Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
முழம்போடு முழத்தில் அளத்தல்measure
முழவு முரசுdrum
முழு பிரிக்கப்படாத, குறைக்கப்படாத நிலையில் உள்ளwhole
முழுக்க முழுவதும்whole of
முழுக்கமுழுக்க (வேறு யாரையும் எதையும் சார்ந்திருக்காமல்) முழு அளவில்entirely
முழுக்காட்டு குளிக்கச்செய்தல்bathe
முழுக்கு நீரில் தலை அமிழக் குளித்தல்bathing in a river, etc immersing oneself
முழுகாமல் இரு கருத்தரித்தல்be pregnant
முழுகு நீர்ப்பரப்பின் உட்செல்லுதல்go in
முழுது முழுமைentirety
முழுநீள (கதை, திரைப்படம் முதலியவை குறித்து வருகையில்) வழக்கமாக எதிர்பார்க்கப்படும் நீளத்திலும் குறிப்பிடப்படும் தன்மையிலும் உள்ள(of story, film, etc.) full length
முழுநேர ஒரு நாளில் ஒரு பணிக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் கால அளவிற்குக் குறையாத(of a job) full time
முழுமனத்தோடு தயக்கமோ அதிருப்தியோ இல்லாமல் முழு விருப்பத்தோடுwholeheartedly
முழுமனதாக/முழுமனதான முழுமனத்தோடுwholeheartedly/wholehearted
முழுமுதல் இறைவன்god (the sole cause)
முழுமை குறைகளோ தடங்கலோ இல்லாத இயல்பான இறுதிcompletion
முழுவதற்கும் மொத்த அளவிற்கும்to the whole or entire
முழுவதும் (இடத்தின்) எல்லாப் பகுதியிலும்(காலத்தின்) விட்டுப்போகாத மொத்த அளவிலும்(of place) entire
முழுவீச்சில் (ஒரு செயல்) வேகமாகவும் தீவிரமாகவும்in full swing
முள் (தாவரத்தின் தண்டு, இலை, கிளை முதலிய பகுதியில்) மெல்லியதாகக் கூரிய முனையுடன் சற்று நீட்டிக்கொண்டிருக்கும் பகுதிthorn
முள் கரண்டி (உணவுப்பொருளைக் குத்தி எடுத்துச் சாப்பிடுவதற்குப் பயன்படக் கூடிய வகையில்) முன் பகுதியில் கூரிய முனைகளை உடைய சாதனம்fork
முள்வாங்கி (கால் முதலியவற்றில் தைத்த முள்ளை) பிடித்து இழுப்பதற்கான இரு கூரிய முனைகளை உடைய கருவிthorn pincers
முள்வேலி முள் நிறைந்த கிளைகளால் ஏற்படுத்திய தடுப்புfence made of thorny branches of trees
முள்ளங்கி (சமையலில் பயன்படுத்தும்) வெள்ளை நிறத்தில் அல்லது வெளிர்ச் சிவப்பு நிறத்தில் கூம்பு போன்ற வடிவத்தில் உள்ள ஒரு காய்a kind of radish
முள்ளந்தண்டு முதுகெலும்புbackbone
முள்ளம்பன்றி (தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு) உடலின் மேல்பகுதி முழுதும் முள் போன்ற கூர்மையான மயிர்கள் நிறைந்ததும் குட்டையான கால்களை உடையதுமான ஒரு சிறிய காட்டுவிலங்குporcupine
முள்ளெலும்பு (முதுகுத்தண்டு ஊடாகச் செல்லும்) நடுவில் துளை உடையதும் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி அமைந்திருப்பதுமான வளைய வடிவிலான எலும்புvertebra
முளை1(தாவரம்) புதிதாகக் கிளம்பி வெளி வருதல்(தாவரத்தில்) இலைகள் தோன்றுதல்(of plants) grow
முளை2புதிதாகக் கிளம்பி மேலே வரும் தாவரப் பகுதி(tender) shoot
முளை3கூர்மையான நுனி உடைய சிறிய மரத் துண்டுpeg stump
முளைக்கீரை இளம் சிவப்பு நிறக் காம்புடைய சிறுசிறு இலைகளைக் கொண்ட கீரை வகைa kind of greens
முளைகட்டு (ஊறவைத்த விதையை நீரில்லாமல் மூடிவைத்து) முளைவரும்படி செய்தல்process pulses by making them sprout
முளைப்பாரி/முளைப்பாலிகை (திருமணம் போன்ற சடங்குகளில் வைக்கப்படும்) முளைவிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மட்பாண்டம்pot in which nine kinds of sprouted seeds are kept (used in wedding rituals)
முளைப்பு விதைகள் முளைக்கும் செயல்(of plants, seeds) germination
முளைவிடு (விதை போன்றவற்றிலிருந்து) முளை கிளம்புதல்germinate
முற்பகல் நண்பகலுக்கு முன் உள்ள காலம்forenoon
முற்பட்ட (காலத்தில்) முந்தியprior (in time)
முற்பட்ட வகுப்பு கல்விக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் அரசின் விசேஷக் கவனம் தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்ட இனம்the communities not included in the list of backward communities, scheduled castes and tribes
முற்படு (ஒரு செயலைச் செய்ய) முயலுதல் அல்லது தொடங்குதல்attempt or begin
முற்பிறப்பு/முற்பிறவி (இந்து மத நம்பிக்கையின்படி) தற்போதைய பிறவிக்கு முந்தைய பிறவிprevious birth
முற்போக்கு முன்னேற்றத்திற்குத் தேவையான மாற்றங்களை ஏற்கத் தயங்காத போக்குbeing progressive
முற்றம் (வீட்டின் முன்பகுதியில் வாசலை ஒட்டிய) திறந்த வெளிப்பகுதிopen courtyard (inside the house)
முற்றல் (காய்கறியைக் குறிப்பிடும்போது) அதிகமாக முற்றியது(of vegetables) overripe
முற்றாக முற்றிலும்entirely
முற்றிலும் முழுவதும்entirely
முற்றுப்புள்ளி பொருள் நிறைவான வாக்கியத்தின் இறுதியில் இடப்படும் புள்ளி(in punctuation) full stop
முற்றுப்பெறு முடிவடைதல்be completed
முற்றும்1எல்லாம்all
முற்றும்2முற்றிலும்entirely
முற்றுவினை வினைமுற்றுfinite verb
முறம் (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்wide-mouthed winnowing pan
முறி1(மரம், குச்சி, எலும்பு முதலியவை) ஒடிதல்break
முறி2தன்மை மாறுதல்change
முறி4தன்மையை மாற்றுதல்act as an antidote
முறியடி (சதி, திட்டம் முதலியவற்றை) தோல்வியடையச் செய்தல்outmanoeuvre
முறிவு (எலும்பு) உடைதல்(bone) fracture
முறுக்கு1(துணி முதலியவற்றை) சுருளும்படி திருப்புதல்wring (clothes)
முறுக்கு2முறுக்கப்பட்ட நிலைtwisted state
முறுக்கு3மாவைப் பிசைந்து நெளிவு வரும்படி கையால் சுற்றிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம்a kind of snack prepared from rice dough twisted by hand to form a ring and fried in oil
முறுக்கு நூல் இரு இழைகளைச் சேர்த்து முறுக்கி உண்டாக்கிய நூல்twisted yarn
முறுகல் (தோசை போன்ற சில உணவுப் பொருள்கள்) சூட்டால் அடையும் நீர்த்தன்மை அற்ற மொரமொரப்புthe condition of being roasted crisp
முறுகு (பாகு சூட்டால்) நீர்த்தன்மை குறைந்து இறுகுதல்(of treacle, etc.) become thick (when over heated)
முறுவல் புன்முறுவல்smile
முறுவலி புன்முறுவல்செய்தல்smile
முறை1(கோபம், எரிச்சல் முதலியவற்றால்) முகத்தைக் கடுமையாக்கிக்கொள்ளுதல்glower
முறை2இப்படி, இந்தத் தன்மையில் இருக்க வேண்டும் என்ற ஒழுங்குproper (manner)
முறைகேடு சட்டம், விதிமுறை ஆகியவற்றுக்குப் புறம்பான செயல்act contrary to rules and regulations
முறைசாரா பல்கலைக்கழகத்திலும் பள்ளிக்கூடத்திலும் கற்பிக்கும் முறையிலிருந்து வேறுபட்டnon-formal
முறைத்து கடுமையாகseverely
முறைத்துக்கொள் பகைத்தல்make an enemy of
முறைப்படுத்து வரிசைப்படுத்துதல்arrange
முறைப்பு கடுமை நிறைந்த பார்வைstern look
முறைப் பெண் தான் திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ள நெருங்கிய உறவுடைய பெண்a girl on whom a boy has a customary claim to marry
முறை மாப்பிள்ளை தான் திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ள நெருங்கிய உறவுடைய ஆண்a boy on whom a girl has a customary claim to marry
முறைமை முறை2 (என்பதன் மூன்றாவது, ஐந்தாவது பொருள் தவிர்த்துப் பிற எல்லாப் பொருள்களிலும்)see முறை2 (except senses 3 and 5)
முறையிடு உரியவர்களிடம் கூறிக் கவனிக்க வேண்டுதல்appeal (to the authorities)
முறையீடு குறை தீர்க்கக் கோரிக்கைappeal
முறையே சொல்லப்பட்டிருக்கும் வரிசையில் தனித்தனியாகrespectively
முறைவாசல் பல குடித்தனங்கள் இருக்கிற ஒரு வீட்டில் வாசல் தெளித்துக் கூட்டும் வேலையைக் குறிப்பிட்ட நாளைக்குக் குறிப்பிட்ட குடித்தனக்காரர் செய்ய வேண்டும் என்கிற முறைthe turn (duty) of each resident to keep the common area clean
முன்1(இடத்தைக்குறித்து வருகையில்) முகத்தை நோக்கி இருப்பதுbefore
முன்2முன்னால்forward
முன்3முன்னால்before
முன்கூட்டியே முன்பேin advance
முன்கோபம் விரைவாகத் தோன்றும் கோபம்short temper
முன்கோபி விரைவில் கோபப்படக் கூடிய நபர்person with a short temper
முன்சீப் (உரிமையியல்) துணை நீதிமன்றத்தின் நீதிபதிjudge of a subordinate civil court (of the first instance)
முன்தள்ளு (ஒரு வரிசையிலிருந்து, ஒழுங்கிலிருந்து) முன் பக்கமாக நீண்டிருத்தல்stick out/project
முன்நில் முதன்மைப் பொறுப்பு வகித்தல்take the initiative
முன்நிறுத்து (ஒருவரை அல்லது ஒன்றை) முதன்மைப்படுத்துதல்bring to the fore
முன்பணம் முன்கூட்டியே உறுதித்தொகையாகப் பெறப்படும் பணம்(caution) deposit
முன்பதிவுசெய் (திரைஅரங்கு, ரயில் முதலியவற்றில்) முன்கூட்டியே இருக்கைகளைப் பதிவுசெய்தல்reserve (seats, etc in a cinema, train, etc.)
முன்பின் தெரியாத பழக்கம் இல்லாதunfamiliar
முன்பின் யோசிக்காமல் விளைவுகளை எண்ணிப்பார்க்காமல்thoughtlessly
முன்பு1முன்1see முன்1
முன்பு2முற்காலத்தில்previously
முன்மாதிரி நிர்மாணிப்பதற்கு அடிப்படையாக முதலில் எடுத்துக்கொள்ளப்படுவது அல்லது சிறு அளவில் உருவாக்கப்படுவதுmodel
முன்யோசனை விளைவுகுறித்து அல்லது நடக்கப்போவதுகுறித்துத் தயாராக இருப்பதற்கு ஏற்ற வகையில் முன்னரே செய்யும் சிந்தனைforethought
முன்வா (ஒன்றைச் செய்ய) உடன்பட்டு ஆர்வத்துடன் தயாராக இருத்தல்come forward
முன்வை (பிரேரணை, திட்டம் முதலியவற்றை) பரிசீலனைக்காகத் தக்க முறையில் சமர்ப்பித்தல்propose
முன்வைப்புத்தொகை (ஏலம், ஒப்பந்தப்புள்ளி முதலியவற்றுக்காக ஒருவர்) கட்ட வேண்டிய முன்பணம்earnest money deposit
   Page 17 of 22    1 … 15 16 17 18 19 … 22

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil