Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| திகட்டு | (ஒரு அளவுக்கு மேல் உண்ண முடியாதபடி) இனிப்புப் பொருளை எதிர்மறுக்கும் நிலை ஏற்படுதல் | cloy |
| திகழ் | (ஒன்று ஓர் இடத்தில்) பொலிவுடன் இருத்தல் | glow with lustre |
| திகில் | (பயம் நிறைந்த காட்சி பார்ப்பவரின் மனத்தில் எழுப்பும்) கலக்க உணர்வு | fright |
| திகுதிகு-என்று | (தீ) கடும் வெப்பத்துடன் வேகமாக/(புண்) கடும் வலியுடன் | (of fire) rapidly with intense heat/(of sore that burns) without let up |
| திகை1 | மலைத்தல் | be perplexed |
| திகை2 | (பெண்ணுக்கு வரன்) தகைதல் | be suitably found |
| திகை3 | (எதிர்பாராமல் நிகழ்வதை அல்லது இயல்புக்கு மாறாக இருப்பதை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலைக்கு உள்ளாதல் | be astonished |
| திகைப்பு | (ஒரு நிலைமையை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலை | disbelief |
| திங்கள் | சந்திரன் | moon |
| திசு | குறிப்பிட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்கான ஒத்த வடிவ உயிரணுக்களின் தொகுப்பு | tissue |
| திசை | சூரியன் உதிப்பதையும் மறைவதையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் பக்கம் | direction |
| திசைச்சொல் | பண்டைத் தமிழகத்தை ஒட்டியிருந்த நிலப் பகுதிகளிலிருந்து வந்து வழங்கிய சொல் | borrowings made in the past found in Tamil from adjacent lands |
| திசைமானி | எப்போதும் வடக்குத் திசையையே காட்டும் முள்ளை உடைய (திசை அறிவதற்கான) கருவி | compass |
| திட்டக்குழு | அரசு மேற்கொள்ள வேண்டிய சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை வகுத்துக் கொடுக்கக் கூடிய வல்லுநர்கள் அடங்கிய குழு | a body of experts to advise the government in developmental policies and schemes |
| திட்டப்படுத்து | உறுதிப்படுத்துதல் | confirm |
| திட்டம் | (தனி நபர்) ஒரு செயலை அல்லது (அரசு போன்றவை) சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பதற்கு உரிய வழிமுறைகளை ஆலோசித்துத் தயாரிக்கும் செயல்முறை அல்லது ஏற்பாடு | plan |
| திட்டவட்டம்-ஆக/-ஆன | உறுதியாக | firmly |
| திட்டிவாசல் | (கோயில், கோட்டை முதலியவை அடைத்திருக்கும்போது ஆட்கள் உள்ளே சென்று வரும் வகையில்) பெரிய கதவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய திறப்பு அல்லது வாயில் | wicket gate (in the door of a temple or fort) |
| திட்டு2 | மனத்தைப் புண்படுத்தும் பேச்சு | scolding |
| திட்டு3 | சற்று மேடாகத் தெரியும் சிறிய பரப்புடைய பகுதி | raised ground |
| திட்டை | சிறு மேடு | raised ground |
| திட்பம் | வலிமை | firmness |
| திட உணவு | (திரவமாக இல்லாமல் மென்று சாப்பிடக் கூடியதாக இருக்கும்) இட்லி, சாதம் போன்ற உணவு | solid food (as opposed to liquid food) |
| திடகாத்திரம் | ஆரோக்கியம் நிறைந்த உடல் அமைப்பு | (of health or body) robustness |
| திடப்படுத்து | (மனத்தை) உறுதியான நிலையில் இருக்கச்செய்தல் | brace (oneself) |
