We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning | English Meaning |
தக்க | தகுந்த | appropriate |
தக்கவை | (ஏற்கனவே தன் வசம் இருக்கும் ஒன்றை) இழக்காமல் தொடர்ந்து வைத்திருத்தல் | retain (a seat, title, etc in a contest, election, etc.) |
தக்(க)ளி | (கையால் பஞ்சிலிருந்து நூல் நூற்கப் பயன்படும்) கம்பியின் மேல்பகுதியில் கொக்கி போலக் கூர்மையாக வளைத்துக் கீழ்ப்புறம் தட்டு போன்ற ஒரு சிறிய பகுதியை இணைத்த சிறு கருவி | a kind of spindle (for spinning) |
தக்கார் | (பரம்பரை முறையிலோ அறங்காவலராலோ நிர்வகிக்கப்படாத பெரிய கோயில்களின்) பூஜை, வருவாய், நகை முதலியவற்றைப் பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள அரசால் நியமிக்கப்படும் உள்ளூர்ப் பிரமுகர் | one of the local public nominated by the government in the absence of trustee for the management of temples |
தக்காளி | வடிவத்தில் உருண்டையானதும் நிறத்தில் சிவப்பானதும் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை உடையதும் காய்கறியாகப் பயன்படுவதுமான ஒரு வகைப் பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும் செடி | tomato (the fruit and the plant) |
தக்கை | (ஒரு வகை நீர்த் தாவரத்திலிருந்து அல்லது ஒரு வகை மரத்திலிருந்து எடுக்கப்படும்) கனம் இல்லாததும் நீரில் மிதக்கக் கூடிய தன்மையுடையதுமான பொருள் | cork |
தகடு | குறைந்த அளவு கனமும் அதிகப் பரப்பும் கொண்ட உலோகத் துண்டு | metal plate |
தகதக | (ஒரு பரப்பு கண்ணைக் கூசச்செய்யும் வகையில்) ஒளிவிடுதல் | (of a surface) glitter |
தகதக-என்று | (நெருப்பைக் குறிக்கையில்) அதிகமாகக் கொழுந்துவிட்டு | (of fire burning) brightly |
தகப்பன் | தந்தை | father |
தகர்1 | (தாக்கப்பட்டு அழிந்துபோகும் வகையில்) சிதறுதல் | (of buildings) shatter (to pieces) |
தகர்2 | (அழிந்துபோகும் அல்லது உருக்குலைந்துபோகும் வகையில்) சிதறச்செய்தல் | demolish |
தகரம் | (பெட்டி, டப்பா போன்றவை செய்வதற்குப் பயன்படும்) எளிதாக வளையக் கூடியதும் தகடாக மாற்றத் தக்கதுமான வெள்ளை நிற உலோகம் | tin |
தகராறு | கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை | dispute (between two groups or nations) |
தகவமை | குறிப்பிட்ட ஒரு சூழலுக்கு ஒத்துப்போகும்வண்ணம் மாற்றிக்கொள்ளுதல் | adapt or adjust (oneself to a situation) |
தகவல் | (குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்து) பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி | information |
தகவல்தொடர்பு | ஓர் இடத்திலிருந்து தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தும் (தொலைபேசி, கம்பியில்லாத் தந்தி முதலிய) அமைப்பு | information and communications |
தகவலாளி | (தான் பேசும் மொழி, தன் சமூக வழக்குகள் முதலியவற்றைப் பற்றி) ஆராய்ச்சி செய்பவருக்கு வேண்டிய தகவல் தருபவர் | informant |
தகவு | தகைமை | meritoriousness |
தகனக் கிரியை | (இந்து மத ஆசாரப்படி) பிணத்தை எரிக்கும் சடங்கு | cremation rites (of Hindus) |
தகனம் | எரித்தல் | burning |
தகாத | தகுதியற்ற | improper |
தகி | (எரிப்பது போன்று) வெப்பம் உடையதாக இருத்தல் | be or feel excessively hot |
தகிடுதத்தம் | (ஒன்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக) தவறான வழிகளைப் பின்பற்றும் செயல் | manipulation |
தகு | (சில தொடர்களில் மட்டும்) தகுந்த | (in certain phrases only) worthy of |
தகுதி | (ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு) ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் கொண்டிருக்கும் முன் அனுபவம் அல்லது அறிவு | qualification |
தகுதிநிலை | தரப்படுத்தப்பட்ட வரிசை | grade |
தகுந்த | பொருத்தமான | appropriate |
தகும் | ஏற்றதாகும் | (is) appropriate or worth or well deserved |
தகைமை | தகுதி | (of things) worth |
தங்கக்கம்பி | மிகவும் நல்லவன் | person of sterling character |
தங்கமான | (ஒருவரின் குணம், தன்மை, நடத்தை முதலியவற்றைப் பாராட்டிச் சொல்லுகையில்) எந்த விதக் குறையுமற்ற | having a heart of gold |
தங்கமீன் | தங்க நிறத்தில் உள்ள சிறிய மீன் | goldfish |
தங்கல் | (ஓர் இடத்தில்) தங்குதல் | stay |
தங்கு | (குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஓர் இடத்துக்குச் சென்று) குறிப்பிட்ட காலம்வரை இருத்தல் | stay (at a place for a period of time) |
தங்குதடை | (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களான அற்ற, இல்லாத முதலியவற்றுடன் இணைந்து) தடுமாற்றம் | obstruction |
தங்கை | உடன்பிறந்த பெண்களில் தன்னைவிட இளையவள் | younger sister |
தச்சன் | மரத்தில் பொருள்கள் செய்பவர் | carpenter |
தச்சு | மரத்தில் பொருள்கள் செய்யும் வேலை | carpentry |
தசம் | (பெரும்பாலும் கூட்டுச்சொற்களில்) பத்து | ten |
தசமப்புள்ளி | முழு எண்ணை அடுத்து, மதிப்பில் ஒன்றைவிடக் குறைந்த எண்ணை, தசமப் பகுதிகளாகப் பிரித்துக்காட்ட இடப்படும் புள்ளி | decimal point |
தசமம் | எண்களைப் பத்தின் மடங்குகளாகக் கணக்கிடும் முறை | decimal (system) |
தசமி | அமாவாசை அல்லது பௌர்ணமி கழிந்து பத்தாவதாக வரும் நாள் | the tenth day after the full moon and also after the new moon |
தசமூலம் | (நாட்டு வைத்தியத்தில்) மருந்தாகப் பயன்படும் (வில்வம், நெருஞ்சி முதலிய பத்துச் செடிகளின்) வேர்கள் | medicinal roots (of ten specified plants) |
தசரா | (புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாளிலிருந்து) பத்து நாள் நடைபெறும் துர்க்கை வழிபாட்டுத் திருவிழா | a festival of ten days in which goddess Durga is worshipped |
தசாப்தம் | பத்து ஆண்டு காலம் | decade |
தசாபலன் | ஒருவருடைய ஜாதகத்தில் குறிப்பிட்ட ஒரு கிரகம் ஒரு வீட்டில் ஆட்சிபுரியும் காலத்தில் ஏற்படும் பலன் | influence of a planet on the fortunes of a person during its ascendancy |
தசாவதாரம் | (புராணத்தில்) திருமால் எடுத்த பத்து அவதாரங்கள் | the ten incarnations of Vishnu |
தசாவதானம் | ஒரே நேரத்தில் நிகழும் (பத்து) செயல்களைக் கவனித்து நினைவில் இருத்தும் கலைத் திறமை | the skill of responding to (ten) tasks performed simultaneously |
தசாவதானி | தசாவதானம் செய்பவர் | one who performs தசாவதானம் |
தசை1 | உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்பு | muscle |
தசை2 | (ஒருவருடைய ஜாதகத்தில் குறிப்பிட்ட) கிரகம் ஆட்சிபுரியும் காலம் | reigning period of a planet |
தசை நாண் | எலும்புகளையும் தசைகளையும் இணைத்திருக்கும் நாண் போன்ற திசுத் தொகுப்பு | tendon |
தசை நார் | மூட்டுகளை ஒரு நிலையில் இருக்கும்படியாகப் பற்றிப் பிடித்திருக்கும் நார் போன்ற திசுத் தொகுப்பு | ligaments |
தசைப் பிடிப்பு | (மனித உடலில்) தசை இறுகுவதால் ஏற்படும் வலி | cramp |
தசைவிறைப்பு ஜன்னி | காயத்தின் வழியாக ஒரு வகைக் கிருமிகள் நுழைவதால் தசைகள் பாதிக்கப்பட்டு உடல் விறைப்புத் தன்மையை அடையும்படியான நோய் | tetanus |
தஞ்சம் | அடைக்கலம் | refuge |
தஞ்சாவூர்த்தட்டு | (தஞ்சாவூரில் தயாரிக்கப்படும்) உலோகத்தில் அழகிய வேலைப்பாடுகளோடு அமைந்த வட்ட வடிவ அலங்காரப் பொருள் | ornamental metal plate embossed with designs (originally of Thanjavur) |
தட்சணை/தட்சிணை | (கோவிலில் குருக்களுக்கு அல்லது கல்வி கற்பித்த குரு முதலியோருக்கு) காணிக்கையாக அளிக்கும் பணம் அல்லது பொருள் | offering made to a priest or to a teacher |
தட்டச்சர் | (அலுவலகத்தில் கடிதம் முதலியவற்றை) தட்டச்சுசெய்யும் பணியாளர் | typist |
தட்டச்சு | தட்டச்சுப்பொறி தொடர்பானது | typewriting |
தட்டச்சுசெய் | (தட்டச்சுப்பொறியில் உள்ள சாவிகளை விரல்களால் அழுத்துவதன்மூலம் தாளில்) எழுத்துகளைப் பதித்தல் | type (on a typewriter) |
தட்டச்சுப்பொறி | (எண்கள், எழுத்துகள், குறியீடுகள் ஆகியவை கொண்ட சாவிகளை விரல்களால் அழுத்த) மை தோய்ந்த நாடாவின்வழியாக மேலே செருகியிருக்கும் தாளில் எழுத்துகளைப் பதிக்கும் இயந்திரம் | typewriter |
தட்டம் | அகன்ற தட்டு | (eating) plate |
தட்டம்மை | உடல் முழுவதும் வேர்க்குரு போன்று சிவந்த சிறு புள்ளிகளும் காய்ச்சலும் ஏற்படும் ஒரு நோய் | measles |
தட்டழி | அல்லல்படுதல் | struggle with |
தட்டான்1 | நகை முதலியவை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர் | goldsmith |
தட்டான்2 | பளபளப்பான கண்களும் உருண்டையான தலையும் நான்கு முக்கிய இறக்கையும் சற்று நீண்ட வாலும் உடைய பூச்சி | dragon fly |
தட்டி | ஓலை, பிளந்த மூங்கில் துண்டு, பிரம்பு முதலியவற்றால் பின்னப்பட்டு அல்லது ஒன்றாகக் கட்டப்பட்டுக் கதவாகவோ மறைப்பாகவோ பயன்படும் அமைப்பு | plaited palmyra leaves or bamboo splits used as door, screen, etc வேலித் தட்டியைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் |
தட்டி எழுப்பு | (பேச்சு, எழுத்து, செயல் மூலம் உணர்வு, சிந்தனை முதலியவற்றை) தூண்டி எழுச்சி பெறச்செய்தல் | arouse |
தட்டிக்கேள் | (வரன்முறையை மீறிய தன்னிச்சையான போக்கை) நியாயமற்றது எனச் சுட்டிக்காட்டுதல் | pull |
தட்டிக்கொடு | (பாராட்டி) உற்சாகப்படுத்துதல் | cheer (one) up |
தட்டிச்செல் | (அபாரத் திறமையால் மிகவும் எளிதாக முடிந்துவிட்டது என்று தோன்றும்படி) வெல்லுதல்(ஒன்றை) பெறுதல் | (of competitions) succeed (with ease) |
தட்டிச்சொல் | (ஒருவர் சொல்லுவதை) மறுத்துப் பேசுதல் | turn down |
தட்டிப்பறி | (ஏமாந்துவிட்டோம் என்ற உணர்வு தோன்றும்படி) கவர்ந்து செல்லுதல் | snatch away |
தட்டிப்போ | (ஒரு காரியம் முடிவடைந்துவிடும் போலத் தோன்றிக் கடைசி நேரத்தில்) நிறைவேறாமல் தள்ளிப்போதல் | fall through |
தட்டு2 | (பார்க்கும்படியாக) தோன்றுதல்(உணரும்படியாக) ஏற்படுதல் | become (visible);become (a felt experience) |
தட்டு3 | (உணவு உண்பது முதலியவற்றுக்குப் பயன்படும்) தட்டையான பரப்பும் சற்று உயர்ந்த விளிம்பும் கொண்ட வட்ட வடிவப் பாத்திரம் | plate (for food to be served in) |
தட்டுக்கெடு | நிலைதடுமாறுதல் | lose balance |
தட்டுத்தடுமாறு | (ஒரு செயலை) இயல்பாகச் செய்ய முடியாமல் திணறுதல் | struggle |
தட்டுப்படு | (புலனில் அல்லது புலனுக்கு உணரக் கூடியதாக) தெரிதல் | come to feel |
தட்டுப்பாடு | (தேவைப்படும் ஒன்று) போதிய அளவில் கிடைக்காத நிலை(தேவைக்கும்) குறைவு | shortage |
தட்டுமுட்டுச் சாமான் | (பெரும்பாலும் பன்மையில்) (வீட்டில்) அன்றாடப் புழக்கத்துக்குப் பயன்படும் பொருள்கள் | household articles |
தட்டை1 | புடைப்பு இல்லாத மட்டப் பரப்பு | flatness |
தட்டை2 | (சோளம், கேழ்வரகு போன்றவற்றில் கதிரை அறுத்த பின் எஞ்சியிருக்கும்) காய்ந்த தண்டுப் பகுதி | dried stalk (of millet, etc after threshing) |
தட்டை3 | அரிசி மாவில் தேங்காய்த் துண்டுகளும் கடலைப் பருப்பும் போட்டுத் தட்டையாகத் தட்டி எண்ணெய்யில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தின்பண்டம் | a flat round shaped savoury made with rice-flour and bits of coconut and pulses |
தட்டைப்புழு | உண்ணும் இறைச்சிமூலம் மனித உடலினுள் சென்று வாழும் ஒரு வகைப் புழு | tape worm |
தட்டோடு | வளைவான ஒரு வகை ஓடு | country tile |
தட்பவெப்பம் | ஒரு பகுதியில் நிலவும் வெப்பம், காற்று, குளிர் முதலியவற்றின் நிலை | climate |
தடகளப்போட்டிகள் | பங்குகொள்பவர்கள் அனைவரும் தடங்களில் ஓடும் ஓட்டப்பந்தயம், தடைதாண்டுதல் போன்றவையும் பளு தூக்குதல், குண்டு எறிதல் போன்றவையும் இணைந்த போட்டிகள் | track and field events |
தடங்கல் | (செயல், பணி முதலியவற்றின்) ஒழுங்கான போக்கின் பாதிப்பு | interruption |
தடதட-என்று | சத்தத்தோடும் முரட்டுத்தனமாகவும் | in a noisy and rough manner |
தடபுடல் | மிகுந்த ஆடம்பரம் | pomp and show |
தடம் | சுவடு | footstep |
தடம்புரள் | (புகைவண்டி) இருப்புப்பாதையிலிருந்து விலகுதல் | derail |
தடய அறிவியல் | ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்ட தடயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து அந்தக் குற்றத்தைத் துப்புத்துலக்க உதவும் அறிவியல் துறை | forensic science |
தடயம் | நடந்ததை அறிந்துகொள்ளும் வகையில் எஞ்சியிருப்பது அல்லது கிடைப்பது | trace |
தடவு | (உடலை) வருடுதல் | stroke |
தடவை | நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்படும் செயலை எண்ணிக்கையிட்டுக் கூறுவது | time(s) |
தடாகம் | (பூக்கள் நிறைந்த) சிறிய நீர்நிலை | pond (usually covered with flowers) |