Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பேரிக்காய் | கரும் புள்ளிகள் நிறைந்த வெளிர்ப் பச்சை நிறத் தோலையும், நீர்ச் சத்து மிகுந்த சதைப் பகுதியையும் உடைய உருண்டை வடிவப் பழம் | a variety of pear |
| பேரிகை | முரசு | a kind of kettledrum |
| பேரில் | (ஒன்றன்) பெயரால் | in the name of |
| பேரின்பம் | (சிற்றின்பத்தை விலக்கி) ஆன்மீகத்தால் அடையும் ஆனந்தம் | supreme bliss |
| பேரீச்சம்பழம் | பிசுபிசுப்பான, அடர் பழுப்பு நிறச் சதைப் பகுதியினுள் கொட்டையைக் கொண்ட ஒரு வகைச் சிறிய பழம் | dates |
| பேருந்து | (பயணிகள் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில்) வரிசையான இருக்கைகளுடன் கூடிய, இயந்திர விசையால் இயக்கப்படும் வாகனம் | bus |
| பேரூராட்சி | மக்கள் தொகையிலும் வருமானத்திலும் ஊராட்சியைவிட அதிகமாகவும் நகராட்சியைவிடக் குறைவாகவும் உள்ள ஊருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் உள்ளாட்சி அமைப்பு | local self-government for a town |
| பேரேடு | (அலுவலகம், வங்கி போன்றவற்றில் ஒருவரின் சேமிப்பு, வரி, கட்டணம் முதலியவற்றின்) கணக்குகள் எழுதிவைக்கப்பட்டுள்ள பெரிய தாள்களால் ஆன ஏடு | ledger |
| பேலா | சிறுகும்பா | chalice-shaped vessel |
| பேழை | (பெரும்பாலும் சந்தனக்கட்டை, தந்தம், கண்ணாடி முதலியவற்றால் செய்யும்) வேலைப்பாடு உடைய சிறு பெட்டி | casket (made of sandalwood, ivory, glass, etc.) |
| பேறுகாலம் | குழந்தை பிறக்க இருப்பதை எதிர்பார்த்திருக்கும் காலம் | confinement |
| பேன் | (தலைமுடிக்கு அல்லது உடல் ரோமங்களுக்கு இடையில் காணப்படும்) இரத்தத்தை உறிஞ்சி வாழும் கறுப்பு நிறச் சிறிய உயிரினம் | louse |
| பேன்பார் | (முடியை விலக்கிப் பார்த்து) பேன் தேடி எடுத்தல் | delouse (by picking them out) |
| பேனா | மையின் உதவிகொண்டு எழுதுவதற்கோ வரைவதற்கோ பயன்படுத்தும் சாதனம் | pen |
| பேனாக்கத்தி | பிடிக்குள் மடக்கி வைக்கக் கூடிய சிறு கத்தி | penknife |
| பேனா நண்பர் | கடிதத்தின்மூலம் நட்புக் கொள்ளும் நண்பர் | pen-friend |
| பேஜார் | (எரிச்சலைத் தூண்டும் விதமான) தொந்தரவு | (great) nuisance |
| பை | (பொருள்களைப் போட்டுவைத்தல் அல்லது போட்டு எடுத்துச்செல்லுதல் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில்) துணி, தோல், காகிதம் முதலியவற்றால் மேல்புறம் திறப்புடையதாகச் செய்யப்படும் சாதனம் | bag of various types |
| பைங்கிளி | பச்சைக் கிளி | green parrot |
| பைசல் | (வழக்குகள்) தீர்ப்பின்மூலமாகவோ (கோப்பு, மனு போன்றவை) பரிசீலனையின்மூலமாகவோ (தகராறு முதலியவை) பேச்சின்மூலமாகவோ அடையும் முடிவு அல்லது தீர்வு | disposal (of a suit, request, etc.) |
| பைசா | ரூபாயில் நூறில் ஒரு பங்கு | one hundredth of a rupee |
| பைசாசம் | பிசாசு | devil |
| பைத்தியக்கார ஆஸ்பத்திரி | உளநிலை பாதிக்கப்பட்டவருக்கான மருத்துவமனை | hospital for the mentally ill |
| பைத்தியம் | சிந்தனை ஒழுங்கிலிருந்து பிறழ்ந்த நிலை | insanity |
| பைபிள் | கிறித்தவர்களின் புனித நூல் | the Bible |
| பைய | மெதுவாக | slowly |
| பையன் | வயதில் சிறியவன் | a male who is young |
| பைரவி | துர்க்கை | the Goddess பார்வதி in one of her many forms |
| பைராகி | (வடதேசத்து) துறவி | (north Indian) ascetic |
| பைஜாமா | (பெரும்பாலும் வீட்டில் அணிந்துகொள்வதற்குப் பயன்படும்) மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத (தொளதொளவென்ற) கால்சட்டை | pyjamas |
| பொ | (பாத்திரம், துணி முதலியவற்றில்) துளை ஏற்படுதல்/துளை ஏற்படச்செய்தல் | make a hole |
| பொக்கிஷம் | (போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய) உயர்ந்த பொருள்கள் | treasure |
| பொக்கு | (கடலை, சோளம் முதலியவற்றில்) உள்ளீடு முற்றாதது | ill-developed grain |
| பொக்கை வாய் | பல் இல்லாத வாய் | toothless mouth |
| பொங்கல் | (கோவிலுக்குப் போய்) பச்சரிசியை உலையிலிட்டுப் பொங்கவைத்து நீரை வடிக்காமல் செய்யும் சாதம் | cooking the raw rice without draining the water (in front of a temple) |
| பொச்சரிப்பு | பொறாமை | jealousy |
| பொசுக்கு | (நெருப்பின் அருகில் கொண்டுசெல்வதன்மூலம்) கருகச்செய்தல்/(எரித்தோ, சுட்டோ) சாம்பலாக்குதல் | singe/burn to ashes |
| பொசுக்கு-என்று | எதிர்பாராத நேரத்தில் திடீரென்று | suddenly |
| பொசுங்கு | (நெருப்பின் அருகில் இருப்பதால்) கருகுதல்/(நெருப்பில் பட்டு) சாம்பலாதல் | be singed/be burnt |
| பொட்டல் | வறண்டு கிடக்கும் நிலப் பகுதி | a large area of barren land |
| பொட்டலம் | (தாளில் அல்லது இலையில் பொருளை வைத்து) பிரிந்துவிடாதபடி கட்டிய கட்டு | packet |
| பொட்டு2 | (மாடு, கோழி ஆகியவற்றுக்குத் தீவனமாகப் பயன்படும்) உளுந்து, துவரை முதலிய தானியங்களின் தோலோடு கூடிய பருப்பு | bits of certain unhulled grains (used as fodder) |
| பொட்டுக்கடலை | வறுத்து உடைத்த கொண்டைக் கடலையின் வெளிர் மஞ்சள் நிறப் பருப்பு | broken bengalgram |
| பொட்டை2 | (பெரும்பாலும் திட்டும்போது) குருடு | blind |
| பொட்டை நெட்டுரு | குருட்டுப்பாடம் | blind way of learning |
| பொடி1 | (பொடிய, பொடிந்து) துண்டுதுண்டாகுதல் | crumble to pieces |
| பொடி2 | தூளாக்குதல் | powder |
| பொடி3 | பொடிக்கப்பட்ட நிலையில் உள்ளது | that which is powdered or pulverized |
| பொடி4 | (வடிவத்தில்) மிகச் சிறிய அளவு | anything small |
| பொடிசு | (-ஆக) (வடிவத்தில்) பொடியாக இருப்பது | tiny or small |
| பொடிமட்டை | மூக்குப்பொடி வைத்துக்கொள்வதற்கு அளவாக வெட்டி எடுத்து மடிக்கப்பட்ட காய்ந்த வாழை மட்டை | a strip of dried folded plantain bark used for keeping snuff |
| பொடிமாஸ் | உருளைக்கிழங்கையோ வாழைக்காயையோ துருவலாக ஆக்கி மிளகாய் முதலியன சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறி | a kind of side dish made from the scrapings of potato or plantain seasoned with spices |
| பொடுகு | தலையின் தோல் வறண்டு சிறுசிறு துண்டுகளாக உரிந்துவந்து ரோமக்கால்களில் தெரியும் பொருக்கு | dandruff |
| பொத்தல் | (துணி, தாள் முதலியவற்றில்) துளை | hole (in cloth, paper, etc.) |
| பொத்திப்பொத்தி | (குழந்தைகளை வளர்க்கும் விதத்தைக் குறிக்கையில்) வாழ்க்கையின் எந்த விதச் சிரமத்துக்கும் உள்ளாக்காமல் மிகுந்த செல்லத்துடனும் பாதுகாப்புடனும் | (of rearing children) with too much concern, care |
| பொத்துக்கொண்டுவா | (ஆத்திரம், கோபம் முதலியவை) திடீரென வெளிப்படுதல் | explode (with anger, rage, etc.) |
| பொதி1 | (ஒரு பொருளைத் தாள், துணி முதலியவற்றில் வைத்து) மூடுதல் | wrap up |
| பொதி2 | (அளவில் பெரிய) மூட்டை | (large) bundle |
| பொதிப்பருவம் | பயிரின் இளம் கதிர் வெளிப்படுவதற்கு முன்பு கண்ணாடி இலையுள் பொதிந்திருக்கும் நிலை | boot stage (of the earhead) |
| பொது | (-ஆக, -ஆன) எல்லோரும் பயன்படுத்தக் கூடியது | common |
| பொது அறிவு | உலக நடப்பு, அறிவியல் முதலியவை குறித்த அடிப்படை அறிவு | general knowledge |
| பொதுஊழியர் | பொதுமக்களுக்குச் சேவைசெய்யும் அல்லது பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் துறையில் பணிபுரிபவர் | public servant |
| பொதுக்கணக்குக் குழு | அரசின் செலவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை உரிய வரம்பிற்குள் செலவிடப்பட்டுள்ளதையும் பொதுத் துறை நிறுவனங்களின் வரவுசெலவு மீதான அறிக்கையையும் பரிசீலிக்க (அமைச்சர் அல்லாத) பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு | (parliamentary) committee on public accounts (abbreviated to P |
| பொதுக்குழு | (பதிவு செய்யப்பட்ட) ஓர் அமைப்பின் எல்லா உறுப்பினர்களையும் கொண்ட, ஆண்டுக்கு ஒரு முறையாவது கூடும் குழு | general body (of a registered society, association, etc.) |
| பொதுக்கூட்டம் | (அழைப்பின் பேரில் அல்லாமல்) அனைவரும் கலந்துகொள்ள அனுமதித்து நடத்தும் கூட்டம் | public meeting |
| பொதுச்செயலர் | ஓர் அமைப்பின் அன்றாட அலுவல்களைக் கவனிக்கப் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பு வகிப்பவர் | general secretary (of any body) |
| பொதுத்தேர்தல் | (இந்தியாவில்) பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க (ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை) நாடு முழுவதும் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு | general election |
| பொதுத்தேர்வு | நாடு அல்லது மாநில அளவில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரே நாளில் ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்வு | public examination |
| பொதுநலம் | சமுதாயத்துக்கு உண்டாகும் பயன் அல்லது நன்மை | common good |
| பொதுநிறம் | மாநிறம் | (of complexion) neither dark nor fair |
| பொதுப்படை-ஆக/-ஆன | (ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி) குறிப்பிடுவதாக இல்லாமல்/குறிப்பிடுவதாக இல்லாத | in a general way/general |
| பொதுப்பணித் துறை | சாலைகள், பொதுக் கட்டடங்கள், பாசன வடிகால்கள் போன்றவற்றின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணியைச் செய்யும் அரசுத் துறை | public Works Department (abbreviated to P |
| பொதுப்பெயர் | இனப் பொருள்கள் அனைத்தையும் குறிப்பிடும் பெயர் | general name |
| பொதுபொது-என்று | (மண், காகிதம் முதலியவை ஈரத்தால்) இறுக்கம் இல்லாமல் அல்லது விறைப்பு இழந்து தளர்வாக | in a loose or soft manner |
| பொதுமக்கள் | (பிரபலமடைந்தவரைத் தவிர்த்து) ஒரு நாட்டின் அல்லது ஊரின் மக்கள் | the general public |
| பொதுமன்னிப்பு | அரசியல் குற்றவாளிகள் அனைவருக்கும் கொள்கை அடிப்படையில் அரசு ஒட்டுமொத்தமாக வழங்கும் மன்னிப்பு | amnesty |
| பொதுமு | (நீரில்) ஊறிப் பருத்தல் | bloat (being soaked in water) |
| பொதுமை | அனைத்துக்கும் அல்லது அனைவருக்கும் பொதுவானது | universality |
| பொதுவாக்கெடுப்பு | பொதுமக்களின் கருத்தை அறிகிற விதத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பு | referendum |
| பொதுவாக | (கவனித்ததன் அடிப்படையில்) பெரும்பாலும் | generally |
| பொதுவாழ்வு | (ஒரு நபர் ஆற்றும்) மக்கள் நல்வாழ்விற்கான பணி | public life |
| பொதுவுடைமை | உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பு, தேவைக்கு ஏற்ற பங்கீடு கிடைக்கச் செய்ய வேண்டும், வர்க்கபேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு | communism |
| பொந்து | (மரம், சுவர், நிலம் முதலியவற்றில்) தானாக ஏற்பட்டிருக்கும் குழிவு | hole |
| பொம்மலாட்டம் | பாவைக்கூத்து | puppet show |
| பொம்மை | (மரம், மண் போன்றவற்றில்) நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள் | toy |
| பொம்மை ஆட்சி | நியமிக்கப்பட்ட ஒருவர் அதிகாரம் எதுவும் இல்லாமல் பிறரால் இயக்கப்பட்டு நடத்தும் ஆட்சி | puppet regime |
| பொய்1 | (மழை) எதிர்பார்த்த நேரத்தில் பெய்யாமலிருத்தல் | (rain) fail |
| பொய்2 | நடப்பில் இல்லாதது அல்லது நிகழாதது | lie |
| பொய்க்கால் | (சில வகை ஆட்டங்களில் தன்னை உயரமாகக் காட்டிக்கொள்ள) காலில் கட்டிக்கொள்ளும் கால் போன்ற மரக்கட்டை | stilts (in some forms of dances) |
| பொய்க்கால் குதிரை | பொய்க்கால் பொருத்தி இடுப்பில் குதிரைப் பொம்மையுடன் ஆடும் நடனம் | a kind of dance with a dummy horse |
| பொய்கை | (இயற்கையாக அமைந்த) நீர்நிலை | (natural) pond |
| பொய்சாட்சி | (நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு முதலியவற்றில் உள்நோக்கத்துடனோ பணம் பெற்றுக்கொண்டோ) உண்மையை மறைத்து அல்லது திரித்துத் தரும் சாட்சியம் | false witness |
| பொய்ப்பி | பொய் என நிறுவுதல் | prove false |
| பொய்மை | உண்மை அல்லாதது | that which is unreal |
| பொய்யன் | பொய் சொல்பவன் | liar |
| பொய்யாமை | பொய் சொல்லாத தன்மை | truthfulness |
| பொரி2 | (கொதிக்கும் எண்ணெய்யில் அல்லது நெய்யில் கடுகு, அப்பளம் முதலியவற்றை) வறுத்தல் | fry (in oil) |
| பொரி3 | அரிசி, சோளம், அவல் போன்றவற்றைச் சட்டியிலிட்டு வறுத்துத் தயாரிக்கப்படும், உதிரிஉதிரியாக இருக்கும் ஒரு வகைத் தின்பண்டம் | puffed grains such as corn, etc பொரி வாங்கி வழி நெடுகத் தின்றுகொண்டே போனார்கள் |
| பொரிகடலை | பொட்டுக்கடலை | fried chick-pea |
| பொரியல் | காய்கறியை அல்லது முட்டையைப் பச்சையாகவோ வேகவைத்தோ எடுத்துப் பொரித்துச் செய்யும் தொடுகறி | fried vegetables or scrambled egg |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.