Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| தொலைவு | இரு இடங்களுக்கு அல்லது பொருள்களுக்கு இடையில் உள்ள அளவு(குறிப்பிடப்படும் ஒருவரிடமிருந்து அல்லது ஒன்றிலிருந்து) விலகியிருக்கும் அளவுதூரம் | distance |
| தொழில் | (பொதுவாக) வேலை | profession |
| தொழில் காய்ச்சல் | தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு அதே தொழில் செய்யும் மற்றொருவருக்கு ஏற்படும் பொறாமை | professional jealousy |
| தொழில் துறை | தொழில் துவங்குதல், மேம்படுத்துதல் முதலியவற்றைக் கவனிக்கும் அரசுத் துறை | (of government) department of industry |
| தொழில் நிறுவனம் | பெருமளவில் முதலீடு செய்து தொழில் நடத்தும் நிறுவனம் | industrial concern |
| தொழில்நுட்பக் கல்லூரி | இயந்திரங்கள் தொடர்புடைய தொழில்முறைக் கல்வியைப் பாடமாகக் கொண்டு தொழில் பயிற்சி அளிக்கும் கல்லூரி | educational institution providing training in trades connected with machines and tools |
| தொழில்நுட்பம் | உற்பத்தியில் நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய தொழில்பற்றிய அறிவும் வழிமுறைகளும் | technology |
| தொழில்மயமாக்கு | (ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் பொருளாதார முன்னேற்றம் கருதித் தொழிற்சாலைகளைப் பெருக்குவதன்மூலம்) தொழில் வளர்ச்சி பெறச்செய்தல் | industrialize |
| தொழில்முறை | ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு தொழிலை வளர்ப்பதற்குத் தேவையானது | vocational |
| தொழில் முனைவோர் | மூலதனம் போட்டு ஒரு தொழிலைத் துவங்கத் திட்டமிடுபவர் | entrepreneur |
| தொழில்வரி | மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குள் தொழிலை மேற்கொண்டவர்கள் மீது விதிக்கும் வரி | profession tax |
| தொழிலாளர் | உடல் உழைப்பைத் தந்து சம்பளம் பெற்று ஒரு தொழிலைச் செய்பவர் அல்லது தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்கிப் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுபவர் | (manual or industrial) worker |
| தொழிலாளி | உடல் உழைப்பை வேண்டுகிற தொழிலைச் செய்பவர் | labourer |
| தொழிற்கல்வி | தொழில்முறைக்குத் தேவையான அடிப்படை அறிவையும் பயிற்சியையும் அளிக்கும் கல்வி | technical education |
| தொழிற்கூடம் | தொழிற்சாலை | industrial plant or unit |
| தொழிற்சங்கம் | தொழிலாளர்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டமைப்பு | trade union |
| தொழிற்சாலை | இயந்திரங்களின் உதவியால் பொருள்களை (பெருமளவில்) உற்பத்திசெய்யும் இடம் | factory |
| தொழிற்படு | இயங்குதல் | function |
| தொழிற்பாடு | செயல்பாடு | function |
| தொழிற்புரட்சி | (ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில்) புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் தொழில் துறையில் ஏற்பட்ட பெரும் மாற்றம் | industrial revolution |
| தொழிற்பெயர் | (பெயர்த் தன்மையோடு வினைத் தன்மையும் உடையதாக) வினையிலிருந்து பெறப்பட்டு வழங்கும் பெயர்ச்சொல் | verbal noun |
| தொழிற்பேட்டை | குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகி, பெருமளவில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக அரசு ஏற்படுத்தித் தந்திருக்கும் இடம் | cluster of industries in a place set aside by the government |
| தொழு1 | (கடவுளை) வழிபடுதல் | worship |
| தொழுகை | (முஸ்லிம்கள்) மனத்தில் இறைவனை நினைத்து மெக்கா இருக்கும் திசையை நோக்கிச் செய்யும் வணக்கம்/(கிறித்தவர்) புனித நூலிலிருந்து வாசகங்களைக் கூறிச் செய்யும் வழிபாடு | prayer |
| தொழுநோய் | தோல் தடித்தல், தொடு உணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய் | leprosy |
| தொழுவம் | (பெரும்பாலும்) மாடுகளைக் கட்டி வைக்கும் (கூரை போடப்பட்ட) இடம் | cattle shed |
| தொழுவுரம் | கால்நடைகளின் கழிவைச் சேமித்து நிலத்தில் இட்டுச் சேர்க்கும் உரம் | farmyard manure |
| தொளதொள | (தைக்கப்பட்ட ஆடைகளைக்குறித்து வருகையில்) உடலுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக இல்லாமல் பெரிதாக உள்ள | (of garments) loose |
| தொளதொள-என்று/-என்ற | (தைக்கப்பட்ட ஆடையைக் குறிக்கையில்) உடலுக்குச் சற்றுப் பெரிதாக/உடலுக்குச் சற்றுப் பெரிதான | (hanging) loosely/loose |
| தொற்று1 | பாய்ந்து பிடித்தல் | catch hold of |
| தொற்று2 | (பெரும்பாலும் கலைச்சொல்லாக) (வைரஸ் போன்ற) நுண்கிருமிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு | infection |
| தொற்றுநோய் | நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதன்மூலம் பரவும் நோய் | contagious disease |
| தொன்மை | காலத்தால் மிகவும் முற்பட்டது | antiquity |
| தொன்றுதொட்டு | மிக நீண்ட காலமாக | from time immemorial |
| தொன்னை | வாழை இலையையோ வேறு இலைகளையோ சுருட்டித் தைத்துச் செய்யப்பட்ட சிறு கிண்ணம் போன்ற சாதனம் | plantain leaf or any other large leaf rolled into a cup-like form (for serving eatables) |
| தோட்டம் | மலர்ச் செடிகள் அல்லது (சிறிய அளவில்) காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம் | garden (adjacent to a house) |
| தோட்டா | துப்பாக்கிக் குண்டு | cartridge |
| தோட்டி | தெரு முதலியவற்றைச் சுத்தம் செய்யும் ஊழியர் | sanitary worker |
| தோடா | ஆண்கள் கையில் மணிக்கட்டுப் பகுதியில் அணிந்துகொள்ளும் வளையல் போன்ற பெரிய உலோக வளையம் | large bracelet (worn on the wrist by men as a mark of honour) |
| தோடு1 | (பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட) வட்ட வடிவத் தங்கக் காதணி | ear stud (normally studded with precious stones, such as diamonds and worn by women) |
| தோடு2 | (புளியம்பழம் போன்றவற்றின்) மேல்புற ஓடு | shell (of certain fruits, esp |
| தோண்டி | (தண்ணீர் எடுப்பதற்கான) மண் அல்லது உலோகக் கலம் | (earthen or metal) pot (for drawing and carrying water) |
| தோண்டு | (கையால் அல்லது கருவியால்) மண்ணை (பள்ளம் ஏற்படும்படி) அகற்றுதல் | dig (the earth so as to make a hole or pit) |
| தோணி | துடுப்பால் தள்ளப்படும் படகு | (rowing) boat |
| தோது | (ஒன்றைச் செய்வதற்கு ஏற்ற) வசதி | convenience |
| தோதுப்படு | சௌகரியப்படுதல் | be convenient |
| தோப்பு | ஒரே வகையைச் சேர்ந்த மரங்கள் நிறைய வளர்க்கப்பட்டுள்ள இடம் | grove |
| தோப்புக்கரணம் | இடது கைவிரலால் வலது காதையும் வலது கைவிரலால் இடது காதையும் பிடித்துக்கொண்டு முழங்கால் மடங்குமாறு உட்கார்ந்து எழுந்திருத்தல் | the act of squatting and standing alternately, holding the ears with hands in a cross-wise manner (as a mode of worship or punishment) |
| தோய்1 | (துணி, ஆயுதம் முதலியவற்றில் நீர், இரத்தம் முதலியவை) படிதல் | be soaked |
| தோய்2 | (நீர், பால் முதலிய திரவங்களில்) முக்கி நனைத்தல் | dip |
| தோரணம் | (விழாக் காலத்தில்) மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றை வரிசையாகக் கயிற்றில் இணைத்துத் தொங்கவிடப்படுவது | festoon of mango leaves, palm leaves, etc கல்யாணப் பந்தல் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது |
| தோரணை | (-ஆக, -ஆன) (ஒருவர் வகிக்கும் பதவி, மனத்தில் உள்ள எண்ணம் முதலியவற்றை வெளிப்படுத்தும்) பாவனை | posture |
| தோராயம் | (எண்ணிக்கையை அல்லது அளவைக் குறிக்கையில்) சரியானதற்குச் சற்றுக் கூடவோ குறையவோ உள்ளது | approximation |
| தோல்1 | (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில்) வெற்றி (வாய்ப்பை) இழத்தல் | be defeated |
| தோல்2 | (மனிதன், விலங்கு முதலியவற்றின்) தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி | skin |
| தோல்வி | (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் ஒருவருக்கு ஏற்படும்) வெற்றி இழப்பு | defeat |
| தோலான்துருத்தி | (மிகவும் அலட்சியப்படுத்திக் கூறுகையில்) எந்த விதத் தகுதியும் இல்லாத ஆட்கள் | tom, Dick and Harry |
| தோழமை | நட்பு | friendship |
| தோழர் | (சில அரசியல் இயக்கங்களில்) ஓர் உறுப்பினர் மற்றோர் உறுப்பினரை அல்லது ஆதரவாளரை அழைக்கும் சொல் | (in certain political movements) comrade |
| தோழன் | நண்பன் | friend |
| தோள் | (மனித உடலில்) கழுத்தின் இரு பக்கங்களிலும் நீண்டு அமைந்து கைகள் துவங்கும் பகுதி | shoulder |
| தோள்கொடு | (ஒரு செயலில் ஈடுபட்டிருப்பவருக்கு) உதவிசெய்தல் | extend support |
| தோள்பட்டை | தோளின் தட்டையான பகுதி | shoulder blade |
| தோள்பை | தோளில் தொங்கவிடும்படி பட்டை வைத்துத் தைத்த பை | shoulder bag |
| தோற்கடி | (போட்டியில்) தோல்வி அடையச்செய்தல் | (in sports, competition, etc.) defeat |
| தோற்பாவை | ஒளி ஊடுருவக் கூடிய வகையில் தோலால் செய்யப்பட்டு குச்சி, கயிறு போன்றவற்றால் ஆட்டப்படும் (கதைப் பாத்திர) பொம்மை | leather puppet |
| தோற்றம் | பார்வைக்குத் தெரியும் புற வடிவம் | figure |
| தோற்று | புலப்படுதல் | be seen or perceived |
| தோற்றுவாய் | (ஒன்றின்) ஆரம்பம் | beginning |
| தோற்றுவி | (ஒன்றை) உருவாக்குதல் | cause |
| தோன்றல் | வம்சம் நிலைக்கப் பிறந்தவன் | descendent |
| தோன்று | (பார்வைக்கு) தெரிதல் | appear |
| தோஷம் | (கிரக நிலை, தீய செயல் போன்றவற்றின்) தீங்கு விளைவிக்கக் கூடிய அம்சம் | malignant influence (believed to be the effect of the planetary position at the time of birth or from evil deed) |
| தா1 | கொடு1 | see கொடு1 |
| தா2 | கொடு2 | see கொடு2 |
| தாக்கம் | (மாற்றம் அல்லது விளைவை ஏற்படுத்தும் வகையிலான) பாதிப்பு | impact |
| தாக்கல்செய் | (நீதிமன்றம் முதலியவற்றில் வழக்கை) பதிவுசெய்தல்/(சாட்சியம் முதலியவற்றை) ஒப்படைத்தல் | institute |
| தாக்கீது | (ஒரு செயல்பற்றி நீதிமன்றத்தின் அல்லது அரசின்) எழுத்துமூலமான உத்தரவு | summons |
| தாக்கு | அடித்தல், வெட்டுதல் முதலியவற்றுக்கு உட்படுத்துதல் | assault |
| தாக்குதல் | (கால்பந்து முதலிய விளையாட்டுகளில்) (எதிர் அணிப் பகுதியை நோக்கி) முன்னேறி நெருக்குதல் | (of football, etc.) offensive game |
| தாக்குப்பிடி | (நிலைமைக்குத் தக்கவாறு செயல்பட்டு) தாங்கி நிலைத்தல் | withstand |
| தாகசாந்தி | தாகத்தைத் தணித்தல் | quenching thirst |
| தாகம் | நீர் குடிக்க வேண்டும் என்று எழும் உணர்வு | thirst |
| தாங்கள் | முன் இருப்பவரை மரியாதையுடன் அழைக்கப் பயன்படும் சொல் | (honorific) you |
| தாங்கி1 | ஒன்றைத் தாங்கி நிற்பதற்காகப் பயன்படுத்தும் சாதனம் | stand (to keep things) |
| தாங்கி2 | ஒரு பக்கமாகச் சாய்ந்து | (while walking) leaning on one side |
| தாங்குகட்டை | (காலை ஊன்றி நடக்க முடியாதவர்) தாங்கி நடக்கப் பயன்படுத்தும் கோல் | crutches |
| தாசன் | (சில தொடர்களில்) ஒரு தெய்வத்தைத் தீவிரமாக வழிபடுபவன் | fervent devotee (of a deity) |
| தாசி | கணிகை | courtesan |
| தாசில்தார் | (மாவட்ட ஆட்சியருக்கு) நிர்வாகம், வரி வசூலிப்பு முதலியவற்றில் உதவும் அதிகாரி | revenue official in charge of a sub-division of a district |
| தாசில்பண்ணு | அதிகாரம் செலுத்துதல் | be at the helm |
| தாட்சண்யம் | (மனிதாபிமானம் நிறைந்த) பரிவு | consideration (for s |
| தாட்டுபூட்டு-என்று | (ஒருவருடைய பேச்சுக்குறித்து வருகையில்) (அதிகாரத்தைக் காட்டும் வகையில்) ஆர்ப்பாட்டமாக | blustering out |
| தாடை | (முகத்தில்) பற்களைத் தாங்கியிருக்கும் எலும்புப் பகுதி | jaw |
| தாண்டவம் | (புராணங்களில்) (சிவன், காளி ஆகிய கடவுளர் ஆடியதாகக் கூறப்படும் ஆனந்தம், அழிவு போன்றவற்றை வெளிப்படுத்தும்) நடனம் | (in puranas) dance (expressing bliss or destruction) |
| தாண்டவமாடு | (வன்முறை, வறுமை போன்றவை) பெருமளவில் பரவியிருத்தல் | (of violence, poverty, etc.) show up (in its ugliest form) |
| தாண்டி | (குறிப்பிட்ட இடத்திற்கு) அடுத்து | beyond |
| தாண்டு | (இடைப்பட்ட ஒன்றைக் கடப்பதற்காக) தாவுதல்(ஒன்றை) தாவிக் கடத்தல் | jump over |
| தாத்தா | தாயின் அல்லது தந்தையின் தந்தை | grandfather |
| தாத்பரியம் | (ஒன்றினுடைய) நோக்கம் அல்லது பொருள் | purpose |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.