Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| புதை1 | (மணல், சேறு போன்ற) உள்ளிறுக்கம் இல்லாத பரப்பினுள் அழுந்தி அல்லது அழுத்தப்பட்டு உட்செல்லுதல் | go in |
| புதைசேறு | மேற்பரப்பில் அழுந்தும் எந்த ஒன்றும் உட்சென்றுவிடக் கூடிய ஆழமான சேறு | bog |
| புதைபொருள் | நிலத்தின் கீழ் புதைந்திருக்கும் பண்டைக்காலச் சின்னங்கள் | buried remains (found in archaeological excavations) |
| புதைமணல் | மேற்பரப்பில் அழுந்தும் எந்த ஒன்றும் உட்சென்றுவிடக் கூடிய மணல் | quicksand |
| புதையல் | நிலத்தில் புதைந்துள்ள பழங்காலத் தங்க நாணயங்கள், நகைகள் போன்ற பொருள்கள் | (underground) treasure |
| புயல் | (காற்றழுத்தக் குறைவால் ஏற்படும்) பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று | gale |
| புரட்சி | (சமுதாய அமைப்பில் அல்லது ஒரு நாட்டின் ஆட்சியில்) பெரும் மாற்றத்தை விளைவிப்பது | revolution |
| புரட்சிகரம் | (பழமையிலிருந்து விலகி) துணிவுடன் செய்யும் புதுமை | the quality of being revolutionary |
| புரட்டன் | உண்மையைத் திரித்தும் மாற்றியும் கூறுபவன் | one who distorts facts |
| புரட்டாசி | ஆறாவது தமிழ் மாதத்தின் பெயர் | the name of the sixth Tamil month, i |
| புரட்டு1 | (ஒருவரை அல்லது ஒரு பொருளை) ஒரு பக்கமாக உருட்டுதல் | turn (a thing over) |
| புரட்டு2 | உண்மையைத் திரித்துப் பேசும் பேச்சு | prevarication |
| புரதம் | முட்டை, இறைச்சி, பருப்புகள் முதலியவற்றில் உள்ளதும் உடலின் தசை வளர்ச்சிக்குத் தேவையானதுமான ஒரு சத்துப் பொருள் | protein |
| புரவலர் | ஒரு பொதுநல அமைப்பின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பல வழிகளில் உதவிபுரிபவர் | patron |
| புரவி | குதிரை | horse |
| புரவியாட்டம் | பொய்க்கால் குதிரை | a folk dance performed with a dummy horse |
| புரளி | (தவறான ஒன்றைப்பற்றிய) வதந்தி | false alarm |
| புராணிகர் | புராணக் கதைகளைச் சொல்லிப் பிரசங்கம்செய்பவர் | one who narrates sacred stories (like the Mahabharata, Ramayana) |
| புராதனம் | பழமை | antiquity |
| புரி1 | (நான்காம் வேற்றுமையோடு) (கூறப்பட்டது) அர்த்தப்படுத்தப்பட்டு மனத்தில் உள்வாங்கப்படுதல் | (with dative) understand |
| புரிதல் | ஒன்றை நன்றாகப் புரிந்துகொண்டதன் விளைவாக அடையும் தெளிவு | understanding |
| புரிந்துகொள் | (கூறப்பட்டதை) அர்த்தப்படுத்தி உள்வாங்குதல் | understand |
| புருடா | பொய் | fabrication |
| புருவம் | (மனிதனின்) கண்களுக்கு மேல் வளைந்த கோடாக அமைந்திருக்கும் மெல்லிய முடி | eyebrow |
| புருஷலட்சணம் | ஆணுக்கு உரியதாகச் சிறப்பித்துக் கூறப்படும் தன்மை | manly characteristics |
| புருஷன் | கணவன் | husband |
| புருஷார்த்தம் | உறுதிப்பொருள் | objectives worthy of human pursuit |
| புரையிடம் | வீட்டை ஒட்டிய காலி இடம் | vacant space at the backyard of a house |
| புரையேறு | (உணவுப் பொருளில் சிறிதளவு) மூச்சுக் குழாயினுள் சென்று எரிச்சல் ஏற்படுத்துதல் | get choked |
| புரையோடு | இரத்த ஓட்டம் தடைப்பட்டுப் புண்ணும் புண்ணை ஒட்டியுள்ள சதைப் பகுதியும் உள்ளுக்குள்ளாக அழுகுதல் | (of wound) become gangrenous |
| புரோகிதம் | (கல்யாணம், திதி போன்ற) சடங்குகளை மத வழக்கப்படி நடத்துதல் | officiating rites (as priest at weddings, etc.) |
| புரோகிதர் | புரோகிதம் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர் | (brahmin) priest (who officiates at marriage and other rituals) |
| புல் | (ஆடு, மாடு முதலியவற்றிற்கு உணவாகப் பயன்படும்) பூமியில் முளைத்துக் குறைந்த உயரமே வளரும் மெல்லிய, பச்சை நிற இலை கொண்ட தாவரம் | grass (of various kinds) |
| புல்லர் | சிறுமைக் குணம் உடையவர் | mean or petty-minded persons |
| புல்லரி | (உடல்) சிலிர்த்தல் | be thrilled |
| புல்லரிப்பு | (உடல்) புல்லரிக்கிற நிலை | thrilling |
| புல்லறிவாளன் | மேம்போக்கான அறிவுடையவன் | man of shallow knowledge |
| புல்லாக்கு | மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடும் (பெண்களின்) அணி | a pendant suspended from the partition of the nostrils (worn by women) |
| புல்லாங்குழல் | ஒரு புறம் அடைப்புள்ள குழலில் வாய் வைத்து ஊத ஒரு துளையும், வாயால் ஊதிய காற்று வெவ்வேறு விதங்களில் வெளியேறுவதற்கு ஏற்ப ஆறு முதல் எட்டுத் துளைகளும் உடைய இசைக் கருவி | flute |
| புல்லி வட்டம் | (பூவின்) வெளி வரிசை இதழ் | sepals (of flower) |
| புல்லுருவி | பெரும்பாலும் மரங்களில் படர்ந்து அவற்றின் சத்தை உறிஞ்சி வளரும் ஒரு வகைக் கொடி | parasitic plant |
| புல்வெளி | புல் அடர்ந்து வளர்ந்திருக்கும் நிலப்பரப்பு | pasture |
| புலப்படு | (பார்வையில்) படுதல் | be visible |
| புலப்படுத்து | தெரிவித்தல் | make known |
| புலம் | (பல்கலைக்கழகத்தில்) தொடர்புடைய பல துறைகளை உள்ளடக்கிய பிரிவு | faculty |
| புலம்பல் | புலம்பு என்னும் வினையின் இரு பொருளிலும் வரும் பெயர்ச்சொல் | a verbal noun, in both the senses of the verb புலம்பு |
| புலம்பு | (ஒருவர் தனக்கு ஏற்பட்ட) இழப்பு, பிரிவு போன்றவற்றைச் சொல்லி அழுதல் | lament |
| புலமை | தேர்ந்த அறிவு | scholarship |
| புலர் | விடிதல் | (of day) break |
| புலரி | விடியல் | dawn |
| புலவர் | செய்யுள் இயற்றும் புலமை உடையவர் | poet |
| புலவன் | கவிஞன் | poet |
| புலவி | (பெண்ணின்) ஊடல் | sulkiness (of women) |
| புலவு | இறைச்சி | meat |
| புலன்1 | பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய அடிப்படை உணர்வு | faculty of the body (viz |
| புலன்விசாரணை | ஒரு குற்றம்பற்றிய சாட்சியங்களைச் சேகரிக்க காவல் துறை அதிகாரி எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கை | investigation (of an offence) |
| புலன்விசாரி | புலன்விசாரணைசெய்தல் | investigate (a crime, etc.) |
| புலால் | இறைச்சி | meat |
| புலி | வெளிர்ப் பழுப்பு நிறத் தோலில் கருப்புப் பட்டைக் கோடுகளை உடையதும் பாய்ந்து சென்று இரையைப் பிடிக்கக் கூடியதுமான காட்டு விலங்கு | tiger |
| புலி ஆட்டம்/புலி வேஷம் | புலி போல் வேஷம் போட்டுக்கொண்டு ஆடும் ஆட்டம் | a performance by a player painted as a tiger (during a festival, etc.) |
| புவனம் | (புராணத்தில் கூறப்படும்) உலகம் | world (as mentioned in sacred narratives) |
| புவி | பூமி | earth |
| புவியியல் | பூமியின் நிலப்பரப்பு, கடல், தட்பவெப்பம் முதலியவற்றை விவரிக்கும் துறை | geography |
| புவியீர்ப்பு விசை | (பொருள்களை) தன்னை நோக்கி இழுக்கும் பூமியின் ஆற்றல் | gravitational force |
| புழக்கடை | வீட்டின் பின்வாயில் | open space behind a house |
| புழக்கம் | (நாணயம், சொல் முதலியவை) உபயோகத்தில் அல்லது வழக்கில் இருக்கும் நிலை | (of coins, words, etc.) circulation |
| புழங்கு | (நாணயம், சொல் முதலியவை) உபயோகத்தில் அல்லது வழக்கில் இருத்தல்(பயன் கருதி) கையாளப்படுதல் | (of coins, words, etc.) be in circulation or currency |
| புழு1 | (காய், பயறு முதலியவற்றினுள்) புழு உண்டாதல்/புழு அரித்தல் | (of vegetables, etc.) be wormy/be wormeaten |
| புழு2 | பொருள்களைத் துளைத்துச் செல்லக் கூடிய, மிருதுவான தசையை உடலாகக் கொண்ட உயிரினம் | worm |
| புழுக்கம் | (வியர்க்கும் அளவுக்கு) அதிக வெப்பமாகவும் குறைந்த காற்றோட்டத்துடனும் இருக்கும் நிலை | sultriness |
| புழுக்கு | (நெல்) அவித்தல் | boil (paddy before husking) |
| புழுக்கை | (ஆடு, எலி முதலியவற்றின்) சிறு உருண்டை வடிவ மலம் | dung or droppings (of certain animals, esp |
| புழுங்கல் | அவித்த நெல் | paddy parboiled (and dried) |
| புழுங்கலரிசி | அவித்துக் காய வைத்த நெல்லை அரைத்துப் பெறப்படும் அரிசி | rice obtained from parboiled paddy |
| புழுங்கு | காற்றோட்டம் இல்லாமலும் வெப்பத்தோடும் இருத்தல்/(மேற்குறிப்பிட்ட தன்மையில் ஒருவர்க்கு) வியர்த்தல் | swelter |
| புழுதி | காய்ந்த நிலத்திலிருந்து காற்றால் மேல் எழக் கூடிய மண் துகள் | dust |
| புழுதிக்கால் சாகுபடி | புன்செய் நிலத்தை உழுது புழுதியாக்கிச் செய்யும் சாகுபடி | dry farming |
| புழுவெட்டு | புழு அரித்தது | that which is wormeaten |
| புழை | துளை | hole |
| புள் | பறவை | bird |
| புள்ளடி | (வாக்குச்சீட்டில் போடும்) பெருக்கல் குறி | the multiplication sign (to be placed on a ballot paper) |
| புள்ளிமான் | கலைமான் | spotted deer |
| புள்ளியியல் | (தகவலையோ நிலவரத்தையோ) எண்களால் குறித்துத் தெரிவிக்கும் முறை | statistics |
| புள்ளிவிபரம் | எண்ணிக்கை அடிப்படையில் தரப்படும் விபரம் | statistical information |
| புளகாங்கிதம் | மெய்சிலிர்ப்பு | elation |
| புளி1 | புளிப்புச் சுவையைக் கொண்டிருத்தல் | taste sour |
| புளி2 | புளியம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பெறப்படும் புளிப்புச் சுவையுடைய சதைப் பகுதி | tamarind |
| புளிக்காய்ச்சல் | புளியைக் கரைத்து மிளகாய், கடலைப் பருப்பு, பெருங்காயம் முதலிய பொருள்களைச் சேர்த்துக் காய்ச்சித் தயாரிக்கும் கெட்டியான குழம்பு | a thick spicy concentrate of tamarind obtained by boiling |
| புளிப்பு | புளி முதலியவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை | sourness |
| புளிமூட்டை | புளியை மொத்தமாக வைத்து ஓலைப் பாயால் சுற்றிய கட்டு | roll of tamarind packed in a basket |
| புளியமரம் | சிறிய மஞ்சள் நிறப் பூப் பூக்கும், புளிப்புச் சுவை உடைய பழம் தரும் ஒரு மரம் | tamarind tree |
| புளியோதரை | புளிக்காய்ச்சல் ஊற்றித் தயாரிக்கப்பட்ட ஒரு வகை சாதம் | boiled rice mixed with thick spicy concentrate of tamarind |
| புளுகன் | கூசாமல் பொய் சொல்பவன் | veritable liar |
| புளுகு1 | கூச்சம் இல்லாமல் பொய் சொல்லுதல் | tell barefaced lies |
| புளுகு2 | அப்பட்டமான பொய் | blatant lie |
| புளுகுணி | அப்பட்டமாகப் பொய் சொல்லும் நபர் | one who tells barefaced lies |
| புற்றீசல் | (பெரும்பாலும் உவமையாக) புற்றிலிருந்து பெருமளவில் புறப்படும் ஈசல் | (often used as a simile) swarm of moths |
| புற்று | (கரையான், எறும்பு முதலியவை வசிக்கும்) சிறிய கோபுரம் போன்று அல்லது கையால் குவித்துவைத்தது போன்று இருக்கும் மண்ணால் ஆன அமைப்பு | anthill |
| புற்றுநோய் | இயல்புக்கு மாறான உயிரணுப் பெருக்கத்தால் உள்ளுறுப்புகள் அல்லது இரத்தம் பாதிக்கப்பட்டு (உடல் இளைத்து) மரணம் நேரக் கூடிய நோய் | cancer |
| புற்றுமண் | (மருந்துக் குணம் உள்ளதாகக் கருதப்படும்) கறையான் புற்றின் மண் அல்லது பொடி | soft earth of the anthill (considered as having medicinal value) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.