Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
எதிரோட்டம் எதிர்த்து வரும் (நீரின்) போக்குcross current
எதுகை செய்யுளின் அடிகளில் (அல்லது சீர்களில்) இரண்டாவது எழுத்து அதே எழுத்தாகவோ அல்லது அதன் இனமான எழுத்தாகவோ இருக்கும் ஒலி இயைபுa rhyming technique in versification in which the second letters of the lines (or some metrical feet of the same line) are either the same or similar
எதுகைமோனை (பேச்சில்) அலங்காரமான ஒலிநயம்alliteration
எதேச்சாதிகாரம் எல்லா உரிமைகளையும் தானே எடுத்துக்கொண்டு தன் விருப்பப்படி ஆளும் அல்லது நடந்துகொள்ளும் ஆதிக்கப் போக்குautocracy
எதேச்சாதிகாரி தன் விருப்பப்படி ஆளுபவர் அல்லது நடந்துகொள்பவர்autocrat
எதேச்சை தன் விருப்பப்படி செயல்படுவதுacting wilfully
எதேச்சையாக தற்செயலாகunintentionally
எதேஷ்டம் தேவைக்கு அதிகம்more than enough
எப்படி எந்த விதமாகin what way
எப்படிப்பட்ட/எப்பேர்ப்பட்ட (ஒருவரின் அல்லது ஒன்றின் தன்மையைக் குறிக்கையில்) எந்த விதமானwhatever
எப்பொழுது/எப்போது எந்த நேரத்தில்when
எம் எங்கள்our (exclusive plural)
எம்பு (உயரத்தில் இருப்பதை எடுப்பதற்கு அல்லது வேகமாகக் குதிப்பதற்கு) காலை உந்தி உடலை உயர்த்துதல்stand on tiptoe
எமகண்டம் ஒவ்வொரு நாளிலும் யமனுக்கு உரியதாகக் கருதப்படுகிற, நற்காரியங்கள் செய்வதற்கு உரியதல்லாத (மூன்று நாழிகை) பொழுதுinauspicious period (of 1?? hours) in the course of a day said to be presided over by Yama
எமகாதகன் மிகச் சிரமமான காரியத்தையும் முடிக்கும் ஆற்றல் உடையவன்one who has the ability to carry out any difficult job
எமகிங்கரன் (தலையில் கொம்பு உடையவனாகக் காட்டப்படும்) யமனின் சேவகன் servant of யமன் (with horns on his head)
எய் (வில்லில் அம்பைப் பொருத்தி இழுத்து) விரைந்துசெல்லும்படி விடுதல்shoot (an arrow)
எய்து (ஒரு நிலை, உணர்ச்சி முதலியவற்றை) அடைதல்attain or reach (a state, condition)
எயிறு ஈறுgum (of teeth)
எரி1(தீ) சுவாலையுடன் மேல் எழுதல்(of fire) burn
எரி2(ஒன்றை) தீயினால் அழித்தல்let
எரி உலை (தொழிற்சாலைகளில் உலோகம் முதலியவற்றை உருக்குவதற்குப் பயன்படுத்தப்படும்) அதிக வெப்பச் சக்தியுடன் எரியும் அடுப்புfurnace
எரிச்சல் (பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும்) கோப உணர்வுirritation
எரிசக்தி நிலக்கரி, மண்ணெண்ணெய் முதலிய பொருள்களை எரிப்பதால் கிடைக்கும் சக்திheat energy (obtained by burning fossil fuel)
எரிசாராயம் எளிதில் தீப் பற்றிக்கொள்ளும் தன்மை உடையதும் ஆவியாகக் கூடியதுமான திரவ நிலையில் உள்ள எரிபொருள்spirit
எரிசோடா பெரும்பாலும் துணிகளைச் சலவை செய்வதற்குப் பயன்படும், அரிப்புத் தன்மை உடைய ஒரு வகை உப்புcaustic soda
எரிந்து விழு (பொறுமை இல்லாமல்) கோபத்துடன் கடுமையாகப் பேசுதல்fly into a temper
எரி நட்சத்திரம் (புவியீர்ப்பு விசையால் காற்றுமண்டலத்துக்குள் நுழையும்போது) ஒளியுடன் எரியும் அல்லது எரிந்து கீழே விழும் விண்வெளிப் பொருள்meteor
எரிபந்தம் தீவட்டிflaming torch
எரிபொருள் (விறகு, மண்ணெண்ணெய் போன்ற) எரிப்பதற்குப் பயன்படும் பொருள்fuel
எரிமலை பூமியின் ஆழத்திலிருந்து கொதிக்கும் பாறைக் குழம்பு முதலியவற்றை வெடிப்புடன் வெளியே தள்ளும் திறப்பு உடைய மலைvolcano
எரியூட்டு (சடலத்தைச் சிதையில் வைத்து) நெருப்புவைத்தல்light the funeral pyre
எரிவாயு நிலத்தடியிலிருந்து எடுக்கப்பட்டு எரிபொருளாகப் பயன்படும் வாயுnatural gas
எரு மக்கி மாறும் தாவரக் கழிவு, சாணம் முதலிய பயிர்களுக்கான ஊட்டச் சத்துcompost
எருக்கு பயிரிடாமல் தானாக முளைக்கும், தண்டுகளில் பால் நிறைந்த சாம்பல் நிறச் செடிyercum
எருக் குழி (உரமாக மாறுவதற்கு) தாவரக் கழிவுகள், சாணம் முதலியவை கொட்டப்படும் பள்ளம்manure pit (in the backyard of the house)
எருது (எருமை அல்லாத) மாட்டினத்தில் ஆண்ox
எருமை நீண்டு வளைந்த கொம்பும் கரிய நிறமும் தடித்த தோலும் கொண்ட ஒரு வகை மாடுbuffalo
எல்லை (நாடு, மாநிலம் ஆகியவை) முடியும் இடம்(of a country) frontier
எல்லைக்காவல் படை நாட்டின் எல்லைகளைக் காக்கும் பணிக்கு ஏற்படுத்தப்பட்ட காவல் பிரிவுborder Security Force (abbreviated to BSF)
எலி சிறிய தலையும் நீண்ட வாலும் சற்றுப் பெருத்த வயிறும் உடைய பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பிராணிcommon name for rat and mouse
எலிப்பொறி எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்புmouse trap
எலும்பு தசையினுள் அமைந்து உடலுக்கு உருவத்தைத் தரும் உறுதியான வெண்ணிறப் பகுதிbone
எலும்புக்கூடு உடலின் எலும்புக் கட்டமைப்புskeleton
எலும்பும்தோலுமாக (நோயால் அல்லது சத்துக் குறைவால்) உடல் வற்றி எலும்பு இருப்பது தெரியும்படியாகbony
எலும்புருக்கி (உடலை வற்றச் செய்யும்) காச நோய்tuberculosis
எலுமிச்சை வெளிர் மஞ்சள் நிறத்தில் புறத் தோலையும் புளிப்புச் சுவையையும் உடைய, உருண்டை வடிவப் பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும் மரம்lemon/lime tree
எவ்வாறு எந்த விதமாகin what manner
எவ்வு (உயரத்தில் இருக்கும் பொருளை எடுப்பதற்காக) எம்புதல்stretch
எவர் படர்க்கை இடத்து ஒருவரை மரியாதையுடன் குறிப்பிடும் வினாச் சொல்interrogative pronoun of the third person masculine (honorific)
எவர்சில்வர் (பாத்திரம் முதலியவை செய்யப் பயன்படும்) இரும்பும் துத்தநாகமும் கலந்த (எளிதில் துருப்பிடிக்காத) வெள்ளி நிறக் கலப்பு உலோகம்stainless steel
எவள் (பெரும்பாலும் மரியாதைக் குறைவாக) படர்க்கை இடத்துப் பெண்ணைக் குறிப்பிடும் வினாச் சொல்third person feminine interrogative pronoun (not a respectful term)
எவன் (பெரும்பாலும் மரியாதைக் குறைவாக) படர்க்கை இடத்து ஆணைக் குறிப்பிடும் வினாச் சொல்third person masculine interrogative pronoun (not a respectful term)
எவை அஃறிணைப் பொருள்களைப்பற்றிய வினாச் சொல்interrogative pronoun of the neuter plural
எழில் அழகுbeauty
எழு1(படுத்த நிலையிலிருந்து அல்லது இருந்த நிலையிலிருந்து) நிமிர்ந்த நிலைக்கு, நிற்கும் நிலைக்கு அல்லது மேல்நோக்கி உயரும் நிலைக்கு வருதல்rise
எழு2முதன்மை வினை தெரிவிக்கும் உணர்ச்சி நிலை மிகுந்த வேகத்துடன் வெளிப்படுவது என்பதைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு துணை வினைan auxiliary used to indicate that the feeling or emotional state referred to has become active or has started manifesting
எழுச்சி (குன்றிய நிலையிலிருந்து அல்லது வீழ்ச்சிக்குப் பின்) புதிய வேகத்துடன் கூடிய வளர்ச்சிrejuvenation
எழுத்தர் அலுவலகத்தில் எழுதுதல், பதிவுசெய்தல் போன்ற பணிகள் செய்யும் இடைநிலை ஊழியர்assistant
எழுத்தறிவு கல்வியறிவுliteracy
எழுத்தாணி (பனை ஓலையில்) எழுதுவதற்குப் பயன்படுத்தும், கூர்மையான நுனிப்பகுதி உடைய, ஆணி போன்ற சாதனம்stylus (for writing on palmyra leaf)
எழுத்தாளர் (பெரும்பாலும்) கதை, கட்டுரை எழுதுபவர்(mostly) writer (of prose)
எழுத்து (மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள) வரி வடிவம்letter
எழுத்துக்கூட்டு (மொழியைக் கற்கும் ஒருவர் எழுதும்போது அல்லது படிக்கும்போது) சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் உச்சரித்தல்articulate every syllable (as a beginner does)
எழுத்தெண்ணிப் படி நுணுக்கமாகப் படித்தல்study (a text) in great detail
எழுதிவை (உயிலில் சொத்துகளை) பங்கிட்டு ஒதுக்குதல்bequeath
எழுதுகோல் எழுதுவதற்குப் பயன்படுத்தும் கருவிwriting instrument (such as pen, pencil, etc.)
