Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
கீற்று1(வீடுகளுக்குக் கூரை போட அல்லது பந்தல் போடப் பயன்படும்) முடைந்த தென்னை ஓலைplaited coconut leaf (used for roofing)
கீற்று2(சில காய்கறிகளை அல்லது பழங்களை) அறுத்து எடுத்த துண்டு(of vegetables such as pumpkin, fruits such as mango) slice
கீறல் (கூரிய முனையுடைய பொருள் ஏற்படுத்தியதால் அல்லது ஒன்றோடு ஒன்று உராய்வதால்) பதிந்த கோடுscratch
கீறு1(கூரிய முனையுடைய பொருள் ஒரு பரப்பில்) கிழித்தல்scratch
கீறு2(தேங்காய் முதலியவற்றின்) கீற்றுslice
குக்கல் கக்குவான்whooping cough
குக்கிராமம் (நகரத்திலிருந்து தொலைவில் இருக்கும்) வசதிகள் குறைந்த மிகச் சிறிய கிராமம்hamlet (far away from the town)
குங்கிலியம் வர்ணம், மருந்து ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தும் பாலைத் தரும் ஒரு வகை மரம்a kind of dammar (tree)
குங்குமப்பூ சிவந்த மஞ்சள் நிறத்தில் தேங்காய்த் துருவலைப் போல் இருப்பதும் பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுத்துவதுமான ஒரு வகைப் பூsaffron
குங்குமம் (பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக) நெற்றியில் இட்டுக்கொள்ளும் கரும் சிவப்புப் பொடிsaffron powder (worn on the forehead usually by women as a sign of auspiciousness)
குச்சி உலர்ந்து கறுத்துக் காணப்படும் மெல்லிய கிளைtwig
குச்சு (பெரும்பாலும்) ஓலையால் வேயப்பட்ட சிறிய (குடிசை போன்ற) அமைப்புa small (hut like) structure with a thatched roof
குச்சுமட்டை (வெள்ளை அடிப்பதற்கு ஏற்ற வகையில்) நுனியைத் திரிதிரியாக நசுக்கிய மட்டைbrush-like stick used in whitewashing
குசினி சமையல் அறைkitchen
குசு ஆசனவாய் வழியாக வெளியேறும் (நாற்றமடிக்கும்) வாயுfart
குசும்பு (தீமை தரக் கூடிய) விஷமம்mischief
குஞ்சாலாடு லட்டுball-shaped sweetmeat
குஞ்சு (பறவைகளின், மீன்களின், பல்லி போன்ற சில பிராணிகளின் முட்டையிலிருந்து வெளிவரும்) இளம் உயிர்(எலி, அணில் முதலிய சில இனங்கள் போடும்) குட்டிyoung (of birds, fish that lay eggs or of some species such as mouse, squirrel)
குஞ்சுகுளுவான் (பெரும்பாலும் பன்மையில்) வெவ்வேறு வயதில் உள்ள குழந்தைகள்a group of children of different ages
குட்டான் சிறிய ஓலைப் பெட்டிa small basket
குட்டி1(நாய், புலி போன்ற) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சில விலங்குகளுக்குப் பிறக்கும் இளம் உயிர்the young ones of certain mammals (such as dog, tiger, etc.)
