Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
நாள்பட்ட பல நாட்களாக இருந்துவரும்of a pretty long time
நாளடைவில் காலப்போக்கில்in the course of time
நாளம் இரத்தம், நிணநீர் முதலியவற்றை உடலின் பல பாகங்களுக்கும் எடுத்துச்செல்லும் குழாய்vessel
நாளமில்லாச் சுரப்பி நாளங்கள்மூலம் அல்லாமல் நேரடியாகத் திரவங்களை இரத்தத்தில் சேர்க்கும் வகையில் அமைந்த சுரப்பிductless gland
நாளாகநாளாக நாட்கள் செல்லச்செல்லas days go by
நாளாந்த அன்றாடdaily
நாளாந்தம் தினமும்daily
நாளாவட்டத்தில் நாளடைவில்in the course of time
நாளிதழ்/நாளேடு செய்தித்தாள்newspaper
நாளைய எதிர்காலத்தில் வரவிருக்கும்of tomorrow
நாற்காலி ஒருவர் மட்டும் உட்கார்வதற்கான வகையில் அடிப்பகுதியையும் சாய்ந்துகொள்வதற்கு ஏற்ற பின்பகுதியையும் தரையில் நிற்பதற்கு உரிய அமைப்பையும் உடைய இருக்கைchair
நாற்சந்தி நான்கு தெருக்கள் சந்திக்கும் இடம்a junction of four streets
நாற்பது பத்தின் நான்கு மடங்கைக் குறிக்கும் எண்forty
நாற்றங்கால் (நெல் முதலியவற்றின்) நாற்றுகளை வளர்க்கும் இடம்nursery (for paddy and other seedlings)
நாற்றம் நுகர்வதற்கு ஏற்றதாக இல்லாத அருவருப்பான வாசனைoffensive smell
நாற்று பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கான இளம் பயிர்seedling
நாற்று விடு (விதையை அல்லது தானியத்தை ஊறவைத்து நிலத்தில்) முளைக்கச்செய்வதற்காகப் போடுதல்raise seedlings for transplantation
நாறடி (கண்ணியக் குறைவாக நடந்து) அவமானம் ஏற்படுத்துதல்talk or behave in an extremely brazen manner
நாறு நாற்றம் வீசுதல்stink
நான் தன்மை இடத்து ஒருவரைச் சுட்டும் சொல்first person singular
நான்கு மூன்று என்ற எண்ணுக்கு அடுத்த எண்(the number) four
நான்றுகொள் தூக்குப்போட்டுக்கொள்ளுதல்hang (oneself)
நாஷ்டா காலைச் சிற்றுண்டிbreakfast, esp
நிக்காஹ் திருமணம்marriage
நிகண்டு ஒரு பொருளுக்கு உரிய பல சொற்களையும் ஒரு சொல்லுக்கு உரிய பல பொருளையும் பல்வேறு தலைப்புகளின் கீழ்த் தரும் செய்யுளாக இயற்றப்பட்ட அகராதி நூல்thesaurus in verse
நிகர்1ஒத்தல்resemble
நிகர்2இணைequal
நிகர (கழிக்க வேண்டியது) அனைத்தையும் கழித்தது போகnet (profit, income, etc.)
நிகழ் ஏற்படுதல்happen
நிகழ்களன் (கதை, நாடகம் முதலியவை) நிகழ்வதாகக் காட்டப்படும் இடம்scene
நிகழ்ச்சி (வாழ்க்கையில் ஒருவருக்கு) ஏற்பட்ட ஒன்றுincident
நிகழ்ச்சி நிரல் (விழாவில் அல்லது தலைவர்களின் சுற்றுப்பயணத்தில்) நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்புagenda
நிகழ்த்து (அற்புதம், சாதனை முதலியவற்றை) தோற்றுவித்தல்work (a miracle)
நிகழ்வு (வாழ்க்கையில் இயற்கையாக) நிகழ்வதுhappening
நிகழும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறcurrent
நிச்சயதாம்பூலம் மணமக்களின் பெற்றோர்கள் திருமணத்தை உறுதிசெய்கிற வகையில் தாம்பூலம் மாற்றிக்கொண்டு நிகழ்த்தும் சடங்குa custom in which parents exchange betel leaves, etc confirming an engagement
நிச்சயம்1திடம்firmness
நிச்சயம்2/-ஆகமாற்றத்துக்கு அல்லது சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில்certainly
நிச்சயி (ஒரு திருமணம் நடப்பதை) முடிவுசெய்தல்(மணமகளை, மணமகனை) தேர்ந்தெடுத்து முடிவுசெய்தல்confirm (a marriage alliance)
நிசப்தம் எந்த விதச் சத்தமும் இல்லாத நிலைsilence
நிணநீர் இரத்தத்தில் சென்று சேரும் வெள்ளையணுக்களைக் கொண்ட நிறமற்ற திரவம்lymph
நித்தம் தினமும்daily
நித்திய (தொடர்ந்து நடக்கிற) அன்றாடdaily
நித்திய கண்டம் ஒவ்வொரு நாளும் நிலைப்பது உறுதி இல்லாத நிலைconstantly subject to insecurity or threat (but nevertheless surviving)
நித்தியம் நிலையானதுperpetuity
நித்திரை தூக்கம்sleep
நிதர்சனம் (எந்த வகையிலும் மறைக்க முடியாத வகையில்) வெளிப்படையானதுobvious
நிதானம் (செயல்படுவதில்) பரபரப்போ அவசரமோ இல்லாத நிலைcomposure
நிதானமாக கூடுதலாகவோ குறைவாகவோ இல்லாமல்neither too much nor too little
நிதானி (செயல்படும் முன்) வேண்டிய கவனம் மேற்கொள்ளுதல்pause
நிதி செல்வம்wealth
நிதி அறிக்கை (ஓர் அரசு, நிறுவனம் தயாரிக்கும்) வரவுசெலவுத் திட்டம்budget
நிதி ஆண்டு (ஒரு நாட்டின், நிறுவனத்தின்) வரவுசெலவுத் திட்டம் அமலாக்கப்படும் மாதத்திலிருந்து அடுத்த வரவுசெலவுத் திட்டம்வரையிலான காலம்financial year
நிதியம் (நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட) பெரும் தொகையை நிர்வகிக்கும் அமைப்புfinancial consortium
நிந்தி அவமானப்படுத்துகிற வகையில் பேசுதல்vilify
நிப்பாட்டு நிறுத்துதல்stop
நிபந்தனை ஒன்றைச் செய்வதற்கு அல்லது செய்யாமலிருப்பதற்கு மற்றொன்றை விதிப்பதுcondition
நிபுணத்துவம் (ஒரு துறையில்) தேர்ச்சிexpertise
நிபுணர் தேர்ச்சியும் திறமையும் பெற்றவர்expert
நிம்மதி கவலை இல்லாத நிலைstate of relief
நிமிடம் அறுபது வினாடிகள் கொண்ட கால அளவுminute (of time)
நிமிண்டு கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே பிடித்து அழுத்தி முன்பின் அசைத்தல்pinch
நிமித்தம்1குறிப்பிட்ட நேரம், சம்பவம் முதலியவற்றிலிருந்து நிகழக் கூடியவற்றைப் பற்றிய கணிப்புa happening taken as a sign of things to come
நிமித்தம்2/-ஆகபொருட்டுon account of
நிமிர்த்து (தலையை, நெஞ்சை) இருக்கும் நிலையிலிருந்து உயர்த்துதல்raise
நியதி (இயற்கையான அல்லது ஏற்படுத்தப்பட்ட) செயல்படும் முறைlaw (of nature)
நியமம் நியதிlaw
நியமனம் (ஒரு பதவிக்கு, வேலைக்கு) அதிகாரபூர்வமான ஒப்பந்த உத்தரவுappointment (of s
நியமி அதிகாரபூர்வமாகப் பணியில் அமர்த்துதல் அல்லது ஈடுபடுத்துதல்appoint
நியாயம் (சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணகாரியத் தொடர்பால்) ஒத்துக்கொள்ளும்படியானதுfairness
நியாயவான் நீதி தவறாதவன்just man
நியாய விலைக் கடை (அரசினால் நடத்தப்பட்டு) நிர்ணயிக்கப்பட்ட விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் கடைfair price shop (run by the government)
நிர்க்கதி ஆதரவற்ற நிலைhelplessness
நிர்ச்சலனம் சலனம் அற்ற தன்மைunwavering nature
நிர்ணயம் வரையறை செய்யப்பட்டதுcontrol (of quality, etc.)
நிர்ணயி (விலை, தன்மை, எல்லை முதலியவற்றை) வரையறைப்படுத்துதல்fix (price, salary, etc.)
நிர்த்தாட்சண்யம் பரிவோ இரக்கமோ அற்ற தன்மைheartlessness
நிர்த்தூளி நிர்மூலம்utter destruction
நிர்ப்பந்தம் கட்டாயம்compulsion
நிர்ப்பந்தி ஒன்றைச் செய்தே தீர வேண்டும் என்று நெருக்குதல்force
நிர்மலம் தெளிவுspotlessness
நிர்மாணம் உருவாக்குதல்construction
நிர்மாணி திட்டமிட்டு அமைத்தல்construct
நிர்மூடன் சிறிதளவுகூடப் புத்திசாலித்தனம் இல்லாதவன்blockhead
நிர்மூலம் எதுவும் எஞ்சாத அழிவுutter destruction
நிர்வகி பொறுப்பேற்றுக் கவனித்துக்கொள்ளுதல்manage
நிர்வாகம் கட்டுப்படுத்தியும் முறைப்படுத்தியும் கவனிக்கும் செயல்பாடுadministration
நிர்வாகி (தொழிற்சாலை, நிறுவனம் போன்ற அமைப்பை) நிர்வாகம்செய்பவர்administrator
நிர்வாணம்1(உடலில்) ஆடை எதுவும் இல்லாமை அல்லது (உடலின் பல பகுதிகள் தெரியும்படியாக) மிகக் குறைவான ஆடை அணிந்திருப்பதுnakedness
நிர்வாணம்2(பௌத்தத்திலும் சமணத்திலும்) முத்திstate of liberation
நிர நிறைவடைதல்be full
நிரந்தரத்துவம் என்றும் நிலையாக இருக்கும் தன்மைperpetuity
நிரந்தரம் (-ஆக) முடிவு என்பது இல்லாததுthat which has no end
நிரப்பு (ஒன்றின் கொள்ளளவைப் பொருளால்) அடைத்துக்கொள்ளச்செய்தல்fill
நிரபராதி குற்றம் செய்யாதவன்one who is innocent
நிரம்ப அதிக அளவில்great
நிரம்பி வழி (ஓர் இடத்தில் கூட்டம் அல்லது பை போன்றவற்றில் பொருள்கள்) அளவுக்கதிகமாகி நிறைந்து காணுதல்(of people, things, etc.) overflow
நிரல் வரிசைrow
நிரல்பட வரிசைப்படிin proper order
நிரவல் ஒரு பாட்டின் வரியை அதற்கான ராகத்தின் லட்சணத்தைக் காட்டும் விதத்தில் பயன்படுத்தும் முறைrendering a line of musical composition elaborately so as to bring the nuances of ராகம்
   Page 3 of 13    1 2 3 4 5 13

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil