Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| ஒ | (ஒன்று மற்றொன்றை) போல இருத்தல்(ஒன்று மற்றொன்றுக்கு) சமமாக இருத்தல் | resemble |
| ஒக்கிடு | (சிறு கருவிகளை, இயந்திரங்களை) பழுதுபார்த்தல் | repair (usually small tools or machines) |
| ஒட்டகச்சிவிங்கி | மிக நீண்ட கழுத்தும் கால்களும் சிவந்த மஞ்சள் நிறத் தோலில் கரும் புள்ளிகளும் உடைய விலங்கு | giraffe |
| ஒட்டகம் | நீண்ட கழுத்தும் கால்களும் முதுகில் ஒற்றை அல்லது இரட்டைத் திமிலும் உடைய (பாலைவனத்தில் போக்குவரத்துக்குப் பயன்படும்) விலங்கு | camel |
| ஒட்டடை | (கூரையிலும் சுவரின் மூலைகளிலும்) திரிதிரியாகத் தொங்கும் அல்லது படிந்திருக்கும் தூசி | dust enriched with cobwebs |
| ஒட்டடைக் கம்பு | நீளமான கழியின் ஒரு முனையில் (பெரும்பாலும்) நார் சுற்றப்பட்டு ஒட்டடை நீக்கப் பயன்படும் வீட்டுச் சாதனம் | a long stick tied (usually) with mop of coconut fibre at one end to remove the dusty cobwebs |
| ஒட்டாமல் | (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) அனுமதிக்காமல் | (after an infinitive) not allowing or permitting |
| ஒட்டி | மிகக் குறைவான இடைவெளி விட்டு | close to |
| ஒட்டி உறவாடு | நெருங்கிப் பழகுதல் | move closely with |
| ஒட்டிக்கிரட்டி | ஒன்றுக்கு இரு மடங்கு | twice as much (as mentioned) |
| ஒட்டிய | (குறைவான இடைவெளியில்) அடுத்து இருக்கிற(காலத்தில்) அடுத்து வருகிற | alongside |
| ஒட்டியாணம் | (பெரும்பாலும் நடனம் ஆடும் பெண்கள்) இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்துகொள்ளும், பொன்னால் அல்லது வெள்ளியால் பட்டையாகச் செய்யப்பட்ட ஒரு வகை ஆபரணம் | gold or silver girdle-like ornament worn around the waist over the saree (mostly) by dancers |
| ஒட்டில் | ஓரத்தில் | on the edge |
| ஒட்டு2 | ( கிழிந்த இடத்தின் மேல் அல்லது துவாரம் உள்ள இடத்தின் மேல் வைக்கும்) பொத்தல் மறைப்பு | patch (on the torn part of clothes, or on the hole in a rubber tube) |
| ஒட்டு3 | பேன் குஞ்சு | louse |
| ஒட்டுக்குடித்தனம் | ஒரே வரிசையில் சிறுசிறு பகுதிகளாகக் கட்டப்பட்ட இடத்தில் அல்லது தனித்தனியாகத் தடுக்கப்பட்ட வீட்டின் சிறு பகுதியில் வாடகைக்கு இருக்கும் குடும்பம் | living in a tenement house |
| ஒட்டுக்கேள் | மற்றவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்டல் | overhear (intentionally what others are talking) |
| ஒட்டுண்ணி | (மனிதனின்) உடம்பில் அல்லது (விலங்கு, தாவரம் ஆகியவற்றின்) மேல்புறம் ஒட்டிக்கொண்டு உயிர்ச்சத்துகளை உறிஞ்சி வாழ்கிற உயிரினம் | parasite |
| ஒட்டுத்திண்ணை | (வீட்டின்) முன்வாசலை ஒட்டி அமைக்கப்படும் சிறிய திண்ணை | a small narrow platform-like structure attached to the outer wall of a house (to sit on and relax) |
| ஒட்டுத்துணி | உடல் மறைக்கும்படியான சிறு ஆடை அல்லது துண்டுத் துணி | ragged cloth |
| ஒட்டுதல் | அன்பால் ஈர்க்கப்படுதல் | attachment |
| ஒட்டுப்பலகை | தகடு போன்ற மெல்லிய பலகைகளை ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டிச் செய்யப்பட்ட வலிமையான பலகை | plywood |
| ஒட்டுமீசை | (திரைப்படம், நாடகம் போன்றவற்றில் நடிகர் வைத்துக்கொள்ளும் அல்லது விளையாட்டுப் பொருளாக விற்கப்படும்) செயற்கை முடியால் தயாரிக்கப்பட்ட மீசை | a false moustache (used by actors, etc.) |
| ஒட்டுமொத்தம் | பலவற்றின் தொகுப்பு | collective |
| ஒட்டுவாரொட்டி | தொற்றுநோய் | contagious disease |
| ஒட்டுவேலை | கட்டடங்களில் மேல்தளம் போட ஜல்லியும் சிமிண்டும் கலந்த கலவையைப் பரப்பிப் பூசி மூடும் வேலை | roof plastering |
| ஒட்டுறவு | பாசத்தோடு கூடிய தொடர்பு | cordial relationship |
| ஒடி1 | (கழி, எலும்பு போன்ற உறுதித் தன்மை உடைய பொருள்கள்) இரண்டாகப் பிரிதல் | (of long solid objects such as stick, bone, etc.) break |
| ஒடி2 | (கழி, எலும்பு போன்ற உறுதித் தன்மை உடைய பொருள்களை) இரண்டாகுமாறு செய்தல்(மரக் கிளை போன்றவற்றை மூல) இணைப்பிலிருந்து பிரித்தல்முறித்தல் | break (long solid objects such as stick, etc or a branch of a tree) |
| ஒடிசல் | (உடல் தோற்றத்தில்) ஒல்லி | (of a figure) thin |
| ஒடியல் | உலரவைத்த பனங்கிழங்கு | dried palmyra root |
| ஒடுக்கம் | (-ஆன) (அளவு, பரப்பு முதலியவற்றைக் குறிப்பிடும்போது) குறுகல் | narrow |
| ஒடுக்கு1 | (கலகம் செய்வோரை அல்லது போராட்டம் முதலியவற்றை) அடக்குதல்(உரிமைகளைப் பறித்து) கட்டுப்படுத்துதல் | put down |
| ஒடுக்கு2 | (பாத்திரத்தில் ஏற்படும்) நெளிவு | dent (in a vessel) |
| ஒடுக்குமுறை | அடக்குமுறை | repressive measure(s) |
| ஒடுங்கிய | குறுகிய | narrow |
| ஒடுங்கு | (அதிகமாக அல்லது முனைப்பாக இருந்த நிலையிலிருந்து) குறைதல்(உயிர், மூச்சு) குறைந்து உள்ளடங்குதல் | (of volume, intensity, etc.) become reduced |
| ஒண்டி | (துணை இல்லாமல்) தனி | (by) oneself |
| ஒண்டிக்கட்டை | துணை யாரும் இல்லாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர் | one who is alone (by choice) |
| ஒண்டு | (ஒன்றின் அல்லது ஒருவரின் அருகில் போய்) ஒளிந்தாற்போல் அல்லது ஒட்டினாற்போல் இருத்தல்(பொருளோடு பொருளாகத் தன்னை) சார்த்திக்கொள்ளுதல் | cling to |
| ஒண்டுக்குடி | ஒட்டுக்குடித்தனம் | living in a tenement |
| ஒண்ணு | (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) இயலுதல் | (used negatively) be able to |
| ஒத்த | (காலத்தைக் குறிக்கையில்) ஒரே | (while referring to time, period) same |
| ஒத்தடம் | வெந்நீரில் துணியை நனைத்து அல்லது இளஞ்சூட்டில் உள்ள தவிட்டைத் துணியில் சுற்றி வலி அல்லது சளி நிவாரணத்துக்காக உடம்பில் சிறிது நேரம் வைத்துவைத்து எடுத்தல் | fomentation |
| ஒத்தாசை | (ஒருவருடைய வேலையின் சிரமத்தைக் குறைப்பதற்குச் செய்யும்) உதவி | help |
| ஒத்தி | கடன் வாங்கியவர் தன் உடமைகளுள் ஒன்றைக் கடன் தந்தவருக்கு அனுபோக உரிமையுடன் தருவதும் அதிலிருந்து வரும் வருமானத்தைக் கடனுக்கு ஈடாக எடுத்துக்கொள்ள அனுமதிப்பதுமான ஏற்பாடு | usufructuary mortgage |
| ஒத்திகை | (நாடகம், இசைக் கச்சேரி முதலியவற்றை மேடையில் நிகழ்த்துவதற்கு முன் அதை நடத்தி) சரிபார்க்கும் பயிற்சி | rehearsal |
| ஒத்திசைவு | (முரண்பாடு இல்லாத) பொருத்தம் | harmony |
| ஒத்திப்போடு | (ஒரு செயலை, பணியைத் திட்டமிட்ட நாளில் அல்லது நேரத்தில் செய்யாமல்) தள்ளிப்போடுதல் | postpone (a work, plan, etc.) |
| ஒத்திரு | (ஏதேனும் ஓர் அம்சத்தில் இருவர் அல்லது இரண்டாக இருப்பவை தன்மையில்) ஒன்று போல் இருத்தல் | (in one aspect) be alike or the same |
| ஒத்திவைப்பு | தள்ளிவைப்பு | postponement |
| ஒத்திவைப்புத் தீர்மானம் | பாராளுமன்றம், சட்டமன்றம் முதலியவற்றில் முக்கியமான பொதுப் பிரச்சினை ஒன்றை விவாதிக்கும்பொருட்டு அவையின் அன்றைய நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் கோரிக் கொண்டுவரப்படும் தீர்மானம் | motion of adjournment on a matter of public importance |
| ஒத்து2 | நாதஸ்வர வாசிப்புக்குச் சுருதி கூட்ட உடன் ஊதப்படும் ஒரு குழல் கருவி | a long wind instrument played on as an accompaniment to நாதஸ்வரம் |
| ஒத்து3 | இணைந்து | jointly |
| ஒத்துப்பார் | (மூலத்தையும் பிரதியையும் அல்லது கணக்கை) ஒப்பிட்டுச் சரிபார்த்தல் | compare (the original with the copy) |
| ஒத்துப்போ | இணங்கிப்போதல் | be in agreement with |
| ஒத்துவா | இணங்குதல் | be in harmony with |
| ஒத்துழை | (தனியாக ஒருவரால் முடியாத பெரிய பணியை முடிக்க மற்றவர் உடனிருந்து) இணக்கமாக உதவுதல் | cooperate |
| ஒத்துழைப்பு | இணக்கமான (கூட்டு) உதவி | cooperation |
| ஒத்துழையாமை | ஒத்துழைப்புத் தர மறுத்தல் | non-cooperation |
| ஒத்தூது | ஒத்துப்பாடுதல் | say yes to |
| ஒதுக்கிவை | (ஒருவரையோ ஒரு குடும்பத்தையோ எந்த விதத் தொடர்பும் இல்லாத வகையில்) விலக்கிவைத்தல் | exclude |
| ஒதுக்கீடு | (சேர வேண்டியது அல்லது உரியது எவ்வளவு என்று) பிரித்துத் தருவது | allotment (of place, house, etc.) |
| ஒதுக்கு | (திரைச்சீலை, முடி முதலியவற்றை) ஒரு பக்கமாகத் தள்ளுதல் | pull back (the curtains) |
| ஒதுக்குப்புறம் | (ஊருக்கு) சற்றுத் தொலைவில் தள்ளி அமைந்திருக்கும் இடம் | remote or secluded place |
| ஒப்படை | (தன் பொறுப்பில் உள்ள ஒருவரை அல்லது ஒன்றை மற்றொருவர்) பொறுப்பில் விடுதல் | entrust |
| ஒப்பந்தக்காரர் | குறிப்பிட்ட காலத்துக்குப் பொது இடங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லது கட்டடம் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர் | contractor |
| ஒப்பந்தப்புள்ளி | (குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க அல்லது தேவையான பொருள்களை வழங்க ஆகும்) செலவு விவரங்களை ஒருவர் ஓர் அமைப்புக்குத் தெரியப்படுத்தும் முழு விவர அட்டவணை தாங்கிய ஆவணம் | tender |
| ஒப்பந்தம் | (நபர்கள் அல்லது அமைப்புகள் ஏதேனும் ஒன்றைத் தமக்குள் செயல்படுத்த முடிவுசெய்யும்போது அதற்காக) நடைமுறைக் குறிப்புகளோடு ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கை | agreement |
| ஒப்பம் | கையொப்பம் | (mostly in government offices or government circulars) signature |
| ஒப்பற்ற | மிகச் சிறந்த | peerless |
| ஒப்பனை | நடிகர்கள் முகத்திலும் கை போன்ற உறுப்புகளிலும் வண்ணக் கலவையால் பூசிக்கொள்ளும் அல்லது உடலில் அணிகலன்களை அணிந்துகொள்ளும் அலங்காரம் | (of actors, etc.) make up (sometimes including costume) |
| ஒப்பாய்வு | எடுத்துக்கொண்ட பொருளை அல்லது படைப்பை அதை ஒத்த பொருளோடு அல்லது படைப்புகளோடு ஒப்பிட்டு மேற்கொள்ளும் ஆராய்ச்சி | comparative study (of a theme or of literary works) |
| ஒப்பாரி | (இழவு வீட்டில்) இறந்துபோனவரைக்குறித்த அழுகையும் (பாட்டு வடிவிலான) புலம்பலும் | lamentation (over the dead with wailing and mourning songs) |
| ஒப்பி | (மனப்பாடமாக இருக்கும் விஷயத்தை மாற்றாமல்) திருப்பிச் சொல்லுதல் | repeat or reproduce exactly (from memory) |
| ஒப்பிடு | (ஒற்றுமை உடையவற்றில்) குறைநிறை அறிதல்(ஒற்றுமை குறைவானவற்றில்) வேறுபடுத்துதல் | compare |
| ஒப்பீடு | ஒற்றை மற்றொன்றோடு இணைத்துக் காணுதல் | comparison |
| ஒப்பு1 | (ஒன்றைச் செய்வதற்கு அல்லது ஏற்பதற்கு) இணங்குதல் | consent (to do) |
| ஒப்பு2 | (குணம், பண்பு, செயல், தரம் போன்றவற்றில்) இணை | equal |
| ஒப்புக்குச் சப்பாணி | குழுவில் ஒப்புக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் நபர் | a person included for the sake of form |
| ஒப்புக்கொடு | ஒப்படைத்தல் | entrust |
| ஒப்புக்கொள் | ஒத்துக்கொள்ளுதல் | accept |
| ஒப்புதல் | சம்மதம் | acceptance |
| ஒப்புதல் வாக்குமூலம் | நீதிமன்றத்தில் அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே நீதிபதி முன்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர் தானாக முன்வந்து தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகக் கொடுக்கும் வாக்குமூலம் | statement of confession (made by an accused in the court or before a magistrate) |
| ஒப்புமை | ஒப்பிடும்படி இருப்பது | comparison |
| ஒப்புவி | (ஒருவருடைய) பொறுப்பில் சேர்த்தல் | hand over |
| ஒப்பேற்று | (இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தன்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு) சரிக்கட்டுதல் | (in difficult circumstances) make do (with what is available) |
| ஒப்பேறு | (ஒன்றுமே இல்லை அல்லது மிகவும் மோசம் என்ற நிலையில் இல்லாமல்) தேறுதல் | be salvaged |
| ஒய்யாரி | (நடை, உடை முதலியவற்றில்) கவர்ச்சி நிறைந்த பெண் | stylish woman |
| ஒயில் | ஒய்யாரம் | (stylish) elegance |
| ஒயில் கும்மி/ஒயிலாட்டம் | கையில் வண்ணத் துணிகளை வைத்துக்கொண்டு கும்மி அடிப்பது போல் சுற்றிவந்து ஆடும் ஒரு நாட்டுப்புற நடனம் | a kind of folk dance by a group in a circle waving colourful handkerchiefs |
| ஒருகால் | ஒருவேளை | perhaps |
| ஒருகாலும் | (எதிர்மறை வினைகளுடன்) எந்தக் காலத்திலும் | (with negative verbs) at any time |
| ஒருகை பார் | (திறமைக்குச் சவால் விடப்படும்போது) உண்டு அல்லது இல்லை என்னும்படி முடித்தல் | (in a challenging situation) deal with effectively |
| ஒருங்கமை | ஒன்றுசேர்த்தல் | join together |
| ஒருங்கிணை1 | (தனித்தனியாக அல்லது பல பகுதிகளாக உள்ளவை முரண்பாடு இல்லாமல்) ஒன்றாக இணைதல் | join (harmoniously) together |
| ஒருங்கிணை2 | (தனித்தனியாக உள்ள பலவற்றை) ஒன்றாக இணைத்தல் அல்லது சேர்த்தல் | link up |
| ஒருங்கிணைந்த | ஒரு பணியின் அல்லது நோக்கத்தின் பல அம்சங்களையும் உள்ளடக்கிய | (any scheme that is) integrated |
| ஒருங்கிணைப்பாளர் | ஒரு திட்டத்தின் அல்லது பணியின் பகுதிகள் பலரால் அல்லது பல அமைப்புகளால் செயல்படுத்தப்படும்போது அவற்றை இணைத்துத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை வகிப்பவர் | co-ordinator |
| ஒருங்கிணைப்பு | ஒன்று கூடிய நிலை | combined state |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.