குட்டி2குறைந்த வயதுடைய(while referring to a person) young or little (in age)
குட்டிக்கரணம் (வேடிக்கைகாட்டும் நோக்கத்தில்) தலையைத் தரையில் ஊன்றிக் கால்களைத் தலைக்கு மேலாக மறுபுறம் தூக்கிப்போட்டு விழுதல்somersault
குட்டிச்சாத்தான் பில்லிசூனிய வித்தைகளில் அழைக்கப்படும் (கெட்ட) தேவதைlittle goblin invoked in black magic
குட்டிச்சுவர் பழுதடைந்து இடிந்துபோய் உபயோகமற்றதாக இருக்கும் சிறு சுவர்dilapidated wall
குட்டிபோடு (மாடு, ஆடு, யானை முதலிய பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்குகள்) குட்டி ஈனுதல்(of mammals) calve
குட்டு1விரல் முட்டியால் (தலையில்) குத்துதல் அல்லது (தலையின் பக்கவாட்டில்) தட்டுதல்rap with the knuckles (on the head) or tap (on the temples)
குட்டு2(தலையில்) விரல் முட்டியால் விழும் குத்துa hit with the knuckles (on the head)
குட்டு3வெளியே தெரியாமல் மறைத்துவைத்திருப்பது அல்லது செய்வதுdone stealthily
குட்டை1(சராசரியைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட) உயரத்தில் குறைவுshortness
குட்டை2குறைந்த அளவில் நீர் தேங்கிக் கிடக்கும் இடம்(கரை இல்லாத) ஆழமற்ற குளம்(shallow) pond
குட்டையைக்குழப்பு (தெளிவு ஏற்படுத்துவதற்குப் பதிலாக) குளறுபடிசெய்தல்add to the confusion
குடக்கூலி வீட்டு வாடகைhouse rent
குடம் (நீர் வைத்துக்கொள்ளவும் எடுத்துவரவும் பயன்படுத்தும்) குவிந்த கீழ்ப்பகுதியும் குறுகிய கழுத்துப் பகுதியும் உடைய (மண், உலோகம் முதலியவற்றாலான) பாத்திரம்pot (with round bottom and short neck for keeping or fetching water)
குடமிளகாய் சற்றுப் பருமனான ஒரு வகை மிளகாய்small sized paprika
குடமுழுக்கு கும்பாபிஷேகம்pouring the sanctified water over the temple structure at the time of installation
குடல் இரைப்பையிலிருந்து வரும் உணவில் உள்ள சத்தை உறிஞ்சி இரத்தத்தில் சேர்த்தல், கழிவுகளை மலவாய்க்கு அனுப்புதல் ஆகிய செயல்களைச் செய்யும் நீண்ட குழல் போன்ற உறுப்புbowel
குடல்தட்டு (வயிற்றில் குடல் அதன் நிலையான இடத்தில் இருந்து மாறுபட்டு இருக்கும்போது) வயிற்றைக் கையால் தடவிவிட்டுக் குடல் பிறழ்வை ஒழுங்குபடுத்துதல்push the bowels into place by massaging
குடலிறக்கம் வயிற்றின் உள்ளுறுப்புகளை மூடியிருக்கும் தசை கிழிந்து அதன் வழியே குடல் சிறு அளவில் இறங்கியிருத்தல்hernia
குடலேற்றம் (பெரும்பாலும் குழந்தைகளுக்கு) வயிற்றுப்போக்கு ஏற்படக் கூடிய வகையில் குடலின் ஒரு பகுதி இடம் பிறழ்தல்dislocation of the intestines that causes loose motion (in children)
குடலை (பூக்களைப் பறித்துப் போட்டுக்கொள்ள) ஓலையால் பின்னப்பட்ட நீள் உருண்டை வடிவக் கூடைlong cylindrical basket made of plaited palm leaf (for collecting flowers)
குடலைப்பிடுங்கு (பசி) வயிற்றை மேலும் கீழும் புரட்டுதல்(of hunger) pinch the bowels
குடவண்டிபோடு குடைசாய்தல்overturn
குடவரைக் கோயில் மலைச் சரிவை அல்லது பாறையைக் குடைந்து சிற்பங்கள் செதுக்கிய மண்டபம் போன்ற அமைப்புrock-cut temple
குடவிளக்கு சிறு குட வடிவ விளக்குlamp which is shaped like a small pot
குடவோலை (முற்காலத்தில்) கிராம நிர்வாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் குடத்தில் போட்டுக் குலுக்கி எடுக்கப்படும் ஓலை(formerly) vote as recorded on ஓலை used as ballot paper and cast into a pot and drawn from it
குடாநாடு தீபகற்பம்peninsula
குடி1(பானத்தையோ திரவ உணவையோ வாய் வழியாக) உட்கொள்ளுதல்take (liquid food)