| திடப் பொருள் | கெட்டித் தன்மையையும் ஒரு வடிவத்தையும் உடைய பொருள் | solid |
| திடம் | (-ஆக, -ஆன) (நம்பிக்கை, கருத்து முதலியவற்றைக் குறிப்பிடும்போது) நிலையானது | (of belief, opinion, etc.) firmness |
| திடல் | (விளையாட்டு, பொருட்காட்சி முதலியவை நடக்கும்) பரந்த வெளி | open space |
| திடீர் | (எந்த வித) அறிவிப்பும் (நிகழ்வதற்கான) அறிகுறியும் இல்லாத | sudden |
| திடீர்-என்று | முன்னறிவிப்பு அல்லது அறிகுறி இல்லாமல் | suddenly |
| திடுதிடு-என்று | சத்தத்துடன் வேகமாக | (noisily) fast |
| திடும்-என்று | திடீரென்று | all on a sudden |
| திண்டாட்டம் | (தேவையானது கிடைக்காத) தவிப்பு(இக்கட்டான சூழ்நிலையில்) அல்லல்அவதி | straits |
| திண்டாடு | (தேவையானது கிடைக்காததாலோ இக்கட்டான சூழலிலோ) தவித்தல் | struggle |
| திண்டு | (சாய்ந்து உட்கார்வதற்குப் பயன்படுத்தும்) அரை வட்ட அல்லது நீள் உருண்டை வடிவத் தலையணை | semicircular or long cylindrical (cotton stuffed) pillow or cushion |
| திண்ணக்கம் | திமிர் | haughtiness |
| திண்ணம் | (ஒன்றை வலியுறுத்திக் கூறுகையில்) நிச்சயம் | certainty |
| திண்ணிய | வலிமை செறிந்த | strong |
| திண்ணை | (பழங்கால) வீடுகளில் நுழைவாயிலின் பக்கவாட்டில் இரு புறங்களிலும் உட்கார்வதற்கும் படுப்பதற்கும் ஏற்ற வகையில் கட்டப்பட்டிருக்கும் சற்று உயரமான மேடை போன்ற அமைப்பு | raised platform at the entrance of a house for the purpose of resting |
| திண்ணைக்குறடு | திண்ணையை ஒட்டி அமைந்துள்ள படி | step adjacent to திண்ணை |
| திண்ணைப் பள்ளிக்கூடம் | (முற்காலத்தில் ஆசிரியர் மாணவர்களை) வீட்டுத் திண்ணையில் அமர்த்திக் கல்வி கற்பித்த முறை | (in olden days) school conducted (by a teacher) on a pial |
| திண்மம் | (பெரும்பாலும் கலைச்சொல்லாக) திடத் தன்மை | (mostly technically) solidity |
| திணறு | தவித்தல் | suffer |
| திணிப்பு | விருப்பத்துக்கு மாறாகத் திட்டம், முடிவு போன்றவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் செயல்(ஒன்றை) ஏற்கச்செய்யும் பலவந்தம் | imposition |
| திணை | மனிதர்களையும் விலங்குகளையும் பொருள்களையும் பிரிக்கும் பகுப்பு | class (of nouns based on human, non-human distinction) |
| திணைக்களம் | (அரசு) துறை | (government) department |
| தித்தி | இனித்தல் | taste sweet |
| தித்திப்பு | இனிப்பு | sweetness |
| திதி | அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்குப் பின் வரும் காலத்தைப் பதினைந்தாகப் பிரித்த பிரிவுகளில் ஒன்று | lunar day |
| திப்பி | (மோரில்) கொழுப்புச் சத்தின் துணுக்கு(பழச்சாற்றில்) சதைப் பகுதியின் துண்டு | bits of matter (which float on butter milk, fruit juice) |
| திப்பிலி | (நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும்) கறுப்பாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும் ஒரு வகை நீண்ட கொடி | long pepper (as a medicinal plant) |
| திமிங்கலம் | கடலில் வாழும், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த, மீனைப் போன்ற உருவம் உடைய பெரிய விலங்கு | whale |
| திமிசு/திமிசுக்கட்டை | (தரையைச் சமப்படுத்திக் கெட்டியாக்க) நீண்ட கம்பின் அடிப்பகுதியில் கனமான கட்டையைப் பொருத்திச் செய்த கருவி | heavy wooden block with a long handle used as a rammer |
| திமிர் | பிறரை மதிக்காத போக்கு | haughtiness |
| திமில் | (காளையின் அல்லது ஒட்டகத்தின்) முதுகில் கழுத்தை அடுத்து உயர்ந்து காணப்படும் பகுதி | hump |
| திமிலோகப்படு | பெரும் பரபரப்பு அடைதல் | be in commotion |
| திமுதிமு-என்று | (கூட்டமாகப் பலர் வருவதை அல்லது ஓடுவதைக் குறிக்கையில்) பலத்த காலடி ஓசையுடன் | (of group of people) with heavy footsteps |
| தியாகம் | பிறருடைய நலனுக்காகத் தன் சொந்த நலனை அல்லது தன்னை இழக்கத் துணியும் செயல் | sacrifice |
| தியாகி | தியாகம் புரிந்தவர் | one who sacrifices (for a public cause) |
| தியாலம் | (குறிப்பிடப்படும் மணி) நேரம் | hour (that is specified) |
| தியானம் | மனத்தை அலைபாயவிடாமல் ஒருமுகப்படுத்துவது | meditation |
| தியானி | (கடவுளின் மீது அல்லது ஒன்றின் மீது) மனத்தை ஒருமுகப்படுத்துதல் | meditate |
| திரட்சி | (உள்ளீட்டின் செறிவால்) உருண்டையாகவும் சதைப்பற்றோடும் இருப்பது | plumpness |
| திரட்டு1 | (பலரிடமிருந்து, பல இடங்களிலிருந்து) பெற்று ஒன்றாக்குதல் | collect (money, information, etc.) |
| திரட்டு2 | (பாடல், கட்டுரை முதலியவற்றின்) தொகுப்பு | anthology |
| திரட்டுப்பால் | பாலைச் சுண்டக் காய்ச்சிச் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம் | a kind of milk sweet |
| திரண்ட | மொத்த | vast |
| திரவ உணவு | (மென்று உண்ண வேண்டிய திடப் பொருளாக இல்லாமல் அப்படியே விழுங்கக் கூடிய) கஞ்சி, பழச்சாறு, பால் போன்ற உணவு | food in liquid state (as opposed to solid food) |
| திரவம் | வழிந்தோடுதல், வெப்பத்தால் ஆவியாதல் முதலிய தன்மைகளைக் கொண்ட, தனக்கென்று நிலையான வடிவம் இல்லாத பொருள் | liquid |
| திரள்1 | (மக்கள்) பெருமளவில் சேர்தல் | (of people) gather |
| திரள்2 | (பெண்) பருவ வயது அடைதல் | (of girls) come of age |
| திரள்3 | (-ஆக, -ஆன) (பலர்) ஒன்று கூடிய நிலை | (of people) gathering |
| திராட்சை | புளிப்புக் கலந்த இனிப்புச் சுவையுடைய கறுப்பு அல்லது வெளிர்ப் பச்சை நிறமுடைய உருண்டையான பழம்/மேற்கூறிய பழம் காய்க்கும் கொடி | grape/grapevine |
| திராட்டில்விடு | (வழிநடத்துவதாக அல்லது உதவி செய்வதாகச் சொல்லிவிட்டு அவ்வாறு செய்யாமல்) நடுவில் கைவிடுதல் | leave |
| திராணி | (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சக்தி | (physical) strength |
| திராபை | (எந்த விதத்திலும்) மதிப்பற்றது | worthless (stuff) |
| திராவகம் | உடல் வெந்துபோகும் அளவுக்கு வீரியமுள்ள அமிலம் | concentrated acid |
| திராவிடம் | தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைப் பேசும் மக்கள் அதிகமாக வாழும் நிலப் பகுதி | land where Tamil, Telugu, Kannada, Malayalam, etc are spoken |
| திரி1 | (விலங்குகள்) சுற்றிவருதல்/(குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல்) இடங்களுக்குப் போய்வருதல் | roam/follow |
| திரி2 | (பால் முதலியவற்றில் உள்ள சத்துப் பொருள் திட்டுத்திட்டாக மிதக்கிற நிலையில்) பிரிதல் | (of milk, etc.) get spoiled |
| திரி3 | முதன்மை வினை குறிப்பிடும் செயல் ஒருவரால் பல முறை செய்யப்படுவதை அல்லது அவ்வாறு செய்யப்படுவதன்மூலம் பரப்பப்படுவதைப் பேசுபவர் விரும்பவில்லை என்பதைக் காட்டும் ஒரு துணை வினை | an auxiliary verb which, when added to certain verbs, indicates the disapproval of the speaker of the way in which sth. is being spread or circulated |
| திரி5 | (குத்துவிளக்கு முதலியவற்றில் நெருப்புப் பற்ற வைப்பதற்கான) பட்டையாகவோ குழல் வடிவிலோ திரிக்கப்பட்ட பஞ்சு அல்லது துணி | wick (either a roll of cotton or cloth) |
| திரிகாலம் | (கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய) மூன்று காலம் | time in three divisions (viz |
| திரிகை | எந்திரம் | quern |
| திரிசங்கு நிலை | இரு பக்க வாய்ப்பையும் இழந்து இடையில் மாட்டிக்கொண்ட நிலை | the state of being left in the middle having lost both options |
| திரிசமன் | கையாடுதல், அபகரித்தல் போன்ற தகாத செயல் | misdeed (such as swindling) |
| திரிசூரணம் | (வைணவ சமயக் குறியான நாமத்தில்) சிவப்பு நிறக் கோடு போடப் பயன்படுத்தும் பொடி | the powder for the red middle line of the Vaishnava religious mark |
| திரிசூலம் | மூன்று முனைகளை உடைய உலோகத்தாலான நீண்ட ஆயுதம் | trident |
| திரித்துவம் | பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருமித்த கடவுள் | (Holy) Trinity |
| திரு2 | இறைவனோடு தொடர்புடைய அல்லது மங்கலமான சொற்களுக்கு முன் இடப்படும் அடை | a prefix added to holy or auspicious objects, etc திருக்கோயில்/ திருவடி/ திருமாங்கல்யம் |
| திருக்கண்ணமுது | பாயசம் | a kind of liquid pudding |
| திருக்கல்யாணம் | (கோயில்களில்) தெய்வங்களுக்கு நடத்திவைக்கப்படும் திருமண உற்சவம் | (in temples) a wedding festival conducted for the deities |
| திருக்காப்பு | கோயில் கதவு | door of a temple |
| திருக்கை | முட்கள் அடர்ந்த நீண்ட கூரிய வாலை உடைய தட்டையான கடல் மீன் | sting ray |
| திருகாணி | பிளவுபட்டதைப் போன்ற தலைப் பகுதியையும் மரையோடு கூடிய கீழ்ப்பகுதியையும் கொண்ட, திருகி உள்ளே செலுத்தக் கூடிய ஆணி | screw |
| திருகு1 | (திருகாணி முதலியவற்றை) சுற்றி உட்செலுத்துதல் | turn |
| திருகுதாளம் | மாறுபட்ட பேச்சு அல்லது புரட்டுச் செயல் | trick |
| திருச்சபை | அமைப்பு ரீதியில் செயல்படும் கிறித்தவச் சமூகம் | the Church |
| திருட்டு1 | தனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுக்கும் முறையற்ற செயல் | theft |
| திருட்டுப்போ | (பணம், பொருள் முதலியன) திருடப்படுதல் | be stolen |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.