Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
ஈ1கொடுத்தல்give
ஈ2வீடுகளில் பறந்து திரியும் (ஆறு கால்களும் இறக்கைகளும் உடைய) ஒரு சிறிய கருப்பு நிற உயிரினம்(house) fly
ஈக்கில் கட்டு நீண்ட கைப்பிடி உள்ள துடைப்பம்broom stick with long handle
ஈகை (பெருந்தன்மையோடு செய்யப்படும்) பொருள் உதவி(generous) gift
ஈச்சை பழுப்பு நிறமும் இனிப்புச் சுவையும் உடைய பழங்களைத் தரும், தென்னையை ஒத்த ஒரு மரம்date palm
ஈசல் இறக்கை முளைத்த கறையான்winged white-ant
ஈசன் கடவுள்god
ஈசான மூலை/ஈசானிய மூலை வடகிழக்குப் பக்கம்north-east quarter
ஈட்டி முக்கோண வடிவ இரும்பு முனை கழியில் செருகப்பட்ட எறியும் ஆயுதம்spear
ஈட்டி எறிதல் ஈட்டியை எறியும் போட்டி விளையாட்டுjavelin throw
ஈட்டிக்காரன் (பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்து வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு) அசலையும் வட்டியையும் குறித்த காலத்தில் கறாராக வசூல்செய்பவன்usurer (especially one who has come from Northwest part of India)
ஈட்டிய விடுப்பு நிரந்தரப் பணியாளர்கள் குறிப்பிட்ட வேலை நாட்களுக்கு ஒரு நாள் விடுப்பு என்ற விகிதத்தில் சேர்த்துவைக்கும் விடுமுறைleave earned and accumulated by permanent incumbents at the rate of so many days for a stated period of work done
ஈட்டிய விடுமுறை பணியாளர்கள் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் பணிபுரிந்தால் அதற்குப் பதிலாக வேறொரு நாள் எடுத்துக்கொள்ளும் விடுப்புcompensatory holiday
ஈட்டு (பொருள்) சம்பாதித்தல்earn (money)
ஈட்டுத்தொகை (அரசுப் பணியிலுள்ள மருத்துவர், வழக்கறிஞர் போன்றோர் அரசுப் பணி தவிரத் தனியாகப் பணிசெய்ய அனுமதி இல்லாததால்) வருமான இழப்பை ஈடுசெய்யும் நோக்கோடு சம்பளத்துடன் தரப்படும் கூடுதல் தொகைcompensatory allowance (for doctors, lawyers, etc who are in government service) paid for ceasing private practice
ஈட்டுப் படி (பெரிய நகரங்களில் பணிபுரியும் அரசுப் பணியாளர் முதலியோருக்கு) வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் சம்பளத்துடன் தரப்படும் கூடுதல் தொகைan allowance given to employees in cities to compensate for the higher cost of living
ஈட்டுப் பத்திரம் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் குறிப்பிட்ட உடைமையைக்கொண்டு கடனை அடைப்பதாகக் கடன் கொடுப்பவருக்கு எழுதிக்கொடுக்கும் பத்திரம்bond executed by a debtor pledging
ஈட்டுறுதி கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் குறிப்பிட்ட உடைமையைக்கொண்டு கடனை அடைப்பதாகக் கூறும் உறுதிa promise (by the debtor offering a security for the loan taken)
ஈடாட்டம் உறுதி குலைதல்state of being in a flux
ஈடாடு (முடிவுசெய்ய முடியாமல்) ஊசலாடுதல்wave
ஈடிணை (வடிவில், குணத்தில், மதிப்பில்) சரிசமம்match
ஈடு1சரிசமம்equal
ஈடு2(பல்வேறு எண்ணிக்கையில் தென்னை போன்ற மரங்கள் காய்க்கும்போது அல்லது இட்லி போன்ற உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படும்போது) தடவை(referring to the yield of trees such as palmyra or the preparation of eatables such as இட்லி) (in one) turn or set
ஈடுகட்டு (ஒன்றின் குறையை மற்றொன்றின்மூலம்) நிறைவுசெய்தல்make good
ஈடுகொடு (ஒருவர் திறமைக்கு மற்றொருவர்) நிகராக நிற்றல்match up to
ஈடுபடு (ஒரு செயலில்) முனைதல்engage (oneself) in
ஈடுபடுத்து (ஒருவரை ஒன்றில்) முனையச்செய்தல்engage
ஈடுபாடு ஆர்வம்interest
ஈடுபெறாத கடன் கடன் வாங்கியவரிடம் ஈட்டுறுதியாக எதுவும் பெற்றுக்கொள்ளாமல் தரும் கடன்loan that is advanced without security
ஈடு வை (வைக்க, வைத்து) அடகு வைத்தல்pledge
ஈடேற்றம் (பெரும்பாலும் சமயத் துறையில்) மீட்சிredemption
ஈடேற்று (எண்ணத்தை, விருப்பத்தை) நிறைவேற்றுதல்(எதிர்காலக் கனவை) உண்மையாக்குதல்fulfil (a wish, desire)
ஈடேறு (நோக்கம், விருப்பம்) நிறைவேறுதல்(எதிர்காலக் கனவு) உண்மையாதல்(of hope, wish) get fulfilled
ஈமச் சடங்கு இறுதிச் சடங்குfuneral rites
ஈமான் இறை நம்பிக்கைfaith in God
ஈயப்பற்று (பாகங்களை இணைக்கவோ துவாரங்களை அடைக்கவோ உருக்கிப் பயன்படுத்தும்) ஈயமும் தகரமும் கலந்த கலவைsolder
ஈயம் கனமான ஆனால் எளிதில் உருகவும் வளையவும் கூடிய வெளிர் நீல உலோகம்lead
ஈயம் பூசு (பித்தளைப் பாத்திரங்களில் புளி முதலியவற்றால் ரசாயன மாற்றம் ஏற்படுவதைத் தடுக்க அவற்றின் உட்பகுதியில்) ஈயத்தை உருக்கித் தடவுதல்coat (the inside of a brass vessel) with lead (to avoid chemical reaction)
ஈயோட்டு (வேலை இல்லாததால்) சும்மா இருத்தல்idle away (the time either at home when unemployed or in the place of work where there is not much work to attend to)
ஈர்2பேனின் முட்டைegg of a louse
ஈர்3(உயிர் எழுத்துகளில் தொடங்கும் பெயர்களின் முன்) இரண்டு என்பதன் பெயரடை வடிவம்the adjectival form of இரண்டு (before a vowel)
ஈர்க்கு/ஈர்க்குச்சி பனை, தென்னை ஓலையின் நடுவில் உள்ள மெல்லிய (கம்பி போன்ற) நரம்புrib of a palm leaf
ஈர்ப்பு (ஒருவரைத் தன் பக்கம்) இழுக்கிற தன்மை அல்லது ஆற்றல்(alluring) attraction
ஈர்வலி/ஈர்வாங்கி (தலைமுடியிலுள்ள ஈர், பேன் ஆகியவற்றை எடுப்பதற்குப் பயன்படுத்தும்) நீண்ட பற்களும் கைப்பிடியும் கொண்ட ஒரு வகை மரச் சீப்புa kind of wooden comb with long teeth and a handle (used to take out lice or their eggs from the hair by running it through)
ஈரப்பசை (பொருள் அல்லது இடம் கொண்டிருக்கும்) நீர்த்தன்மைmoisture
ஈரப்பதம் (காற்றில் நிறைந்திருக்கும்) ஈரப்பசைhumidity
ஈரம் நீரில் நனைவதால் பொருளுடன் சேரும் நீர்த்தன்மைdampness
ஈரளிப்பு ஈரப்பதம்dampness
ஈருள்ளி காரம் சற்றுக் கூடிய சிறு வெங்காயம்onion (of small variety)
ஈவிரக்கம் (அடிப்படை மனிதத் தன்மைகளான) இரக்கம், பரிவு முதலியனtenderness
ஈவு ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தால் கிடைக்கும் வகுக்கும் எண்ணின் மடங்குquotient
ஈளை ஆஸ்துமாasthma
ஈற்றயல் (சொல்லைப் பிரித்து அல்லது செய்யுள் உறுப்புகளைப் பிரித்துக் கூறும்போது) இறுதிக்கு முந்திய(in word analysis or versification) penultimate
ஈற்று (பெரும்பாலும் மாட்டின் எத்தனையாவது கன்று என்று கூறும்போது) ஈனப்பட்டதுcalving
ஈறாக (பலரை அல்லது பலவற்றைக் குறிப்பிடுகையில்) வரை(from) down to
ஈறு1வாயில் பற்கள் ஊன்றியிருக்கும் தசைgum (of the teeth)
ஈறு2(ஒரு நிகழ்ச்சி, வரிசை முதலியவற்றில்) இறுதி end (of an event)
ஈனம்1இழிவுdegradation
ஈனம்2(குரலைக் குறிப்பிடுகையில்) மெலிதாக ஒலிப்பது(of voice) feeble
ஈஸ்வரி (பொதுவாக) பெண் தெய்வம்(குறிப்பாக) பார்வதி(generally) female deity

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?