Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பீச்சாங்குழல் | உள்ளிருக்கும் நீர் முதலியவற்றைத் துளை வழியாகப் பீய்ச்சியடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ள (மூங்கிலாலான அல்லது மரத்தாலான) குழல் வடிவப் பொருள் | spray or sprayer (made of bamboo or wood) |
| பீச்சு | (நீர் முதலிய திரவம்) வேகத்துடன் தாரையாக வெளிவருதல் | (of liquid) jet out |
| பீடபூமி | (பூமியின் அமைப்பில்) உயர்ந்து மேடாக இருக்கிற நிலப் பகுதி | plateau |
| பீடம் | (சிலை போன்றவை வைப்பதற்கு ஏற்ற வகையில் அல்லது பலி கொடுப்பதற்கு ஏற்ற வகையில்) கல்லால் எழுப்பப்பட்ட உயர் மேடை | dais |
| பீடா | பாக்குத் தூளுடன் பிற வாசனைப் பொருள்களும் வைத்துச் சுருட்டப்பட்ட வெற்றிலை | roll of betel leaf with pieces of areca nut and aromatic stuff |
| பீடாதிபதி | ஒரு குருவால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் சித்தாந்தப் பீடத்தில் தலைமைப் பொறுப்புடையவர் | the head of a religious institution who ascends the philosophic seat of his master |
| பீடி1 | (பெரும்பாலும் செயப்பாட்டு வாக்கியத்தில்) (ஏதேனும் நோய், கவலை முதலியவை ஒருவரை) பாதித்தல் | (of a person) be afflicted by (disease, sorrow, etc.) |
| பீடி2 | ஒரு வகைக் காய்ந்த இலையில் புகையிலைத் தூள் வைக்கப்பட்டுச் சுருட்டப்பட்ட புகைப்பதற்கான பொருள் | processed tobacco rolled up in dry tender leaf for smoking |
| பீடு | பெருமை | honour |
| பீடை | துன்பம் மிகுந்த நிலை | state of misery |
| பீத்தல் | (பிறரைவிட உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ளும் விதத்தில் பேசும்) தற்பெருமைப் பேச்சு | swagger |
| பீத்து | (பிறரைவிட உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ளும் விதத்தில்) தற்பெருமையாகப் பேசுதல் | boast |
| பீதாம்பரம் | (பெருமாள் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கும்) மஞ்சள் நிறப் பட்டுத் துணி | cream or yellow-coloured silk cloth (used in adorning the deity of Vaishnava temples) |
| பீதி | பயம் ஏற்படுத்தும் மனக் கலவரம் | panic |
| பீப்பாய் | புடைத்த பக்கம் உடைய (மர அல்லது உலோக) கொள்கலம் | barrel |
| பீர்க்கு | (சமையலில் பயன்படுத்தும்) கூரிய விளிம்புகளுடைய, நடுப்பகுதி தடித்த பச்சை நிறக் காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் கொடி | sponge gourd (the fruit and the plant) |
| பீரங்கி | நீண்ட குழல்மூலம் குண்டுகளை நெடுந்தொலைவுக்கு வெடித்து வெளியேற்றும் போர்க் கருவி | cannon |
| பீராய் | (பணம், பொருள் ஆகியவற்றை) சிரமப்பட்டுச் சிறிதுசிறிதாகப் பலரிடத்திலும் பல இடங்களிலும் அலைந்து சேகரித்தல் | gather bit by bit |
| பீரோ | (பொருள்களைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்வதற்குப் பயன்படுமாறு) மரத்தினால் அல்லது இரும்பினால் உயரமாகவும் உள்ளே அடுக்குகள் இருக்குமாறும் கதவுகள் உடையதாகவும் செய்யப்படும் சாதனம் | shelf with doors that can be locked |
| பீளை | (கண்களின் ஓரங்களில் உண்டாகிற) பிசுபிசுப்புத் தன்மை உடைய வெண்ணிறக் கழிவுப் பொருள் | the dirt that collects in the corners of the eye |
| பீறிடு | (நீர் முதலிய திரவம்) மிகுந்த வேகத்துடன் பாய்தல் அல்லது வெளிப்படுதல் | spurt out |
| பீனிசம் | (கண்களைச் சுற்றி வலி ஏற்படுவதற்குக் காரணமான) மண்டையோட்டில் மூக்கு இருக்கும் பகுதியில் உள்ள துவாரங்களில் உண்டாகும் அழற்சி | sinusitis |
| புக்கை | அரிசியையும் பருப்பையும் குழைவாக வடித்துச் செய்யும் உணவு | a preparation of rice and dhal seasoned and cooked very soft |
| புகட்டு | (தானாக உணவு முதலியன உட்கொள்ள முடியாத நிலையில்) ஊட்டுதல் | force-feed (medicine, food, etc.) |
| புகல்1 | சொல்லுதல் | say |
| புகல்2/புகலிடம் | அடைக்கலம் | place of refuge |
| புகழ்1 | (வார்த்தைகள்மூலம்) உயர்வுபடுத்துதல் | praise |
| புகழ்2 | பலரும் அறிந்திருக்கிற, பலராலும் பேசப்படுகிற நிலை | fame |
| புகார் | தீங்கு, பாதிப்பு முதலியவற்றை உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டுவரும் முறையில் எழுத்துமூலமாக அல்லது வாய்மொழிமூலமாகத் தெரிவிக்கும் முறையீடு | formal complaint (lodged by the aggrieved) |
| புகுத்து | (புதியதாக ஒன்றை) சேர்த்தல்(வலுக்கட்டாயமாக) நுழைத்தல்திணித்தல் | interpolate |
| புகுந்த வீடு | (திருமணம் செய்துகொண்டதால் புகுந்த) கணவன் வீடு | family into which a girl is married |
| புகுமுக வகுப்பு | (முன்பு) பள்ளி இறுதி வகுப்பு முடிந்து கல்லூரியில் படிப்பைத் தொடங்குவதற்கு முன் ஓர் ஆண்டு படிக்க வேண்டிய தேர்வுநிலை வகுப்பு | (formerly) pre-university course (of one year duration) |
| புகை2 | (சுருட்டு, பீடி போன்றவற்றைப் பற்றவைத்து) புகையை உள்ளிழுத்து வெளிவிடுதல் | smoke (a cigar, etc.) |
| புகை3 | (எரியும்போது உண்டாகும்) கரித் துகள் நிரம்பிய சாம்பல் நிற வாயு | smoke |
| புகைக்கூண்டு | புகைபோக்கி | chimney |
| புகைச்சல் | (ஒரே இடத்தில்) சுழன்று வரும் புகை | smoke (circulating within a room) |
| புகைப்படக் கருவி | புகைப்படம் எடுக்கும் கருவி | camera |
| புகைப்படக்காரர் | புகைப்படம் எடுப்பவர் | photographer |
| புகைப்படச் சுருள் | (காட்சியைப் படமாகப் பதிவு செய்வதற்காக) வேதியியல் முறையில் தயாரிக்கப்பட்டதும் அடர் நிறத்தில் உள்ளதுமான மெல்லிய சுருள் | film roll |
| புகைப்படத் தாள் | புகைப்படச் சுருளில் பதிவு செய்த காட்சியைப் பிரதியெடுக்கப் பயன்படும் ஒரு வகைத் தாள் | paper used for printing the image from the negative |
| புகைப்படம் | ஒரு காட்சியிலிருந்து அல்லது உருவத்திலிருந்து வரும் ஒளியை ஆடிகள் பொருத்தப்பட்ட ஒரு கருவியின்மூலம் புகைப்படச்சுருளில் பதிவு செய்து வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாக்கிப் பிரதியெடுத்துத் தயாரிக்கப்படும் படம் | photograph |
| புகைப்போக்கி | (தொழிற்சாலை, வாகனம் முதலியவற்றில்) புகையை வெளியேற்றுவதற்கு என்று அமைக்கப்பட்டிருக்கும் குழாய் போன்ற அமைப்பு | chimney |
| புகைபிடி | (பீடி, சுருட்டு போன்றவற்றை) புகைத்தல் | smoke (a cigar, etc.) |
| புகைபோடு | (வைக்கோல் முதலியவற்றை) எரித்துப் புகை எழுப்புதல் | smoke (fruits to quicken the process of ripening) |
| புகையிரதம் | புகைவண்டி | train |
| புகையிலை | (புகைப்பதற்கும் வெற்றிலையோடு சேர்த்து மெல்லுவதற்கும் பயன்படுத்தும்) கசப்போடு கூடிய காரச் சுவையுடைய ஒரு வகை இலை/மேற்குறிப்பிட்ட இலையைத் தரும் செடி | tobacco (leaf and the plant) |
| புகைவண்டி | (பயணிகள் செல்லுவதற்கு ஏற்ற வகையில் அமைந்த, ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்ட பெட்டிகளை) இயந்திரம்மூலம் இருப்புப்பாதையில் இழுத்துச் செல்லும் போக்குவரத்துச் சாதனம் | train |
| புங்கமரம் | சிறிய வெள்ளை நிறப் பூக்களையும் அவரை விதை வடிவிலான காய்களையும் கொண்ட ஒரு வகை மரம் | indian beech |
| புசுபுசு-என்று | (ரோமம், நூல் போன்றவை குறித்து வருகையில்) தொடும்போது குறுகுறுப்பை ஏற்படுத்தும்படி மிருதுவாக | furry |
| புட்டா | (புடவையில் பின்புல நிறத்திலிருந்து வேறுபட்ட நிறத்தில்) நூல் வேலைப்பாடு, ஜரிகை போன்றவற்றால் அமைக்கப்பட்டிருக்கும் வட்டப் புள்ளி | polka dots |
| புட்டி | குப்பி | bottle |
| புட்டிப்பால் | (தாய்ப்பாலுக்கு பதிலாகக் குழந்தைகளுக்கு) நீரில் கரைத்துத் தருவதற்கு ஏற்ற வகையில் பதப்படுத்தப்பட்ட மாவுப் பொருள் | powdered milk (used for bottle-feeding) |
| புடம்போடு | (தங்கம் போன்ற உலோகங்களை நெருப்பில்) உருக்கிச் சுத்தப்படுத்துதல் | purify by melting |
| புடல் | புடலங்காய் காய்க்கும் கொடி | the snake-gourd plant |
| புடலங்காய் | (சமையலில் பயன்படுத்தும்) வெளிர்ப் பச்சை நிறத்தில் பாம்பு போல நீளமாக இருக்கும் ஒரு வகைக் காய் | snake-gourd |
| புடவை | (பெண்கள்) இடுப்பில் சுற்றி ரவிக்கைக்கு மேல் வரும் விதத்தில் கட்டிக்கொள்ளும் மேலாடை | saree |
| புடை1 | (உடலில் காயம் பட்ட இடம்) கட்டி போலத் தடித்தல் | bulge |
| புடை2 | (அரிசி முதலியவற்றை அவற்றில் உள்ள தூசி, தவிடு முதலியவை நீங்குமாறு) முறத்திலிட்டு மேலும்கீழுமாக ஆட்டுதல் அல்லது தட்டுதல் | sift in a winnowing fan |
| புடைப்பு | வீங்கியிருக்கும் அல்லது தடித்திருக்கும் நிலை | swelling |
| புடைப்புச் சித்திரம் | (கல், மரம் போன்றவற்றைச் செதுக்கி அல்லது உலோகத்தை உருக்கி) பின்புலத்திலிருந்து தனித்து முன்தள்ளித் தெரியுமாறு உருவாக்கப்படும் உருவம் | relief |
| புண் | மேல்தோலில் எரிச்சல், வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் தோன்றும் வெடிப்பு | (raw) sore |
| புண்ணியவதி | புண்ணியம் பெற்றவள் | a woman who has accumulated blessings by her virtuous deeds |
| புண்ணியவான் | புண்ணியம் பெற்றவன் | blessed man |
| புண்ணியாவாசனம் | (பெரும்பாலும் வீடுகளில் சில நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட) தீட்டு நீங்குவதற்குச் செய்யப்படும் சடங்கு | purificatory rites |
| புண்படு | (பேச்சு, செயல் முதலியவற்றின் மூலம் ஒருவர்) வேதனைக்குள்ளாதல் | be hurt (by offensive remark) |
| புணர் | உடலுறவுகொள்ளுதல் | have sex (with) |
| புணர்ச்சி | உடலுறவு | sexual intercourse |
| புணி | தறியில் ஊடை செலுத்தப்படுவதற்காகப் பாவு இழைகள் முக்கோண வடிவில் பிரிக்கப்படுதல் | (in weaving) shed |
| புத்தகப்புழு | நூல்கள் படிப்பதிலேயே பெரும்பான்மையான நேரத்தைச் செலவழிப்பவன் | bookworm |
| புத்தகம் | படிப்பதற்கு ஏற்ற வகையில் அட்டை போட்டு இணைத்த அச்சிட்ட தாள்களின் தொகுப்பு | book |
| புத்தம்புதிய/புத்தம்புது | மிகவும் புதிய | brand-new |
| புத்தாடை | புதுத் துணி | new clothes |
| புத்தாண்டு | (வருடம் முடிந்து அடுத்துப் பிறக்கிற) புதிய வருடம் | new Year |
| புத்திசாலி | எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன் | intelligent person |
| புத்திசாலித்தனம் | கூர்மையான அறிவின் வெளிப்பாடு | intelligence |
| புத்திமதி | அறிவுரை | piece of advice |
| புத்திமான் | அறிவுடையவன் | man of knowledge |
| புத்திரபாக்கியம் | குழந்தை பெற்று இருக்கும் நற்பேறு | the state of being blessed with a child |
| புத்திரன் | மகன் | son |
| புத்திரி | மகள் | daughter |
| புத்திலக்கியம் | உள்ளடக்கத்திலும் உருவத்திலும் தற்கால எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இலக்கியம் | modern literature |
| புத்துணர்ச்சி/புத்துணர்வு | (சோர்வு நீங்கும் வகையில்) மகிழ்ச்சி உணர்வு | rejuvenation |
| புத்துயிர் | (குன்றிய நிலையிலிருந்தோ வீழ்ச்சிக்குப் பின்னோ பெறும்) புதிய மலர்ச்சி | rebirth |
| புதர் | உயரம் அதிகம் இல்லாமல் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் தாவரத் தொகுதி | bush |
| புதல்வன் | மகன் | son |
| புதல்வி | மகள் | daughter |
| புதன் | சூரியனைச் சுற்றிவரும் கோள்களுள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் சிறிய கிரகம் | (the planet) Mercury |
| புதிது | பயன்படுத்துதல், பழக்கப்படுத்துதல், அறிதல் போன்ற செயல்களுக்கு இதுவரையில் உட்படாதது | that which is new |
| புதிய | புதிதாக இருக்கிற | new |
| புதிய ஆகமம்/புதிய ஏற்பாடு | கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, போதனை முதலியவை பற்றி எடுத்துச் சொல்லும் நூல் | the New Testament |
| புதிர்1 | (-ஆக, -ஆன) அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ளவோ விளக்கவோ முடியாத ஒன்று | mystery |
| புதிர்2 | அறுவடை முடிந்து வீட்டுக்குக் கொண்டுவந்து உணவுக்கு முதன்முதல் பயன்படுத்தும் நெல் | newly harvested paddy |
| புதினம்2 | நாவல் | novel |
| புதினா | நாக்கில் சுள்ளென்று சுவையை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகைக் கீரை | mint |
| புதுக்கு | (பாத்திரம் முதலியவை) பளபளப்படையும்படி செய்தல் | polish |
| புதுப்பி | (பழுதற்ற நிலையில் உள்ளதை அல்லது பழைய பாணியில் இருப்பதை) புதுப் பொலிவுடன் மாற்றி அமைத்தல் | renovate |
| புதுமனை புகுவிழா | கிரகப்பிரவேசம் | house-warming |
| புதுமுகம் | (பெரும்பாலும் திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) முதன்முதலாக அறிமுகமாகுபவர் | person making his or her debut (in film or stage) |
| புதுமை | (-ஆக, -ஆன) இதுவரையில் இல்லாததாகவும் வழக்கமானதிலிருந்து மாறுபட்டதாகவும் இருப்பது | newness |
| புதுயுகம் | நம்பிக்கை தரக் கூடிய மாற்றங்களும் சுபிட்சமும் நிறைந்த காலம் | new age |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.