Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
வாடை1குளிர்காற்றுchill wind
வாடை2(தெருவில்) கட்டடங்கள் அமைந்திருக்கும் வரிசைrow of houses
வாண்டு மிகவும் குறும்பு செய்கிற குழந்தைmischievous child
வாணம் வானில் சென்று வெடித்துப் பல நிறங்களில் தீப்பொறிகளைப் பூப்பூவாகச் சொரியும் பட்டாசு வகைfireworks that burst in the midair and give out colourful sparks
வாணலி இருப்புச்சட்டிa kind of frying pan
வாணவேடிக்கை வாணங்களை வெடித்து நிகழ்த்தும் கண்கவர் காட்சிdisplay of fireworks
வாணியன் எண்ணெய் வித்துகளைச் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலைச் செய்பவர்one whose occupation is extracting oil using the oil press
வாத்சல்யம் மிகுந்த அன்புgreat affection
வாத்தியம் இசைக் கருவிmusical instrument
வாத்தியார் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் teacher
வாத்து தட்டையான அலகையும் குட்டையான கால்களையும் கொண்ட, நீரில் நீந்தக் கூடிய ஒரு பறவைduck
வாதம்1தகுந்த காரணங்களின் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் விளக்குவது அல்லது நியாயப்படுத்துவது/தர்க்கம்(logical) argument
வாதம்2மூட்டுகளையும் தசைகளையும் செயல் இழக்கவைக்கும் நோய்களைக் குறிக்கும் பொதுப்பெயர்a general term to refer to different kinds of paralysis or rheumatism
வாதனை துன்பம்trouble
வாதாடு காரணங்களை எடுத்துச்சொல்லுதல்argue
வாதி1வாதாடுதல்argue
வாதி2துன்புறுத்துதல்vex
வாதி3(உரிமையியல் நீதிமன்றத்தில்) தனது உரிமையை உறுதிசெய்யக் கோரி வழக்குத் தொடுப்பவர்plaintiff (in a suit)
வாது1மரக்கிளைbranch (of a tree)
வாது2விவாதம்polemic
வாதுமை மேற்புறம் பச்சையாகவும் அடிப்புறம் கரும் சிவப்பாகவும் இருக்கும் அகன்ற இலைகளும் பாதாம்பருப்பு அடங்கிய கொட்டைகளும் கொண்டு உயரமாக வளரும் மரம்almond (the tree)
வாதை துன்பம்affliction
வாந்தி வாய் வழியாக வெளியேறும் ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள்throwing up
வாந்திபேதி (பெரும்பாலும் நீரின் மூலமாகப் பரவுவதும் எளிதில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு) கடுமையான வயிற்றுப்போக்கையும் வாந்தியையும் ஏற்படுத்துவதுமான நோய்cholera
வாந்தியெடு (ஜீரணமாகாத உணவுப் பொருள் முதலியவை) வயிற்றிலிருந்து வாய் வழியாக வெளியேறுதல்throw up
வாப்பா (தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே) அப்பாfather (used by Tamil Muslims)
வாபஸ் ஆகு (படைகள்) திரும்ப வந்துசேர்தல்(of army) be withdrawn or recalled
வாபஸ் செய் (ஒரு பொருளை வாங்கிய இடத்திலேயே) திருப்பிக் கொடுத்தல்give back
வாபஸ் பெறு (போட்டி முதலியவற்றிலிருந்து) விலகுதல்(முறைப்படி அறிவித்த ஒன்றை) திரும்பப்பெறுதல்withdraw (from a competition, etc.)
வாய்1(குறிப்பிட்டது) கிடைத்தல்chance to have
வாய்2(தன்னிடம்) உடையதாக இருத்தல்possess
வாய்3உண்பதற்கும், (மனிதருக்கு) பேசுவதற்குமான உறுப்புmouth
வாய்க்கரிசி (சடங்காக உறவினர்) பிணத்தின் வாயில் போடும் அரிசிrice put into the mouth of the deceased (by relatives as a funeral rite)
வாய்க்கால் (ஆறு, ஏரி முதலியவற்றிலிருந்து பாசனத்திற்காக நீர் செல்லக் கூடிய) அகலம் குறைந்த நீர்வழிchannel (for irrigation)
வாய்க்குவந்தபடி (பேச்சில்) வரைமுறை இல்லாமல் மனம்போனபடிwithout restraint
வாய்க்குவாய் (ஒரு விஷயத்தைப்பற்றிப் பேசும்போது) பலமுறை(mentioning) frequently
வாய்க்கொழுப்பு (பிறரை மதிக்காமல்) திமிராகப் பேசும் போக்குinsolence
வாய்கிழிய (பேசு என்ற வினையோடு) அதிக நேரம் பயனற்ற முறையில்loudly
வாய்கொடு (விளைவுகளை எண்ணிப் பார்க்காமல்) தானாகப் போய்ப் பேசுதல்enter into a conversation (with s
வாய்த்துடுக்கு துடுக்கான பேச்சுsaucy or impertinent talk
வாய்ப்பாட்டு வாயால் பாடும் பாட்டுvocal music
வாய்ப்பு (ஒன்றைச் செய்வதற்கு, பெறுவதற்கு உரிய) அனுகூல நிலைopportunity
வாய்ப்பூட்டு சுதந்திரமாகக் கருத்துகளை எழுதி அல்லது பேசி வெளிப்படுத்தத் தடைanything that curbs freedom of expression
வாய்மை (என்றும் தவறாத) உண்மை(never failing) truth
வாய்மொழி (எழுத்துமூலமாக இல்லாமல்) பேச்சின்மூலமாக வெளிப்படுத்தப்படுவதுverbal or oral (instruction)
வாய்மொழித்தேர்வு (பல்கலைக்கழகத்தில் தேர்வின் ஒரு பகுதியாக) மாணவரை நேரடியாகக் கேள்வி கேட்டுச் சோதிக்கும் நிகழ்ச்சிviva voce
வாய்விட்டு (கட்டுப்படுத்த முடியாமல்) சத்தமாக(uncontrollably) loudly
வாயடி (செயலில் காட்டாமல்) வாயளவில் பேசுதல்pay lip-service
வாயடைத்து (ஒருவர் ஆச்சரியம், அதிர்ச்சி முதலியவற்றினால்) பிரமித்துstunned
வாயாடி எதிர்த்தோ அளவுக்கு அதிகமாகவோ பேசும் நபர்chatterbox
வாயாடு எதிர்த்தோ அளவுக்கு அதிகமாகவோ பேசுதல்talk back
வாயாலெடு வாந்தியெடுத்தல்throw up
வாயில்1(கட்டடத்தில்) நுழையும் பகுதிdoorway
வாயில்2மெல்லிய இழைகளால் நெய்யப்பட்ட துணிfabric woven with finer yarn
வாயில்லாப்பூச்சி (தனக்கு விளைவிக்கப்படும் துன்பம், குறை முதலியவற்றை) எதிர்த்துக் கேட்கும் திறன் இல்லாத நபர்people who would not speak up
வாயில்லா ஜீவன் பேசும் ஆற்றல் இல்லாத ஆடு, மாடு போன்ற விலங்குகள்dumb creature
வாயிலாக மூலம்through
வாயு காற்று நிறைந்த வெளிairspace
வாயும்வயிறுமாக இரு கர்ப்பமாக இருத்தல்be in the state of pregnancy
வாயெடு (ஒன்றைச் சொல்ல, பேச) தொடங்குதல்be about (to tell, speak)
வாயைப்பிள ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் வகையில் வாயைத்திறத்தல்gape at
வார்1(உலோகம், மெழுகு போன்றவற்றை) உருக்கி (அச்சில்) ஊற்றுதல்cast (in a mould)
வார்2(ஈர்க்கிலிருந்து ஓலையை) கிழித்தல்tear (the leaf from the rib of the frond for plaiting, etc.)
வார்3பட்டையாக இருக்கும் தோல், துணி போன்றவைstrap
வார்த்தை சொல்word
வார்த்தைஜாலம் (மனத்தைக் கவரும் வகையில்) அலங்காரமாகப் பேசப்படும் பேச்சு அல்லது அடுக்கப்படும் வார்த்தைகள்rhetoric
வார்ப்பிரும்பு பிற தனிமக் கலப்பு உடையதும் எளிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டதுமான ஒரு வகை இரும்புpig iron
வார்ப்பு (சிலை, நாணயம் முதலியவை செய்வதற்காக அச்சில் உலோகம் போன்றவற்றை) உருக்கி ஊற்றும் முறை/ உருக்கி ஊற்றித் தயாரித்த பொருள்the process of casting/ casting
வாரம்1ஏழு நாட்கள் கொண்ட காலப் பகுதிweek
வாரம்2விளைபொருளை நில உரிமையாளரும் விவசாயியும் குறிப்பிட்ட விகிதத்தில் பிரித்துக்கொள்ளச் சம்மதித்துச் செய்துகொள்ளும் ஏற்பாடுa form of lease in which the tenant shares the yield with his landlord
வாராந்தர/வாராந்திர வாரத்திற்கு ஒரு முறையானweekly
வாராந்தரி வாரப் பத்திரிகைweekly
வாராவதி (பெரும்பாலும் நீர் செல்லும் வழியில் அமைக்கும்) பாலம்bridge (usually over a river, canal, etc.)
வாரி1(மழைநீர் படாமல் இருக்கும் பொருட்டு) சுவருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கூரைப் பகுதிpart of the thatched roof that projects beyond the walls
வாரிசு ஒருவருக்குப் பின் அவருடைய சொத்து முதலியவற்றைச் சொந்தமாக்கிக்கொள்ள அதிகாரபூர்வமாக உரிமை படைத்தவர்one who inherits
வாரியம் மக்கள் நலப் பணிக்காகத் தனிச் சட்டத்தின்மூலம் அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சி கொண்ட அமைப்புboard (usually an independent statutory body)
வாரியல் துடைப்பம்broom
வாரு அள்ளுதல்gather
வாரை (பலர் சேர்ந்து தூக்குவதற்கு அல்லது தாங்குவதற்குப் பயன்படும்) நீண்ட, பருத்த மரம்pole for carrying load (on shoulders by a number of persons together)
வால்1(விலங்குகளின்) உடலின் பின்புறத்தில் சுழற்றக் கூடியதாக இருக்கும் உறுப்பு/(பறவைகளில்) பின்புறத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் இறக்கையின் பகுதிtail (of animals and birds)
வால்2குறும்புmischief/mischievous fellow
வால்நட்சத்திரம் (சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும்) ஒளிரக் கூடிய வாயுக்களாலான வால் போன்ற பகுதியைக் கொண்ட ஒரு விண்பொருள்comet
வால்பேரி காம்பை உடைய மேல்பகுதி பெரிதாகவும் கீழ்ப்பகுதி சிறிதாகவும் இருக்கும் ஒரு வகைப் பேரிக்காய்pear
வால்மிளகு ஒரு பகுதியில் சிறுத்தும் நீண்டும் இருக்கும் வழுவழுப்பான ஒரு வகை மிளகுcubeb
வாலம் குறைந்த அகலமுடைய துண்டுtowel of short width
வாலாட்டு குறும்புசெய்தல்tease
வாலாயம் கைவந்ததுproficiency
வாலிபம் இளமைyouth
வாலிபன் இளைஞன்young man
வாலை (சாராயம் முதலிய) திரவம் வடிக்கும் பாண்டம்pot used for distilling (arrack, etc.)
வாலைக்குமரி இளம் பெண்young girl
வாவி நீர்நிலை pond
வாழ் உயிருடன் இருந்து இயங்குதல்be alive
வாழ்க்கை உயிருடன் இருந்து இயங்கும் நிலைexistence
வாழ்க்கைக்குறிப்பு ஒருவரின் வாழ்க்கையைப்பற்றிய குறிப்பிடத் தக்க விவரங்கள்life sketch
வாழ்க்கைச்செலவு உணவு, உடை, வீடு போன்ற அவசியத் தேவைகளுக்காக ஒருவர் செலவிட வேண்டியதாக இருக்கும் பணம்cost of living
வாழ்க்கைத்துணை இல்லறத்தில் சுகதுக்கங்களில் பங்கேற்கக் கூடிய துணைpartner (in married life)
வாழ்க்கைத்துணைவன் கணவன்husband
வாழ்க்கைத்துணைவி மனைவிwife
வாழ்க்கைப்படு (ஒருவருக்கு) மனைவியாதல்(ஒரு குடும்பத்தில்) திருமணம் செய்துதரப்படுதல்(of a woman) get married (to s
   Page 4 of 20    1 2 3 4 5 6 20