குடி2(மதுபானம்) குடித்தல் அல்லது குடிக்கும் பழக்கம்drink
குடி3குடிமகன்citizen
குடிகாரன் (அளவுக்கு மிஞ்சி) மதுபானம் குடிப்பவன்drunkard
குடிகேடன் குடிப் பழக்கத்தால் குடும்பப் பெருமையைக் கெடுப்பவன்one who brings infamy to his family by his misdeeds such as drinking
குடிசை அதிக உயரம் இல்லாத மண் சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு வீடுhut with a thatched roof
குடிசைத்தொழில் மின்சாரத்தின் தேவையும் இயந்திரங்களின் உதவியும் இல்லாமல் வீட்டு நபர்களின் உதவியுடன் வீட்டிலேயே செய்யப்படும் சிறு தொழில்cottage industry
குடித்தனக்காரர் வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர்tenant
குடித்தனம் குடும்ப வாழ்க்கைdomestic life
குடித்தொகை மக்கள்தொகைpopulation
குடிநீர் மனிதர்கள் குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர்drinking water
குடிப்பிறப்பு ஒருவர் பிறந்த (உயர்) குடிancestry
குடிபுகு (ஒரு வீட்டில்) வசிக்கச் செல்லுதல்occupy (a house, a new house)
குடிபெயர் ஓர் இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு வாழச் செல்லுதல்migrate
குடிபோதை (அளவுக்கு அதிகமாக) மது அருந்தியதால் ஏற்படும் தன் நினைவு அற்ற நிலைstate of being drunk
குடிமக்கள் (பிறப்பினால் அல்லது சட்டப்படி) ஒரு நாட்டில் வாழும் உரிமை உடைய மக்கள்citizens
குடிமகன் குடிமக்களில் ஒருவன்a citizen
குடிமுழுகு (பெரும்பாலும் எதிர்மறை வடிவத்தில் அல்லது எதிர்மறைத் தொனியில்) கேடு விளைதல்be lost
குடிமைப்பொருள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான (அரிசி, எண்ணெய் போன்ற) பொருள்கள்civil supplies
குடியமர்த்து (ஓர் இடத்தில்) தங்கி வாழச்செய்தல்settle
குடியரசு அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அமைப்புrepublic
குடியரசுத் தலைவர் குடியரசு அரசியல் அமைப்பில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத் தலைவர் அல்லது மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத் தலைவர்president of a republic
குடியானவன் (பிறர் நிலத்தில்) பயிர் செய்பவன்cultivating tenant
குடியிரு (ஒரு வீட்டில்) வாழ்க்கை நடத்துதல்(ஓர் ஊரில்) வசித்தல்take up residence (in a house)
குடியுரிமை (ஒரு நாட்டில்) தங்குவதற்கான அரசு அங்கீகாரம்citizenship
குடியெழுப்பு (மக்களை) வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்துக்குப் போகச் செய்தல்evacuate
குடியெழும்பு (மக்கள்) வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்துக்குப் போதல்(of people) move out (to another place)
குடியேற்றம் (வசிப்பதற்காக ஒரு நாட்டுக்கு) புதிய மக்களின் வரவுimmigration
குடியேற்று (ஒரு நாட்டில் மக்களைக் கொண்டுவந்து) நிரந்தரமாக வாழச் செய்தல்colonize
குடியேறு (தம் நாட்டைவிட்டு வேறொரு நாட்டுக்குச் சென்று) நிலையாகத் தங்குதல்emigrate
குடில் (உ.வ.) (முற்காலத்தில் முனிவர் போன்றவர் தங்கும்) குடிசை(formerly) hut (of hermits).
குடிவா (காலியாக இருக்கும் வீட்டுக்கு அல்லது புதிய வீட்டில்) வசிப்பதற்காக வருதல்move in (to a vacant or new house)
குடிவெறி (அளவுக்கு அதிகமாக) மது அருந்தியதால் ஏற்படும் கட்டுப்பாடற்ற நிலைstate of being intoxicated
குடிவை (பெரும்பாலும் புதிதாகத் திருமணம் ஆனவர்களை ஒரு வீட்டில்) குடும்பம் நடத்தச்செய்தல்set up a family (finding a house for the newly married)
குடுக்கை உள்ளீடு நீக்கப்பட்டுக் காயவைக்கப்பட்ட சுரை முதலியவற்றின் கூடுdry and hollow shell of some gourds (used as a vessel, etc.)
குடுகுடு-என்று (ஓடு, நட ஆகிய வினைகளுடன்) குறுகிய எட்டு வைத்து வேகமாக (உருண்டுவருவது போல)with short quick steps (as if rolling down)
குடுகுடு கிழம் (நடப்பதற்கே தட்டுத்தடுமாற வேண்டிய) தள்ளாத நிலையில் இருக்கும் நபர்tottering old man or woman
குடுகுடுப்பை (கையால் ஆட்டினால் கடகடவென்ற ஒலியை எழுப்பும்) உடுக்கை வடிவில் இருக்கும் ஒலிப்பதற்கான கருவிa drum shaped like an hour-glass (with strings which produce a rattling sound when vigorously shaken)
குடுகுடுப்பைக்காரன் குடுகுடுப்பையை ஆட்டிக்கொண்டு வீடுவீடாகச் சென்று குறிசொல்லிப் பிச்சை எடுப்பவன்fortune-teller with a குடுகுடுப்பை in his hand
குடும்ப அட்டை உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய் முதலியவற்றை நியாய விலைக்குப் பெற அரசாங்கத்தால் குடும்பத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் வழங்கப்படும் (உறுப்பினர்களின் எண்ணிக்கை, வருமானம் முதலியவை பதிவுசெய்யப்பட்ட) குறிப்பேடுration card
குடும்பக்கட்டுப்பாடு (கருத்தடை, அறுவை மருத்துவம் முதலியவற்றின் மூலம்) குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்ளும் குடும்பத் திட்டம்planned family
குடும்பம் கணவனும் மனைவியும் தம் குழந்தையோடு (மற்றும் நெருங்கிய உறவினரோடு) கூடி வாழும் சமூக அமைப்புfamily
குடும்பஸ்தன் மனைவி மக்களோடு வாழ்பவன்man with family
குடும்பி (பெரிய) குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளவன்one who has a (large) family
குடுமி (கொண்டைபோல் முடிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு) ஆண்கள் வளர்த்திருக்கும் நீண்ட முடி(of men) tuft of hair
குடை1(சில பறவைகள், வண்டு முதலியவை) துளைத்து ஊடுருவுதல்/(கருவியால் மரச் சாமான்களை) துளைத்தல்(of some birds, beetles, etc.) make holes
குடை2கீழ்நோக்கிய கம்பிகளைக் கொண்டு மடக்கி விரிக்கக் கூடியதாகச் செய்த ஒரு அமைப்பின் மேல் (பெரும்பாலும் கறுப்பு நிற) துணி பொருத்தப்பட்டு மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காத்துக்கொள்ளக் கையில் பிடித்துச் செல்லும் சாதனம்umbrella
குடைச்சல் (கை, கால், மூட்டு முதலிய இடங்களில் உண்டாகும்) குடைவது போன்ற வலிgnawing pain (in the limbs, joints, etc.)
குடைசாய் (மாட்டுவண்டி போன்ற வாகனங்கள்) ஒரு பக்கமாகவோ தலைகீழாகவோ விழுதல்(of bullock cart, vehicles) overturn
குடைராட்டினம் (பொருட்காட்சி, திருவிழா நடக்கும் இடங்களில்) பெரிய குடை போன்ற அமைப்பின் கீழ்த் தொங்கவிடப்பட்ட பல (வடிவ) இருக்கைகளில் (சிறுவர்) ஏறிச் சுற்றிவரும் விளையாட்டுச் சாதனம்merry-go-round
குண்டர் (பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல், ஆட்களை அடித்துப் பயமுறுத்துதல், கலவரம் செய்தல் போன்ற) சமூகவிரோதச் செயல்களில் இறங்கும் நபர்hooligan
குண்டலம் (முற்காலத்தில் அரசரும் முனிவரும் அணிந்துகொண்ட) சிறு குண்டோ மணியோ தொங்கும் காதணிa spherical pendant (worn on the ear by kings and sages in olden days)
குண்டலினி (யோகம் செய்வதன்மூலம் நடு நெற்றிக்குக் கொண்டுவரக் கூடிய) மூலாதாரத்தில் இருப்பதாகக் கூறப்படும் சக்திan occult power which is said to be latent with its centre in the lower abdomen below the navel (which can be drawn up to the forehead by yoga)
   Page 12 of 36    1 … 10 11 12 13 14 … 36

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil