Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பக்கபலம் வலுவான ஆதரவுtower of strength
பக்கம் ஒன்றிற்குப் பரிமாண அமைப்பைத் தருகிற பகுதி அல்லது பரப்புside (which gives dimension)
பக்கவாட்டு (ஒன்றின் அல்லது ஒருவரின்) இடது அல்லது வலது பக்கம்side (of an object or a person)
பக்கவாத்தியம் (கச்சேரியில் முக்கிய இசைக் கலைஞருக்கு) துணையாக வாசிக்கப்படும் கருவிaccompaniment (in a concert)
பக்கவாதம் (மூளையில் இரத்தக் கசிவு அல்லது உறைவு காரணமாக) உடலின் ஒரு பக்கத்தைச் செயல் இழக்கச்செய்யும் நோய்paralysis
பக்கவிளைவு (சிகிச்சையும் மருந்தும்) நோய் தீர்க்கும்போது ஏற்படுத்தும் பிற (பாதகமான) விளைவுside effect (of a treatment, medicine)
பக்கவெட்டுத் தோற்றம் ஒரு பொருளின் உட்பகுதியைக் காட்டக் கூடிய (பக்கவாட்டில் வெட்டியது போன்ற) காட்சிside view
பக்கா1சுமார் இரண்டு லிட்டர் கொண்ட படிa measure of roughly two litres
பக்கா2ஒருவரின் நல்ல அல்லது தீய இயல்பு மிகுதியைக் குறிப்பிடும் அடைமொழிan attribute indicating extremeness of good or bad quality
பக்காவாக/பக்காவான திருத்தமாகperfectly/perfect
பக்கிரி (முஸ்லிம்) பரதேசி(muslim) mendicant
பக்கிள் கோட்டான்rock-horned owl
பக்குவப்படுத்து பதப்படுத்துதல்preserve
பக்குவம் (-ஆக, -ஆன) (குறிப்பிட்ட உணவுக்கே உரிய) திட அல்லது திரவ நிலையோ சுவையோ மாறிவிடாமல் இருக்க வேண்டிய அளவான தன்மை(the right) proportion
பக்கோடா நீர் ஊற்றிப் பிசைந்த கடலை மாவில் வெங்காயம், பச்சைமிளகாய் முதலியவற்றைச் சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக எண்ணெய்யில் போட்டு எடுக்கும் ஒரு தின்பண்டம்a kind of spicy savoury prepared from chickpea paste and fried in oil
பக்திமான் (தெய்வ) பக்தி நிறைந்தவர்devotee
பகட்டு1ஆடம்பரமாக நடந்துகொள்ளுதல்be showy
பகட்டு2கவர்ச்சித் தன்மை மிகுந்த ஆடம்பரம்show
பகடி1கேலிmocking
பகடி2(கடையை) வாடகைக்கு எடுத்தவரை வெளியேற்ற அவருக்குத் தரப்படும் கணிசமான தொகைan amount paid to the present occupant (of business premises) to vacate
பகடைக்காய் (ஒரு வகையான சூதாட்டத்தில்) விளையாடுபவர் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவராக உருட்டும் புள்ளிகள் குறிக்கப்பட்ட (ஆறு பக்கங்கள் உடைய) சிறு மரத் துண்டு(a) dice
பகர் சொல்லுதல்tell
பகரம் பதில்instead
பகல் சூரியன் உதித்ததிலிருந்து மறைகிறவரை உள்ள நேரம்day
பகல் கனவு மனத்தில் வளர்க்கும் நிறைவேறக் கூடிய வாய்ப்புச் சிறிதும் இல்லாத எண்ணம்daydream
பகல் வேஷம் நல்லவர் போன்ற நடிப்புmask of innocence
பகலவன் சூரியன்sun
பகவான் கடவுள்god
பகளி ஐம்பது வெற்றிலை கொண்ட ஒரு கட்டுpack of betel leaves
பகாளாபாத் சேமியாவை வேகவைத்துத் தயிரில் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி வகைboiled noodles mixed with curds
பகிர் (இருப்பவர்களுக்குக் கொடுப்பதற்காக) பிரித்தல்share
பகிர்வு பங்கீடுsharing
பகிரங்கம் எல்லோருக்கும் தெரியும்படி நிகழும் அல்லது இருக்கும் நிலைpublic
பகிஷ்காரம் (எதிர்ப்பு நடவடிக்கையான) புறக்கணிப்புboycott
பகீர்-என் (பயம், ஆபத்து முதலியவற்றால்) மனத்தில் பயம் பரவுதல் அல்லது தாக்குதல்get a fright
பகீரதப்பிரயத்தனம் (ஒன்றை நிறைவேற்ற அல்லது ஒன்றைச் செய்துமுடிக்க) தன்னாலான அனைத்தையும் செய்யும், சகல வழிமுறைகளையும் கையாளும் பெருமுயற்சிherculean effort
பகு பங்கிடுதல்share
பகுத்தறி காரணகாரியங்களை மனத்தில் கொண்டு விஷயங்களைத் தொடர்புபடுத்தி அல்லது பிரித்து அறிதல்reason analytically
பகுத்தறிவு பகுத்தறியும் திறன்reasoning
பகுதி நேர (நிர்ணயிக்கப்பட்ட முழு நேரத்தைவிட) குறைந்த நேரpart-time
பகுப்பு பகுத்துப் பிரிக்கப்பட்டதுdivision
பகுபதம் பகுதி, விகுதி எனக் கூறுகளாகப் பிரிக்கப்படக் கூடிய சொல்word that can be analysed into stem, suffix, etc
பகை2அழிக்கவோ கெடுக்கவோ தயாராக இருக்கும் வெறுப்பு நிறைந்த நிலைenmity
பகைமை பகை உணர்வுenmity
பங்கம் கேடுharm
பங்களா (பெரும்பாலும்) விசாலமான அறைகள் கொண்ட பெரிய வீடுbungalow
பங்களிப்பு (ஒன்றிற்கு) தன் பங்காகத் தரப்படுவதுcontribution
பங்காதாயம் கூட்டு வியாபாரத்தில் ஒருவர் செய்துள்ள முதலீட்டுக்கு உரிய லாபத்தின் பங்குdividend
பங்காளி தந்தையின் சகோதரனின் பிள்ளைagnate
பங்காளிக் காய்ச்சல் பங்காளிகளுக்கு இடையே ஏற்படும் போட்டியும் பொறாமையும்jealousy among those who are agnates
பங்கிடு பங்குபோடுதல்divide
பங்கீடு (ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும்) இவ்வளவு எனப் பிரிக்கும் முறைsharing
பங்கு (முழுமையில்) குறிப்பிட்ட அளவுள்ள பகுதிshare
பங்குத்தந்தை ஒரு பகுதியில் வாழும் மக்களை வழிநடத்த ஆயரால் நியமிக்கப்பட்ட குருparish priest
பங்குதாரர் (நிறுவனம், வியாபாரம் போன்றவற்றுக்கான) மூலதனத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தன் பங்காகச் செலுத்தியிருப்பவர்partner
பங்கு பணி (ஒரு திட்டம், செயல் முதலியவற்றில்) ஒருவருடைய பங்காக அமையும் செயல்பாடுrole
பங்குபெறு (ஒரு நிகழ்ச்சி, கூட்டம், விழா முதலியவற்றில்) பங்குகொள்ளுதல்take part
பங்குபோடு (ஒவ்வொருவருக்கும்) குறிப்பிட்ட அளவு எனப் பிரித்தல்divide
பங்குனி கடைசி தமிழ் மாதத்தின் பெயர்the name of the last month in the Tamil calender, i
பங்கேற்பாளர் (கூட்டம், விழா, நிகழ்ச்சி முதலியவற்றில்) பங்குகொள்பவர்participant
பச்சடி மாங்காய், வெண்டைக்காய் முதலிய காய்கறிகளில் ஒன்றைப் பொடியாக நறுக்கி வேகவைத்து வெல்லம் அல்லது மிளகாய் போட்டுத் தாளித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறிa variety of side dish mildly sweet made with vegetables
பச்சரிசி நெல்லை (அவிக்காமல்) காயவைத்துப் பெறும் அரிசிrice hulled without boiling
பச்சாதாபம் மனத்தை நெகிழ வைக்கும் இரக்கம் அல்லது பரிவுremorse
பச்சிலை (மருந்தாகப் பயன்படும்) பறித்த இலைleaf of medicinal plants just collected
பச்சிளம் குழந்தை பிறந்து சில நாட்களே ஆன குழந்தைan infant just born or a few days old
பச்சை1இலை, புல் போன்றவற்றில் உள்ள நிறம்green (colour)
பச்சை2வேகவைத்தல், சுடவைத்தல் போன்ற எந்த விதத் தயாரிப்புக்கும் உள்ளாகாத நிலைnot subjected to any process such as cooking, heating, etc
பச்சை3(ஒளிவுமறைவோ நயமோ இல்லாத) வெளிப்படைbluntness
பச்சை உடம்பு (பிரசவத்திற்குப் பின்) தளர்ச்சி அடைந்திருக்கும் உடல்tenderness of body (after child birth)
பச்சைக்கல்1மரகதம்emerald
பச்சைக்கல்2சுடாத செங்கல்unbaked brick
பச்சைக் கற்பூரம் (சமையலில் வாசனைக்காகச் சேர்க்கப்படும்) கற்பூர வாசனை உடைய வெண்ணிறப் பொருள்medicated camphor
பச்சைக்குதிரை ஒருவரைக் குனிய வைத்து அவர் முதுகில் கை ஊன்றித் தாண்டும் ஒரு வகைச் சிறுவர் விளையாட்டு(the game of) leap-frog
பச்சைக்கொடி காட்டு (ஒன்றைச் செய்வதற்கு) அனுமதி அளித்தல்give
பச்சைகுத்து (படம், பெயர் முதலியவை அழியாமல்) கரும் பச்சை நிறத்துடன் இருக்குமாறு ஒரு வகை மையில் ஊசியைத் தொட்டு உடலில் குத்துதல்tattoo
பச்சைப்பசேல்-என்று/-என்ற (தாவரங்கள் செழிப்பாக இருப்பதைக் குறிக்கையில்) மிகுந்த பசுமையாக/மிகவும் பசுமையானlooking green/lush green
பச்சைப்பாம்பு கூர்மையான வாயையும் மெல்லிய உடலையும் உடைய பச்சை நிறப் பாம்புwhip-snake
பச்சைபிடி (நடப்பட்ட பயிர் ஊட்டமாக வளர்வதற்கு அறிகுறியாக) பச்சை நிறம் தோன்றுதல்(of crops) turn rich green
பச்சைமிளகாய் மிளகாய்ச் செடியில் காய்க்கும் (காரம் மிகுந்த) காய்green chilli
பச்சையம் இலைகளுக்குப் பச்சை நிறம் தரும் இயற்கைப் பொருள்chlorophyll
பச்சோந்தி தான் இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்பத் தன் தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையை இயற்கையாகப் பெற்ற ஒரு வகை ஓணான்chameleon
பசங்கள் குழந்தைகள்children
பசப்பு1(தன் செயலை நிறைவேற்றிக்கொள்ள) ஒருவரின் அனுதாபத்தைப் பெறும் வகையில் பேசுதல் அல்லது நடந்துகொள்ளுதல்ingratiate oneself
பசப்பு2பிறரின் அனுதாபத்தைப் பெறும் வகையிலான பேச்சு அல்லது நடவடிக்கைingratiating oneself (by talk or behaviour)
பசலி கிராமத்தில் விளைநிலம்பற்றிய கணக்குகளுக்கான (பயிரிடும் காலமான ஜூலை முதல் அறுவடை முடியும் காலமான மே-ஜூன்வரை கணக்கிடும்) ஓர் ஆண்டுaccounting year for land revenue
பசலை (பெரும்பாலும் இலக்கியத்தில்) (தலைவன் பிரிவதால்) பெண்ணின் உடலில் தோன்றும் பொன் நிறத் தேமல்(mostly in literature) pale yellow spots supposed to appear on the body of a woman (due to love-sickness
பசலைக்கீரை (சமையலில் பயன்படும்) வெளிர்ப் பச்சை நிறத்தில் வழுவழுப்பான இலைகளைக் கொண்ட செடி/கரும் பச்சை நிறப் பெரிய இலைகளைக் கொண்ட கொடிpurslane or malabar nightshade
பசி1(ஒருவருக்கு) உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல்(with dative) be hungry
பசி2உணவு உண்ணத் தூண்டும் உணர்வுhunger
பசிய பசுமையானgreen
பசு1பாலுக்காக வீட்டில் வளர்க்கப்படும் (எருமை அல்லாத) மாட்டினத்தில் பெண்cow
பசு2(சைவ சித்தாந்தத்தில்) ஆன்மா(in Saiva siddhanta) soul
பசுந்தாள் உரம் தழைக்காக வளர்க்கப்பட்ட பயிரை அந்த நிலத்திலேயே உழுது சேர்க்கும் உரம்green manure
பசும் (தாவரங்களைக் குறிக்கையில்) பச்சை நிறம் உடைய(of plants) green
பசுமைப் புரட்சி நவீன முறைகளால் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் ஏற்படும் வகையில் விவசாயத்தில் நடந்த பெரும் மாற்றம்great change that took place within a short period in agriculture resulting in large yields
பசை1ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்semi-solid adhesive material
பசை2பண வசதிaffluence
பஞ்சகச்சம் வேட்டியை மூன்று முனைகளாக ஆக்கி இரு முனைகளை இடுப்பின் முன்புறத்தில் செருகி மற்றொரு முனையைக் கால்கள் இடையே கொடுத்து இடுப்பின் பின்புறத்தில் செருகிக் கட்டும் முறைa particular mode of wearing வேட்டி running one end of it through the legs
பஞ்சணை பஞ்சு மெத்தைmattress stuffed with cotton
பஞ்சப் படி அகவிலைப் படிdearness allowance
   Page 1 of 33   1 2 3 33

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil