Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| வெளிச்சவீடு | கலங்கரை விளக்கம் | lighthouse |
| வெளிநடப்பு | (ஓர் அவையில் உறுப்பினர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்து வெளியில் எழுந்துசெல்லுதல் | walkout (in an assembly) |
| வெளிநபர் | (ஒரு நிறுவனம், அமைப்பு முதலியவற்றோடு) தொடர்பு இல்லாதவர் | outsider |
| வெளிப்பகட்டு | பிறரைக் கவர்வதற்காக மேற்கொள்ளும் போலியான ஆடம்பர நடவடிக்கைகள் | outward show |
| வெளிப்படு | (பார்வையில் படும் வகையில்) வெளியே வருதல்/உணரக் கூடிய வகையில் தோன்றுதல் | emerge/be revealed |
| வெளிப்படுத்து | அறியக் கூடிய வகையில் வெளிப்படச்செய்தல் | show |
| வெளிப்படை | தெளிவாக அறியக் கூடிய வகையில் இருப்பது | openness |
| வெளிப்பாடு | (ஒன்று மற்றொன்றை) வெளிப்படுத்துவதாக இருப்பது | manifestation |
| வெளிப்புறப் படப்பிடிப்பு | (பெரும்பாலும்) திரைப்படம் தயாரிக்க வெளி இடங்களில் நடத்தப்படும் படப்பிடிப்பு | outdoor shooting |
| வெளியாக்கு | வெளிப்படுத்துதல் | make public |
| வெளியாகு | (திரைப்படம், தேர்தல் முடிவுகள் போன்றவை) வெளியிடப்படுதல் | be released |
| வெளியாள் | சம்பந்தமில்லாத நபர் | a person who is not connected (with the affair) |
| வெளியிடு | (தபால் தலை, திரைப்படம் முதலியவற்றை) பயன்பாட்டிற்குக் கிடைக்கச்செய்தல் | release (stamps, film, etc.) |
| வெளியீட்டாளர் | நூல்களைப் பதிப்பித்து வெளியிடுபவர் | publisher |
| வெளியீடு | (அச்சடிக்கப்பட்டு அல்லது தயாரிக்கப்பட்டுப் பொதுமக்களுக்காக) வெளியிடுதல் | (the act of) publishing |
| வெளியுறவு | ஒரு நாடு பிற நாடுகளுடன் அரசியல், கலாச்சாரம், வர்த்தகம் முதலிய துறைகளில் கொள்ளும் உறவு | foreign affairs |
| வெளியே | எல்லையைத் தாண்டி | outside |
| வெளியேற்று | வெளிவரச்செய்தல் | discharge |
| வெளிர் | (நிறத்தில்) அடர்த்தி குறைந்த | light |
| வெளிவர்த்தகம் | இரு பிரதேசங்களுக்கு இடையே நடைபெறும் வர்த்தகம் | foreign trade |
| வெளிவா | (புத்தகம், கட்டுரை, கதை முதலியவை பத்திரிகையில்) பிரசுரமாதல்/(திரைப்படம் முதன்முறையாக) திரையிடப்படுதல் | (of books, etc.) be published/(of films, etc.) be released |
| வெளிவாங்கு | (மழைக்கான கரு மேகங்கள் நீங்கி வானம் வெளிச்சம் ஏற்படுகிற வகையில்) தெளிவடைதல் | (of sky) become clear |
| வெளிவேஷம் | (பிறரை நம்பச்செய்வதற்கான) பொய்யான நடவடிக்கை | pretence |
| வெளிறு | (மேகங்கள் இல்லாமல் வானம்) தெளிவாக இருத்தல் | (of sky) be clear |
| வெளு | (துணிகளை அழுக்கு நீக்கி) சுத்தப்படுத்துதல் | wash |
| வெளுத்துக்கட்டு | (பலரும் பாராட்டும் வகையில் அல்லது வியக்கும் வகையில் ஒன்றை) சிறப்பாகச் செய்தல் | do very well |
| வெளுப்பு | (வெளுத்த துணியின்) வெண்மை | whiteness (of washed clothes) |
| வெற்றி | (போர், போட்டி முதலியவற்றில் எதிர்ப்பவரை) தோற்கடித்துப் பெறும் உயர்வு | victory |
| வெற்றிடம் | காலி இடம் | vacant space |
| வெற்றிலை | பாக்கு முதலியவற்றோடு சேர்த்து மெல்லுவதற்கு உரிய இலை/மேற்குறிப்பிட்ட இலையைத் தரும் கொடி | betel leaf and the creeper |
| வெற்றிலைச்செல்லம் | (வெற்றிலை, பாக்கு முதலியவை வைப்பதற்கு ஏற்ற முறையில்) சிறுசிறு தடுப்புகள் கொண்டதாகச் செய்யப்படும் உலோகப் பெட்டி | a small metal box (for keeping betel leaves, areca nut, etc.) |
| வெற்று | (ஒன்றில் இருக்க வேண்டியது) எதுவும் இல்லாத | empty |
| வெறி1 | வெறுமையுடன் உற்று நோக்குதல் | stare blankly |
| வெறி2 | (இடம் ஆட்கள் இல்லாமல்) வெறுமையாக இருத்தல் | (of a place) be empty (without any sign of activities) |
| வெறி3 | (நாய், யானை போன்ற சில விலங்குகள் நோய் காரணமாக அல்லது இனப்பெருக்க விழைவின் காரணமாக) மூர்க்கமாகச் செயல்படும் நிலை | (of animals) wild and mad behaviour |
| வெறிச்-என்று | நடமாட்டம் இல்லாமல் | wearing a desolate look |
| வெறிச்சோடு | (ஓர் இடம்) ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருத்தல் | wear a desolate look |
| வெறியாட்டம் | வன்முறைச் செயல் | rampageous conduct |
| வெறுங்காவல் | (குற்றவாளியை) கடுமையான முறையில் வேலை செய்ய விதிக்காமல் சிறையில் இருக்க வழங்கும் தண்டனை | simple imprisonment |
| வெறுப்பு | விருப்பம் இன்மையால் சகித்துக்கொள்ள முடியாத உணர்வு | dislike |
| வெறுமை | எதுவும் இல்லாதது போன்ற உணர்வு | feeling of emptiness |
| வே | (உண்பதற்கு ஏற்ற வகையில்) (காய்கறி முதலியவை) கொதிக்கும் நீரில் போடப்பட்டோ நீராவியாலோ மென்மையாதல்/(சில உணவுப் பொருள்கள் கொதிக்கும் எண்ணெய்யில் போடப்பட்டோ சூடான கல்லில் ஊற்றப்பட்டோ) மாவுத் தன்மை நீங்கித் திட நிலை அடைதல் | (of vegetables, etc.) boil (in water) |
| வேக்காடு | (அரிசி, காய்கறி முதலியவை) வெந்திருக்கும் நிலை | boiled state |
| வேகத்தடுப்பு/வேகத்தடை | (வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்காகச் சாலையில்) குறுக்கே சற்று மேடாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு | speed-breaker |
| வேகப்பந்து வீச்சு | (கிரிக்கெட் விளையாட்டில்) மிகுந்த வேகத்தில் பந்து வீசப்படுதல் | (in cricket) fast bowling |
| வேகம்1 | (பொதுவாக இயக்கம்குறித்து வருகையில்) குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு தூரம் அல்லது இத்தனை முறை என்ற விதத்தில் கணக்கிடப்படும் அளவு | speed |
| வேகம்2 | நாற்றம் | (strong) smell |
| வேங்கை | நீண்ட உடல்வாகு கொண்ட புலி | tiger |
| வேசி | விபசாரி | prostitute |
| வேட்கை | (ஒன்றை) அடைந்துவிட வேண்டும் என்ற விருப்பம் | strong desire |
| வேட்டி | (ஆண்கள்) இடுப்பில் சுற்றி அணியும், கணுக்கால்வரை நீளமுள்ள ஆடை | unstitched garment for men that hangs from waist to ankle |
| வேட்டு | வெடி | cracker |
| வேட்டைநாய் | கூர்மையான மோப்ப சக்தி உடையதும் வேட்டைக்குச் செல்வதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டதுமான நாய் | hunting dog |
| வேட்டைப்பல் | கோரைப்பல் | canine tooth |
| வேட்டையாடு | (விலங்கு, பறவை ஆகியவற்றை) தேடித் துரத்திக் கொல்லுதல் அல்லது பிடித்தல் | hunt |
| வேட்பாளர் | தேர்தலில் போட்டியிடுபவர் | candidate (for election to an office) |
| வேட்புமனு | தகவல்களை நிரப்பிக் கையெழுத்திட்டு முன்வைப்புத் தொகையுடன் (தேர்தல் அதிகாரியிடம்) அளிக்கும் படிவம் | nomination papers |
| வேடதாரி | (கூத்து, நாடகம் முதலியவற்றில் நடிப்பதற்காக) வேடம் தரித்தவர் | one who plays a role in a drama |
| வேடம் | (நடிப்பவர்) பாத்திரத்திற்கு ஏற்பச் செய்துகொள்ளும் ஒப்பனை | costume due to a part in a drama |
| வேடன் | வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டவன் | hunter |
| வேடிக்கை | பார்ப்பதற்கு, கேட்பதற்கு வினோதமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் சிரிப்பை விளைவிக்கக் கூடியதாகவும் அமைவது | fun |
| வேடிக்கை பார் | (காண்பது) வினோதமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருப்பதாகக் கவனித்தல் | enjoy the scenes |
| வேண்டாவெறுப்பாக | செய்ய வேண்டி இருக்கிறதே என்ற வெறுப்போடு | reluctantly |
| வேண்டிய | தேவையான | necessary |
| வேண்டியிரு | தவிர்க்க முடியாத அல்லது செய்தே தீர வேண்டிய நிலையில் இருத்தல் | be necessary |
| வேண்டு | பணிவோடு நயமாகக் கேட்டல் | ask politely |
| வேண்டுகோள் | ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல் | request |
| வேண்டுதல் | பிரார்த்தனை | vow made to a particular deity |
| வேண்டும்2 | ஒருவர் மற்றொருவருக்கு இன்ன உறவு முறையில் இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கும் வினைமுற்று வடிவம் | a verb form used to state relationship of one to another |
| வேதக்காரர் | கிறித்தவர் | christian |
| வேதம் | இந்து சமயத்திற்கு ஆதாரமான நெறிமுறைகளைக் கூறுவதாகவும் புராதன காலத்தில் தோன்றியதாகவும் புனிதமானதாகவும் கருதப்படும் நூல் அல்லது நூல்களின் தொகுப்பு | the Vedas |
| வேதவாக்கு | (வேதம் போன்று) மதிக்கத் தகுந்த வாக்கியம் அல்லது சொல் | gospel truth |
| வேதனை | வருத்தும் துன்பம் | agony |
| வேதாந்தி | அத்துவைதக் கொள்கையைப் பின்பற்றுபவர் | follower of the Advaita system |
| வேதாளம் | (மரத்தில் வசிப்பதாகவும் கிளைகளில் தொங்குவதாகவும் கூறப்படும்) ஒரு வகைப் பேய் | demon (said to be living in trees and hanging down from branches) |
| வேதி | ரசாயன | chemical |
| வேதிகை | பலி பீடம் | altar for oblations |
| வேதியியல் | பொருள்களின் மூலக்கூறுகளையும் அந்த மூலக்கூறுகள் எந்தச் சூழ்நிலையில் எவ்வாறு ஒன்றோடு ஒன்று வினை புரிகின்றன என்பதையும் விவரிக்கும் அறிவியல் துறை | chemistry |
| வேதுபிடி | ஆவிபிடித்தல் | inhale (hot vapour) |
| வேந்தன் | அரசன் | king |
| வேப்பங்காய் | (கசப்புச் சுவை உடைய) வேப்ப மரத்தின் காய் | (the bitter) fruit of the neem tree |
| வேப்பமரம் | கூர்மையான முனை உடைய சிறிய இலைகளைக் கொண்ட (நிழலுக்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் வளர்க்கப்படும்) ஒரு வகை மரம் | neem |
| வேப்பிலைக்கட்டி | (உணவில் தொட்டுக்கொள்ளப் பயன்படும்) நாரத்தை அல்லது எலுமிச்சை இலையோடு புளி, மிளகாய், பெருங்காயம் முதலியவற்றைச் சேர்த்து இடித்து எடுக்கும் பொடி போன்ற பண்டம் | powdered lemon leaves mixed with tamarind, chillies, etc (added to cooked rice to give a mild flavour) |
| வேப்பெண்ணெய் | வேப்பங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் கசப்புச் சுவையுடைய எண்ணெய் | oil extracted from neem seeds |
| வேய் | (ஓலை, ஓடு முதலியவற்றை) சாய்வாகக் கட்டப்பட்ட மரச் சட்டங்களுக்கு மேல் கட்டுதல்/கூரை அமைத்தல் | cover the roof (with tiles)/thatch (the roof) |
| வேர்2 | சத்தையும் நீரையும் பெறும்பொருட்டு அடிப்பாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் பாகம் | root |
| வேர்க்குரு | கோடைக் காலத்தில் தோலில் தோன்றும் சிவப்பு நிறச் சிறு பரு | prickly heat |
| வேர்க்கொம்பு | சுக்கு | dried ginger |
| வேரூன்று | உறுதியாக நிலைத்தல் | strike root |
| வேல்1 | (முற்காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய) மேல்பகுதியில் இலை வடிவக் கூரிய உலோக முனையைக் கொண்ட ஆயுதம் | a long staff with a leaf-like metal edge used as a weapon |
| வேல மரம் | (கலப்பை போன்ற விவசாயக் கருவிகள் செய்யப் பயன்படுத்தும்) இரு வரிசையாகப் பிரிந்த சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகை முள் மரம் | babul |
| வேலி1 | ஒரு பகுதியின் எல்லையில் பாதுகாப்பு கருதி முள், கம்பி போன்றவற்றால் எழுப்பப்படும் அமைப்பு | fence |
| வேலி2 | (நில அளவையில்) இருபது மா கொண்ட அளவு | a land measure of twenty மா (equal to 6 |
| வேலை | (பொதுவாக) செயல் | work |
| வேலைசெய் | (இயந்திரம் முதலியவை) இயங்குதல் | (machine, etc.) function |
| வேலைநிறுத்தம் | (ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவோ ஒன்றிற்கான எதிர்ப்பாகவோ) வேலைக்குப் போகாமல் இருத்தல் | strike |
| வேலைப்பாடு | (கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில்) அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை | craftsmanship |
| வேலைபார் | பணி புரிதல் | do work |
| வேலைபோட்டுக்கொடு | (ஒருவருக்கு) வேலை கிடைக்க ஏற்பாடு செய்தல் | help |
| வேலையில்லாத் திண்டாட்டம் | வேலை கிடைக்காத நிலை | unemployment |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.