Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பஞ்சபட்சி சாஸ்திரம் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய பறவைகள் எழுப்பும் ஒலிகளை வைத்துப் பலன் சொல்லும் சோதிட முறைsystem of divination from the call of certain birds
பஞ்சபூதம் நிலம், நீர், காற்று, வானம், தீ ஆகிய ஐந்து இயற்கைச் சக்திகள்the five elements, viz
பஞ்சம் உணவு கிடைக்காத நிலைfamine
பஞ்சலோகம் தங்கம், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி ஆகிய ஐந்து உலோகங்களின் கலவைalloy of five metals, viz
பஞ்சவர்ணக்கிளி உருவத்தில் சற்றுப் பெரிதாகவும் பல வண்ணம் உடையதாகவும் உள்ள கிளிmacaw
பஞ்சாங்கம் (ஜாதகம் கணிப்பதற்கும் நல்ல நேரம் பார்ப்பதற்கும் பயன்படுத்தும்) ஜோதிட முறைப்படி குறிப்பிட்ட ஆண்டுக்கு உரிய நாள், நட்சத்திரம், திதி, கிரகநிலை முதலியவை குறித்த விபரங்கள் அடங்கிய நூல்almanac (containing astrological and some astronomical information)
பஞ்சாமிர்தம் (இறைவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்) வாழைப்பழம், தேன், நெய், சர்க்கரை, திராட்சை முதலியவற்றைச் சேர்த்துச் செய்த இனிப்புச் சுவை மிகுந்த கலவைa mixture of five substances, usually banana, honey, ghee, sugar and raisin, used for anointing idols and later distributed among devotees
பஞ்சாயத்து கிராமங்களில் உருவாகும் பிரச்சினைகளை ஊர் வழக்கம், மனசாட்சி அடிப்படையில் தீர்த்துவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஊர்ப் பெரியவர்களின் குழுa body of villagers which settles disputes according to custom and good conscience
பஞ்சாயத்து யூனியன் ஊராட்சி ஒன்றியம்panchayat union
பஞ்சாலை பஞ்சில் உள்ள தூசு, கொட்டை போன்றவற்றை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கான தொழிற்சாலைginning factory
பஞ்சி சோம்பல்laziness
பஞ்சு (பருத்திச் செடியிலிருந்து அல்லது இலவ மரத்தின் காயிலிருந்து கிடைக்கும்) நுண்ணிய இழைகளாலான, திரவத்தை உறிஞ்சக் கூடிய, எளிதில் தீப்பற்றக் கூடிய, கனமற்ற வெண்ணிறப் பொருள்cotton (wool)
பஞ்சு மிட்டாய் குச்சியில் பந்து போல் சுற்றியிருக்கும், வண்ணப் பஞ்சு போன்ற, சீனிப் பாகினால் ஆன தின்பண்டம்candy-floss
பஞ்சை ஏழைpoor
பட்-என்று எதிர்பார்க்காத முறையில் அல்லது வேகத்தில்in an unexpected manner or with unexpected quickness
பட்சணம் (சில நாட்கள் வைத்துக்கொள்ளக் கூடிய) இனிப்பும் காரத் தின்பண்டங்களும்sweet and other refreshments (that can be preserved for a few days)
பட்சபாதம் பாரபட்சம்partiality
பட்சி பறவைbird
பட்டணப் பிரவேசம் (கொண்டாடும் நோக்கத்தோடு மதத்தலைவர், மணமகன் போன்றோரை வரவேற்று) நகர வீதியில் அழைத்து வரும் சடங்குcustom of welcoming religious heads, a bridegroom, etc taking them in procession through the streets of the town
பட்டணம் (பொதுவாக) நகரம்(குறிப்பாக) சென்னை நகரம்(generally) city
பட்டணம்படி இரண்டு லிட்டர் அளவு கொண்ட படிa measure of approximately two litre capacity
பட்டத்தரசி அரசனின் மனைவிwife of a king
பட்டத்து இளவரசன் அரசனுக்குப் பிறகு முடிசூட்டிக்கொள்ளும் உரிமை படைத்த இளவரசன்crown prince
பட்டத்து யானை அரசச் சின்னங்களைத் தாங்கியதும் அரசர் பவனி வருவதற்கு உரியதுமான யானைroyal elephant
பட்டதாரி (பல்கலைக்கழக) பட்டம் பெற்றவர்graduate
பட்டப்பகல் நல்ல வெளிச்சம் இருக்கிற பகல் நேரம்broad daylight
பட்டம்2(காற்றில் பறக்க விடப்படும்) காற்றாடிkite
பட்டம்3பயிரிடுவதற்கான பருவம்agricultural season
பட்டமளிப்பு விழா (பல்கலைக்கழகத்தில்) பட்டம் பெற்றவருக்கு அதிகாரபூர்வமாகப் பட்டத்திற்கு உரிய சான்றிதழை வழங்கும் விழாa ceremony for the conferring of degrees upon students
பட்டயம் (முற்காலத்தில்) அரசனால் வழங்கப்பட்ட நிலம்குறித்த அதிகாரபூர்வமான தகவல் அல்லது அரசனுடைய வெற்றி போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி பொறிக்கப்பட்ட செப்புத்தகடுcopper plate bearing inscription on the grants made, etc by kings
பட்டர் திருமாலுக்கு வைணவ ஆகமப்படி பூஜை செய்யும் தகுதி உடையவர்one who is entitled to perform பூஜை in temples dedicated to Vishnu
பட்டவர்த்தனமாக/பட்டவர்த்தனமான (எந்த வித ஒளிவுமறைவுமின்றி) வெளிப்படையாக/வெளிப்படையானcandidly
பட்டறிவு நேரடி அனுபவத்தின்மூலம் பெறும் அறிவுknowledge gained by experience
பட்டறை1தச்சு வேலை போன்றவை நடைபெறும் இடம்carpentry or smithy (shop)
பட்டறை2(நெல்லைச் சேமித்து வைப்பதற்கான) சாக்கு அல்லது வைக்கோலால் ஆன அமைப்புa structure made of gunny bags or hay for storing grains
பட்டா குறிப்பிட்ட எண்ணுள்ள நிலம், வீட்டு மனை முதலியவற்றுக்கு வரி செலுத்த வேண்டிய உடமையாளர் யார் என்பதைக் காட்டும் ஆவணம்a settlement record which shows who, as the owner of a specified land, is obliged to pay the tax
பட்டாக்கத்தி பட்டையான பரப்புடைய வாள்sword with broad blade
பட்டாசு நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் ரசாயனத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள்sparklers and crackers
பட்டாணி காயவைத்து உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுக்கப்பட்ட உருண்டையான பயறுfried peas of the garden pea (prepared as a snack)
பட்டாதாரர் (நிலம், மனை முதலியவற்றுக்கு அளிக்கப்பட்ட) பட்டாவின் உரிமையாளர்holder of பட்டா
பட்டாபிஷேகம் ஒரு நாட்டின் அரசராக அல்லது அரசியாக முடிசூடும் சடங்குcoronation
பட்டாம்பூச்சி அழகான, விதவிதமான வண்ணத்தில் இறக்கைகளை உடைய ஒரு வகைப் பூச்சிbutterfly
பட்டாமணியம் வருவாய்த் துறை அதிகாரிகளால் முன்பு நில வரி போன்ற வரிகளை வசூலிக்க நியமிக்கப்பட்டிருந்த கிராம அதிகாரிvillage officer (formerly appointed in each village by the district revenue establishment for the collection of land revenue)
பட்டாளம் ராணுவம்army
பட்டி1சிற்றூர்hamlet
பட்டி2(கிராமத்தில்) பிறர் நிலத்தில் பயிர்களை மேயும் ஆடு, மாடு ஆகியவற்றை (உரிமையாளர் வந்து மீட்டுச் செல்லும்வரை) அடைத்து வைக்கும் இடம்(cattle) pound
பட்டி3(சட்டை, பாவாடை முதலிய உடைகளில்) விளிம்பை மடித்துத் தைக்கும் பகுதிhemming
பட்டிக்காட்டான் நகர்ப்புற நாகரிகம் அறியாத கிராமவாசிrustic
பட்டிக்காடு நகரத்து வசதிகள் சிறிதளவுகூட இல்லாத கிராமம்village wanting in amenities
பட்டிதொட்டி கிராமமும் அதைவிடச் சிறிய ஊரும்(every) nook and cranny
பட்டி பார் (வர்ணம் பூசுதல் முதலிய பூச்சு வேலையைத் துவங்கும் முன்) ஒரு பரப்பைச் சமப்படுத்தும் பொருட்டு மெழுகு போன்ற பொருளைப் பூசுதல்fill the holes, crevices in a surface with sth (before painting)
பட்டிமன்றம் அணியினராகப் பிரிந்து கொடுக்கப்பட்ட தலைப்புப் பொருளை ஆதரித்தும் எதிர்த்தும் பேசும் மேடை விவாத நிகழ்ச்சிa forum of opposing teams debating a given subject
பட்டியல் விபரங்களை ஏதேனும் ஓர் அடிப்படையில் ஒன்றன் கீழ் ஒன்றாகத் தரும் வரிசை முறைlist
பட்டினி (உணவு இல்லாமல் அல்லது உணவு உண்ணாமல்) பசியோடு இருக்கும் நிலைstarvation
பட்டினிச்சாவு உணவு கிடைக்காததால் ஏற்படும் மரணம்death caused by starvation
பட்டினிபோடு (உண்ணாமல், உணவு கொடுக்காமல்) பசியோடு இருக்கச்செய்தல்starve
பட்டு புழுவாக இருக்கும் பருவத்தில் உள்ள ஒரு வகைப் பூச்சியின் கூட்டிலிருந்து எடுக்கப்படுவதும் நூலாக ஆக்கி ஆடைகள் நெய்யப் பயன்படுவதுமான மெல்லிய இழைyarn of silk
பட்டுப்புழு பட்டு இழையைத் தரும் வளர்ச்சிக் கட்டத்தில் உள்ள பூச்சியின் புழுpupa of silk worm
பட்டுப்பூச்சி பட்டு இழையைத் தரும் பூச்சிsilk worm
பட்டும்படாமலும் (பேசுதல், நடந்துகொள்ளுதல் குறித்து வருகையில்) (எந்த ஒரு விஷயத்திலும் தன்னை) சம்பந்தப்படுத்திக்கொள்ளாமல்in a noncommittal way
பட்டுவாடா (சம்பளம், கடிதம், பொருள் போன்றவற்றை) உரியவர்களுக்கு வழங்குதல்distribution
பட்டை (-ஆக, -ஆன) (கோடு அல்லது கோடு போன்றவற்றைக் குறிக்கையில்) சற்று அகலமானது(கம்பி அல்லது கம்பி போன்றவற்றைக் குறிக்கையில்) சற்றுத் தட்டையானது(of lines or anything like a line) bar
பட்டைச்சாராயம் வேலம்பட்டை, சர்க்கரை, படிகாரம் முதலியவற்றைப் போட்டுத் தயாரிக்கும் நாட்டுச் சாராயம்(country) arrack (from the bark of certain trees)
பட்டைசாதம் (கோயிலில் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டுப் பின் வழங்கப்படும்) கிண்ணத்தின்மூலமாகக் கட்டி போல ஆக்கப்பட்டிருக்கும் சோறு(in temples) cooked rice offered to a deity and later measured with a cup and distributed
பட்டைதீட்டு (ஒளிரச்செய்யும் வகையில் வைரத்தின்) பக்கங்களை நுண்மையாக வெட்டுதல்cut facets (on a diamond)
பட்டொளி பட்டில் இருப்பது போன்ற மினுமினுப்புsheen of silk or similar material
படகு துடுப்பால் அல்லது இயந்திர விசையால் இயக்கப்பட்டு நீரில் செல்லும் போக்குவரத்துச் சாதனம்boat
படங்கு தார்ப்பாய்tarpaulin
படச்சுருள் புகைப்படத்தையோ திரைப்படத்தையோ பதிவுசெய்வதற்கான, ரசாயனப் பூச்சு கொண்ட பட்டை வடிவச் சுருள்roll of film
படத்தொகுப்பு எடுக்கப்பட்ட காட்சிகளுள் தேவை இல்லாதவற்றை நீக்கித் தேவையானவற்றை வரிசைப்படி ஒழுங்குபடுத்தும் திரைப்படத் தயாரிப்பு முறைfilm editing
படப்பிடிப்பு கதையைத் திரைப்படமாகப் பதிவுசெய்தல்film shooting
படப்பு (வைக்கோல்) போர்haystack
படபடப்பு (இதயத்திலும் பிற உடலுறுப்புகளிலும்) இயல்பான நிலையில் இருக்க முடியாத அளவுக்கு ஏற்படும் துடிப்புpalpitation
படம்1தாள், துணி, படச்சுருள் போன்றவற்றில் வரைதல், அச்சடித்தல், ஒளியைப் பதிவுசெய்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படுகிற உருவம் அல்லது வடிவம்picture
படம் எடு1புகைப்படமாக அல்லது திரைப்படமாகப் பதிவுசெய்தல்take a picture
படம் எடு2(நல்லபாம்பு சீறும்போது) தலையை உயர்த்திப் பட்டையாக விரித்தல்(of cobra) spread the hood
படம்காட்டு பயமுறுத்தும் அல்லது அசரவைக்கும் நோக்கத்தில் பெரிதுபடுத்துதல் அல்லது நடந்துகொள்ளுதல்assume a threatening posture
படம்பிடித்துக் காட்டு உண்மையில் உள்ளபடி காட்டுதல்paint a lifelike sketch (in words)
படமரம் (தறியில்) நெய்த துணி சுற்றப்படும் உருளைcloth roller (in a loom)
படமாக்கு திரைப்படமாகப் பதிவுசெய்தல்/திரைப்படம் தயாரித்தல்shoot (a film)/ make a film
படர் (செடி, கொடி முதலியவை) கிளைத்துப் பரவலாகுதல் அல்லது விரிதல்(of creepers) climb
படர்க்கை தானோ தன் முன் இருப்பவரோ அல்லாத பிறர் ஒருவர் அல்லது பிற ஒன்றுthird person
படல் மூங்கில் தப்பை, காய்ந்த குச்சி முதலியவற்றைச் சேர்த்துக் கட்டி அமைக்கப்படும் வேலி அல்லது வேலியாக்கக் கூடிய பகுதிfence or part of it made of bamboo splits or thorny branches
படலம்1(புகை, புழுதி முதலியவை பொருள்களை மறைக்கும் அளவிற்கு) திரை தொங்குவது போன்று பரந்து காணப்படும் நிலைcloud (of dust, smoke, etc.)
படலம்2(காவியம், இதிகாசம் போன்றவற்றில் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும்) உட்பிரிவுchapter or section (in an epic mostly depicting a single theme or incident)
படலை (வேலியில் அமைக்கப்படும்) தட்டிக் கதவுgate made of bamboo splits
படவா ஒருவரைத் திட்டவும், பிரியத்துடன் அழைக்கவும் பயன்படுத்தும் சொல்a term of abuse as well as endearment
படாடோபம் ஆடம்பரமும் பகட்டும் மிகுந்த தன்மைostentation
படி1(பனி, ஈரம் அல்லது தூசு போன்றவை ஒரு பரப்பின் மீது) பரவித் தங்குதல்(of snow, moisture) be covered with
படி2எழுதப்பட்டிருப்பதை வார்த்தைகளாக்கி உச்சரித்தல்read (a letter, lesson, etc.)
படி4(முகத்தலளவையில்) எட்டு ஆழாக்குக் கொண்ட ஓர் அளவுa measure of 8 ஆழாக்கு
படி5பணியாளர்களுக்குப் பயணச் செலவு, வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு முதலிய செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் அடிப்படைச் சம்பளத்தோடு குறிப்பிட்ட விகிதத்தில் வழங்கப்படும் தொகைallowance paid to an employee in addition to the basic pay
படி6(புத்தகத்தின்) அச்சடிக்கப்பட்ட பிரதி(தட்டச்சு முதலியன செய்வதில்) நகல்copy (of a book, document, etc.)
படிக்கட்டு (ஓர் இடத்தில் அல்லது வாகனத்தில்) ஒரு படி அல்லது படிகளின் வரிசைsteps
படிக்கல் எடைக்கல்weight (for scales)
படிக்கவை (தேவையான உதவிகள் செய்து, வசதிகள் ஏற்படுத்தி ஒருவரை) கல்வி கற்கச்செய்தல்educate
படிகம் பனிக்கட்டி போன்று நிறமற்றதும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதும் இயற்கையிலேயே கிடைக்கக் கூடியதுமான திடப் பொருள்crystal
படிகாரம் (தண்ணீரைத் தெளியவைத்தல் போன்றவற்றிற்குப் பயன்படும்) காரத் தன்மை கொண்ட ஒரு வேதிப் பொருள்alum
படித்தவள் கல்வி கற்றவள்educated woman
படித்தவன் (கல்வி நிலையங்களில் சேர்ந்து) கல்வி கற்றவன்educated man
   Page 1 of 33   1 2 3 … 33

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil