Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
நிவாரணி வலியிலிருந்து அல்லது நோயிலிருந்து விடுவிப்பது(pain) reliever
நிவேதனம் (கடவுளுக்கு) உணவுப் படையல்offering of food (to a deity)
நிவேதி (கடவுளுக்கு உணவுப் பொருளை) படைத்தல்offer (food, etc to a deity)
நிழல் (ஒளி தடைபட்டு எதிர்ப்பக்கத்தில் உருவாகும்) இருண்ட வெளிக்கோட்டுருவம் அல்லது பிம்பம்shadow
நிழலாடு தெளிவின்றித் தோன்றுதல்appear vaguely
நிழற்குடை (போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலருக்கு அல்லது நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு) நிழல் தருவதற்காக வட்டமான அல்லது நீள் செவ்வகக் கூரையுடைய அமைப்புshelter (for the traffic police or for the passengers at a bus stop)
நிழற்கூத்து பாவையின் நிழலைத் திரையில் விழச்செய்து நடத்தும் ஆட்ட வகைshadow play
நிற்க (கடிதத்தில்) ஒரு செய்தி முடிவடைந்து அடுத்தது ஆரம்பிக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்a connective used mostly in letters to indicate the ending of a subject and the beginning of another
நிறம் இயற்கையாக அமைந்து அல்லது செயற்கையாக ஊட்டப்பட்டு ஒளியின் உதவியால் கண்ணுக்குத் தெரியும் கறுப்பு, மஞ்சள், சிவப்பு போன்றவற்றின் பொதுப்பெயர்colour
நிறமாலை வெண்ணிற ஒளி முப்பட்டகக் கண்ணாடியை ஊடுருவிச் செல்லும்போது ஏற்படும் (ஊதாவிலிருந்து சிவப்புவரை உள்ள) நிறத் தொகுப்புspectrum
நிறமி (தோல், முடி, இலை முதலியவற்றிற்கு) நிறம் தரும் இயற்கையான நுண்பொருள் அல்லது (பொருளுக்கு) நிறம் கொடுக்கும் நுண்ணிய ரசாயனப் பொருள்pigment
நிறவெறி மனித இனத்தில் சில இனத்தினர் உடல் நிற அடிப்படையில் தங்களை உயர்வானவர்களாகக் கருதிப் பிற நிறத்தவரைத் தாழ்வாக நடத்தும் தீவிரப் போக்குracism
நிறவேற்றுமை மனித இனத்தின் நிறத்தைக்கொண்டு உயர்வு தாழ்வு என்று வேற்றுமை கற்பிக்கும் போக்குdiscrimination on the grounds of colour (of skin)
நிறு (பொருளைத் தராசில் வைத்து) எடையைக் கணக்கிடுதல்weigh
நிறுத்தம் (பேருந்து) பயணிகளை ஏற்றிக்கொள்ளவும் இறக்கிவிடவும் குறிப்பிடப்பட்ட இடம்(bus) stop
நிறுத்தலளவை பொருள்களின் எடையைக் கணக்கிடுவதற்கான முறைmeasure of weight
நிறுத்தி தகுந்த இடைவெளிவிட்டுgiving pause
நிறுத்து (ஒரு காரணத்திற்காக வாகனத்தை) நிற்கச்செய்தல்stop (a vehicle, etc.)
