Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
படித்துறை (ஆறு, குளம் போன்றவற்றில்) இறங்குவதற்கான படிக்கட்டுflight of steps (leading to the water in a river, pond, etc.)
படிப்பகம் பத்திரிகைகள் படிப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் பொது இடம்a place where people can read newspapers
படிப்படியாக/படிப்படியான பல கட்டங்களைக் கடந்து சீராக/பல கட்டங்களைக் கடந்து சீரானstep by step
படிப்பாளி ஒரு துறையில் நிறையப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்well-read person
படிப்பினை (வரலாறு, நிகழ்ச்சி, அனுபவம் போன்றவை) கற்றுக்கொடுக்கும் பாடம்lesson (that one learns)
படிப்பு (கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பெறும்) கல்விeducation (one gets from an educational institution)
படிமம் விக்கிரகம்idol or image (of god)
படியாள் தானியத்தை அல்லது பணத்தைக் கூலியாகக் கொடுத்து வயல் வேலைகளைக் கவனிப்பதற்காக நியமித்துக்கொள்ளும் பணியாள்hired farm labourer who is paid in kind or cash
படிவம்1(தகவல்களை வகைப்படுத்திப் பெறுவதற்காக) கேள்விகள் அல்லது வாசகங்கள் அடங்கியதும் அவற்றை நிரப்புவதற்கான இடங்களும் உள்ள தாள்(printed) form
படிவம்2நிலத்தடியிலோ பாறைகளிலோ படிந்து காணப்படும் உலோகங்களின் அல்லது தாதுக்களின் அடுக்குformation (of metals, minerals)
படு1ஒரு பரப்பின் மீது வந்தமைதல் அல்லது விழுதல்fall (on a surface)
படு3(தாவரங்கள்) வளர்ச்சி நிலை இழத்தல்(of plants) become dry
படு4ஓய்வுக்காக உடலை ஒரு பரப்பின் மீது கிடைமட்ட நிலையில் இருத்துதல்lie down
படுக்க (பெரும்பாலும் வை, போடு முதலிய வினைகளோடு) கிடைமட்ட நிலையில்in a horizontal position
படுக்கை படுத்துக்கொள்ளப் பயன்படுத்தும் பாய், மெத்தை போன்ற விரிப்பு/(மருத்துவமனையில்) கட்டில்bedding/(mostly in hospitals) bed
படுக்கைப் புண் நோயாளி நீண்ட நாட்களாக ஒரே நிலையில் படுத்திருப்பதால் ஏற்படும் புண்bedsore
படுகளம் (தெருக்கூத்தில் துரியோதனன்) போரில் கொல்லப்படும் நிகழ்ச்சிscene of killing (துரியோதனன் in தெருக்கூத்து)
படுகை வண்டல் மண் படியும் பகுதியும் அதை ஒட்டியுள்ள இடமும்basin
படுத்தபடுக்கையாக நோய் முதலியவற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுப் படுக்கையை விட்டு எழ முடியாத நிலையில்bedridden
படுத்து1துன்பம், தொல்லை, தொந்தரவு முதலியவற்றுக்கு உள்ளாக்குதல்cause to suffer
படுதா சாக்கு, கித்தான் முதலியவற்றால் தயாரிக்கப்பட்ட உறுதியான துணிcurtain, cover, etc made of coarse material
படை1(கலைப் படைப்பு, கதைப் பாத்திரம் முதலியவற்றை அல்லது புதிதாக, புதிய முறையில் ஒன்றை) உருவாக்குதல்create
படை2(நாட்டைக் காக்க ஆயுதங்களின் உதவியால்) போரிடுவதற்குப் பயிற்சி பெற்ற வீரர்களின் தொகுதிarmy
படை3அரிப்பையும் சொரசொரப்பான புண்ணையும் ஏற்படுத்தக் கூடிய தோல் நோய்eczema
படைக்கலம் போர்க்கருவிweapons
படைப்பாளி (கவிதை, நாடகம் போன்றவற்றை) உருவாக்குபவன்(creative) writer
படைப்பாற்றல் புதிதாக உருவாக்கும் திறன்creativity
படைப்பிலக்கியம் (மொழிபெயர்ப்பு அல்லாத) புதிதாக உருவாக்கிய இலக்கியம்creative literature
படைப்பு1(பொதுவாக) உருவாக்கப்பட்டது/(தொழிற்சாலை போன்றவற்றில்) தயாரிக்கப்பட்டதுcreation
படையல் தெய்வத்திற்கு இலையில் வைத்து அளிக்கும் உணவுoffering of food to a deity placing it on a plantain leaf
படையெடு (நாட்டை, நகரத்தை) கைப்பற்றப் படையுடன் நுழைதல்invade (a country)
படைவீரன் போர்வீரன்soldier
பண் (பொதுவாக) பாடல் song
பண்டகசாலை பொருள்கள் பாதுகாப்பாகச் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் இடம்storehouse
பண்டபாத்திரம் பொருள், பாத்திரம் முதலியவைhousehold things or articles
பண்டம் (பொதுவாக) பொருள்/(குறிப்பாக) உணவுப் பொருள்(generally) material things
பண்டமாற்று ஒரு பொருளைக் கொடுத்து (தேவையான) மற்றொரு பொருளைப் பெறுதல்exchange of goods for goods
பண்டாரசன்னிதி ஒரு சைவ மடத்தைச் சேர்ந்த சன்னியாசிகளுக்குக் குருவாகவும் பிறருக்குச் சன்னியாசம் அளிக்கும் தகுதி பெற்றவராகவும் இருந்து மடத்தின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்the head of a Saiva mutt who is the chief of the ascetics in his mutt and has authority to admit others to the ascetic order
பண்டாரம் ஆண்டி(கிராமச் சிறுதெய்வக் கோயிலில்) பூசாரிreligious mendicant
பண்டிகை (தாம் சார்ந்துள்ள சமயத்தில் முக்கியமானதாகக் கருதப்பட்டு) வருடத்தில் குறிப்பிட்ட நாளில் (விருந்துடன்) சிறப்பாகக் கொண்டாடப்படுவது(religious) festival
பண்டித மொழியில் புலமையுடையscholarly
பண்டிதர் (மொழி கற்பிக்கும்) ஆசிரியர்teacher
பண்டிதன் (மொழியில் அல்லது ஒரு குறிப்பிட்ட துறையில்) புலமை வாய்ந்தவன்man of erudition
பண்டு பழங்காலம்ancient times
பண்டை/பண்டைய பழங்காலத்துancient
பண்ணு1செய்1see செய்1
பண்ணு2செய்2see செய்2
பண்ணை (கிராமத்தில்) பெருமளவில் விவசாயம் செய்வதற்குத் தேவையான வயலையும் தோட்டத்தையும் கால்நடைகளையும் கொண்ட தனியாரின் சொத்து(in villages) farm (owned by individuals)
பண்ணையார் (கிராமத்தில்) பெருமளவில் நிலம், தோப்பு முதலியவற்றைச் சொந்தமாகக் கொண்டவர்landlord (of a large farm)
பண்ணையாள் (கிராமத்தில்) விவசாயப் பண்ணையில் வேலை பார்ப்பவர்farm labourer (mostly attached to a landlord)
பண்பட்ட பண்பாடு நிறைந்தcultured
பண்படு (நிலமானது) உழுது பயிரிடுவதற்கு ஏற்றவாறு சீரடைதல்(of land) become cultivable or arable
பண்படுத்து (நிலத்தை) உழுது பயிரிடுவதற்கு ஏற்ற நிலைக்குச் சீராக்குதல் அல்லது சரிசெய்தல்prepare (lands) for cultivation
பண்பாடு குறிப்பிட்ட இடத்து மக்களின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் கலைகளும் சிந்தனையை வெளிப்படுத்தும் முறைகளும்culture
பண்பாளர் சிறந்த குணநலன்களைப் பெற்றிருப்பவர்cultured man
பண்பி பண்பை ஏற்றிருப்பவர் அல்லது ஏற்றிருப்பதுperson or thing possessing a quality or character
பண்பு ஒன்றிற்கு இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் தன்மைintrinsic quality or property
பணப்பயிர் (தானியம் அல்லாத) வருமானத்தைத் தரக் கூடிய கரும்பு, பருத்தி போன்ற பயிர்கள்commercial crop
பணம் (அரசு வெளியிடும் மதிப்பு குறிக்கப்பட்ட நாணயம், தாள் போன்ற) வாங்குதல், விற்றல் ஆகிய செயல்பாடுகளுக்குக் கருவியாகப் பயன்படும் சாதனம்money
பணம்பண்ணு பணம் சம்பாதித்தல்make or earn money
பணமுடிப்பு (ஒருவரைப் பாராட்டி கௌரவிக்கும் முறையில் அல்லது நிதி சேர்க்கும் முறையாக) திரட்டி வழங்கப்படும் பெரும் தொகைa sum of money collected and given as a gift
பணயக்கைதி (தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கும்படி கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் போன்றோர்) எதிர்த்தரப்பினரை மிரட்டிப் பணியவைக்கும் நோக்கத்துடன் பிடித்துவைத்திருக்கும் நபர்hostage
பணவிடை (ஒருவர் மற்றொருவருக்கு) பணத்தை அஞ்சல் அலுவலகத்தின்மூலமாகக் கட்டணம் செலுத்தி அனுப்பும் முறைmoney order (sent through post office)
பணவீக்கம் ஒரு நாட்டில் பணப் புழக்கம் அதிகமாவதால் பணத்தின் மதிப்புக் குறைந்து விலைவாசி அதிகமாகும் நிலைinflation
பணி1(அதிகாரம், கட்டளை போன்றவற்றுக்கு) கட்டுப்படுதல்submit (oneself to authority, order, etc.)
பணி2(செயலை நிறைவேற்றும்படி) உத்தரவிடுதல்order
பணி3(அலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில்) தரப்படும் பொறுப்பை ஊதியம் பெற்று நிறைவேற்றுவதுwork
பணிக்கொடை (பெரும்பாலும் அலுவலக வழக்கில்) குறிப்பிட்ட ஆண்டுகளுக்குக் குறையாமல் பணிபுரிந்த ஊழியர் ஓய்வு பெறும்போது அல்லது பணியில் இருக்கும் காலத்தில் இறக்க நேரிடும்போது நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும் ஓய்வுகாலச் சலுகை வகையைச் சேர்ந்த தொகைgratuity
பணிநீக்கம் (அலுவலகம், நிறுவனம் போன்றவற்றில் ஊழியரை) பணியிலிருந்து விலக்குதல்dismissal
பணிப்பாளர் (ஒரு துறையின்) இயக்குநர்director (of a department, etc.)
பணிப்பெண் (மருத்துவமனை, தொழிற்சாலை போன்றவற்றில்) சிறுசிறு வேலைகளைக் கவனிக்கும் கடைநிலைப் பெண் ஊழியர்last grade woman worker (in hospitals, factories, etc.)
பணிமனை (பேருந்துகளை) பழுதுபார்க்கவும் நிறுத்திவைக்கவும் பயன்படுத்தப்படும் இடம்shed (for buses either for repairs or for parking)
பணிமூப்பு (பெரும்பாலும் அலுவலக வழக்கில்) ஒரே நிலையில் பதவி வகிக்கும் பலருள் ஒருவர் மற்றவரைவிட எவ்வளவு காலம் அதிகமாகப் பணியாற்றி உள்ளார் என்பதைக் கணக்கிடும் கால அளவுseniority (of an employee in the service)
பணியரங்கு (குறிப்பிட்ட ஒரு துறையில் பயிற்சி அளிக்கும்) பட்டறைworkshop
பணியாரம் (பெரும்பாலும்) வெல்லம் கலந்த அரிசி மாவைக் குழிகள் உள்ள தட்டிலோ இருப்புச்சட்டியிலோ ஊற்றித் தயாரிக்கப்படும் தின்பண்டம்a kind of ball-shaped or small disc-shaped snack made of sweetened rice flour
பணியாள் (தனியாரிடம்) ஊழியம் செய்பவர்servant
பணியாளர் (அலுவலகத்தில்) பணி புரிபவர்employee
பணியாற்று வேலை பார்த்தல்work (in an office)
பணியிடம் (அலுவலகத்தில்) பதவிக்கான இடம்post
பணிவிடை (பெரியவர்கள், நோயாளிகள் முதலியோருக்கு) தேவையானவற்றைத் தந்து பொறுப்புடன் கவனித்துச் செய்யும் உதவிattendance (on the aged, sick, etc.)
பணிவு தன்னை முதன்மைபடுத்திக்கொள்ளாத மென்மைhumility
பத்தர் பொற்கொல்லர் goldsmith
பத்தாம்பசலி (காலத்துக்கு ஏற்றவாறு புதுமைகளையோ புதிய வழிமுறைகளையோ ஏற்றுக்கொள்ளாத) பழைய போக்குtendency to cling to old ways or methods
பத்தாயம்1(நெல் முதலிய தானியங்களைச் சேமித்து வைக்க உதவும்) கீழ்ப்புறம் திறப்புள்ள மரத்தாலான பீப்பாய் அல்லது பெட்டி போன்ற அமைப்பு(barrel or box-shaped) large wooden receptacle (for storing grains esp
பத்தாயம்2எலிப்பொறிmousetrap
பத்தி1முதல் வரி மட்டும் வலதுபுறம் சற்றுத் தள்ளித் தொடங்கும்படி (கதை, கட்டுரை முதலியவற்றில்) அமைக்கும், பல வரிகளை உள்ளடக்கிய பிரிவுparagraph
பத்தியம் (மருந்துக்காகவோ உடல்நிலையைப் பொறுத்தோ எதை விலக்க வேண்டும், எதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற) உணவுக் கட்டுப்பாடு அல்லது விதிமுறை உணவுprescribed diet
பத்திரப்படுத்து (பொருளை) பாதுகாப்பாக வைத்தல்keep
பத்திரம்1சொத்தின் விபரமும் அதற்கு உரியவரின் பெயரும் எழுதி அரசிடம் பதிவுசெய்யப்பட்ட முத்திரைத்தாள்registered document (of property, etc.)
பத்திரம்2(-ஆக, -ஆன) இழப்பு, சேதம் அல்லது ஆபத்து ஏற்படாத வகையிலான பாதுகாப்புsafety
பத்திரிகை செய்தித்தாள்/இதழ்newspaper/magazine
பத்திரிகையாளர் பத்திரிகைக்குச் செய்தி சேகரிப்பவர் அல்லது பத்திரிகை தொடர்பான பணியிலிருப்பவர்journalist
பத்திரிகை வை (குடும்பச் சடங்குகளுக்கான) அழைப்பிதழை நேரில் கொடுத்து நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தல்invite formally in person
பத்தினி (கற்பொழுக்கத்தில் சிறந்த) மனைவிwife (whose fidelity is exemplary)
பத்து1போதுமானதாக இருத்தல்be sufficient
பத்து2(ஆடு, மாடு முதலியவற்றை ஓர் இடத்திலிருந்து போகும்படி) ஓட்டுதல்chase away (stray cattle)
பத்து3ஒன்பது என்ற எண்ணுக்கு அடுத்த எண்(the number) ten
பத்து4மூலிகை அரைத்து அல்லது மண் போன்றவற்றைக் குழைத்து (உடலில்) பூசிக் காயவிட்டு ஒட்டிக்கொள்ளவைத்தல்herbal or mud plaster (on an affected part of the body)
பத்தை (காய்கறி, பழம் ஆகியவற்றின்) கீற்றுslice (of vegetables, fruits)
பத்மராகம் மாணிக்கம்a species of ruby
   Page 2 of 33    1 2 3 4 33