Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| துறை1 | வகைப்படுத்தப்பட்ட பகுப்பு அல்லது பிரிவு | branch |
| துறை2 | ஆறு, குளம் போன்றவற்றில் இறங்குவதற்கு ஏற்ற வகையில் படிகளுடன் அமைந்திருக்கும் இடம் | flight of steps (leading to water from the bank of a river, pond, etc.) |
| துறைமுகம் | (கப்பல் முதலியவை) கரையோரத்தில் வந்து நிற்பதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு | harbour |
| துறைவழக்கு | (பெரும்பாலும் கலைச்சொல்லாக) ஒரு குறிப்பிட்ட துறையில் பயன்படுத்தும் (பொது மொழியிலிருந்து வேறுபாடுடைய) மொழி | register |
| துன்பம் | மனத்துக்கு மகிழ்வைத் தராத உணர்வு | misery |
| துன்பியல் | (நாடகம், புதினம் முதலியவற்றில்) துன்ப முடிவைக் கொண்டது | (of literature) tragedy |
| துன்புறு | துன்பத்துக்கு உள்ளாதல் | suffer (pain, misery, etc.) |
| துன்புறுத்து | துன்பத்துக்கு உள்ளாக்குதல் | cause suffering |
| துன்மார்க்கம் | முறை தவறிய நெறி | evil ways |
| துஷ்பிரச்சாரம் | தவறான அபிப்பிராயம் ஏற்படுத்தப் பொய்யான தகவல்களைப் பரப்பிச் செய்யப்படும் பிரச்சாரம் | false propaganda |
| தூக்கக் கலக்கம் | தூக்கத்திலிருந்து விடுபடாத அல்லது தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை | state of being not fully awake |
| தூக்கணம் | தொங்கட்டான் | ear ornament that is let to hang from the ear stud |
| தூக்கணாங்குருவி | (மெல்லிய நாரால் சிறுசிறு அறைகளைக் கொண்டதாகத் தொங்கும் கூட்டைக் கட்டும்) சிறிய சாம்பல் நிறப் பறவை | weaver bird (which builds hanging nests) |
| தூக்கம் | (பெரும்பாலும் இரவில்) கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை | sleep |
| தூக்கல் | (ஒன்று மட்டும்) உணரத்தக்க வகையில் கூடுதலாக இருப்பது | (an) excess |
| தூக்கி | (பிடி, கொடு போன்ற சில வினைகளோடு வரும்போது) உயரத்தில் செல்லுமாறு | (hold, throw, etc.) up |
| தூக்கிக்கொடு | (கேள்வி கேட்காமல், தயக்கம் இல்லாமல் கேட்டதை) உடனடியாகத் தருதல் | gift away |
| தூக்கிச்சாப்பிடு | (சிறப்பில், முக்கியத்துவத்தில் மற்றவர் அல்லது மற்றது) ஒன்றும் இல்லை என்னும்படி மிஞ்சுதல் | eclipse |
| தூக்கிட்டு | தூக்குப்போட்டு | (commit suicide) by hanging |
| தூக்கித்தூக்கிப்போடு | (மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது வண்டி பயணம் செய்பவரை) இருக்கையில் உட்காரவிடாமல் ஆட்டுதல் | jolt (while travelling on a bad road) |
| தூக்கிநிறுத்து | (வியாபாரம், அரசியல் முதலியவற்றில்) சரிவு நிலையைத் தடுத்து ஒரு நிலைக்குக் கொண்டுவருதல் | bolster |
| தூக்கியெறி | (எந்த வித மதிப்பும் இல்லாமல்) உடனடியாக நீக்குதல் அல்லது அகற்றிவிடுதல் | overthrow |
| தூக்கியெறிந்து பேசு | எடுத்தெறிந்து பேசுதல் | talk insolently |
| தூக்கிவாரிப்போடு | (பெரும்பாலும் இறந்தகால வடிவங்களில்) (ஒரு நிகழ்ச்சியின் அல்லது செய்தியின்) எதிர்பாராத கடுமையான தன்மையால் அதிர்ச்சி அடைதல் | be startled |
| தூக்கு3 | மேற்புறம் வளைவான பிடி உள்ள உருண்டை வடிவச் சிறு பாத்திரம் | a vessel with an arch-shaped handle |
| தூக்குக் கயிறு | (கழுத்தை இறுக்கிக் கொல்லும்) சுருக்கு போடப்பட்ட கயிறு | rope with a sling |
| தூக்குக்குண்டு | நூற்குண்டு | plumb line |
| தூக்குத்தண்டனை | தூக்கிலிட்டுக் கொல்லுமாறு (நீதிமன்றம்) வழங்கும் தண்டனை | sentence of death by hanging |
| தூக்குப்பாலம் | (வழிவிடுவதற்காக) நடுவில் பிரிந்து உயரே எழும்பிப் பின் இணையக் கூடிய பாலம் | drawbridge |
| தூக்குப்போடு | (உயிர்விட) தூக்குக் கயிற்றில் தொங்குதல் | hang (oneself) |
| தூக்குமரம் | (தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள) தூக்குக் கயிறு கட்டப்பட்டுள்ள மரச் சட்டம் | gallows |
| தூக்குமேடை | தூக்குத்தண்டனை நிறைவேற்றும் இடம் | platform with gallows |
| தூக்குவாளி | (சாம்பார், ரசம் முதலியவற்றைப் பரிமாறுவதற்குப் பயன்படுகிற) வாளி போன்ற அமைப்புடைய சிறிய பாத்திரம் | small bucket-like vessel for serving sauce, etc (at wedding dinners, etc.) |
| தூங்கிவழி | தூக்கக் கலக்கத்துடன் காணப்படுதல் | be sleepy |
| தூங்கு | (ஓய்வெடுக்க) தூக்கம் கொள்ளுதல் | sleep |
| தூங்குமூஞ்சி | (செயலில்) சுறுசுறுப்புக் காட்டாமல் அசிரத்தையாக இருப்பவன் | one who is slothful |
| தூங்குமூஞ்சி மரம் | மாலை நேரத்தில் கண்மூடித் தூங்குவது போலக் கீழ்நோக்கி மடியும் இலைகளைக் கொண்ட ஒரு வகைப் பெரிய மரம் | rain tree |
| தூசி | (காற்றில் பறந்து வரும்) சிறு துகள்(மண்) புழுதி | small particle |
| தூசிதும்பு | தூசியும் தூசி போன்ற பிறவும் | dust and the like |
| தூண் | (கட்டடம், பாலம் முதலியவற்றில்) மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு | pillar |
| தூண்டில் | (மீன் பிடிக்கப் பயன்படும்) தக்கை இணைக்கப்பட்ட, உறுதியான இழையின் நுனியில் கொக்கி போன்ற இரும்பு முள்ளையுடைய நீண்ட கோல் | fishing rod |
| தூண்டில் முள் | (புழு, உணவுத் துண்டு போன்றவற்றைத் தகுந்த வகையில் செருக) தூண்டில் இழையின் முனையில் இணைக்கப்பட்டுள்ள சிறு இரும்புக் கொக்கி | fish hook |
| தூண்டிவிடு | எதிராகச் செயல்படும்படி செய்தல் | instigate |
| தூண்டு | (எரிவதற்காக விளக்கின் திரியை) முன் தள்ளுதல் | raise or draw out (the wick so that it may burn bright) |
| தூண்டுகோல் | (ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு) எழுச்சி தருவது | motivating force |
| தூதர் | ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்பட்ட அரசு உயர் அதிகாரி | ambassador |
| தூதரகம் | (மற்றொரு நாட்டின் தலைநகரத்தில்) தூதுவரின் தலைமையில் இயங்கும் அலுவலகம்/முக்கிய நகரங்களில் கலாச்சாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைக் கவனிக்கும் விதத்தில் இயங்கும் கிளை அலுவலகம் | embassy/consulate |
| தூதன் | (முற்காலத்தில்) மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன் | (formerly) messenger (of a king) |
| தூது | (ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு) செய்தி தெரிவிக்கும் பணி | message (through a messenger) |
| தூதுக்குழு | (அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில்) அரசின் சார்பில் மற்றொரு நாட்டிற்குச் செல்லும் குழு | delegation (of politicians, economists, artistes) visiting other countries on behalf of the government |
| தூதுவளை | முள் உள்ள இலைகளையும் நீல நிறப் பூக்களையும் உடைய ஒரு வகைக் கொடி | climbing brinjal |
| தூபக்கால் | (சாம்பிராணி போடும்) தணல் வைப்பதற்கு மேல்பகுதியில் கிண்ணம் போன்ற அமைப்பும் பிடித்துத் தூக்க வசதியாகக் கைப்பிடியும் கொண்ட கரண்டி போன்ற சாதனம் | a device with a cup-like upper part for burning incense (used in rituals) |
| தூபம் | (வழிபாட்டின்போது) சாம்பிராணி, அகில் முதலிய நறுமணப் பொருள்களைத் தணலில் போட்டு உண்டாக்கப்படும் புகை | smoke of incense (offered during worship) |
| தூபம்போடு | (மேலும் தூண்டும்வகையில் தீய விளைவுக்கு) சாதகமாக இருத்தல் | incense |
| தூம்பு | (பாலம் முதலியவற்றில் அமைக்கப்படும்) நீர் செல்வதற்கான சிமிண்டுக் குழாய் | drainpipe |
| தூமகேது | (தீயது நடக்கப் போவதை அறிவிப்பதாகக் கருதும்) வால்நட்சத்திரம் | comet (believed to be a bad omen) |
| தூய்மை | (-ஆக, -ஆன) அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலை | cleanliness |
| தூய்மைக்கேடு | (கழிவு, அசுத்தம் போன்றவை காற்று, நீர் முதலியவற்றுடன் சேர்வதால்) சுவாசிப்பதற்கோ பயன்படுத்துவதற்கோ ஏற்றதாக இல்லாமல்போகும் நிலை | pollution |
| தூய | (பருப்பொருள் அல்லாதவற்றோடு மட்டும்) சற்றும் மாசுபடாத | (of abstract concepts) pure |
| தூர்1 | (கிணற்றின் ஊற்றுக்கண்ணில் அல்லது ஆறு முதலியவற்றில் நீர் செல்லும் வழியில் மண் போன்றவை சேர்வதால்) அடைபடுதல் | (of springs in a well, waterways, etc.) be choked |
| தூர்2 | (கிணறு, ஆறு முதலியவற்றை அல்லது வயல் போன்றவற்றை) மண், கல் போன்றவை கொட்டி மூடுதல் | fill up (a well, a pit, etc.) |
| தூர்3 | (கிணறு, ஏரி, வாய்க்கால் முதலியவற்றின்) அடியில் சேர்ந்திருக்கும் மண், சகதி முதலியவை | silt (at the bottom of water sources and waterways) |
| தூர்4 | (செடிகளின்) கிளைத்த வேர்த் தொகுதி | branches of the root (of plants) |
| தூர்கட்டு | (நட்ட நெற்பயிர்) கிளைத்து வருதல் | ratoon |
| தூரதிருஷ்டி | எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னரே அறியும் திறமை | foresight |
| தூரப்பார்வை | அருகிலிருப்பது கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பார்வைக் குறை | long-sightedness |
| தூவானம் | (காற்று அடித்துக்கொண்டு வரும்) மழைத் துளிகளின் சிதறல் | drizzle |
| தூவு | (பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை) பரவலாக விழச்செய்தல் | sprinkle |
| தூள் | (ஒரு பொருள்) மாவாக அல்லது சிறு துகளாக இருக்கும் நிலை | powder |
| தூள்கிளப்பு | (பாராட்டும்போது) திறமை முதலியவை சிறப்பாக வெளிப்படுகிற வகையில் ஒன்றைச் செய்தல் அல்லது நிகழ்த்துதல் | do extremely well |
| தூள்படு | (காரியங்கள்) அமளியுடன் நிகழ்தல் | be in a commotion |
| தூள்பற | பலரும் அறியும்படி (அதிகாரம்) வெளிப்படுதல் அல்லது (பணம்) செலவழிதல் | (of power or authority) be loudly displayed |
| தூளி | (குழந்தையைத் தூங்கவைக்க) நீண்ட துணியின் இரு முனையையும் கட்டி ஒன்றில் தொங்கவிட்டிருக்கும் அமைப்பு | cradle made with a long piece of cloth |
| தூற்று1 | (நெல், பருப்பு போன்றவற்றில் உள்ள பதர் முதலியவற்றைப் போக்குவதற்காக) முறத்தில் வைத்து ஆட்டிச் சீராக விழச்செய்தல் | separate chaff (from grains, etc by holding the winnowing fan raised and letting the grains fall) |
| தூற்று2 | (ஒருவரைப் பேச்சாலோ எழுத்தாலோ) பழித்தல் | slander |
| தூறல் | வேகமாகவோ பலமாகவோ இல்லாமல் தொடர்ச்சியாகச் சிறுசிறு துளிகளாக விழுகிற மழை | light shower |
| தூறு | (மழை) சிறுசிறு துளிகளாக விழுதல் | drizzle |
| தூஷி | தூற்றுதல் | abuse |
| தெண்டி | முயலுதல் | try |
| தெப்பக்குளம் | நடுவில் சிறு மண்டபமும் கரையைச் சுற்றிப் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்ட (கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான) குளம் | tank (attached to a temple for float festival) |
| தெப்பம் | (ஆறு, குளம் முதலியவற்றில் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும்) பெரிய கூடை போன்ற தோணி | a kind of float |
| தெப்போற்சவம் | விக்கிரகத்தைக் குளத்தின் மைய மண்டபத்துக்குத் தெப்பத்தில் எடுத்துச் சென்று பூஜை செய்யும் விழா | the temple festival in which the idol is placed on a float and taken to the மண்டபம் in the middle of the tank |
| தெம்பு | (ஒருவர் செயல்படுவதற்குத் தேவையான) உடல் பலம் | (physical) strength |
| தெம்மாங்கு | (பெரும்பாலும் ஆண் ஒரு பெண்ணை நோக்கிக் கூறுவது போன்ற) நாட்டுப்புற இசைப் பாடல் | a type of folk song set to a tune (sung in the mode of a lover addressing his beloved) |
| தெய்வச்செயல் | (மனித முயற்சியால் இல்லாமல்) தெய்வத்தின் அருளால் நடைபெறும் செயல் | providence |
| தெய்வம் | கடவுள் | god |
| தெய்வீகம் | கடவுள் அம்சம் | divinity |
| தெரி1 | (கண்ணுக்கு) புலனாதல் | be visible |
| தெரிந்துகொள் | (ஒருவரையோ ஒன்றையோ குறித்த விபரங்களை) அறிதல் | know |
| தெரிந்தே | வேண்டுமென்றே | deliberately |
| தெரியப்படுத்து | (செய்தி, தகவல் முதலியவற்றை எழுத்து அல்லது பேச்சு மூலமாக) தெரிவித்தல் | inform |
| தெரியாத்தனமாக | ஒரு செயலைப்பற்றியோ அதன் பின்விளைவுகளைப்பற்றியோ ஒன்றும் அறியாமல் | inadvertently |
| தெரியாமல் | (பெரும்பாலும் மன்னிப்புக் கோரும் சந்தர்ப்பத்தில்) தற்செயலாக | unintentionally |
| தெரிவுசெய் | தேர்ந்தெடுத்தல் | select |
| தெரு | (வீடுகளையோ கடைகளையோ ஒரு புறத்திலாவது கொண்டிருக்கும்) ஊரின் பொது வழி | street |
| தெருக்கூத்து | தெருக்களில் மேடையில்லாமல் இதிகாசக் கதைகளை இசைப்பாடல், வசனம் போன்றவற்றுடன் நடித்துக்காட்டும் (பெரும்பாலும் ஆண்கள் மட்டும் பங்கேற்கும்) நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி | a folk performing art which combines dialogue, song and dance generally treating episodes from puranas and enacted mostly (by men) at Sakti temples |
| தெலுங்கு | ஆந்திர மாநிலத்தில் பெரும்பான்மையினரால் பேசப்படும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி | telugu (language) |
| தெவிட்டு | திகட்டுதல் | cloy |
| தெள்ளத்தெளிய/தெள்ளத்தெளிவாக | மிகவும் தெளிவாக | very clearly |
| தெள்ளிய | தெளிந்த | clear |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.