Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
வாழ்த்து2(திருமணமானவர், வெற்றி அடைந்தவர் முதலியோருக்கு) மகிழ்ச்சியை வெளிப்படுத்தித் தெரிவிக்கும் பாராட்டுfelicitations
வாழ்நாள் (ஒருவர்) வாழும் காலம்life time
வாழ்வு வாழ்தல்life
வாழாவெட்டி கணவனைப் பிரிந்து வாழ்பவள்woman living apart from her husband
வாழி கூறு (கூத்தின் முடிவில்) அனைவரும் நலமுடன் வாழுமாறு வாழ்த்துதல்wish everybody good luck (at the end of a street play)
வாழை இனிப்புச்சுவை மிகுந்த பழத்தைத் தருவதும் உரித்தெடுக்கக் கூடிய மட்டைகளாலானதும் பெரிய இலைகளை உடையதுமான ஒரு வகை மரம்plantain tree
வாழைக்காய் (சமையலுக்குப் பயன்படும்) துவர்ப்புச் சுவையுடைய, வாழை மரத்தின் காய்green banana (used as a vegetable)
வாழைத்தண்டு (சமையலுக்குப் பயன்படும்) வாழை மரத்தின் மட்டைகளை நீக்கினால் நடுவே இருக்கும் சதைப்பற்றுள்ள வெள்ளை நிறத் தண்டுstem of the banana tree (used as a vegetable)
வாழைப்பழம் (உண்பதற்கு ஏற்ற வகையில் இனிப்புச்சுவை கொண்டதாக) பழுத்திருக்கும் வாழையின் காய்banana
வாழைப்பூ (சமையலுக்குப் பயன்படும்) வாழை மரத்தின் குலை நுனியிலுள்ள, மடல்களுக்குள் பொதிந்திருக்கும் துவர்ப்புச் சுவையுள்ள பூflower of the banana tree (used as a vegetable)
வாழையடிவாழையாக இடையில் நின்றுவிடாமல் தொடர்ச்சியாகin unbroken succession
வாள் (முற்காலத்தில் போர் வீரர்கள் வைத்திருந்த) கைப்பிடியுடன் கூடிய கூர்முனை கொண்ட நீண்ட கத்திsword
வாளி அகன்ற மேல்பகுதியையும் சற்றுக் குறுகிய அடிப்பகுதியையும் உடைய, கைப்பிடி உள்ள (நீர் வைத்திருக்கப் பயன்படுத்தும்) பாத்திரம்bucket
வாளை வாள் போன்ற தட்டையான உடலை உடைய ஒரு வகைக் கடல் மீன்scabbard-fish
வான் வானம்sky
வான்கோழி தலையின் மேற்பகுதியில் சேவலுக்கு இருப்பது போல் கொண்டையும் கழுத்துப் பகுதியில் தொங்கும் சதையும் உடைய (தோகை விரித்து ஆடும்) ஒரு பறவைturkey
வானம் பூமிக்கு மேல் தெரியும் கரு நீல வெளிsky
வானம்பாடி இனிய குரல் உடையதும் சிட்டுக்குருவியைவிடச் சற்றுப் பெரியதுமான செம்பழுப்பு நிறப் பறவைskylark
வானம்பார்த்த பூமி விவசாயத்திற்கு மழையை முழுவதுமாக நம்பியிருக்கும் நிலம்land which depends on rain for cultivation
வானரம் குரங்குmonkey
வானவியல் விண்ணில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவற்றைப்பற்றி விவரிக்கும் துறைastronomy
வானவில் மழைத் துளிகளின் ஊடே சூரிய ஒளி ஊடுருவுவதால் வானத்தில் ஏழு வண்ணத்தில் வில் போன்று தோன்றும் வளைவுrainbow
வானவூர்தி ஆகாய விமானம்aeroplane
வானிலை காற்று, ஈரப்பதம், மழை போன்றவற்றால் அமையும் (சீதோஷ்ண) நிலைweather
வானொலி (பேச்சு, பாடல் போன்றவற்றை) மின்காந்த அலைகளாக அனுப்பி அவற்றை ஒலியாகக் கேட்கும் முறைtransmission through air
வாஸ்தவம் (உடன்பட்டுக் கூறும்போது) உண்மை(when agreeing) true
வாஸ்து மனை அல்லது மனைக்கான தெய்வம்site or the tutelary deity of the house site
விக்கல் (அனிச்சையாக மூச்சு ஒரு கணம் தடைப்படுவதால் நெஞ்சுப் பகுதியில்) விட்டுவிட்டு ஏற்படும் குரல்வளை ஒலிhiccup
விக்கித்து (நில், போ ஆகிய வினைகளுடன் மட்டும்) (எதிர்பாராதது நேரும்போது) செய்வதறியாதுstunned
விக்கிரகம் (பெரும்பாலும் கோயில்களில்) வழிபாட்டுக்கு உரிய சிலைidol (sanctified in a temple)
விக்கிவிக்கி (அழு என்ற வினையுடன்) விக்கல் ஒலி போன்ற தேம்பலுடன்with hiccup-like sobs
விக்கினம் இடையூறுhindrance
விக்கு விக்கல் ஏற்படுதல்hiccup
விகடகவி (முற்காலத்தில் அரசவையில் உள்ளவர்களை) சிரிக்கவைக்கும் வகையில் வேடிக்கையாகப் பேசுபவன் அல்லது செய்யுள் முதலியவை இயற்றுபவன்(court) jester or one who writes humorous verse
விகடம் சிரிப்பூட்டும் வேடிக்கைப் பேச்சு முதலியவைpunning and jesting
விகற்பம் (செய்யும் செயலிலிருந்து) வேறுபடும் நோக்கம்perversity
விகாசம் மலர்ச்சிfull blossom
விகாரம்1(ஆக, -ஆன) அவலட்சணம்ugliness
விகாரம்2/விகாரைபுத்த பிக்குகளின் இருப்பிடமாகவும் விளங்கும் ஆலயம்buddhist monastery
விகிதம் மற்றொரு அளவோடு ஒப்பிட்டுக் கணக்கிடப்படும் அளவு/(வட்டி, ஊதியம் முதலியவை குறித்து வருகையில்) குறிப்பிட்ட வரையறைகளின்படி குறிப்பிட்டதற்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவு(of charge, interest, etc.) rate
விகிதாச்சாரம் விகித அளவுratio
விகுதி (பகுக்கக் கூடிய சொல்லில்) இறுதி நிலையில் உள்ள உறுப்புending (of a word that is divisible)
விச்ராந்தி எதைப்பற்றிய சிந்தனையும் கவலையும் கொள்ளாத நிலைstate of rest and relaxation
விசர் வெறிrabidness
விசர்த்தனம் விஷமத்தனம்mischievousness
விசனம் வருத்தம்sorrow
விசனி வருந்துதல்regret
விசாகம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதினாறாவதுthe sixteenth of the twentyseven stars
விசாரணை உண்மையை அறியும் முறையில் கேள்வி கேட்டல், சோதித்தல் முதலியனinvestigation
விசாரம்1(ஒன்றைப்பற்றிய) ஆராய்ச்சிinquiry
விசாரம்2கவலைconcern
விசாலம் விரிந்த பரப்புக் கொண்டதுspaciousness
விசாலி விரிவடைதல்extend
விசி மெல்லிய சத்தத்துடன் அழுதல்weep (with sobs)
விசித்திரம் வழக்கமானதிலிருந்து வேறுபட்டதுstrangeness
விசிப்பலகை ஊஞ்சல் பலகைplank used in a swing
விசிறி1(கையால் அசைத்துக் காற்று வரச்செய்வதற்காக) வட்ட வடிவில் விரித்த ஓலையை உடைய அல்லது வெட்டப்பட்ட அட்டையை உடைய சாதனம்(hand) fan
விசிறி2(ஒரு கலைஞரின், எழுத்தாளரின்) ரசிகர்(of film star, etc.) admirer
விசிறி மடிப்பு (அங்கவஸ்திரம் போன்றவற்றில் ஓலை விசிறியில் இருப்பது போன்ற) அடுக்கடுக்கான மடிப்புfan-like folds (in certain garments)
விசிறு (காற்று வருமாறு) விசிறியை அசைத்தல்fan
விசிஷ்டாதுவைதம் ஆன்மா, உலகம், இறைவன் ஆகிய மூன்றும் நித்தியமானவை என்றும் உயிரைச் சார்ந்து உடல் இருப்பது போல, உயிர்களும் உலகமும் இறைவனைச் சார்ந்து இருக்கும் என்றும் கூறும் தத்துவக் கொள்கைthe doctrine of qualified monism
விசுக்-என்று உடனடியாகabruptly
விசும்பல் விசும்பும்போது கேட்கும் ஒலிsoft sobbing
விசும்பு மூச்சு தேங்கி வெளிப்படுதல்weep
விசுவரூபம் (புராணத்தில்) (இறைவன் எடுத்த) உலகம் அனைத்தையும் நிறைத்த உருவம்the form of god which is cosmic
விசுவாசப் பிரமாணம் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகச் செய்துகொள்ளும் உறுதிமொழிoath of office
விசுவாசம் நன்றிஉணர்வுloyalty
விசுவாசி2முழு நம்பிக்கை வைத்தவர்believer
விசேஷ தேவைக்காகவும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்டspecial
விசேஷம் (-ஆக, -ஆன) குறிப்பிடத் தகுந்ததுthat needs specific mention
விசை1(ஒன்றின் மீது குறிப்பிட்ட ஒரு திசையில்) தாக்கத்தை அல்லது அசைவை ஏற்படுத்தும் வேக சக்திforce
விசை2தடவை(number of) times
விசைத்தறி மின்விசையால் இயக்கப்படும் தறிpowerloom
விசைத்தெளிப்பான் (பூச்சி) மருந்தைப் பரவலாகவும் விசையோடும் தெளிக்கும் சாதனம்power sprayer (of insecticide, etc.)
விசைப்படகு இயந்திர சக்தியால் இயங்கும் படகுmotor boat
விஞ்சு (செயல்பாட்டில் மற்றதைவிட) மேலோங்கியிருத்தல்excel
விஞ்ஞானம் அறிவியல்science
விஞ்ஞானி அறிவியல் அறிஞர்scientist
விட்டில் துள்ளித்துள்ளிச் செல்லும் (விளக்கு ஒளியால் ஈர்க்கப்படும்) ஒரு வகைப் பூச்சிa kind of moth
விட்டுச்செல் (ஒருவர் தன் மறைவுக்குப் பிறகும்) தொடரும் வகையில் இருக்கச்செய்தல்leave behind (for posterity)
விட்டுத்தள்ளு பெரிதுபடுத்தாமல் ஒதுக்குதல்leave aside
விட்டுப்பிடி (ஒத்துவரச்செய்யும் நோக்கத்தில் சிறிது காலம் ஒருவரை அவர்) போக்கில் விடுதல்allow (a person) to have his own way (so as to bring him round)
விட்டுப்போ (பிடிப்பு, இணைப்பு) உடைந்து பிரிதல்give way
விட்டுவிட்டு தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும்intermittently
விட்டுவை தவறவிடுதல்leave (anyone or anybody)
விட்டேற்றியாக/விட்டேற்றியான பொறுப்போ ஈடுபாடோ கொள்ளாமல்/பொறுப்போ ஈடுபாடோ கொள்ளாதwithout any personal involvement/unconcerned
விட்டை (கழுதை, குதிரை போன்ற விலங்குகளின்) கெட்டியான சாணம்dung (of certain animals, such as donkey, horse)
விட்டொழி (பழக்கம் முதலியவற்றை இனித் தொடராத வகையில்) முழுவதுமாகக் கைவிடுதல்give up for good or once and for all
விட ஒப்பு வேறுபடுவதை, ஒப்பிடுவதைக் குறிக்கும் சொல்than
விடலை (சுயக் கட்டுப்பாடு இல்லாத) வாலிபன்youth (prone to weaknesses or impulsive behaviour)
விடலைத்தேங்காய் சிதறுதேங்காய்coconut hurled on the ground and broken to pieces (in fulfilment of a vow)
விடாக்கண்டன் விட்டுக்கொடுக்காதவன்one who does not yield his position in dealings
விடாப்பிடியாக தன் நிலையிலிருந்து சிறிதும் மாறாமல்tenaciously
விடாமுயற்சி (ஒன்றை அடைவதற்கு) தொடர்ந்து செய்யும் முயற்சிperseverance
விடாய் தாகம்thirst
விடி1இரவு முடிதல்dawn
விடியல் விடியும் நேரம்day break
விடியவிடிய (தொடர்ந்து) இரவு முழுவதும்all through the night
விடியற்காலை பொழுது விடியும் நேரம்daybreak
விடிவிளக்கு (இரவில்) மிகக் குறைந்த வெளிச்சத்தை மட்டும் தரும் வகையில் வைக்கப்படும் விளக்குnight lamp
   Page 5 of 20    1 3 4 5 6 7 20