We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning | English Meaning |
ஏக்கர்/ஏக்கரா | நிலத்தைக் கணக்கிடுவதற்கான ஓர் அளவு | acre |
ஏக1 | ஏகப்பட்ட | large |
ஏகத்தாறாக | அதிகமாக | exorbitantly |
ஏகதேசம் | உத்தேசம் | approximation |
ஏகப்பட்ட | (எண்ணிக்கையில், அளவில்) மிகுதியான | excessive |
ஏகபோகம் | (வேறு யாருக்கும் இல்லாமல்) அனைத்தையும் தன்னிடத்தே கொண்டிருக்கும் ஆதிக்கம்(ஒருவரிடம்) குவிக்கப்பட்டிருக்கும் உரிமை | monopoly |
ஏகமனதாக | ஒருமனதாக | unanimously |
ஏகமாக | (அளவில்) மிகுதியாக | (of quantity, etc.) in excess |
ஏகமுடி | (கூத்தில் நடிக்கும் ஆண்கள் வெட்டாமல் வளர்த்திருக்கும்) நீளமான தலைமுடி | long hair (of an actor in folk theatre) |
ஏகாக்கிர சிந்தை | மனக் குவிப்பு | concentration |
ஏகாங்கி | (குடும்பம், பொறுப்பு முதலியவற்றிலிருந்து விலகிய) தனித்த மனிதன் | a person without a family |
ஏகாதசி | (உண்ணாவிரதம் இருக்கும்) அமாவாசையிலிருந்து அல்லது பௌர்ணமியிலிருந்து பதினோராவது திதி | (a day of fasting occurring on the) eleventh day from new moon and also full moon |
ஏகாதிபத்தியம் | சிறிய நாடுகள் மீது வலிமை படைத்த நாடுகள் செலுத்தும் அரசியல், பொருளாதார ஆதிக்கம் | imperialism |
ஏகாந்தம் | தனிமையும் அமைதியும் நிறைந்தது | solitude |
ஏகாலி | சலவைத் தொழிலாளி | launderer |
ஏகு | செல்லுதல் | go |
ஏகோபித்து/ஏகோபித்த | ஒருமனதாக/ஒருமனதான | unanimously/unanimous |
ஏங்கு | இழந்ததைப் பெற விழைதல் | long for |
ஏச்சு | வசவு | scolding |
ஏட்டிக்குப்போட்டி | எதிர்மறுப்பு | rivalry |
ஏட்டு | தலைமைக் காவலர் | head constable |
ஏட்டுச்சுரைக்காய் | வாழ்க்கைக்கு உதவாத வெறும் நூல் அறிவு | bookishness |
ஏடாகூடம் | முறைகேடு | improper |
ஏடு | (பொதுவாக) பத்திரிகை(குறிப்பாக) இதழ் | (generally) magazine |
ஏணி | உயரமான ஓர் இடத்தை ஏறி அடைவதற்கு வசதியாக இரு நீண்ட கழிகளுக்கு இடையில் குறுக்குச் சட்டங்களை இணைத்துச் செய்யப்பட்ட ஓர் அமைப்பு | (mostly wooden) ladder |
ஏணை | தூளி | a cloth hammock for children to sleep |
ஏத்து | (புகழ்ந்து) சிறப்பித்தல் | extol |
ஏதாவது | எந்த ஒன்றாவது | anything |
ஏது1 | (ஒரு செயல் அல்லது நிகழ்ச்சி எளிதில் நடப்பதற்கான) வசதி | that which facilitates |
ஏப்பம் | (வயிற்றிலிருந்து) வாய்வழியாகச் சத்தத்துடன் வெளிவரும் காற்று | belch |
ஏப்பம்விடு | (பணத்தை) அபகரித்தல் | swindle |
ஏமா | ஏமாற்றம் அடைதல் | get disappointed |
ஏமாளி | எளிதில் ஒருவரை அல்லது ஒன்றை நம்பி மோசம்போய்விடக் கூடிய நபர் | one who is easily beguiled or duped |
ஏமாற்றம் | எதிர்பார்ப்பது நிறைவேறாமல் ஏற்படும் மனக்குறை | disappointment |
ஏமாற்று | (நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய் சொல்லி ஒருவரை) மோசம்செய்தல் | cheat |
ஏமாறு | (எதிர்பார்த்து) நம்பிக்கை இழத்தல் | get disappointed |
ஏய் | (நம்பும்படியாக நடந்து) ஏமாற்றுதல் | fool |
ஏர் | கலப்பை | plough |
ஏர்க்கால் | (கலப்பையில்) ஏரையும் நுகத்தடியையும் இணைக்கும் பகுதி | the rod connecting the plough with the yoke |
ஏர்கட்டு | (நிலத்தை உழுவதற்காக) கலப்பையில் மாட்டை இணைத்தல் | yoke the oxen to the plough |
ஏர்பிடி | (கலப்பைகொண்டு) உழுதல் | plough |
ஏராளம் | (எண்ணிக்கையில், அளவில்) அதிகம் | a large number |
ஏரி | மழைநீர் வருவதற்கு வசதியாகத் திறந்த பக்கங்களும், நீர் வெளியேறும் பக்கத்தில் கரையும் கொண்டதாக உள்ள, பாசனத்திற்கான பெரிய நீர்நிலை | lake (that receives water mainly from rain, with a bank on the side from where water is discharged for irrigation) |
ஏரிக்கட்டு | (காளை மாட்டின்) திமில் | hump (of a bull) |
ஏருவப்படு | (நீதிமன்றத்தில் அல்லது காவல் துறையினரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு) சரணடைதல் | surrender (oneself in a court of law or to the police pleading guilty) |
ஏல் | ஒப்புக்கொள்ளுதல் | accept |
ஏலம்1 | பலர் கூடியுள்ள ஒரு கூட்டத்தில் மிக உயர்ந்தபட்ச விலையில் கேட்போருக்குப் பொருளைக் கொடுக்கும் விற்பனை | auction |
ஏலம்2 | (உணவுப் பண்டங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படும்) நறுமணம் உடைய சிறு விதைகள் கொண்ட காய் | cardamom (pod containing) seeds |
ஏலரிசி | ஏலக்காயின் உள்ளிருக்கும் விதை | seed of the cardamom fruit |
ஏலவே | ஏற்கனவே | already |
ஏவலாள் | ஒருவர் இடும் கட்டளையை ஏற்றுப் பணிவிடை செய்பவன் | servant |
ஏவறை | ஏப்பம் | belch |
ஏவாள் | கடவுள் ஆதாமிடமிருந்து படைத்த பெண் | eve |
ஏவுகணை | தொலைவில் அல்லது உயரத்தில் உள்ள ஓர் இலக்கைக் குறிவைத்துத் தாக்குவதற்குச் செலுத்தப்படும் ராணுவ ஆயுதம் | missile |
ஏழ் | (உயிரெழுத்துகளில் தொடங்கும் பெயர்களின் முன்) ஏழு என்பதன் பெயரடை வடிவம் | the adjectival form of ஏழு (before a vowel) |
ஏழ்மை | வறுமை | poverty |
ஏழாம் பொருத்தம் | ஒருவர் மற்றொருவரோடு ஒத்துப்போக முடியாத நிலை | incompatibility |
ஏழு | ஆறு என்ற எண்ணுக்கு அடுத்த எண் | (the number) seven |
ஏழை | வறுமையில் இருப்பவர் | poverty stricken (person) |
ஏழைப்பங்காளன் | ஏழைகளின் துன்பங்களில் தானும் பங்கேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்பவன் | saviour of the poor |
ஏழைபாழை | ஏழையும் ஆதரவற்றவரும் | the poor and the destitute |
ஏற்கனவே/ஏற்கெனவே | (சொல்லப்படும் இந்த நேரத்துக்கு) முன்பே(கட்டுரை முதலியவற்றில், குறிப்பிடப்படும் இந்த இடத்துக்கு) முந்??திய பகுதியில் | (in time and space) already |
ஏற்ப | (நான்காம் வேற்றுமையோடு இணைந்து) தகுந்த அல்லது இசைந்த முறையில் | according to |
ஏற்படு | (ஒரு செயலின் விளைவு) வந்து சேர்தல் | (the effect/result of a cause) come into existence |
ஏற்படுத்து | (ஒரு விளைவை) வந்து சேரச்செய்தல் | cause |
ஏற்பாடு | செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை | preparatory work |
ஏற்பு | (பெரும்பாலும் செய்தித்தாள் தலைப்புகளில்) அதிகாரபூர்வமான முறையில் பெற்றுக்கொள்ளுதல் அல்லது ஒப்புக்கொள்ளுதல் | acceptance |
ஏற்பு ஊசி | தசைவிறைப்பு ஜன்னியைக் குணப்படுத்தப் போடும் ஊசி | injection against tetanus |
ஏற்புடைய | உகந்த | suitable |
ஏற்புத்திறன் | ஏற்றுக்கொள்கிற தன்மை | absorbing capacity |
ஏற்புரை | பாராட்டப்படுபவர் தன்னைப்பற்றி அல்லது தன் சேவையைப்பற்றிக் கூட்டத்தில் கூறிய (பாராட்டு) கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் முறையில் பேசும் பேச்சு | speech accepting felicitations (at a formal meeting) |
ஏற்புவலி | தசைவிறைப்பு ஜன்னி | tetanus |
ஏற்ற | தகுந்த | agreeable |
ஏற்ற இறக்கம் | (பேசுதல், பாடுதல் போன்றவற்றில் குரலை) உயர்த்துதலும் தாழ்த்துதலும் | (tonal) modulation (when talking, singing, etc.) |
ஏற்றத்தாழ்வு | (மனிதரிடையே அல்லது சமுதாயத்தின் படிநிலைகளில் பிரிக்கப்படும்) தர வேறுபாடு | inequalities |
ஏற்றப்பாடல் | (கிராமங்களில்) ஏற்றம் இறைக்கும்போது பாடும் பாடல் | song sung at the time of drawing water from well for irrigation |
ஏற்றம்1 | (விலை) அதிகரிப்பு | rise (in price) |
ஏற்றம்2 | கிணறு போன்ற நீர்நிலைகளின் அருகில் நீளமான கம்பு ஒன்றை நட்டு அதன் கவைப் பகுதியில் உள்ள சுழல் கட்டையோடு குறுக்குவாட்டில் ஒரு கட்டையைப் பொருத்தி அதில் நீர் பாய்ச்சுவதற்கான சால் பொருத்தப்பட்ட அமைப்பு | a structure consisting of a wooden post with a cross-bar at one end of which a சால் is tied to draw water from a well (for irrigation) |
ஏற்று1 | (வாகனத்தில்) ஏறச்செய்தல் | take (passengers) |
ஏற்று2 | (விளக்கு, கற்பூரம் போன்றவற்றை) எரியச்செய்தல் | light (an oil lamp, camphor, etc.) |
ஏற்றுமதி | (பிற மாநிலங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு) அனுப்புதல் | the act of exporting |
ஏற இறங்க | (எடைபோடும் நோக்கத்துடன் ஒருவரைப் பார்க்கும்போது) மேலும்கீழுமாக | sizing up with a view of assessing |
ஏறக்கட்டு | (படிப்பு, வியாபாரம் முதலியவற்றை) மேலும் தொடராவண்ணம் நிறுத்துதல் | wind up |
ஏறக்குறைய/ஏறத்தாழ | சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக | approximately |
ஏறுக்குமாறு-ஆக/-ஆன | (பேச்சில், செயலில்) முரண்பாடாக/முரண்பாடான | in a contradictory way/inconsistent |
ஏறுதழுவுதல் | (முற்காலத்தில் ஓர் இளைஞன் பெண்ணை மணமுடிக்கும் பொருட்டு) காளையை அடக்குதல் | taming a bull (in order to win the hand of a girl) |
ஏறுநடை | கம்பீரமான பெருமித நடை | proud bearing (as of a victor) |
ஏறுமுகம் | (வாழ்க்கை, வியாபாரம், விலை முதலியவற்றில்) தாழ்ந்த நிலையிலிருந்து உயரும் நிலை | upward trend (in business, life, etc.) |
ஏறுவரிசை | முறைப்படுத்தப்பட்ட வரிசையில் முதலாவதாக உள்ளதிலிருந்து இறுதியாக உள்ளதற்குச் செல்லும் முறை | ascending order |
ஏனம் | (வீட்டில் புழங்கும்) பாத்திரம் | vessel (in daily use) |
ஏனெனில் | ஏனென்றால் | because |
ஏனைய | மேலும் உள்ள | other |
ஏனோ | குறிப்பிட்டுக் கூற முடியாத காரணத்தால் | for some reason or other |
ஏனோதானோ-என்று/-என்ற | உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாமல்/உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாத | half-heartedly/half-hearted |