Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| இத்தனை | (இப்போது அறியப்பட்ட) இந்த அளவு | this much |
| இத்யாதி | (கூறப்பட்டவை போக) இன்னும் பிற | and others |
| இதம் | இசைவாகவும் அளவாகவும் அனுபவிக்கத் தகுந்ததாகவும் இருப்பது | feeling of comfort |
| இதயத் துடிப்பு | இதயத்தின் சுருங்கி விரியும் இயக்கம் | heartbeat |
| இதயம் | சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதும் மார்புக்கூட்டினுள் அமைந்துள்ளதுமான தசையாலான உள் உறுப்பு | heart |
| இதர | பிற | (and) other |
| இதழ்2 | (தின, வார, மாத) பத்திரிகை | (daily) newspaper |
| இதழியல் | பத்திரிகைகளுக்கான செய்திகளைத் தொகுத்தல், செய்தி முதலியவை எழுதுதல், பத்திரிகை நடத்துதல் முதலியவை குறித்து விளக்கும் துறை | journalism |
| இதிகாசம் | கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய வீரச் செயல்களையும் நீதிநெறிகளையும் விவரிக்கும் காப்பியம் | (ancient) epic |
| இதுநாள்வரை | இந்தத் தினம் முடிய | until this day |
| இதுவரை | இந்த நேரம் முடிய | so far |
| இதோபதேசம் | பக்குவமான போதனை | good counsel |
| இந்த | (இடத்தைக் குறிக்கையில்) அருகில் அல்லது முன் இருக்கிற(காலத்தைக் குறிக்கையில்) தற்போதையநிகழ்கிறகுறிப்பிடுகிற | a demonstrative adjective to refer to things or persons close by |
| இந்தாருங்கள் | மரியாதைக்கு உரிய ஒருவரை அழைக்கும்போது அல்லது அவரிடம் ஒன்றைத் தரும்போது அவர் கவனத்தைத் தன் முகமாகத் திருப்பப் பயன்படுத்தும் சொல் | a formal term used when calling s |
| இந்தி | இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததும் இந்தியாவின் வட மாநிலங்களில் பேசப்படுவதும் இந்திய அரசின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக இருப்பதுமான மொழி | hindi (language) |
| இந்தியா | ஆசியக் கண்டத்தில் உள்ள ஒரு குடியரசு நாடு | india |
| இந்திர நீலம் | நீலக்கல் | sapphire |
| இந்திரபோகம் | அனைத்து வசதிகளும் நிறைந்த சுகம் | (life of) comfort with all luxuries |
| இந்திரலோகம் | அனைத்து இன்பங்களும் நிறைந்ததாகக் கூறப்படுகிற ஓர் உலகம் | a world of comforts and pleasures |
| இந்திரஜாலம் | மயங்கவைப்பதும் நம்ப முடியாததுமான தோற்றம் | art of creating illusions with dazzling effect |
| இந்திரியம் | ஐம்புலனுக்கு உரிய பொறி | sensory organ |
| இந்து மதம் | செய்த செயலின் பயனை அனுபவிக்க வேண்டியிருப்பது, மனிதருக்கு மறுபிறவி உண்டு முதலிய கொள்கைகளைக் கொண்டதும் பெருமளவில் இந்தியாவில் பரவியிருப்பதுமான மதம் | hindu religion |
| இந்நேரம் | (பேசிக்கொண்டிருக்கும்போது குறிப்பிடுகிற) இந்த நேரம் | by this time |
| இப்படி | (சுட்டிக்காட்டும்) இந்த விதத்தில் | in this way or manner |
| இப்படிக்கு | (கடிதம் முதலியவற்றில் கையெழுத்துப் போடுவதற்கு முன்) மேலே கூறப்பட்டுள்ளவற்றை ஒப்புக்கொள்ளும் முறையில் | part of the subscription (to a letter) |
| இப்படிப்பட்ட | (விவரிக்கப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட) இந்த விதமான | such as (described) |
| இப்பேர்ப்பட்ட | (நபர்களைக் குறிப்பிட மட்டும்) இப்படிப்பட்ட | (with reference to persons) such as |
| இப்பொழுது/இப்போது | (நிகழ்காலத்தின்) இந்தக் கட்டத்தில் | in this period (of the present) |
| இப்போதைக்கு | தற்காலிகமாக | for the time being |
| இம்சி | இம்சைசெய்தல் | trouble |
| இம்சை | (அடித்தும் பிற வகையிலும்) வருத்தி உண்டாக்கும் வேதனை | bodily harm |
| இம்மி | மிகச் சிறிதளவு | the smallest fraction |
| இம்மை | இந்த உலக வாழ்வு | life in this world |
| இமயம் | உலகிலேயே மிக உயரமான சிகரத்தை உடைய, இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள மலைத்தொடர் | the Himalayan (mountain) |
| இமாலய | மிகப் பெரிய | great |
| இமை1 | (கண்ணை) மூடித் திறத்தல் | bat (the eyelid) |
| இமை2 | பாதுகாப்பிற்காகக் கண்களின் மேலும் கீழும் அரைவட்ட வடிவில் அமைந்துள்ள தோல் | eyelid |
| இமைப்பொழுது | (கண் இமைப்பதற்கு ஆகும் நேரத்தைப் போன்ற) மிகக் குறைந்த நேரம் | split second |
| இயக்கு | (இயந்திரம் முதலியவற்றை) இயங்கச்செய்தல் | operate |
| இயக்குநர்/இயக்குனர் | (கதையை) திரைப்படமாக அல்லது நாடகமாக ஆக்கும் பொறுப்புடையவர் | director (of a film or play) |
| இயங்கியல் | இயற்கையிலும் சமூகத்திலும் சிந்தனையிலும் உள்ள முரண்பட்ட அம்சங்களின்மூலம் ஏற்படும் வளர்ச்சி பற்றிய கோட்பாடு | dialectics |
| இயங்கு | (சீராக) செயல்படுதல் | function |
| இயந்திர கதி | இயந்திரத்தனம் | routine or mechanical manner |
| இயந்திரத்தனம் | மாறுதல் எதுவும் இல்லாத தன்மை | routine or mechanical nature |
| இயந்திரத் துப்பாக்கி | (கையில் ஏந்தாமல் கம்பிக் கால்களில் தாங்கவைத்து) விசையை அழுத்தினால் வேகமாகவும் தொடர்ச்சியாகவும் குண்டுகளை வெளியேற்றும் துப்பாக்கி | machine-gun |
| இயந்திரம் | ஒரு வேலையைச் செய்வதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதும் நீராவி, மின்சாரம் முதலிய சக்திகளாலோ மனித சக்தியாலோ இயக்கப்படுவதுமான கருவி அல்லது சாதனம் | machine |
| இயல்1 | (ஒருவரால் ஒன்றைச் செய்ய) முடிதல் | be able to |
| இயல்2 | (மரபு இலக்கணப்படி தமிழ்மொழி பயன்படும் மூன்று துறைகளில் ஒன்றான) செய்யுளுக்கும் உரைநடைக்கும் உரிய தமிழ் | (according to traditional grammar, one of the three departments in which Tamil is used, this being) the language of poetry and prose |
| இயல்3 | நூலின் உட்பிரிவு | chapter (of a book) |
| இயல்பு | (ஒருவர் இப்படிப்பட்டவர் அல்லது ஒன்று இப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்தும்) பண்பு | character |
| இயலாமை | (அந்தந்தச் சூழ்நிலையில் அததற்குத் தகுந்தவாறு) செயல்பட முடியாமை | inability (to act in a situation that demands a particular action at that time) |
| இயற்கணிதம் | எண்களுக்குப் பதிலாகக் குறியீடுகளையும் எழுத்துகளையும் பயன்படுத்தும் ஒரு கணிதப் பிரிவு | algebra |
| இயற்கை உபாதை | சிறுநீர் அல்லது மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு | call of nature |
| இயற்பியல் | பொருள்களின் தன்மை, இயற்கைச் சக்திகளின் இயக்கம், மாற்றம் முதலியவற்றை விவரிக்கும் ஓர் அறிவியல் துறை | physics |
| இயற்பெயர் | பெற்றோர் இட்ட பெயர் | name given by parents at the time of birth |
| இயற்று | (பொதுவாக இலக்கியம்) படைத்தல் | (in general) create (literary works) |
| இயேசு/இயேசுநாதர் | தெய்வ நிலை மூன்றனுள் மனித குல மீட்சிக்காகத் தோன்றியவர் | jesus, the Saviour |
| இயை | (முரண்பாடு இல்லாமல்) பொருந்துதல் | be in harmony |
| இயைபு | (முரண்பாடு இல்லாத) பொருத்தம் | harmonious relation |
| இர | கெஞ்சிப் பெறுதல் | beg |
| இரக்கம் | (பிறர் துன்பம் கண்டு) வருந்தும் உணர்வு | pity |
| இரங்கல் | ஒருவர் மரணம் அடைந்ததற்குத் தெரிவிக்கும் வருத்தம் | condolence |
| இரங்கற்பா | இரங்கல் தெரிவித்துப் பாடப்படும் பாடல் | a verse in praise of the dead (composed on the occasion of death) |
| இரசவாதம் | உலோகங்களைப் பொன்னாக மாற்றும் முயற்சி | the attempt of turning metals into gold |
| இரட்சகர் | இயேசுநாதர் | (Jesus) the Saviour |
| இரட்சகன் | காப்பவன் | protector |
| இரட்சி | காத்தல்(துன்பம், பாவம் முதலியவற்றிலிருந்து) மீட்டல் | protect |
| இரட்டிப்பு | (ஒன்றின்) இரு மடங்கு | double |
| இரட்டு | (எழுத்து) இரட்டித்தல் | double |
| இரட்டைநாடி | இரு பிரிவாக இருப்பது போல் தோற்றம் தரும் அகன்ற முகவாய் | double chin |
| இரட்டைப்படை எண் | (2, 4, 6, 8 போன்ற) இரண்டால் மீதியின்றி வகுபடும் எண் | even number |
| இரட்டைப்பிள்ளை | ஒரே பிரசவத்தில் பிறந்த இரு குழந்தைகள் | twins |
| இரட்டைமண்டை | இரு தலை ஒன்றாக இணைந்தது போன்ற நீண்ட தலை | a long head (almost double the size of a normal head) |
| இரண்டகம் | நம்பிக்கைத் துரோகம் | breach of trust |
| இரண்டறக் கல | (தனித்தனியானவை வேற்றுமை தெரியாதபடி) ஒன்றாதல் | become one with |
| இரண்டாம்பட்சம் | (மதிப்பு, முக்கியத்துவம் முதலியவற்றில்) ஒரு படி குறைந்ததாகவோ அடுத்த படியானதாகவோ இருப்பது | secondary |
| இரண்டு | ஒன்று என்ற எண்ணுக்கு அடுத்த எண் | (the number) two |
| இரண்டுக்குப்போ | (பெரும்பாலும் குழந்தையோடு தொடர்புபடுத்திக் கூறும்போது) மலம் கழித்தல் | empty the bowels |
| இரண்டுங்கெட்டான்2 | எந்தக் காரியத்துக்கும் ஏற்றதாக இல்லாத | inconvenient |
| இரண்டுபடு | (குடும்பம், ஊர் முதலானவை பகைமை உணர்ச்சியோடு) இரு கட்சியாகப் பிரிதல் | (of family, village) split into two (opposing factions) |
| இரத்த அழுத்தம் | இரத்த ஓட்டத்தின் காரணமாக இரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தம் | the normal pressure in the blood vessels |
| இரத்த ஓட்டம் | உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று மீண்டும் இதயத்திற்கே திரும்பும் தொடர்ச்சியான இரத்தச் சுழற்சி | blood circulation |
| இரத்தக்களரி | இரத்தம் சிந்திக் காணப்படும் கோர நிலை | horrible sight of blood splattered |
| இரத்தக் குழாய் | இதயத்திலிருந்து அல்லது இதயத்திற்கு இரத்தம் செல்லும் தசையாலான குழாய் | blood vessel |
| இரத்தக் கொ??திப்பு | இருக்க வேண்டிய அளவுக்கு அதிகமான நிலையில் இருக்கும் இரத்த அழுத்தம் | high blood pressure |
| இரத்தச் சோகை | (உடலில் சோர்வு உண்டாவதற்கும் தோல் வெளிறுவதற்கும் காரணமாக இருக்கும்) இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவால் ஏற்படும் நோய் | anaemia |
| இரத்தப்போக்கு | அதிக அளவிலான இரத்த வெளியேற்றம் | excessive bleeding |
| இரத்தம் | சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டும் இதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம் | blood |
| இரத்த வெறி | (சிங்கம், புலி போன்ற மிருகங்களின்) பிற உயிர்களைக் கொன்று தின்னும் வெறி | bloodthirstiness |
| இரவல் | தன் உபயோகத்திற்காகப் பிறர் பொருளைப் பெற்றுத் திருப்பித் தரும் முறை | (of articles, items) borrowing |
| இரவல் குரல் | (திரைப்படம் முதலியவற்றில்) பின்னணிக் குரல் | dubbing voice |
| இரவலர் | பொருளைத் தானமாகப் பெறுபவர் | a person who receives sth. as charity |
| இரவு | சூரியன் மறைந்ததிலிருந்து (மறுநாள்) சூரியன் உதிக்கும்வரை உள்ள இருண்ட நேரம் | night |
| இரவோடு இரவாக | (ஒரு செயலைப் பிறர் அறியாவண்ணம்) இரவில் ஆரம்பித்து அதே இரவுக்குள் | in the thick of the night |
| இருக்கை | உட்காருவதற்கான ஓர் அமைப்பு | seat |
| இருசு | (வாகனங்களின்) அச்சு | axle |
| இருசுக்கட்டை | வண்டியின் அச்சில் பதிந்திருக்குமாறு உள்ள மரக்கட்டை | a block of wood resting on the axle |
| இருட்டடிப்பு | ஒரு செய்தி அல்லது நிகழ்ச்சி வெளியே தெரியாதவாறு அல்லது பரவாதவாறு மறைத்தல் | black out |
| இருட்டு1 | (பகல் பொழுது முடிந்து இரவின் துவக்கமாக) இருள் சூழ்தல் | get dark (at the end of the day) |
| இருட்டு2 | (இரவின்) இருள் | darkness (of the night) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.