எழுதுபொருள் எழுதுவதற்குத் தேவைப்படும் (தாள், மை, கடித உறை முதலிய) பொருள்stationery
எழுதுவினைஞர் எழுத்தர்clerk
எழுந்திரு நிற்கும் நிலைக்கு வருதல்rise
எழுப்பு (கோட்டை, நினைவுச் சின்னம் முதலியன) உருவாக்குதல்build
எழுபது பத்தின் ஏழு மடங்கைக் குறிக்கும் எண்(the number) seventy
எழும்பு எழுதல்go up
எள் நல்லெண்ணெய் எடுக்கப் பயன்படும் கருப்பு நிறத்தில் உள்ள மிகச் சிறிய விதை/அந்த விதையைத் தரும் பயிர்sesame (the seed and the plant)
எள்ளல் ஒருவருடைய முட்டாள்தனத்தை அல்லது ஓர் அமைப்பினுடைய முரண்பாடுகளை (சிரிக்கும்படியாக) சுட்டிக்காட்டும் பரிகாசம்satire
எள்ளி நகையாடு (அவமானம் அடையும்படி) கேலிசெய்தல்make (one) an object of scorn
எள்ளுருண்டை சர்க்கரைப் பாகில் எள்ளைப் போட்டு உருண்டையாகப் பிடித்த தின்பண்டம்a ball-shaped sweetmeat prepared by mixing sesame seeds in treacle
எளிது கஷ்டம் இல்லாததுnot difficult
எளிமை சிக்கல் அற்ற தன்மைsimplicity
எளிய சிக்கல் அற்றuncomplicated
எளியார் பொருள் வசதி இல்லாதவர்people of little means
எற்று (காலால்) உதைத்தல்kick
எறி1(தள்ளி விழும்படி) வேகத்துடன் வீசுதல்throw (with force)
எறி2முதன்மை வினையின் செயல் ஒரு வேகத்துடனும் தீவிரத்துடனும் நிகழ்த்தப்படுவது என்பதைக் குறிப்பிடும் துணை வினைan auxiliary verb used to lend force and intensity to the action of the main verb
எறிநாடா தறியில் ஊடையைச் செலுத்தக் கையால் இயக்கும் சாதாரண நாடாவைவிட அகலத்திலும் நீளத்திலும் சிறிய நாடாthrow shuttle (for weaving cloth with finer counts of yarn)
எறிபந்து நடுவில் கட்டியிருக்கும் வலையில் படாமல் ஒரு பெரிய பந்தை ஓர் அணியினர் எறிய, எதிர் அணியினர் அதைப் பிடித்துத் திருப்பி எறிந்து விளையாடும் (மகளிர்) விளையாட்டுthrow-ball (a game played by women)
எறும்பு மூன்று பகுதியாக உள்ள உடலைக் கொண்ட, ஒன்றுகூடி அமைப்போடு வாழும் சிறு உயிரினம்ant
எறும்புதின்னி இரவு நேரத்தில் எறும்பு, கரையான் முதலியவற்றைத் தன் நீண்ட நாக்கால் இழுத்து உண்பதும், தாக்கப்பட்டால் பந்து போல் சுருண்டுகொள்வதுமான ஒரு பிராணிany of several animals that eat ants
என்றால் விதிநிலை வினையெச்சமாக வருவதுused as a conditional form
என்று1எந்த நாள்which day
என்று2எந்த நாளில்on which day
என்றும் எப்பொழுதும்all the time
என்னது என்ன (முதல் பொருளிலும் ஐந்தாவது பொருளிலும்)in the first and fifth sense of என்ன
என்னவோ ஒரு நிகழ்ச்சி நடந்ததாக ஒத்துக்கொண்டாலும் அவ்வாறு நடந்ததற்கு ஏதோ ஒரு நியாயம் இருப்பதாக ஒருவர் உணர்வதை வெளிப்படுத்த உதவும் சொல்a term used to mitigate the severity or seriousness of a statement
எனவே ஆகவேas a result
எனினும் ஆயினும்nevertheless
எஜமானி எஜமான் என்பதன் பெண்பால்feminine of எஜமான்
   Page 1 of 2   1 2