Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| புறக்கடை | வீட்டின் பின்பகுதி | backyard of a house |
| புறக்கணி | கவனத்தில் கொள்ளாதிருத்தல் | pay no attention to |
| புறக்கணிப்பு | கலந்துகொள்ள மறுத்து ஒதுங்குவது | boycott |
| புறங்கூறு | ஒருவரைப்பற்றி மற்றவரிடம் இழிவாகப் பேசுதல் | tell tales (about s |
| புறங்கை | உள்ளங்கையின் மேல்பகுதி | back of the palm |
| புறணி | (ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றிக் கூறும்) குற்றம்குறை | talking ill of s.o. (in his or her absence)backbiting. |
| புறநகர் | நகர எல்லையைத் தாண்டி அல்லது ஒட்டி அமைந்திருக்கிற பகுதி | outskirts of a city |
| புறநோயாளி | மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்பவர் | out-patient |
| புறப்படு | (ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி) பயணம் துவங்குதல்(ஒரு செயல் புரிய) வெளிக்கிளம்புதல் | leave (a place) |
| புறப்பாடு | கோயிலிலிருந்து உற்சவமூர்த்தி வெளிவருதல் | ceremonial taking out of the deity from a temple |
| புறம் | வெளியில் தெரியும்படியாக அமைவது அல்லது இருப்பது | that which exists outside |
| புறம்பு | (குறிப்பிடப்படும் ஒன்றுக்கு) மாறாக அல்லது எதிராக இருப்பது | that which is contrary or opposite (to the one mentioned) |
| புறம்பேசு | (ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி) குற்றம்குறை சொல்லுதல் | backbite |
| புறம்போக்கு | தனியாருக்குச் சொந்தம் இல்லாத, அரசு வசம் இருக்கும் நிலம் | land which is not privately owned |
| புறமுதுகுகாட்டு | (போரில் எதிர்த்து நிற்காமல் கோழைத்தனமாக) திரும்பிச் செல்லுதல் | run away (from battle) |
| புறவயம் | வெளி உலகைச் சார்ந்து அமையும் தன்மை | external |
| புறவழிச்சாலை | நகரம், ஊர் முதலியவற்றின் உள் நுழையாமலே அவற்றைக் கடந்து செல்லும் வகையில் அவற்றின் வெளி எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலை | bypass road |
| புறவாசல் | (வீட்டின்) பின்பக்கம்/பின்பக்க வாசல் | backyard/back door (of the house) |
| புறா | சற்றுப் பெருத்த உடல் பகுதியில் குட்டையான கால்களை உடைய (பெரும்பாலும்) சாம்பல் நிறத்தில் உள்ள பறவை | dove |
| புறாக்கூடு | (புறாக்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில்) சிறுசிறு அறைகளைக் கொண்ட பெட்டி போன்ற சாதனம்/மேற்குறிப்பிட்ட அமைப்பில் ஓர் அறை | dovecote |
| புறுபுறு | (கோபம், வெறுப்பு முதலியவற்றால்) முணுமுணுத்தல் | mutter |
| புன்செய் | மழையால் கிடைக்கும் நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்படும் நிலம் | dry land |
| புன்செய்ப் பயிர் | (நெல் அல்லாத) கம்பு, சோளம் போன்ற புன்செய் நிலப் பயிர் | dry crop such as millet, maize, etc |
| புன்முறுவல் | புன்னகை | smile |
| புன்னகை1 | ஒலி எழுப்பாமல் உதடு விரிய மெல்லச் சிரித்தல் | smile |
| புன்னகை2 | ஒலி எழுப்பாத சிரிப்பு | smile |
| புன்னை | தடித்த, வழுவழுப்பான கரும் பச்சை நிற இலைகளையும், வெள்ளை நிறச் சிறு பூக்களையும் கொண்டதாக அடர்ந்து வளரக் கூடிய சிறு மரம் | mast wood |
| புனப்பாகம் | ஒரு முறை வடித்த சோற்றை நன்றாக மசித்து மீண்டும் நீர் ஊற்றிக் கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் கஞ்சி | liquid diet in which the rice is boiled two times (to facilitate digestion) |
| புனர் | (ஒரு முறை முடிந்து) மறுபடியும் | re- |
| புனர்பூசம் | இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஏழாவது | the seventh of the twentyseven stars |
| புனர்வாழ்வு | நலிந்தோருக்கு மீண்டும் தரப்படும் நல்வாழ்வு | rehabilitation |
| புனரமை | (நலிவுற்ற அல்லது பழுதுற்ற நிலையில் உள்ள ஒன்றை) திருத்தியமைத்தல் | renovate |
| புனரமைப்பு | சீரமைப்பு | renovation |
| புனல்1 | நீர் | water |
| புனல்2 | (திரவப் பொருளைச் சிந்தாமல் ஊற்றப் பயன்படும்) திறந்த கூம்பு வடிவ மேல்பகுதியையும் அதனுடன் இணைந்த குழல் வடிவ அடிப்பகுதியையும் கொண்ட ஒரு சாதனம் | funnel |
| புனல் காடு | மலைகளில் உள்ள காட்டுப் பகுதியை அழித்துக் குறிப்பிட்ட காலம் பயிர்செய்த பின்னர் அப்பகுதியில் செடிகொடிகளை நட்டுவிட்டு வேறொரு இடத்தில் பயிர் செய்யும் விவசாய முறை | slash and burn method of farming in the hill regions |
| புனல் மின்நிலையம் | நீரோட்ட விசையால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடம் | hydroelectric power plant |
| புனிதம் | போற்ற வேண்டிய தன்மை பொருந்தியது | holiness |
| புனிதவெள்ளி | இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த நாளான வெள்ளிக்கிழமை | good Friday |
| புனுகுப்பூனை | சாம்பல் நிற உடலில் கரு நிறப் புள்ளிகளை உடைய ஒரு வகைப் பூனை | palm civet |
| புனை1 | (ஆடை, ஆபரணம் முதலியவற்றை) அணிதல் | put on (clothes, jewels, etc.) |
| புனைகதை | கற்பனைக் கதை | fiction |
| புனைசுருட்டு | வேண்டுமென்றே கட்டிவிடப்பட்ட செய்தி | concocted news |
| புனைந்துரை | மிகைப்படுத்திக் கற்பனையாகச் சொல்லப்படுவது | rhetoric |
| புனைபெயர் | (பெரும்பாலும் எழுத்தாளர்கள்) இயற்பெயருக்குப் பதிலாகப் பயன்படுத்தும் கற்பனைப் பெயர் | pseudonym |
| புஜம் | முழங்கைக்கும் தோள்பட்டைக்கும் இடைப்பட்ட தசை மிகுந்த பகுதி | upper arm |
| புஷ்டி | (ஊட்டத்துடன் கூடிய) பருமன் | healthiness |
| புஷ்பம் | பூ | flower |
| புஷ்பராகம் | வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் விலையுயர்ந்த கல் | topaz |
| புஷ்பவதி | பருவமடைந்த பெண் | girl who has attained puberty |
| புஸ்-என்று | மிகவும் அதிகமாக | steaming up |
| புஸ்வாணம் | தீப் பற்றவைத்தவுடன் வெடிக்காமல் புஸ் என்ற சத்தத்துடன் பூப்பூவாகத் தீப்பொறிகள் மேல்நோக்கி வெளிவரும் ஒரு வகைப் பட்டாசு | (in India) flower-pot |
| பூ1 | (தாவரங்களில்) பூ தோன்றுதல் | bloom |
| பூ2 | (வண்ண) இதழ் அடுக்குகளின் நடுவே மகரந்தத் தூளைக் கொண்டிருக்கும் (மென்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறும்) தாவரத்தின் பகுதி | flower |
| பூ3 | (சேவல்) கொண்டை | (of a cock) crown |
| பூ4 | (கண்ணின் கருவிழியில் தோன்றும்) வெண்புள்ளி | white spot (which is seen in the pupil of the eye) |
| பூ5 | (இந்திய நாணயத்தில்) தலை என்று குறிப்பிடப்படும் பக்கத்துக்குப் பின்பக்கம் | (of a coin) tail |
| பூ6 | (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) பூமி | (often in combination) earth |
| பூ7 | அற்பமாகவோ அலட்சியமாகவோ கருதுவதை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல் | an expression pooh-poohing sth |
| பூக் கட்டு | (குறிப்பிட்ட மலர் வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்கிற முறையில்) இரு வேறு மலர்களைக் கடவுள் சன்னிதியில் அல்லது படத்தின் முன்போட்டு ஒன்றை எடுத்தல் | use flowers as lots for seeking divine guidance |
| பூக்குழி | தீக்குழி | pit with live coals (for fire-walking) |
| பூகம்பம் | நிலநடுக்கம் | earth tremor |
| பூகோளம் | புவியியல் | geography |
| பூங்கா | (பெரும்பாலும் நகரத்தில்) பூஞ்செடிகள், மரங்கள் ஆகியவற்றோடு புல்வெளியும் இருக்கும்படி அமைந்த பொது இடம் | park |
| பூங்காவனம் | பூந்தோட்டம் | flower garden |
| பூங்காவி | அடிக்கடி நீரில் துவைப்பதால் வெள்ளைத் துணிகளில் படியும் பழுப்பு அல்லது காவி நிறம் | brown tinge which white clothes take on when washed frequently in water |
| பூச்சாண்டி | (குழந்தைகளுக்கு) பயம் தரத் தக்க, கோரத் தோற்றம் உடைய (கற்பனையான) உருவம் | imaginary (human) figure of scary looks to frighten (children) |
| பூச்சாண்டி காட்டு | (ஒருவரை) பயமுறுத்தும் நோக்கத்தோடு (ஒன்றை அது நம்பப்படாத நிலையிலும்) கூறுதல் அல்லது செய்தல் | attempt scaring |
| பூச்சி | (கரப்பான், எறும்பு, வண்டு போன்ற) எலும்பு இல்லாத உடல் உடைய சிறிய உயிரினங்களைக் குறிக்கும் பொதுப்பெயர் | a general term to denote creatures which do not have bones |
| பூச்சிக்கொல்லி | பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை அல்லது கரப்பான் போன்ற பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தும் நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயனப் பொருள் | pesticide |
| பூச்சிபொட்டு | மனிதனைக் கடித்துத் தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினம் | any creature that may bite or sting |
| பூச்சு | (காரை, வர்ணம் முதலியவை அல்லது ஈயம் முதலியவை) பூசப்பட்டிருத்தல் | coating |
| பூச்சூட்டு | (முதல் முறையாகக் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு) தலையில் பூவைச் சூட்டுதல் என்ற சடங்கை நிகழ்த்துதல் | perform the ceremony of adorning the head of a woman (at the time of her first pregnancy) with flowers |
| பூச்செண்டு | சிறு குடை வடிவாகக் கட்டப்பட்ட மலர்த் தொகுப்பு | bouquet |
| பூசணி | வெளிர்ப் பச்சை நிறத்தில் தடித்த தோலுடைய நீர்ச் சத்து மிகுந்த உருண்டை வடிவக் காய்/அந்தக் காய் காய்க்கும் கொடி | squash gourd (the fruit and the plant) |
| பூசம் | இருபத்தேழு நட்சத்திரங்களுள் எட்டாவது | the eighth of the twentyseven stars |
| பூசல் | (கருத்து வேறுபாடு காரணமாக) தகராறு | (factious) dispute |
| பூசனை | பூஜை | offering |
| பூசாரி | (மாரியம்மன், காளி போன்ற தெய்வங்களின் கோயிலில்) வழிபாடு நடத்திவைப்பவர் | priest of a village deity |
| பூசி | வழிபாடுசெய்து வணங்குதல் | worship |
| பூசிமெழுகு | (தவறு, குற்றம் முதலியவை) நடந்ததாக ஒப்புக்கொள்ளாமல் வேறு ஏதேனும் கூறி மறைத்தல் | gloss over |
| பூசு | (எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது அல்லது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது) தடவியோ தேய்த்தோ படியச்செய்தல் | smear |
| பூசை2 | அடி | beating |
| பூஞ்சணம் | ஈரப்பசை இருப்பதன் காரணமாக உணவுப் பொருள் முதலியவற்றில் பஞ்சு போன்று படரும் ஒரு வகைப் பச்சை நிறக் காளான் | mould |
| பூஞ்சோலை | பல வகையான அழகிய மலர்கள் பூக்கும் மரம், செடிகள் நிறைந்த இடம் | flower garden |
| பூட்டாங்கயிறு | (மாட்டை நுகத்தடியில் பிணைக்கப் பயன்படும்) ஒரு முனை முடிச்சுடனும் மற்றொரு முனை சுருக்கு வளையமாகவும் உள்ள கயிறு | rope (to fasten the bullock to the yoke) with a knot at one end and a matching noose at the other |
| பூட்டு1 | (கதவு, பெட்டி முதலியவற்றை) திறந்துகொள்ள முடியாதபடி செய்தல் அல்லது (மிதிவண்டி போன்ற வாகனத்தை) நகர்த்த முடியாதபடி செய்தல் | lock (a door, etc, or a bike, etc.) |
| பூட்டு2 | (கதவு போன்றவற்றை) திறக்க முடியாமல் செய்வதற்காக அல்லது (மிதிவண்டி போன்றவற்றை) நகர்த்த முடியாமல் செய்வதற்காகச் சாவியின்மூலம் இயக்கிப் பயன்படுத்தப்படும் சாதனம் | lock (of various types and sizes) |
| பூட்டு3 | சிட்டம் | hank |
| பூட்டூசி | பெண்கள் சட்டையில் குத்திக்கொள்ளப் பயன்படுத்தும் பாதுகாப்பான ஊசி | safety pin |
| பூடுதலை | சிறுசிறு பட்டைகளை வட்ட வடிவில் இணைத்துச் சுழலும்படி அமைத்த, சிட்ட நூல் சுற்றுவதற்கான சாதனம் | swift (for hanks) |
| பூண்1 | (நாடகம் முதலியவற்றில் வேடம்) தரித்தல் | play (the role) |
| பூண்2 | (உலக்கையின்) முனையிலும், (மரக்கால் முதலியவற்றின்) மேற்பகுதியிலும் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு, பித்தளை முதலிய உலோகத்தாலான பட்டை வளையம் | metal rim |
| பூண்டு1 | காரச் சுவை கொண்டதாகவும் பல் போன்ற பகுதிகளாகப் பிரியக் கூடியதாகவும் இருக்கும் ஒரு தாவரத்தின் வெண்ணிற அடிப்பகுதி | garlic |
| பூண்டு2 | கிழங்கு போன்ற தடித்த அடிப்பகுதியைக் கொண்ட சிறு தாவரங்களின் பொதுப்பெயர் | a common name for all bulbous plants |
| பூண்டோடு | (எதுவும், யாரும்) விடுபடாமல் | totally |
| பூணூல் | சடங்கு செய்து இடது தோள்பட்டையிலிருந்து எதிர் விலாப் பக்கம்வரையில் உடம்பைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும் மூன்று புரியாக உள்ள நூல் | (sacred) thread of three strands worn by men of certain castes |
| பூதக்கண்ணாடி | வடிவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் கண்ணாடி | magnifying glass |
| பூதநாடி | பெருவிரலுக்கும், சுட்டுவிரலுக்கும் இடையிலுள்ள பகுதியைத் தொட்டு உணரும் நாடி | pulse (felt at the spot between the thumb and index finger) |
| பூதவுடல் | ஒருவர் இறந்ததும் அவருடைய உடலை மங்கல வழக்காகக் குறிப்பிடும் சொல் | euphemism for the dead body |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.