Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| காலி2 | அடாவடித்தனம் செய்பவன் | rogue |
| காலிசெய் | (குடியிருக்கும் வீடு, அறை முதலியவற்றைவிட்டு) வெளியேறுதல்(இருக்கும் இடத்தை அல்லது இருக்கையைவிட்டு) நீங்கிப்போதல் | vacate (house, room, etc.) |
| காலுறை | பாதத்திலிருந்து முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரை இறுக்கமாக அணியப்படும், நூலால் பின்னப்பட்ட (ஒரு ஜோடி) உறை | (pair of) sock(s) |
| காலூன்று | (ஒரு துறையில்) இடம்பிடித்தல் | be established or settled |
| காலை1 | சூரியன் உதித்து உச்சிக்கு வரும் முன் உள்ள நேரம் | morning |
| காலை2 | ஊருக்கு வெளியே ஆடு, மாடு வளர்ப்பதற்கான இடம் | pasture |
| காலை3 | (பெயரெச்சத்தின் பின்) பொழுது | (after the relative participle) at the time of |
| காலைக்கடன் | (காலையில் எழுந்ததும் செய்யும் பல் துலக்குதல், சிறுநீர் கழித்தல், குளித்தல் முதலிய) உடல் தூய்மையாக்கும் வேலை | morning routine (such as brushing the teeth, attending the call of nature, taking bath) |
| காவடி | (முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் தோளில் எடுத்துவருவதும் நாட்டுப்புறக் கலை ஆட்டத்தில் பயன்படுத்தப்படுவதுமான) உருளை வடிவக் கட்டையின் இரு முனைகளையும் இணைக்கும் அரைவட்ட வடிவ மரப்பட்டையின் முனைகளில் மயில் தோகைகள் பொருத்தப்பட்ட அமைப்பு | a cylindrical wooden rod joined by semi-circular wooden strip to both ends of which feathers of peafowls are fixed erect (used in the worship of Lord Murugan and in a folk dance) |
| காவல்துறை | (அரசு ஏற்படுத்தியுள்ள) சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான அமைப்பு | the police (department) |
| காவல்தெய்வம் | (எல்லைப்புறத்திலிருந்து) ஊரைக் காத்துவரும் தெய்வம் | deity guarding the village |
| காவல்நிலையம் | (சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஒரு ஊரில் அல்லது நகரத்தின் பல பிரிவுகளில் இருக்கும்) காவலர்கள் பணிபுரியும் அலுவலகம் | police station |
| காவலர் | சட்டம்ஒழுங்கை நிலைநிறுத்தும் அரசுப் பணியாளர் | policeman |
| காவலாளி | (வீடு, தோட்டம் போன்றவற்றை) காவல்செய்பவர் | person employed to protect or guard (a house, garden, etc.) |
| காவலில் வை | (குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கும் முன்) சிறையில் வைத்தல் | keep under detention |
| காவாலி | காலி | rogue |
| காவி | செங்கல் நிறம் | saffron (colour) |
| காவியம் | காப்பியம் | epic |
| காவு | (தோளில் அல்லது கையில்) தூக்குதல் | carry |
| காவுகொடு | (காளி முதலிய தெய்வங்களுக்கு) உயிரை பலி கொடுத்தல் | offer (animal/human) sacrifice |
| காவுகொள் | (உயிர்) பலி ஏற்றல் | accept or take (animal/human) sacrifice |
| காவெட்டு | பழுக்கத் தொடங்கியிருக்கும் காய் | the state before becoming fruit |
| காழ்ப்பு | பகைமையுடன் கூடிய வெறுப்பு | (feeling of) intense dislike or hatred |
| காளவாய் | மட்பாண்டங்கள், செங்கற்கள், சுண்ணாம்பு முதலியவற்றைச் சுட்டு எடுக்கப் பயன்படுத்தும் பெரிய அடுப்பு | kiln (for brick, lime, etc.) |
| காளான் | மழை பெய்த சில நாட்களுக்குப் பின் நிலத்தில் முளைக்கும் ஒரு வகைத் தாவரம் | mushroom |
| காளி | கரிய நிறமுடைய ஒரு பெண் தெய்வம் | a female deity of dark complexion |
| காளை | இளமைப் பருவத்தில் உள்ள (இனவிருத்திக்கான) ஆண் மாடு | stud |
| காற்றாட | காற்றுப் படும்படி | for an airing |
| காற்றாடி | ஒரு சட்டத்தின் மீது துணி அல்லது காகிதம் ஒட்டப்பட்டு வால் போன்ற நீளமான பகுதி சேர்க்கப்பட்டு நூலின்மூலமாகக் காற்றில் பறக்கவிடப்படும் ஒரு விளையாட்டுப் பொருள் | kite |
| காற்றாலை | காற்றின் இயக்கத்தைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கவோ இயந்திரங்கள் இயக்கவோ பயன்படும் அமைப்பு | windmill |
| காற்று | உலகில் வெளியெங்கும் நிறைந்திருப்பதும் உயிரினங்கள் உயிர் வாழ சுவாசிப்பதும் உணரக் கூடியதுமான ஒன்று | air |
| காற்றுகறுப்பு | பேய், பிசாசு முதலியவை | evil spirits |
| காற்றுவாக்கில் | (நேரடியாகக் கேள்விப்படாமல்) பிறர் சொல்லி | by word of mouth |
| காற்றுவாங்கு | நல்ல காற்று வீசும் இடத்தில் இருந்து அனுபவித்தல் | enjoy fresh air |
| காற்றோட்டம் | சுத்தமான காற்று வந்து போகும்படியாக இருக்கும் முறை | ventilation |
| காறல் | (தொண்டையில்) அரிப்பு அல்லது கரகரப்பு உணர்வை ஏற்படுத்தும் நெடி | musty flavour (inducing one to hawk) |
| காறாக்கருணை | சேனைக்கிழங்கு | elephant yam |
| காறையெலும்பு | கழுத்தின் கீழ் இரு பக்கமும் தோள் மூட்டுவரை அமைந்துள்ள எலும்பு | collar bone |
| கானகம் | காடு | jungle |
| கானம் | இசை | music |
| கானல்நீர் | வெப்பப் பிரதேசங்களில் அனல் காற்றால் நீரோடை ஒன்று அருகில் ஓடுவதுபோல இருக்கும் மாயத் தோற்றம் | mirage |
| காஜா | உடையில் பொத்தானைப் பொருத்த வசதியாக வெட்டித் தைக்கப்படும் சிறிய துவாரம் | buttonhole |
| காஜி | இஸ்லாமியச் சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் நீதிபதி | one who acts as a judge according to Islamic law |
| காஷாயம்1 | (சன்னியாசி போன்றோர் கட்டிக்கொள்ளும்) காவி நிறத் துணி | saffron cloth (worn by monks and religious heads) |
| காஷாயம் வாங்கிக்கொள் | காவி உடை தரித்துத் துறவியாதல் | take to wearing saffron robe |
| கிச்சடி | கொதிக்கும் நீரில் ரவையைப் போட்டு வேகவைத்த தக்காளி, உருளைக்கிழங்கு முதலியவற்றைச் சேர்த்து மஞ்சள் தூள் தூவிச் செய்யும் சிற்றுண்டி | a dish prepared by boiling semolina to which tomatoes, potatoes, etc are added |
| கிச்சிலி | நாரத்தை அளவுக்குப் பெரிதாக இருக்கும் எலுமிச்சை | (bitter) lime |
| கிச்சுக்கிச்சுத்தம்பலம் | மணலை ஒரு முழ நீளத்தில் சிறு கரை போலக் குவித்து வைத்து அதில் ஒருவர் குச்சியை ஒளிக்க மற்றவர் கையால் பொத்திக் கண்டுபிடிக்கும் விளையாட்டு | a game for two in which one runs his fingers into the sand leaving a small stick which is to be found by another by marking the area with his folded palms |
| கிச்சுக்கிச்சுமூட்டு | (ஒருவருடைய அக்குள், விலாப்புறம் முதலிய இடங்களில் கையால் வருடிச் சிரிப்பு வரும்படி) கூச்சம் உண்டாக்குதல் | tickle (so as to make one laugh) |
| கிஞ்சித்தும்/கிஞ்சித்தேனும் | சிறிதும் | even a little |
| கிட்ட | அருகில் | near |
| கிட்டங்கி | கிடங்கு | godown |
| கிட்டத்தட்ட | ஏறக்குறைய | about |
| கிட்டத்தில் | பக்கத்தில் | near |
| கிட்டப்பார்வை | தூரத்தில் இருப்பவை கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பார்வைக் குறை | short-sightedness |
| கிட்டி1 | (வெடிமருந்து முதலியவற்றைத் துப்பாக்கிக் குழாய் முதலியவற்றினுள் இறுக்கமாக) இடித்து அமுக்குதல் | ram (the gun powder into a gun) |
| கிட்டிப்புள் | இரு புறமும் செதுக்கப்பட்ட ஒரு மரத் துண்டை அதே அளவு பருமன் உள்ள மற்றொரு நீண்ட கோலால் அடித்து அது போகும் தூரத்தைக் கணக்கிடும் சிறுவர் விளையாட்டு | the game of tip-cat |
| கிட்டிபோடு | கிட்டியில் மாட்டுதல் | put in a clasp (so as to prevent moving) |
| கிட்டு1 | (ஒருவருக்கு) வந்துசேர்தல் | get |
| கிட்டு2 | (குளிர், காய்ச்சல் முதலிய காரணங்களால் தாடை இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்) இறுகுதல் | (of jaws/teeth) be firmly locked together |
| கிட2 | முதன்மை வினை குறிப்பிடும் செயல் இயக்கமற்ற தன்மையை அடைந்துவிட்டதைக் காட்டும் ஒரு துணை வினை | an auxiliary verb to indicate that the state described by the main verb remains undisturbed |
| கிடங்கு | (பொருள்களை) பெருமளவில் சேமித்து வைக்கும் இடம் | (governmental or private) warehouse |
| கிடத்து | (குழந்தையை மடியில், கட்டிலில்) படுக்கவைத்தல்(உணர்வு இழந்தவரை, நோயாளியை, பிணத்தை) படுத்த நிலையில் போடுதல் | lay (a baby) down (in crib, etc.) |
| கிடந்து | (குறிப்பிட்ட நிலையில்) சிக்கி | (having got caught in a specified state) with no way out |
| கிடப்பில் இரு | (திட்டம், தீர்மானம் போன்றவற்றை) செயல்படுத்தாமல் காலம்செல்ல விட்டிருத்தல் | allow (a plan, etc.) to be in cold storage |
| கிடப்பில்போடு | திட்டம், தீர்மானம் போன்றவற்றை) செயல்படுத்தாமல் காலம்செல்ல விடுதல் | put (a plan, etc.) in cold storage |
| கிடுக்கிப்பிடி | விடுபட முடியாதபடி கையாலோ காலாலோ பிடித்துக்கொள்கிற அல்லது பின்னிக்கொள்கிற ஒரு பிடி | vice-like grip |
| கிடுகிடு1 | (பழைய சுவர் முதலியன) பலமாக அதிர்தல் | (of wall, etc.) shake |
| கிடுகிடு2 | தலைச்சுற்றல் ஏற்படக் கூடிய அளவுக்கு ஆழமுடைய | deep (enough to cause dizziness) |
| கிடுகிடு-என்று | (ஒரு செயலைச் செய்கையில்) தடங்கல் எதுவும் இல்லாமல் | quickly |
| கிடுகு | கீற்று | thatched (palm) leaf (used as roofing or fencing) |
| கிடை1 | (ஒருவருக்கு) வாய்த்தல்(ஒன்றிற்கு) அமைதல் | get |
| கிடை2 | (வயல்களில் உரத்துக்காக மறித்துவைக்கப்படும் ஆடு மாடுகளின்) கூட்டம் | herd of cattle |
| கிடைமட்டம் | தரைமட்டத்திற்கு இணையான நிலை | horizontal |
| கிண்டல் | (ஒருவருடைய நடத்தை, செயல் முதலியவற்றைக்குறித்து மனத்தில் சற்று உறைக்கும்படியான) சிரிப்பான பேச்சு | making fun (of s |
| கிண்டு | (கம்பு, கை முதலியவற்றால், பறவைகள் காலால் ஒன்றை) மேல்கீழாகவோ பக்கவாட்டிலோ புரட்டுதல் | stir |
| கிண்ணம் | சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத (பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும்) சிறிய வட்ட வடிவப் பாத்திரம் | a small bowl |
| கிணற்றுக்கட்டு | கிணற்றைச் சுற்றிக் கட்டப்பட்ட சுவர்/கிணற்றுச் சுவரை ஒட்டிய பகுதி | parapet (wall) of a well/area surrounding the parapet of a well |
| கிணற்றுத்தவளை | தான் வாழும் சூழலுக்கு அப்பால் உள்ள எதையும் அறியாத நபர் | one who has no knowledge of things outside his or her own small sphere |
| கிணறு | பூமிக்கு அடியிலிருந்து நீர் எடுப்பதற்காக மண்ணை வெட்டி அகற்றி உண்டாக்கிய ஆழமான குழி | well |
| கிணுகிணு | (மணி போன்றவை) குறைவான ஓசையுடன் ஒலித்தல் | tinkle |
| கித்தான் | (சாக்கு போன்ற) கனமான முரட்டுத் துணி வகை | a kind of coarse cloth (like gunny) |
| கிரகணம் | சந்திரனால் சூரிய ஒளி, பூமியால் சந்திரனின் பிரதிபலிப்பு ஒளி தற்காலிகமாக மறைக்கப்படும் நிலை | eclipse |
| கிரகப்பிரவேசம் | புதிதாகக் கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் சடங்குகள் செய்து குடியேறும் நிகழ்ச்சி | a ceremony performed at the time of occupying a newly built house |
| கிரகம் | சூரியனைப் போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான (பூமி, வெள்ளி, சனி போன்ற) விண்வெளிப் பொருள் | planet |
| கிரகி | மனத்தில் வாங்குதல் | comprehend |
| கிரகிப்பு | புரிந்துகொள்ளும் திறன் | comprehension |
| கிரணம் | (சூரியனின், சந்திரனின்) ஒளிக் கதிர் | (of sun, moon) ray of light |
| கிரந்தம் | சமஸ்கிருதத்தை எழுதுவதற்குத் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்து | grantha script (that was used in Tamil Nadu for writing Sanskrit) |
| கிரந்தி | மேகப்புண் | syphilis |
| கிரந்திப்புண் | பால்வினை நோயின் அறிகுறியாக ஆண்குறி, உதடு, கைவிரல் முதலிய உறுப்புகளில் தோன்றும் ஒரு வகைப் புண் | chancre |
| கிரமம் | முறை | order |
| கிரயம் | (பெரும்பாலும் நிலம், வீடு போன்றவை பெறும்) விலை | (mostly of land, house, etc.) price (offered and accepted) |
| கிரவுண்டு | (இரண்டாயிரத்து நானூறு சதுர அடி உள்ள) வீடு கட்டும் மனை | a measure of land (of 2400 sq |
| கிராக்கி | (தேவை அதிகமாக இருக்கும்போது வாங்குவோர் ஒரு பொருளுக்காக அல்லது மக்கள் ஒரு நபருக்காக) வேண்டியிருக்கும் நிலை | demand |
| கிராக்கிப் படி | அகவிலைப் படி | dearness allowance |
| கிராக்கிபண்ணு | (ஒருவர் ஒன்றைச் செய்யும் முன் தனக்கு) பல வேலை இருப்பது போலவும் நேரமே இல்லாதது போலவும் காட்டுதல் | put on airs by making oneself unavailable |
| கிராதகம் | கொடுமை | cruelty |
| கிராதகன் | கொடூரமான தீமை இழைப்பவன் | cruel man |
| கிராதகி | கிராதகன் என்பதன் பெண்பால் | feminine of கிராதகன் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.