Tamil To Tamil & English Dictionary
Tamil Word | Tamil Meaning | English Meaning |
மக்கட்பேறு | (தனக்கென) குழந்தையை அடையும் அதிர்ஷ்டம் | fortune of having children |
மக்கர் | (வாகனம், இயந்திரம்) சரிவர இயங்காமல்போகிற நிலை | (mechanical) trouble |
மக்கல் | (ஈரத்தால் அல்லது பல நாள் வெயிலில் கிடந்து) கெட்டுப்போனது | anything gone bad or spoiled (owing to dampness or exposure to sun) |
மக்கள் | (பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும்) மனிதர்கள் | people |
மக்கள்தொகை | (ஒரு நாட்டில் வாழும்) மக்களின் மொத்த எண்ணிக்கை | population |
மக்கள் தொடர்பு அலுவலர் | ஓர் அமைப்பு பொதுமக்களுடன் ஏற்படுத்தும் இணக்க உறவுகுறித்த பணிக்கான அதிகாரி | public relations officer |
மக்கள் தொடர்புச் சாதனங்கள் | மக்கள் இடையே பரவலாகச் செய்திகளைப் பரப்பப் பயன்படும் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி முதலிய சாதனங்கள் | mass media |
மக்களவை | (இந்திய நாட்டை நிர்வகிக்க) மாநிலவாரியாக மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவை | lower house of parliament |
மக்களாட்சி | வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்று நடத்தும் ஆட்சி முறை | democracy |
மக்காச்சோளம் | மஞ்சள் நிற, தட்டையான மணிகள் வரிசைவரிசையாக அமைந்துள்ள கதிர்களைக் கொண்ட ஒரு வகைச் சோளம் | maize |
மக்கு1 | (பல நாட்கள் ஈரத்தில் அல்லது வெயிலில் கிடந்து) உரிய தன்மை இழந்து கெட்டுப்போதல் | decay |
மக்கு2 | எளிதில் புரிந்துகொள்ளத் தெரியாதவன்/-ள் | dullard |
மக்கு3 | (மர வேலையில் பலகைகளின் இடைவெளி தெரியாமல் அடைக்கும்) மெழுகு போன்ற பொருள் | putty (to fill the holes in woodwork) |
மகசூல் | (தானியப் பயிரின், காய்கறிச் செடியின்) விளைச்சல் | produce |
மகத்தான | (அளவால், முதன்மையால்) வியக்கத்தகுந்த | impressive |
மகத்துவம் | மகிமை | greatness |
மகப்பேறு | குழந்தை பெற்றெடுத்தல் | giving birth to a child |
மகம் | இருபத்தேழு நட்சத்திரங்களுள் பத்தாவது | the tenth of the twentyseven stars |
மகமாயி | (பெரும்பாலும் கிராமங்களில்) சக்தி வாய்ந்ததாக நம்பி வழிபடும் பெண் தெய்வம் | a village deity believed to cause and cure diseases |
மகமை | வியாபாரிகள் தங்கள் வருமானத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கித் தங்கள் சமூகத்தின் பொது வளர்ச்சிக்காக ஏற்படுத்தும் சேமிப்பு | a portion of the profit set apart by the traders for the welfare of their community |
மகரந்தம் | (தாவரத்தின் இனப்பெருக்கத்துக்கான) மலரின் மஞ்சள் நிறத் துகள் | pollen |
மகரம் | வடிவில் பாதி மீனாகவும் பாதி விலங்காகவும் இருக்கும் உருவத்தைக் குறியீடாக உடைய பத்தாவது ராசி | tenth constellation of the zodiac having the figure of half fish and half animal as its sign |
மகராசன் | (பெரும்பாலும் வாழ்த்தும்போது) செல்வமும் பிற நலன்களும் உடையவன் | (as a gracious reference) wealthy and blessed man |
மகராசி | மகராசன் என்பதன் பெண்பால் | feminine of மகராசன் |
மகரிஷி | சிறப்பு வாய்ந்த முனிவர் | great sage |
மகவு | சிறு குழந்தை | infant |
மகள் | (ஒருவருடைய) பெண் குழந்தை | daughter |
மகளிர் | பெண்கள் | women |
மகன் | (ஒருவருடைய) ஆண் குழந்தை | son |
மகஜர் | குறைகளைத் தீர்க்குமாறு அல்லது உதவி செய்யுமாறு கோரிப் பலர் கையெழுத்திட்டு உரியவரிடம் அளிக்கும் மனு | petition |
மகா | (குறிப்பிட்டுச் சொல்லும்படியான) சிறப்பு அல்லது கீர்த்தி வாய்ந்த | great |
மகாசன்னிதானம் | (தான் சேர்ந்த சமயத்தைத் தோற்றுவித்தவரின் பிரதிநிதியாக) ஒரு சைவ மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் | head of a Saiva mutt (who symbolizes in him the founder of the religion) |
மகாத்(து)மா | சுயநலம் கருதாமல் பொதுநலத்துக்காக அல்லது ஓர் உயர்ந்த லட்சியத்துக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் | lofty, great soul |
மகாத்மியம் | மகிமை | greatness |
மகாராணி | மகாராஜாவின் பட்டத்தரசி | queen |
மகாராஜா | பேரரசர் | emperor |
மகால் | அரண்மனை | palace |
மகாவித்தியாலயம் | மேனிலைப் பள்ளி | higher secondary school |
மகாவித்வான் | (பெரும்பாலும்) மொழி, இசைத் துறைகளில் பெரும் புலமை பெற்றவர் என்பதைக் குறிக்க அளிக்கும் பட்டம் | title conferred on one who is a profound scholar in language or music |
மகான் | மகாத்மா | great soul |
மகானுபாவன் | (பெரும்பாலும் கேலித் தொனியில்) பெருமைக்கு உரியவர் | (often ironically) exalted person |
மகிழ்1 | (விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால்) இன்பம் அடைதல் | rejoice |
மகிழ்வி | மகிழ்ச்சி அடையச்செய்தல் | make (s.o.) happyplease (s.o.). |
மகிழமரம் | வெளிறிய பழுப்பு நிறத்தில் இதழ்களும் மிகுந்த மணமும் உடைய சிறிய பூப் பூக்கும் உயரமான மரம் | pointed-leaved ape-flower tree |
மகிஷம் | எருமைக் கடா | he-buffalo |
மகுடம் | (அரசன், அரசி போன்றோர்) அதிகாரத்தின் சின்னமாகத் தலையில் வைத்துக்கொள்ளும் அணி | crown |
மகேசன் | இறைவன் | god |
மகோதரம் | வயிற்றிலும் காலிலும் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஈரல் நோய் | cirrhosis |
மகோன்னதம் | மிகவும் உன்னதமானது | magnificent or grand |
மங்கல் | குறைவான ஒளி/(நிறம் வெளுத்து) பளபளப்பு குறைந்த தன்மை | dimness/loss of shine |
மங்கல நாண் | தாலி | wedding chain |
மங்களம்பாடு | (கச்சேரி, கூத்து முதலியவற்றின் முடிவில்) நிறைவுபெறுவதின் அடையாளமாகக் குறிப்பிட்ட பாடலைப் பாடுதல் | sing benediction (at the end of any function) |
மங்கை | (பொதுவாக) பெண்(குறிப்பாக) பருவப் பெண் | (generally) woman |
மச்சம்1 | (பிறப்பிலிருந்தே இயற்கையாக) உடலின் மேல் தோலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப் புள்ளி அல்லது கறுப்பு நிறப் படிவு | mole |
மச்சம்2 | மீன் | fish |
மச்சு | மாடி | first floor (of a house) |
மசக்கை | கர்ப்பமுற்ற ஓரிரு மாதங்களில் குமட்டல், வாந்தி முதலியவை ஏற்படும் நிலை | morning sickness |
மசகு எண்ணெய் | வைக்கோலை எரித்து அதன் கரியில் எண்ணெய் சேர்த்துத் தயாரிக்கும் மை | oil mixed with burnt straw |
மசமச-என்று | சுறுசுறுப்பு இல்லாமல் | lazily |
மசால்தோசை | (உருளைக்கிழங்கு) மசாலாவை உள்ளே வைத்து மடித்துத் தரப்படும் தோசை | a தோசை with a filling of fried potato and onion |
மசால்வடை | கடலைப்பருப்பை அரைத்துப் பிசைந்து வட்டமாகத் தட்டி எண்ணெய்யிலிட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம் | a kind of வடை prepared with wet ground dhal |
மசாலா | (பொதுவாக அசைவ உணவில் பயன்படுத்தப்படும்) கசகசா, லவங்கப்பட்டை, பூண்டு முதலியவை சேர்த்து அரைக்கப்பட்ட கலவை | mixed condiments and spices (for meat dishes) |
மசி1 | (நசுக்கப்பட்டு) மாவு அல்லது கூழ் போன்ற மென்மையான நிலைக்கு வருதல் | be mashed |
மசி2 | (நசுக்கி) மாவு அல்லது கூழ் போன்ற மென்மையான நிலைக்கு வரச்செய்தல் | crush |
மசி3 | மை | ink |
மசியல் | உருளைக்கிழங்கு, வாழைக்காய், கீரை முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை வேகவைத்து மசித்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறி | a kind of side dish prepared by mashing some vegetables or greens |
மசூதி | பள்ளிவாசல் | mosque |
மசோதா | நாடாளுமன்றம் முதலியவற்றில் ஒன்றைச் சட்டமாகச் செய்வதற்கு உறுப்பினர்களால் அல்லது அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் முதலியவை அடங்கிய குறிப்பு | (of legislative bodies) bill |
மஞ்சம் | படுக்கையோடு கூடிய கட்டில் | couch |
மஞ்சரி | தொகுப்பு | collection |
மஞ்சள் | எலுமிச்சம் பழம், தங்கம் முதலியவற்றில் இருப்பது போன்ற நிறம் | yellow (colour) |
மஞ்சள் அட்டை | (கால்பந்தாட்டத்தில்) தவறாக விளையாடிய ஆட்டக்காரரை எச்சரித்துக் காண்பிக்கப்படும் மஞ்சள் நிற அட்டைத் துண்டு | (in football) yellow card |
மஞ்சள் கடுதாசி | ஒருவர் கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலையைத் தெரிவிக்கும் அறிவிப்பு | petition given by a debtor unable to pay his debts |
மஞ்சள் கயிறு | தாலியாக அணியும் மஞ்சள் தடவிய கயிறு | cord soaked in turmeric solution and worn as தாலி |
மஞ்சள் கரு | முட்டையினுள் மஞ்சள் நிறத்திலிருக்கும் உயிர்ப்பொருள் | yolk |
மஞ்சள்காப்பு | (கோயில்களில்) விசேஷ நாட்களில் மூல விக்கிரகத்தின் மேல் மஞ்சள் அப்பிச் செய்யும் அலங்காரம் | turmeric paste with which an idol is covered on special occasions |
மஞ்சள் காமாலை | இரத்தத்தில் பித்தநீர் கலப்பதால் கண்களும் தோலும் மஞ்சள் நிறமடைந்து காணப்படும் ஒரு நோய் | jaundice |
மஞ்சள் நீராட்டு விழா | பெண் பருவமடைந்தவுடன் மஞ்சள் கரைத்த நீரால் குளிப்பாட்டி நடத்தப்படும் சடங்கு | a ritual bath in turmeric mixed water for a girl who has attained puberty |
மஞ்சள் பத்திரிகை | புகழ் பெற்றவர்களுடைய சொந்த வாழ்க்கையைப்பற்றித் தரக் குறைவாக எழுதப்பட்ட கட்டுரைகளையும் உடலுறவுகுறித்த ஆபாசமான படங்களையும் வெளியிடும் பத்திரிகை | yellow press |
மஞ்சு | மேகம் | (white) cloud |
மஞ்சுவிரட்டு | ஜல்லிக்கட்டு | a kind of bullfight |
மட்டம்1 | (நிலம், நீர் முதலியவற்றின்) உயரத்தின் அளவு | level (of water in reservoir, etc.) |
மட்டம்2 | (உணவு, பொருள் முதலியவற்றின் தரத்தைக் குறிக்கையில்) சராசரியைவிட மோசமாக இருக்கும் தன்மை(ஒருவரின் நடத்தை முதலியவற்றைக் குறிக்கையில்) மோசம்கீழ்த்தரம் | (of quality of a substance or person) bad |
மட்டம்3 | தடவை | time(s) |
மட்டம்தட்டு | உரிய மதிப்புக் கொடுக்காமல் குறைகூறித் தாழ்த்துதல் அல்லது தரக் குறைவாகப் பேசுதல் | denigrate |
மட்டம்போடு | (பள்ளிக்கூடத்துக்கு அல்லது வேலைக்கு வேண்டுமென்றே) போகாமலிருத்தல் | absent oneself (wilfully) |
மட்டற்ற | அளவு கடந்த | overwhelming |
மட்டில் | வரையில் | as far as |
மட்டு | மிதமாக உள்ளதைவிட அல்லது சராசரியாக உள்ளதைவிடக் குறைவு | a little less |
மட்டுப்படு | (அளவு) குறைதல் | decrease |
மட்டுப்படுத்து | (அளவை) குறைத்தல் | control |
மட்டுமரியாதை | (ஒருவரின்) வயது, தகுதி முதலியவற்றுக்கு உரிய மரியாதை | due respect |
மட்டை1 | (தென்னை, பனை முதலிய மரங்களில்) ஓலைகளைத் தாங்கியிருக்கும் பட்டையான பகுதி | stem or spine from which the leaves (of palm trees) branch off |
மட்டை2 | (விளையாட்டுகளில் பந்தை அடிக்க) சற்று அகன்ற கீழ்ப்பரப்பு உடையதாகவும் கையில் பிடித்துக் கொள்வதற்கு ஏற்ற பிடி உடையதாகவும் செய்த சாதனம் | any wooden implement that is used to strike a ball (in a game), (hence=) bat |
மட்டையடி | ஒரே மாதிரியான சூழ்நிலையில் ஒரே காரியத்தை உற்சாகம் இல்லாமல் செய்தல் | monotonous |
மட்பாண்டம் | மண்ணால் செய்த பாத்திரம் | earthenware |
மடக்கு1 | (நீண்டிருக்கும் அல்லது விரிந்திருக்கும் ஒன்றைக் குறிப்பிட்ட ஒரு நிலையில்) மடங்குமாறுசெய்தல் | bend (the arm, knee, etc.) |
மடக்கு2 | மடக்கக் கூடிய அமைப்புக் கொண்டது | that which is foldable |
மடக்கு3 | (நீர் முதலியவை அருந்தும்போது) ஒரு முறை விழுங்குகிற அளவு | draught |
மடங்கு1 | (நீண்டிருக்கும் அல்லது விரிந்திருக்கும் ஒன்று) தன் மீது ஒரு முறை வரும்படி படிதல் | get folded |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
