பின் அல்லது அடிபட்ட இடத்தில் ஏற்படும் தடயம்scar
வடுமாங்காய் மாவடுக்களை உப்புப் போட்டு ஊறவைத்துத் தயாரிக்கும் ஒரு வகை ஊறுகாய்a pickled preparation of tender mangoes
வடை கெட்டியாக அரைத்த உளுத்தம்பருப்பை அல்லது கடலைப் பருப்பை வட்டமாகத் தட்டி எண்ணெய்யில் வேகவைத்து எடுக்கப்படும் தின்பண்டம்cutlet-like snack made of lentil or chick-pea paste and fried in oil
வடைக்குத்தி எண்ணெய்யில் போட்ட வடைகளை ஒவ்வொன்றாகக் குத்தி எடுக்கப் பயன்படும் நீளமான கம்பிneedle-like pick to take out snacks such as வடை from the hot oil
வடைகறி வடைக்கு உரிய கடலை மாவை மசாலா சேர்த்துத் தாளித்து ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் ஒரு வகைத் தொடுகறிa kind of side dish for இட்லி, etc using chickpea paste as in the preparation of வடை
வடைப்பருப்பு பாசிப்பருப்பை வேக வைத்துத் தாளித்துச் செய்யும் கார வகைத் தின்பண்டம்spiced greengram served as a snack
வடைவாரி துளைகள் கொண்ட (வடை எடுக்கும்) கரண்டிperforated ladle to take out வடை, etc from the hot oil
வண்டல் (ஆறு, வெள்ளம் முதலியவை அடித்துக்கொண்டு வந்து ஒதுக்கிய) வளமான மண்silt
வண்டவாளம் பிறருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று வைத்திருந்த (ஒருவருடைய) உள் விவகாரம்unpleasant, discreditable facts (which one kept out of public notice)
வண்டி1மாட்டாலோ குதிரையாலோ இழுக்கப்படும் அல்லது இயந்திரத்தால் இயங்கும் சக்கரங்களை உடைய வாகனம்(generally) vehicle
வண்டி2தொந்திpot-belly
வண்டில் இரட்டை மாட்டு வண்டிcart drawn by a pair of bullocks
வண்டு சற்று மேல் எழும்பிய வளைவான உடலில் கண் முதலியவை கொண்ட, பறக்கக் கூடிய பல வகை உயிரினங்களின் பொதுப்பெயர்general term for bees, moth, etc வண்டுகள் ரீங்காரமிட்டுப் பறந்துசென்றன
வண்ணத்துப்பூச்சி விதவிதமான நிறங்களில் அழகிய இறக்கைகளை உடைய ஒரு வகைப் பூச்சிbutterfly
வண்ணம்1நிறம்colour
வண்ணம்2(பெயரெச்சத்தின் பின்) முறையில்(after relative participles) so as
வண்ணான் சலவைத் தொழில் செய்பவர்washerman
வணங்காமுடி யாருக்கும் பணியாமல் நடப்பவன்recalcitrant person
வணிக நோக்கு (வியாபாரம் அல்லாத பிறவற்றிலும்) லாபத்தை எதிர்பார்க்கும் போக்குcommercialism
வணிகம் வியாபாரம்business
வணிகவியல் பொருள்களின் பரிமாற்றத்திற்கு இடையூறாக இருப்பவற்றை நீக்குவதற்கான வழிகளைப்பற்றியும் நிர்வாக வரவுசெலவுபற்றியும் மேற்கொள்ளும் படிப்புcommerce (as a subject of study)
வணிகன் வியாபாரம் செய்பவன்merchant
வத்தல் பதப்படுத்திக் காய வைத்த சில வகைக் காய்கறி/அரிசிக் கூழ், ஜவ்வரிசிக் கூழ் முதலியவற்றைப் பிழிந்து உலர்த்தி எடுத்த துண்டுகள்dried vegetable pieces/rice or sago paste processed by drying
வத்தல்குழம்பு புளிக் கரைசலில் வத்தல் போட்டுச் செய்த குழம்புa sauce of thick tamarind solution with dried vegetable pieces
வத்தலும்தொத்தலுமாக உடல் வற்றி மெலிந்துin a thin and emaciated condition
வத்திப்பெட்டி தீப்பெட்டிmatchbox
வத்திவை (சண்டையை ஆரம்பிக்கும் வகையில்) கோள்சொல்லுதல்create misunderstanding
   Page 1 of 20   1 2 3 20

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?