Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| மினுமினு | (விட்டுவிட்டு) பிரகாசத்துடன் ஒளிர்தல் | shine brightly but intermittently |
| மினுமினுப்பு | (விட்டுவிட்டுப் புலப்படும்) ஒளிர்வு | glitter |
| மீசை | (ஆணின்) மேல் உதட்டில் இருக்கும் முடி | moustache |
| மீட்சி | (ஒரு நிலையிலிருந்து) விடுபடுதல் | redemption |
| மீட்டு1 | (வீணை போன்ற இசைக் கருவிகளின்) தந்தியை விரலால் அதிரச்செய்தல் | pluck the strings (of musical instruments) |
| மீட்டு2 | (அடகு வைத்ததை) திரும்பப் பெறுதல் | get back (what is pledged) |
| மீட்டு3 | நினைவுகூர்தல் | recall |
| மீட்பு | (வெள்ளம், பூகம்பம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை) காப்பாற்றும் நடவடிக்கை | rescue |
| மீண்டும் | (செயலை) மறுபடியும் | again |
| மீதம் | மீதி | (what is) left |
| மீதான | (ஒருவர்) மேல் உள்ள | against |
| மீதி | மிச்சம் | that which is left over |
| மீள்2 | (விபத்து, ஆபத்து முதலியவற்றில் சிக்கியவர்களை) காப்பாற்றுதல் | rescue |
| மீறல் | (சட்டம், உரிமை முதலியவற்றை) மீறும் செயல் | violation (of rules, rights, etc.) |
| மீறு | (சட்டம், விதி போன்றவற்றை) பின்பற்றாமல் விடுதல் | transgress |
| மீன்காட்சியகம் | விதவிதமான மீன்களும் பிற நீர்வாழ் உயிரினங்களும் நீர் நிறைந்த கண்ணாடிப் பெட்டிக்குள் உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம் | aquarium |
| மீன்கொத்தி | (ஆறு, குளம் முதலிய நீர்நிலைகளில் உள்ள மீன்களைப் பிடித்துத் தின்னும்) நீண்ட அலகுடன் நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் ஒரு சிறு பறவை | kingfisher |
| மீனம் | மீனைக் குறியீட்டு வடிவமாக உடைய பன்னிரண்டாவது ராசி | twelfth constellation of the zodiac having fish as its sign |
| மீனவன் | மீன் பிடிக்கும் தொழிலாளி | fisherman |
| முக்கல் | முக்கும் செயல் | groan made while struggling |
| முக்காடு | தலையை மறைத்துத் தொங்கும்படி விட்டிருக்கும் துணி | cloth covering the head |
| முக்கால் | நான்கில் மூன்று பகுதி | three quarters |
| முக்கால் புள்ளி | எழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தில் விளக்கம், எடுத்துக்காட்டு முதலியவை தரப்படுவதற்கு முன் பயன்படுத்தும் ( என்னும்) குறி | colon |
| முக்காலி | (உட்காருவதற்கான அல்லது பொருள்களை வைப்பதற்கான) மூன்று கால்கள் கொண்ட (சாய்வதற்கு முதுகு இல்லாத) இருக்கை | stool with three legs |
| முக்காலும் | பெரும்பாலும் | mostly |
| முக்கிமுனகி | (ஒன்றைச் செய்வதற்கு) மிகவும் சிரமப்பட்டு | with much difficulty |
| முக்கியத்துவம் | முக்கியம் பொருந்திய தன்மை | importance |
| முக்கியம் | (-ஆக, -ஆன) உடனடிக் கவனத்தை வேண்டுவதாக அல்லது இன்றியமையாத தன்மை கொண்டதாக இருப்பது | that which is important or main or significant |
| முக்கியமாக | குறிப்பாக | particularly |
| முக்கியஸ்தர் | செல்வாக்கும் சிறப்பும் உடையவர் | person of importance |
| முக்கு1 | (ஒரு செயலைச் செய்வதற்காக) மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி அழுத்தம் தருதல் | strain |
| முக்கு2 | (நீர் முதலிய திரவத்தில்) முழுக்க நனையச்செய்தல் | dip |
| முக்கு3 | (சாலை, தெரு முதலியவற்றின்) முனை | corner (of a street, etc.) |
| முக்குளி | (நீரில்) அமிழ்ந்து உள்ளே செல்லுதல் | dive |
| முக்கோணம் | மூன்று பக்கங்களையும் மூன்று கோணங்களையும் உடைய ஒரு வடிவம் | triangle |
| முகடு | (மலை) உச்சி | peak |
| முகத்தலளவை | படி, மரக்கால் போன்றவற்றைக் கொண்டு திரவங்களையும் தானியங்களையும் முகந்து அளவிடும் முறை | measure of quantity |
| முகத்தான் | பொருட்டு | with the intention of |
| முகத்திரை | முகத்தை மறைக்கும் முறையில் போட்டுக்கொள்ளும் மெல்லிய துணி | veil |
| முகத்துவாரம் | கழிமுகம் | mouth of a river |
| முகப்படாம் | யானையின் மத்தகத்தில் போடும் அலங்காரத் துணி | ornamental cloth put on the head of an elephant |
| முகப்பு | (வீடு, கட்டடம் முதலியவற்றின்) வாசலும் வாசலை ஒட்டிய பகுதியும் | front part (of a house, etc.) |
| முகப்பூச்சு | (ஒப்பனைக்காக) முகத்தில் பூசிக்கொள்ளும் பசை அல்லது மாவுப் பொருள் | painting or powder for the face |
| முகபாவம் | உணர்ச்சியைக் காட்டும் முகத் தோற்றம் | facial expression |
| முகம்கொடுத்துப் பேசு | (இன்முகம் காட்டி) மதித்துப் பேசுதல் | talk directly and in a friendly way |
| முகமதியர் | இஸ்லாமியர் | followers of the Prophet Muhammad |
| முகமன் | (ஒருவரை) புகழ்ந்து கூறும் சொற்கள் | flattery |
| முகமூடி | முகத்தை மறைத்து அணிந்துகொள்ளும், கண் மட்டும் தெரியும்படியான திறப்பை உடைய தோல், துணி முதலியவற்றாலான சாதனம் | mask (of cloth, paper, etc.) |
| முகர்1 | வாசத்தை உணர்தல் | smell |
| முகர்2 | முகத்தல் | take (water in a vessel) |
| முகராசி | முகத்தின் வசீகரத் தோற்றம் | pleasing countenance |
| முகவர் | (ஓர் அமைப்பின், நிறுவனத்தின் சார்பாக) பொருள் வாங்கி விற்பனைசெய்து கழிவுத்தொகை பெறுபவர் | agent (of an organization, firm, etc.) |
| முகவரி | (வசிக்கும் அல்லது பணிபுரியும்) ஊர், தெருவின் பெயர், கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு | address (of a person, etc.) |
| முகவாய்/முகவாய்க் கட்டை | கீழ்த்தாடையின் குறுகிய பகுதி | chin |
| முகவுரை | உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரை | preface |
| முகவெட்டு | (பெரும்பாலும் திரைப்படத்தில், நாடகத்தில் பாத்திரம் ஏற்பவருக்கு வேண்டிய) முகத் தோற்றம் | facial features |
| முகஸ்துதி | புகழ்ச்சி | flattery |
| முகாந்தரம்/முகாந்திரம் | ஆதாரம் | basis |
| முகாமையாளர் | மேலாளர் | manager |
| முகிழ் | தோன்றுதல் | appear |
| முகூர்த்தம் | (திருமணத்தில் குறித்த நல்வேளையில் நடத்தும்) தாலி கட்டும் நிகழ்ச்சி | the main event of tying the தாலி (in a wedding ceremony in an auspicious hour) |
| முகை | அரும்பு | bud |
| முங்கு | திரவத்தினுள் செல்லும்படி அமிழ்தல் | dip |
| முச்சந்தி | மூன்று சாலைகள் கூடும் இடம் | junction of three streets |
| முசுக்கட்டை1 | கம்பளிப்பூச்சி | hairy caterpillar |
| முசுக்கட்டை2 | ரம்பத்தின் பற்களைப் போன்ற இலைகளையும் கம்பளிப்பூச்சி போன்ற பழங்களையும் உடைய ஒரு வகைக் குத்துச்செடி | mulberry |
| முசுடு1 | சிடுமூஞ்சி | irritable person |
| முசுடு2 | (மரங்களில் அதிகமாக இருக்கும்) பழுப்பு நிறப் பெரிய எறும்பு | a kind of big brown ant |
| முசுப்பாத்தி | வேடிக்கை | amusement |
| முட்ட | நிறைந்து காணும்படி | filling up the entire space |
| முட்டாள் | (பெரும்பாலும் வசைச் சொல்லாக) அறிவைப் பயன்படுத்தத் தெரியாததால் பிறரால் குறைவாக மதிப்பிடப்படும் நபர் | fool |
| முட்டி2 | (பெரும்பாலும் கள் இறக்குவதற்குப் பயன்படுத்தும்) கலயம் | an earthen pot with a narrow mouth (used mostly for collecting toddy from palm trees) |
| முட்டிக்கால் | முழங்கால் | knee |
| முட்டிக்கொள் | (ஒருவர் செய்ய இருக்கும் செயலால் நல்ல பயன் கிடைக்காது என்பது தெரியும்போது அதைக் கைவிட) வற்புறுத்திச் சொல்லுதல் | make strong and repeated (but futile) pleas |
| முட்டிபோடு | (தண்டனையாக) மண்டிபோடுதல் | kneel down (as punishment) |
| முட்டிமோது | அலைமோதுதல் | surge up |
| முட்டு2 | (ஒன்று விழாமல்) தாங்கும் அல்லது (நகராமல்) தடுக்கும் கட்டை முதலியவை | prop |
| முட்டுக்கட்டை | முட்டாகக் கொடுக்கும் கட்டை | post used as a prop |
| முட்டுச்சந்து | மேற்கொண்டு செல்ல முடியாமல் முடிந்துவிடுகிற சந்து | blind alley |
| முட்டுப்பாடு | தடை | trouble |
| முட்டை1 | (பறவைகளில், ஊர்வனவற்றில் பெண்ணினம் இடும்) குஞ்சு வளர்வதற்கான கருவைக் கொண்ட நீள் கோள அல்லது உருண்டை வடிவப் பொருள்/(குறிப்பாக உண்பதற்குப் பயன்படுத்தும்) கோழி முட்டை | egg/(esp |
| முட்டை2 | வறட்டி | dried cow dung (used as fuel) |
| முட்டைக்கோஸ் | வெளிர்ப் பச்சை நிற இலைகளை அடுக்கடுக்காகக் கொண்ட உருண்டையான ஒரு காய்கறி | cabbage |
| முடக்கம் | தடை ஏற்பட்ட அல்லது தடுக்கப்பட்ட நிலை | stoppage |
| முடக்குவாதம் | பக்கவாதம் | paralysis |
| முடங்கு | (செயல்பாடு தொடராதபடி) தடைப்படுதல் | be hindered |
| முடம் | கை அல்லது கால் செயல்பட முடியாத நிலை | crippled condition of leg or arm |
| முடவன் | காலில் குறைபாடு உள்ளவன் | lame (person) |
| முடி6 | உடம்பில் (குறிப்பாகத் தலையில்) வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய இழை | hair |
| முடி7 | முடிச்சு | knot |
| முடிச்சு1 | அவிழவோ பிரிந்துவரவோ முடியாதபடி ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பது | knot |
| முடிசூட்டுவிழா | (அரசப் பரம்பரையில் வந்த ஒருவர்) ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு அடையாளமாக அவருக்கு கிரீடம் சூட்டும் நிகழ்ச்சி | coronation |
| முடிசூடு | (முடி தரித்து) அரசாட்சியை ஏற்றல் | crown |
| முடிதிருத்தகம் | முடியைக் குறைத்து அல்லது திருத்தி அழகுபடுத்தும் கடை | hairdressing salon |
| முடிப்பு | (பணம், நகை முதலியவற்றைத் தொகுத்து) துணி போன்றவற்றில் கட்டி வைத்திருப்பது | (money, pieces of jewellery) wrapped (in a cloth) or tied up |
| முடியரசு/முடியாட்சி | அரசரால் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சி | monarchy |
| முடிவு | தொடங்கியதற்கு இறுதி | end |
| முடிவுசெய் | முடிவுகட்டுதல் | decide |
| முடிவுரை | முடித்துவைக்கும் முறையில் பேசும் பேச்சு அல்லது எழுதும் எழுத்து | concluding speech or remark |
| முடிவெட்டு | தலைமுடியைக் கத்தரித்துச் சீர்செய்தல் | have or do a haircut |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.