நிறுவனம் ஊழியர், தொழிலாளர் முதலியோரைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக நிர்வகிக்கப்படுவது/கல்விப் பணி நிகழும் மையம்firm
நிறை1நிரம்புதல்be or become full
நிறை2நிரப்புதல்fill
நிறை3எடைweight
நிறை4(ஒருவரிடம் அல்லது ஒன்றில் காணப்படும்) சிறப்புத் தன்மைmerit
நிறைகுடம் நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தும் அடக்கமாக இருப்பவர்learned man with humility
நிறைமதியம் நடுப்பகல்noon
நிறைமாதம் முழு வளர்ச்சி அடைந்த குழந்தையைப் பெற்றெடுக்கும் பத்தாவது மாதம்the last month of pregnancy
நிறைய (எண்ணிக்கையில் அல்லது அளவில்) அதிகமாக/அதிகமானa lot/a large quantity
நிறைவு (கோரிக்கை, தேவை முதலியவை) தீர்வு காணப்பட்ட நிலைfulfilment
நிறைவுவிழா ஒன்று முடிவுபெறும் நாளில் நிகழ்த்தப்படும் விழாconcluding function (of a series)
நிறைவேறு (மேற்கொண்ட நடவடிக்கையால்) முடிவு அல்லது பயன் கிடைத்தல்be completed
நின்றுபிடி தாக்குப்பிடித்தல்withstand
நினை1நினைவுக்குக் கொண்டுவருதல்think
நினை2(மறந்ததை) ஞாபகத்துக்குக் கொண்டுவருதல்think about
நினைவாலயம் (புகழ் பெற்றவரின் அல்லது உயர்ந்த நோக்கத்திற்காக உயிர்த் தியாகம் செய்தவரின்) நினைவாகக் கட்டப்படும் கட்டடம்memorial
நினைவு மனப் பதிவை வெளிக்கொண்டுவருவதுrecollection
நினைவுக் குறிப்புகள் ஒருவர் தனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களையும் சந்தித்த முக்கிய மனிதர்களையும் நினைவுகூர்ந்து எழுதிய செய்திகளின் தொகுப்புmemoirs
நினைவுச் சின்னம் நினைவில் நிறுத்துவதற்காகவும் நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அடையாளமாக நிறுவப்படுவதுmemorial
நினைவு திரும்பு (ஒருவர் இழந்த) சுய உணர்வு மீண்டும் வருதல்regain consciousness
நினைவு நாள் (ஒருவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிற) இறந்த நாள்death anniversary
நினைவுபடுத்து நினைவுக்குக் கொண்டுவருதல்recollect
நிஜம் (-ஆக, -ஆன) போலியோ நடிப்போ பொய்யோ அல்லாததுgenuine
நிஜார் கால்சட்டைshorts
நிஷ்களங்கம் களங்கம் இல்லாமைflawlessness
நிஷ்டூரம் தயவுதாட்சண்யம் இல்லாமைharshness
நிஷ்டை தியானம்meditation
நீ1துறத்தல்give up
நீ2முன்னிலை இடத்து ஒருமைப் பெயர்pronoun of second person singular
நீக்கமற ஓர் இடம்கூட விடாமல்everywhere
நீக்குப்போக்கு (ஒருவருடைய குணம், தன்மை அல்லது சூழ்நிலை முதலியவற்றிற்கு) தகுந்தாற்போல் ஒத்துப்போகிற விதம்adaptability
நீங்கலாக (மற்றவற்றோடு குறிப்பிடப்படுவது) தவிர்த்துexcept
நீங்கள் முன்னிலைப் பன்மையாகவும் மரியாதை ஒருமையாகவும் பயன்படும் பெயர்second person plural and honorific singular pronoun
நீங்கு (பசி, நோய் முதலியவை) இல்லாமல்போதல்(of hunger, illness, etc.) cease
நீச்சல் நீந்துதல்swimming
நீச்சல் குளம் (மகிழ்ச்சிக்காகவும் பயிற்சிக்காகவும்) நீந்துவதற்குச் செயற்கையாக அமைக்கப்பட்ட குளம்swimming pool
நீச்சு1நீச்சல்swimming
நீசம் (பண்பைக் குறிக்கையில்) இழிந்ததுmeanness
நீட்சி நீளம்length
நீட்டம் நீளம்length
நீட்டலளவை நீளம், அகலம், உயரம் போன்றவற்றை அளவிடும் முறைlinear measurement
நீடி (கால அளவில்) தொடர்தல்(of time) last
நீடிப்பு பதவி, வேலை போன்றவற்றில் ஒருவர் உரிய காலம் முடிந்த பின்பு தொடர்ந்து இருப்பதற்கு ஏற்ற வகையில் அளிக்கப்படும் கால அதிகரிப்புextension (of service, permit, visa, etc.)
நீடு நீடூழிlong time
நீடூழி (வாழ்த்தும்போது) பல்லாண்டு(live) long
நீண்ட (நீளத்தில்) சராசரி அளவைவிட அதிகமான(காலத்தில்) அதிகமாகச் செல்கிற(in length and time) long
நீத்தார் இறந்தவர்the dead
நீதவான் நீதிபதிjudge
நீதி (சட்டம், சமூக நெறி ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கு, பிரச்சினை போன்றவற்றில்) காரணங்களைக் கூறி நடுநிலைமையோடு வழங்கும் முடிவுjustice
நீதிபதி (நீதிமன்றத்தில் வழக்கின்) இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து காரணங்களைக் கூறித் தீர்ப்பு வழங்குபவர்judge
நீதிமன்றம் வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு/இந்த அமைப்பு செயல்படுகிற கட்டடம்court of law/court (building)
நீதிமான் நீதியும் நேர்மையும் உடையவர்upright and honest man
நீதியரசர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிchief Justice of the Supreme Court
நீந்து (நீரில் மிதப்பதற்காக அல்லது குறிப்பிட்ட திசையில் செல்வதற்காக) கை, கால்களை அசைத்து நீரைத் தள்ளுதல்/(மீன் முதலியவை) நீரினுள் நகர்தல்swim
நீர்1(திரவத்தின்) அடர்த்தியைக் குறைத்தல்(மோர் போன்றவற்றில்) நீர் கலந்து நீர்த்தன்மை உடையதாக்குதல்dilute (a liquid)
நீர்க்கடுப்பு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் வலியும் ஏற்படுதல்feeling pain while passing urine
நீர்க்காகம் (நீர்நிலைகளின் அருகே காணப்படும்) வாத்துப் போன்ற தோற்றமுடைய, கூரிய அலகுடைய, மீனை உண்டு வாழும் ஒரு வகைக் கரு நீலப் பறவைcormorant
நீர்க்குதிரை குதிரை முகம் போன்ற தலையை நீட்டியவாறே நீந்திச் செல்லும் சிறிய மீன்seahorse
நீர்த்த (அமிலத்தைக் குறிக்கையில்) அதிக அளவில் நீர்த்தன்மை கொண்ட(of acids) diluted
நீர்த்தேக்கம் ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீரைத் தேக்கிவைத்திருக்கும் இடம்/ஆற்று நீர் அல்லது மழை நீர் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் ஏரி, குளம் முதலியவைdam
நீர்நாய் (ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளில் காணப்படும்) நாயைப் போன்ற தோற்றமுடைய, அடர்ந்த பழுப்பு நிற ரோமமுடைய ஒரு விலங்குotter
நீர்நிலை ஆறு, ஏரி, குளம் முதலியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர்common name for water sources
நீர்ப்பாசி நீரில் படர்ந்து வளரும் பாசி வகைalgae
நீர் பிரி சிறுநீர் கழித்தல்urinate
நீர்மட்டம்1(அணை, ஏரி முதலியவற்றில்) நீர் இருக்கும் அளவின் உயரம்level of water (in a reservoir, lake, etc.)
நீர்மம் திரவ நிலைliquid state
நீர்மாலை (இறந்தவருக்குச் செய்யும் இறுதிச் சடங்கின் முதல் பகுதியாக) உடலை நீராட்டுவதற்கு நெருங்கிய உறவினர்கள் கொண்டுவரும் நீர்water being brought by the close relatives to bathe the corpse (signalling the commencement of the funeral rites)
நீர்மூழ்கி/நீர்மூழ்கிக்கப்பல் நீரினுள் அமிழ்ந்து செல்லக் கூடிய அமைப்பைக் கொண்ட கப்பல்submarine
நீர்மோர் மோரில் அதிகமாக நீர் கலந்து கறிவேப்பிலை இட்டுத் தாளிக்கப்பட்ட பானம்weak buttermilk flavoured with curry leaves (taken as a drink in summer)
நீர்யானை (ஆப்பிரிக்கக் காடுகளில் காணப்படும்) யானையைப் போன்ற பருத்த உடலையும் பெரிய தலையையும் ரோமமற்ற தடித்த தோலையும் உடைய நீர் வாழ் விலங்குhippopotamus
நீர்வீழ்ச்சி அருவிwaterfall
நீராகாரம் பழைய சோற்று நீர்water in which cooked rice is kept overnight (to be taken as a drink)
நீராட்டு குளிப்பாட்டுதல்bath
நீராடு குளித்தல்bathe (in a river, sea, etc.)
நீராவி கொதித்த நீரின் வாயு நிலைsteam
நீராவிப்படகு நீராவியின் விசையால் செலுத்தப்படும் படகுsteam boat
நீராழி மண்டபம் ஆற்றின் அல்லது குளத்தின் நடுவில் அமைந்திருக்கும் மண்டபம்a small tower-like structure in the middle of a river or tank
நீரிணை ஜலசந்திstrait
நீரியல் நிலத்தின் அடியிலும் மேற்பரப்பிலும் இருக்கும் நீரைப்பற்றியும் அந்த நீர் உள்ள இடத்தின் அமைப்பைப்பற்றியும் விவரிக்கும் அறிவியல் பிரிவுhydrology
நீரிழிவு இயல்பாக இருக்க வேண்டிய அளவைவிட அதிகமாகச் சர்க்கரை இரத்தத்தில் சேர்வதால் ஏற்படும் நோய்diabetes
நீரேற்று நிலையம் குழாய் வழியாக நீர் எல்லா இடங்களுக்கும் சீராகச் செல்வதற்கான அழுத்தத்தைத் தரும் இயந்திரம் உள்ள நிலையம்water pumping station
நீரோட்டம் (கடல், ஆறு போன்றவற்றில்) வெளியே தெரியாத, விசையோடு செல்லும் நீரின் இயக்கம்current (in a river or sea)
   Page 10 of 13    1 … 8 9 10 11 12 13

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil