Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
குறும்பா ஐந்து அடி கொண்ட நகைச்சுவைப் பாங்கான செய்யுள் வடிவம்limerick
குறும்பி (காதினுள் சேரும்) மெழுகு போன்ற மஞ்சள் நிறப் பொருள்ear-wax
குறும்பு (-ஆன) சிறு தொல்லை தரும் விளையாட்டுச் செயல்/ மகிழ்விக்கும் விளையாட்டுத்தனம்playful act
குறுமணல் மென்மையான, சன்னமான மினுமினுப்புடன் கூடிய மணல்fine sand
குறுவை (வைகாசி வாக்கில் தொடங்கி ஆவணி வாக்கில் அறுத்து முடித்துவிடக் கூடிய) முதலில் சாகுபடிசெய்யும் நெற் பயிர்the first crop of paddy (cultivated during May/June
குறை1(இருக்கும் அல்லது எதிர்பார்க்கும் எண்ணிக்கை, அளவு முதலியவை) கீழ் இறங்குதல்come down (in number, in quantity)
குறை2(இருக்கும் அல்லது எதிர்பார்க்கும் எண்ணிக்கை, அளவு முதலியவற்றிலிருந்து அதைவிட) சிறிய எண்ணிக்கை, அளவு முதலியவற்றிற்குக் கொண்டுவருதல்reduce (the number, capacity, etc.)
குறை3வேண்டுவது கிடைக்காத நிலைwants
குறைகூறு குற்றம்சாட்டுதல்find fault with
குறைச்சல் தேவைlacking (implying the contrary)
குறைந்த அதிகம் இல்லாதnot high
குறைந்த அளவு/குறைந்தபட்சம் மேலும் குறைக்க முடியாத அளவுminimum
குறைந்தது குறைந்த அளவுminimum
குறைநிறை (பெரும்பாலும் பன்மையில்) ஏற்றுக்கொள்ளத் தகுந்ததும் தகாததும்plus and minus (points or features)
குறைப்பிரசவம் ஆரம்ப மாதங்கள் கழிந்த பின் கருப்பையிலிருக்கும் கரு சிசுவாக முழு வளர்ச்சியடைவதற்கு முன்பு வெளிப்படுதல்miscarriage (after the initial months of pregnancy)
குறைப்பு (எண்ணிக்கையில்) குறைத்தல்reduction
குறைபடு வருத்தத்தை வெளிப்படுத்துதல்complain
குறைபாடு குறை3 (முதல் மூன்று பொருளிலும் ஆறாவது பொருளிலும்)see குறை3 (in the senses of 1, 2, 3 and 6)
குறைமாதம் பிரசவத்திற்கான நிறைமாதம் அல்லாத காலம்premature time (in childbirth)
குறைவு அதிகம் என்று கூற முடியாததுlow
குன்று1(முன்பு இருந்த நிலைக்கும்) கீழ் வருதல்become less (from the previous norm, standard, etc.)
குன்று2(தொடர்ச்சியாக இல்லாத, உயரம் குறைந்த) சிறு மலை(bare) hill
குனி (தலை அல்லது உடல்) கீழ் நோக்குதல்(of head or body) bend
குஷ்டம்/குஷ்டரோகம் தொழுநோய்leprosy
குஷ்டரோகி தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்leprosy patient
குஷி குமிழியிடும் மகிழ்ச்சிbubbling enthusiasm
குஸ்தி மல்யுத்தம்wrestling
கூக்குரல் (ஒருவர் அல்லது பலர் எழுப்பும்) உரத்த, தெளிவான சத்தம்(இனம்கண்டுகொள்ளக் கூடிய) கூச்சல்scream
கூகை குரங்கு முகமும் வெளிர் மஞ்சள் நிறமும் உடைய ஆந்தைbarn owl
கூச்சம் (இயல்புக்கு ஒவ்வாத ஒன்றால் ஒருவருக்கு ஏற்படும்) தயக்க உணர்வுdelicacy
கூட்டணி தனித்தனியான அணிகள் ஒரு திட்டத்தை அல்லது சில கொள்கைகளை மேற்கொண்டு இணைந்து செயல்பட வகுக்கப்பட்ட அமைப்புfront (of individual units or parties to work with a common programme)
கூட்டத்தொடர் (ஒரு நாட்டின் பாராளுமன்றம் முதலியவற்றின்) குறிப்பிட்ட காலம்வரை உறுப்பினர்கள் நாள்தோறும் கூடும் கூட்டம்session (of parliament, etc.)
கூட்டம் திரண்டிருக்கும் மக்கள்crowd
கூட்டமைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களின் இணைப்புassociation of more than one union, etc
கூட்டல் எண்ணோடு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் முறைaddition (in arithmetic)
கூட்டறிக்கை (நாடுகள் அல்லது அமைப்புகள்) ஒன்றாகச் சேர்ந்து விடுக்கும் அறிக்கைjoint communique
கூட்டாஞ்சோறு அரிசியுடன் பல விதமான காய்கறிகளை நறுக்கிப் போட்டுப் பருப்பும் சேர்த்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைச் சாதம்a dish prepared by cooking rice along with a variety of vegetables
கூட்டாட்சி ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் சேர்ந்து அமைக்கும் அரசுcoalition government
கூட்டாளி ஒரு செயலில் ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்associate
கூட்டிக்கொண்டு (தன்னுடன்) கூட்டாகச் சேர்த்துtogether with
கூட்டிக்கொண்டு செல் (இருக்கிற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு) அழைத்துக்கொண்டு செல்லுதல்take along
கூட்டிவை (சாம்பார், ரசம் போன்றவை தயாரிப்பதற்கு) வேண்டிய மசாலாப் பொருள்களை அரைத்துக் கலத்தல்mix the ingredients (to make சாம்பார், ரசம், etc.)
கூட்டு1(குப்பையை) வாரிச் சேர்த்தெடுத்தல்(குப்பை நிறைந்திருக்கும் இடத்தை) பெருக்குதல்gather up (the rubbish with a broom)
கூட்டு2(தொழிலில், வேலையில்) பங்கு அல்லது துணைsharing
கூட்டு3ஒரு காய்கறியை நறுக்கி வேக வைத்துப் பருப்பு, தேங்காய் முதலியவை சேர்த்து (திரவ நிலையில்) தயாரிக்கும் ஒரு தொடுகறிpieces of a vegetable cooked and mixed with lentils, coconut, etc, for serving as a side dish (in a semi-solid state)
கூட்டுக்குடும்பம் (சொத்தைப் பிரித்துக்கொள்ளாமல்) இணைந்து வாழும் குடும்ப முறைjoint family (with undivided property)
கூட்டுச்சேராக் கொள்கை வல்லரசு நாடுகளுடன் சேராமல் தனித்துச் செயல்படுவதைக் கடைப்பிடிக்கும் கொள்கைprinciple of non-alignment
கூட்டுச்சொல் தனிப் பொருளைத் தரும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சொற்களின் கூட்டுcompound (word)
கூட்டுப்பண்ணை பலர் ஒன்றுசேர்ந்து கூட்டுறவு முறையில் நிர்வகித்து லாபத்தைத் தக்கவாறு பிரித்துக்கொள்ள அமைத்த விவசாயப் பண்ணைco-operative farm
கூட்டுப்புழு முழு வடிவம் பெறுவதற்கு முன்னால் தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்ட கூட்டினுள் இருக்கும் (சில வகைப் பறக்கும் பூச்சிகளின்) புழுcocoon
கூட்டுப்பெருங்காயம் பிற பொருள்களைக் கலந்து தயாரித்த பெருங்காயம்compound asafoetida (manufactured for cooking purpose)
கூட்டுவட்டி (கடன் கொடுத்த அல்லது வாங்கிய பணத்துக்கு) ஒவ்வொரு ஆண்டு வட்டியும் அசலோடு சேர்க்கப்பட்டு அந்தக் கூட்டுத் தொகைக்குக் கணக்கிடப்படும் வட்டிcompound interest
கூட்டுறவு (-ஆக) (இசைவான) ஒத்துழைப்புco-operation
கூட்டெழுத்து (தமிழில்) மெய்யெழுத்தையும் உயிர்மெய்யெழுத்தையும் சேர்த்து எழுதிய (முன்பு வழக்கில் இருந்த) வரிவடிவம்(in Tamil) joined form of a consonant and consonant-vowel (not in vogue)
கூட1(குறிப்பிடப்படுவதோடு) இன்னும் கூடுதலாகin addition (to that)
கூடக்குறைய (எடுத்துக்கொண்ட அளவிலிருந்து அல்லது எண்ணிக்கையிலிருந்து) அதிகமாக வேறுபடாமல்a little more or a little less
கூடகோபுரம் பல நிலைகளையுடைய கோபுரம்(temple) tower with many tiers
கூடம்1(வீட்டின் பிற அறைகளுக்குச் செல்வதற்கு முன் இருப்பதும்) பலர் இருப்பதற்கு ஏற்றதாகவும் உள்ள நடு அறை(spacious) central room or hall (that leads to other rooms of the house)
கூடமாட (ஒருவர் செய்யும்) காரியத்துக்குத் துணையாகlending a helping hand
கூடல் (ஆண்பெண்) புணர்ச்சிcopulation
கூடவே மேலும்along with
கூடாது ஒரு செயலைச் செய்யத் தடை விதிக்கும் சொல்a prohibitive
கூடாரம் கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத கனத்த துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்புtent
கூடிய (ஒன்றோடு) இணைந்திருக்கிறhaving in addition
கூடியமட்டும் (ஒருவரால்) ஒன்றைச் செய்ய முடிந்த அளவுas far as possible
கூடியவிரைவில் மிகக் குறுகிய காலத்தில்at the earliest
கூடிவா (ஒன்றைச் செய்ய நேரம், காலம்) ஒத்துவருதல் அல்லது ஏற்றதாக அமைதல்(of time) be appropriate
கூடு1(ஓர் இடத்தில்) வந்து சேர்தல்gather
கூடு3(பறவை, தேனீ, பூச்சி முதலியவை) அமைத்துக்கொள்ளும் வசிப்பிடம்(of birds, bees, etc.) nest, hive, web, etc பறவைகள் தங்கள் கூட்டிற்குத் திரும்பின
கூடுதல் (-ஆக, -ஆன) (குறிப்பிட்ட அளவுக்கு) அதிகம்excess
கூடும் கூற்றை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியம் ஓரளவுக்காவது இருக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் ஒரு வினைமுற்றுa predicate form expressing the idea of likelihood or a possibility
கூடுமானவரை(யில்) (ஒன்றைச் செய்வதில்) எந்த அளவு முடியுமோ அந்த அளவுas far as possible
கூடை மூங்கில் பிரம்பு, நார் முதலியவற்றால் பின்னிச் செய்யும் அகன்ற வாய் உடைய பெட்டிbasket (made of bamboo, cane, wire, etc.)
கூடை நாற்காலி கூடை போன்ற அமைப்பில் செய்த ஒரு வகை நாற்காலிchair with a basket-like seat
கூடைப்பந்து ஆடுகளத்தின் இரு புறமும் அமைக்கப்பட்டிருக்கும் கம்பத்தில் உள்ள கம்பி வளையத்தினுள் பந்தை (இரு அணியினராகப் பிரிந்து) போடும் விளையாட்டுbasket ball
கூண்டில் ஏற்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் நிறுத்துதல்put
கூண்டு (பறவையையோ விலங்கையோ அடைத்துவைக்க அல்லது மரக் கன்றுகளைப் பாதுகாக்க) கம்பி அல்லது கம்புகள் கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்புcage (for animals)
கூண்டு வண்டி மேல்புறம் வளைவான கூரை போடப்பட்ட மாட்டு வண்டி(bullock) cart with a covered top
கூண்டோடு இனம், உறவு அனைத்தோடும்in entirety
கூத்தடி (விரும்பத் தகாத முறையில்) ஆர்ப்பாட்டமாக நடந்துகொள்ளுதல்create a noisy scene
கூத்தாடி (இகழ்ச்சியாக) நடிப்புத் தொழிலில் ஈடுபட்டவர்(contemptuously) actor
கூத்தாடு (நாட்டுப்புறக் கூத்தில்) ஆடிப் பாடி நடித்தல்act, sing and dance (in folk play)
கூத்தியாள் வைப்பாட்டி(derogatorily) mistress
கூத்து (பெரும்பாலும் புராண, இதிகாசக் கதைகளைக்கொண்டு) ஆடிப் பாடி நடிக்கும் நாட்டுப்புற (மேடை) கலைfolk (stage) play (based mainly on puranic or epic episodes)
கூந்தல் (பெண்களின்) தலைமுடிflowing hair (of a woman)
கூந்தல்பனை இறகு போன்ற ஓலையுடைய கிளைகளில் சடைசடையாகப் பூக்கள் தொங்கும் ஒரு வகைப் பனை மரம்a variety of palm
கூப்பிடுதூரம் ஒருவர் கூப்பிடுவது கேட்கும் தூரம்hailing distance
கூப்பு1(வணங்கும்போது) உள்ளங்கை ஒன்றோடு ஒன்று தொடும்படி (கைகளை) மார்புக்கு நேராக இணைத்தல்join (the palms together and bring them in front of the chest as in paying respects)
கூப்பு2(வனத் துறை) குத்தகைக்கு விடும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்களின் தொகுப்புan area of a forest where felling of trees is leased
கூம்பு1(மலரின் இதழ்கள்) ஒன்றாக இணைதல்(of the petals of flower) come close together (to a cone shape)
கூம்பு2ஒரு முனை வட்டமாகவும் மறு முனை கூராகவும் உள்ள வடிவம்cone (form)
கூர்2(ஊசி, கத்தி போன்றவற்றில்) குத்தும் அல்லது வெட்டும் முனைsharp tip or edge (of a blade, nail, etc.)
கூர்க்கா நேபாள நாட்டிலிருந்து வந்து (தமிழ்நாட்டில்) காவல் காக்கும் பணிசெய்பவர்(in Tamil Nadu) a Nepali employed as a guard (in a factory or a house)
கூர்த்த/கூர்ந்த நுட்பமான (அறிவு)sharp (intellect)
கூர்மை (கத்தி, அரிவாள் முதலியவற்றின் ஓரப் பகுதியின்) வெட்டும் பதம்(ஊசி, ஆணி முதலியவற்றின் முனையின்) கிழிக்கும் அல்லது குத்தும் தன்மை(of knife, sickle, etc.) sharpness
கூரான/கூரிய கூர்மையை உடையpointed
கூரை (ஓடு, ஓலை முதலியவற்றால்) சாய்வாகவோ (சிமிண்டு முதலியவற்றால்) சமதளமாகவோ அமைக்கப்படும் கட்டடத்தின் மேல்பகுதிceiling
கூலி (விவசாய வேலையில் அமர்த்தப்படுபவருக்குத் தரும்) தானியம் அல்லது பணம்(daily) wage in grain or cash (for agricultural labourers)
கூலிக்கு மாரடி (கிராமங்களில் இழவு நேர்ந்த வீட்டில் பணம் பெற்று) கைகளால் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி சொல்லி அழுதல்mourn death by beating on the breast (as the hired men or women do)
கூலிப்பட்டாளம்/கூலிப்படை (போர் செய்தல், கலகம் விளைவித்தல், கிளர்ச்சியை அடக்குதல் முதலிய செயல்களுக்காக) பணம் கொடுத்துத் தற்காலிகமாக அமர்த்தப்படும் படைmercenary force
   Page 16 of 36    1 … 14 15 16 17 18 … 36

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil