Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
மெய்மை மெய்யானதுthat which is real
மெய்யாலும் உண்மையாகவேtruthfully
மெய்யெழுத்து மெய்consonant
மெருகு (புதிய பொருளில் இருக்கும் அல்லது இருப்பது போன்ற) பளபளப்புbrightness
மெல் (உணவுப் பொருள் முதலியவற்றை) பற்களால் கடித்து அரைத்தல்chew
மெல்ல மெதுவாகsoftly
மெல்லிசு (பருமனாகவோ தடித்ததாகவோ இல்லாமல்) மெல்லியதாக இருப்பதுthinness
மெல்லிசை (ரசனைக்குப் பயிற்சி வேண்டாத) எளிய இனிய இசைpopular music (as opposed to classical music)
மெல்லிய பருமனாகவோ தடித்ததாகவோ இல்லாதthin
மெல்லினம் மெய்யெழுத்துகளின் மூன்று பிரிவுகளுள் மூக்கொலியான ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவுthe six nasal consonants of the Tamil (tripartite) system
மெலி (முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்போது) பருமன் குறைதல்become thin
மெலிது மெலிந்ததுthat which is thin
மெழுகு1(ஓர் இடத்தைச் சுத்தம்செய்யும் விதமாகச் சாணக் கரைசலால்) தேய்த்துப் பூசுதல் அல்லது (நீரால்) கழுவுதல்wash
மெழுகு2கொழுப்பிலிருந்து அல்லது எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுவதும் எளிதில் உருகக் கூடியதுமான பொருள்wax
மெழுகுவர்த்தி (விளக்கைப் போல் ஏற்றிவைக்க உதவும்) நடுவில் திரியை உடைய நீண்டு உருண்ட மெழுகுக் கட்டிcandle
மென்மை தொடுவதற்குப் பஞ்சு போன்று இருக்கும் தன்மைsoftness
மென்றுவிழுங்கு சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லாமல் தயக்கத்தால் இடையில் விடுதல்be hesitant in expressing sth. openly
மென்னி குரல்வளைthroat
மெனக்கெடு (குறிப்பிட்ட வேலைக்காக மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு) நேரத்தைச் செலவழித்தல்spend time
மேகச்சூடு மேகவெட்டைgonorrhea
மேகநோய்/மேகப்புண் ஆணின் பிறப்புறுப்பில் புண்களை உண்டாக்கும் ஒரு பால்வினை நோய்syphilis
மேகம் வான வெளியில் திரண்டிருக்கும் நீராவித் திரள்cloud
மேகலை (பழங்காலத்தில்) பெண்கள் இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போன்ற ஓர் ஆபரணம்a belt-like golden ornament (formerly) worn by women round the waist
மேகவெட்டை ஆணின் பிறப்புறுப்பில் சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும்போது வலி உண்டாதல் முதலிய அறிகுறிகளைக் கொண்ட ஒரு பால்வினை நோய்gonorrhea
மேட்டுக்குடி பொருளாதாரத்திலும் கல்வியிலும் உயர்ந்த நிலை பெற்ற வகுப்பினர்the elite
மேடிடு (அடித்துவரப்படும்) மண்ணால் (பள்ளம்) நிரப்பப்படுதல்silt up
மேடு (அடுத்து இருக்கும் பரப்பைவிட) உயரமான பகுதிraised ground
மேடை (கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு) தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம்raised platform
மேடையேற்று (நாடகம், நாட்டியம் முதலியவற்றைப் பலரும் கண்டு களிக்குமாறு) மேடையில் நிகழ்த்துதல்stage (a drama, etc.)
மேடையேறு நாடகம், நாட்டியம் முதலியன) நிகழ்ச்சியாக மேடையில் அளிக்கப்படுதல்(of drama, dance, etc.) be staged
மேதாவி (பெரும்பாலும் கேலித் தொனியில்) மேதை(often jocularly) intellectual
மேதாவிலாசம் (ஒரு துறையில்) அசாதாரணமான தேர்ச்சியின் வெளிப்பாடுsign of profound knowledge
மேதினம் தொழிலாளர்களைச் சிறப்பிக்கிற வகையில் கொண்டாடப்படும் மே மாத முதல் நாள்may Day
மேதை (குறிப்பிட்ட துறையில்) நிரம்பிய அல்லது அசாதாரணமான தேர்ச்சி அடைந்தவர்genius
மேம்படு (இருக்கும் நிலையிலிருந்து வளர்ச்சி அடைந்து) உயர்வான நிலையை அடைதல்reach a better state
மேம்படுத்து (இருக்கும் நிலையிலிருந்து) உயர்வான அல்லது சிறப்பான நிலை அடையச்செய்தல்uplift
மேம்பாடு (இருக்கும் நிலையிலிருந்து அடையும்) உயர்வான நிலைupliftment
மேம்பாலம் (போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் பொருட்டு) சாலையின் அல்லது இருப்புப்பாதையின் மேல் ஏற்படுத்தப்பட்ட பாலம்flyover
மேம்போக்கு மேலோட்டம்superficiality
மேய்1(பெரும்பாலும் கால்நடைகள் நிலத்தில் முளைத்திருப்பவற்றை) அலைந்து திரிந்து தேடித் தின்னுதல்(mostly of cattle) graze (in the fields)
மேய்2(பெரும்பாலும் கால்நடைகளைப் புல்பூண்டு உள்ள இடங்களுக்கு ஓட்டிச்சென்று) மேயச்செய்தல்graze (mostly the cattle)
மேய்ச்சல் மேய்தல்/மேய்த்தல்grazing
மேய்ச்சல் நிலம் (கால்நடைகளை) மேய்ப்பதற்காக விடப்படும் நிலம்pasture
மேல்1மேற்குwest
மேல்2உடம்புbody
மேல்3(ஒன்றோடு ஒப்பிடும்போது குறிப்பிடப்படுவது) சிறந்தது(when a comparison is made) (far) better
மேல்4கீழ்ப்பகுதிக்கு அல்லது அடிப்பகுதிக்கு எதிரான பகுதிupper or top part
மேல்துண்டு (ஆண்கள்) தோளில் போட்டிருக்கும் துண்டுtowel worn over the shoulder
மேல்நாடு (பொதுவாக) வெளிநாடு(குறிப்பாக) அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்(generally) foreign country
மேல்பூச்சு வெளிப்பக்கம் பூசப்பட்டது அல்லது மெருகேற்றப்பட்டதுouter plastering
மேல்பேச்சு ஒருவர் சொல்வதற்கு எதிர்த்தோ அல்லது மறுத்தோ பேசும் பேச்சுcounter (argument)
மேல்முறையீடு ஒரு வழக்கின் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர் அத் தீர்ப்பு தவறு என்று மேல்நிலை நீதிமன்றத்தில் அல்லது அதிகாரிகளுக்குச் செய்துகொள்ளும் முறையீடுappeal (by one aggrieved by a decree or order of a court)
மேல்வட்டி (வட்டிக்கு வாங்கிய) கடனைத் திரும்பக் கடனாகக் கொடுத்துப் பெறும் அதிக வட்டிsum taken on loan which is lent in turn with higher interest by the borrower
மேல்வரி வரியாக விதிக்கப்படும் தொகையின் மீது குறிப்பிட்ட விகிதப்படி வசூலிக்கப்படும் கட்டணம்surcharge
மேல்வரும்படி (சம்பளம் போன்ற வருமானம் தவிர்த்து) அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்income in addition to the salary
மேலதிகம் தேவைக்கு அதிகம்additional
மேலதிகாரி தன் கீழ் வேலைபார்க்கும் ஊழியர்களுக்குப் பணிக்கான உத்தரவுகளையிடும் அல்லது பணியைக் கண்காணிக்கும் பொறுப்புடைய அதிகாரிsuperior
மேலவை (சில மாநிலங்களில்) சட்டமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் முதலியோராலும் சுயாட்சி அமைப்புகளாலும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களையும் ஆளுநரால் நியமனம் செய்யப்படுவோரையும் கொண்ட அவைupper chamber in the bicameral legislature (of a state)
மேலாக்கு (பெண்கள் அணியும் ஆடையில்) மார்பை மறைக்கும் பகுதிthe part of a saree drawn over the breasts and shoulders
மேலாக1மேல்பரப்பை ஒட்டிய பகுதியில்on the surface
மேலாக2(காலத்தைக் குறிக்கையில்) அதிகமாகmore than
மேலாடை (உள்ளாடைக்கு மேல்) வெளியே தெரியும்படியாக அணியும் ஆடைouter garments
மேலாண்மை (ராணுவம், பொருளாதாரம் முதலியவற்றால்) பிறரைக் கட்டுப்படுத்தக் கூடிய பலம்dominance
மேலாண்(மை) இயக்குநர் நிர்வாகத்துக்காக அரசின் ஒப்புதலுடன் நியமிக்கப்படும் விசேஷ அதிகாரங்கள் தரப்பட்ட உயர் அதிகாரிmanaging director (appointed with the approval of government)
மேலாதிக்கம் (மற்றொரு அரசின், இனத்தின் மீது செலுத்தும்) முறையற்ற அதிகாரம்hegemony (of a country)
மேலாளர் (அலுவலகம், நிறுவனம், விற்பனை நிலையம் முதலியவற்றில்) முதன்மை நிர்வாகப் பொறுப்பு வகிப்பவர்manager
மேலான (குறிப்பிடப்படும் அளவுக்கு) அதிகமானmore than
மேலிடம் (கட்சி, நிறுவனம் முதலியவற்றில்) செயல்பாடுகளை நிர்ணயிக்கும் தலைமைப் பொறுப்புக் கொண்ட உயர்மட்ட அமைப்பு அல்லது குழு(in a political party, organization, etc.) decision making body
மேலிடு (உணர்ச்சி) பொங்குதல்(of emotions) overcome
மேலீடு மேலிடுதல்being overwhelmed
மேலுக்கு (மருந்தைப் பயன்படுத்தும் முறையாகக் கூறும்போது) உடம்பின் மேல்பகுதியில்(in connection with application of medicine) over the body
மேலுரம் நிலத்தில் பயிர் நட்ட பிறகு இடப்படும் உரம்(of application of fertilizer) top-dressing
மேலெழுந்தவாரியாக/மேலெழுந்தவாரியான ஊன்றிக் கவனிக்காமல்superficially/superficial
மேலே (பொருளை) ஒட்டியபடி மேல்over (an object)
மேலை மேற்கத்தியwestern
மேலைக் காற்று மேற்கிலிருந்து வீசும் காற்றுwesterly wind
மேலோங்கு (குறிப்பிடப்படும் ஒன்று மற்றவற்றைவிட) கூடுதலாகத் தெரிதல்prevail over
மேலோட்டம்-ஆக/-ஆன ஊன்றிக் கவனிக்காமல்/ஊன்றிக் கவனிக்காதsuperficially/superficial
மேவு (பள்ளத்தில் அல்லது ஒரு பரப்பில் மணல் முதலியவை) படிதல்spread
மேளக்காரர் தவில் வாசிப்பவர்one who plays on தவில்
மேளதாளத்துடன் (மேளம் போன்ற இசைக் கருவிகள் முழங்க) கோலாகலமாகin a rousing manner (accompanied by music)
மேளம் (பொதுவாக) தாள வாத்தியக் கருவி(குறிப்பாக) தவில்(generally) musical instruments
மேற்கட்டி விதானம்canopy
மேற்கண்ட (விளம்பரம், கேள்வித்தாள், கட்டுரை முதலியவற்றில்) மேலே கொடுக்கப்பட்டுள்ளgiven above
மேற்கத்திய (இந்தியாவுக்கு) மேற்கில் உள்ள, (பெரும்பாலும்) அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சேர்ந்தwestern
மேற்கு சூரியன் மறையும் திசைwest
மேற்கூரை மேல்தளம்ceiling
மேற்கொண்டு (குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அல்லது நேரத்துக்குப் பிறகு) தொடர்ந்துfurther
மேற்கொள் (திட்டம், முயற்சி போன்றவற்றை) நடத்துதல்conduct
மேற்கோள் வேறொருவர் கூறியதைக் கூறப்பட்ட வடிவத்திலேயே எடுத்துக்காட்டுவதுquotation
மேற்சொன்ன மேலே குறிப்பிட்டmentioned above
மேற்பட்ட (குறிப்பிடப்படும் எண்ணிக்கையைவிட) அதிகமானmore than
மேற்படாத (குறிப்பிடப்படும் எண்ணிக்கையைவிட) அதிகம் இல்லாதnot exceeding
மேற்படி முதலில் அல்லது முன்னால் குறிப்பிட்டgiven above
மேற்படிப்பு (படித்து முடித்த கல்விக்கு அடுத்த கட்டமாக இருக்கும்) மேல்நிலைப் படிப்புfurther studies
மேற்பரப்பு பார்க்கும் விதத்தில் உள்ள பரப்புsurface
மேற்பார்வை பணிபுரிபவர்களையும் நடைபெறும் பணிகளையும் கண்காணிக்கும் பொறுப்புsupervision
மேற்பார்வையாளர் மேற்பார்வையிடும் பணி புரிபவர்supervisor (in an examination hall, a polling booth, etc.)
மேன்மேலும் தொடர்ந்து அதிகமாகmore and more
மேன்மை சிறப்புexcellence
   Page 11 of 22    1 … 9 10 11 12 13 … 22

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil