Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கைகாட்டு | (வாழ்க்கையில் முன்னேறத் துவக்கத்தில்) உதவிசெய்தல் | guide (one at the initial stages) |
| கைகுலுக்கு | (வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் முறையாக அல்லது வரவேற்பு முதலியவற்றின் அடையாளமாக) கையை இறுகப் பற்றி ஆட்டுதல் | shake hands |
| கைகொட்டிச் சிரி | இகழ்ச்சியை வெளிப்படுத்துதல் | laugh at |
| கைகோத்துக்கொண்டு | (வேறுபாடு இல்லாமல்) இணைந்து | hand in hand |
| கைச்சரக்கு | (ஆதாரமான தகவல்களோடு ஒருவர் சேர்க்கும்) சொந்தக் கற்பனை | fictitious addition |
| கைச்சாத்து | கையெழுத்து | signature |
| கைச்சுத்தம் | (திருடுதல், லஞ்சம் வாங்குதல் முதலிய நியாயமற்ற செயல்களில் ஈடுபடாத) நாணயம் | clean-hand |
| கைச்செலவு | (பயணம் செய்யும்போது அல்லது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும்) சிறு செலவு | pocket expenses |
| கைத்தடி | (வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர்) நடக்கும்போது ஊன்றிக்கொள்ளப் பயன்படும் மரக் கம்பு அல்லது கழி | walking stick |
| கைத்தறி | கையால் இயக்கப்படும் தறி | handloom |
| கைத்தாங்கலாக | (நடக்க முடியாத நிலையில் இருப்பவரை) கீழே விழாத வகையில் ஆதரவாகத் தாங்கிப் பிடித்து | throwing the hand around a person in a supporting manner |
| கைத்திட்டம் | கையால் எடுத்து அளவிடும் குத்துமதிப்பு | rough estimation of weight or measure by hand |
| கைத்திருத்தம் | (கையால் செய்வதில்) நேர்த்தி | deftness |
| கைத்திறன் | (கைவேலையில் வெளிப்படும்) திறமை, நுணுக்கம், லாவகம் முதலியவை | skill in craft |
| கைத்துப்பாக்கி | (ஒரு கையாலேயே பிடித்துச் சுடக் கூடிய அமைப்புடைய) சிறிய துப்பாக்கி | hand-gun |
| கைத்தொழில் | கைத்திறமையாலோ சிறு கருவிகளைப் பயன்படுத்தியோ செய்யப்படும் தச்சுவேலை, கூடைமுடைதல் போன்ற தொழில் | craft |
| கைதட்டல் | கரகோஷம் | applause |
| கைதட்டு | இரு கைகளையும் ஒலி வரும்படி தட்டுதல் | clap |
| கைதாகு | (குற்றம் புரிந்ததாகக் கருதப்படுபவர் காவலரால்) பிடிக்கப்படுதல் | get arrested |
| கைதி | தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டவர் | prisoner (serving a sentence) |
| கைது | கைதுசெய்யப்படுதல் | being under arrest |
| கைதுசெய் | (குற்றவியல் சட்டப்படி காவல்துறையினர் ஒருவரை) தன்னிச்சைப்படி செயல்பட விடாமல் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தல் | arrest (a person) |
| கைதூக்கிவிடு | (பொருளாதார ரீதியாக) நல்ல நிலைக்குக் கொண்டுவருதல் | help (one) come out (of financial straits) |
| கைதேர்ந்த | (கலையில், தொழிலில்) திறமையான | adept (in craft, a profession, etc.) |
| கைநாட்டு | (எழுதப்படிக்கத் தெரியாததால் கையெழுத்துக்குப் பதிலாக) கட்டைவிரல் ரேகை பதித்தல் | thumb impression (instead of signature) |
| கைநிறைய | (வருமானம், சம்பளம் ஆகியவற்றைக் குறிக்கையில்) தேவைக்கும் அதிகமாகவே | (of income, remuneration) substantially |
| கைநீட்டு | (கையை நீட்டிக் கேட்பது போல) (பண) உதவி செய்யும்படி கேட்டல் | ask for (monetary) help |
| கைநீள் | (கட்டுப்பாட்டை மீறித் தேவை இல்லாமல்) கையால் அடித்தல் | behave intemperately (where restraint is needed) |
| கைப்பக்குவம் | (உணவு, மருந்து) பதமாகத் தயாரிக்கும் திறமை | preparation (in cooking, compounding home medicine) that has an inimitable flavour |
| கைப்பணி | கைத்தொழில் | handicraft |
| கைப்பந்து | நடுவில் வலை கட்டிப் பந்தை ஓர் அணியினர் கையால் அடிக்க அதை எதிர் அணியினர் திரும்பிச் செல்லுமாறு அடித்து விளையாடும் விளையாட்டு | volley-ball |
| கைப்பற்று | (தனக்கு உரிமையானது பிறரிடம் இருப்பதை அல்லது சட்ட நடவடிக்கையாக ஒன்றை) எடுத்துக்கொள்ளுதல் | take possession of (things kept unlawfully) |
| கைப்பாவை | (பாவைக் கூத்தில் இருப்பது போல் பிறர்) இயக்க இயங்கும் நிலை | puppet (figuratively) |
| கைப்பிடி1 | திருமணம் செய்துகொள்ளுதல் | marry |
| கைப்பிடி2 | (மண்வெட்டி போன்ற கருவிகளிலும் சில வகைப் பாத்திரங்களிலும்) பிடித்துக்கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட தண்டு அல்லது வளையம் | handle |
| கைப்பிடிச் சுவர் | (படிக்கட்டு, பாலம் முதலியவற்றின் பக்கங்களில்) நடப்பவர் விழுந்துவிடாமல் இருப்பதற்கு உதவியாகப் பக்கவாட்டில் அமைக்கப்படும் உயரக் குறைவான சுவர் | wall similar to railings on both the sides of a staircase, bridge, etc |
| கைப்பிரதி | (ஓலைச் சுவடியில் உள்ளதைப் பார்த்து) தாளில் எழுதிவைத்த நகல் | handwritten copy (of a palm leaf manuscript) |
| கைப்பு | (உப்பின்) கரிப்புச் சுவை | saltishness |
| கைப்பெட்டி | (பணம், துணி போன்றவை வைத்துக்கொள்ளப் பயன்படும், தகரம், தோல் முதலியவற்றால் செய்யப்பட்ட) சிறு பெட்டி | small (metal) case |
| கைபிசகாக | தவறுதலாக | absentmindedly |
| கைபோடு | (காம இச்சையோடு பொது இடங்களில் பெண்ணை) தொடுதல் | lay hands (on a woman in public places with sexual motive) |
| கைம்பெண் | கணவனை இழந்த பெண் | widow |
| கைம்மை | கணவனை இழந்து வாழும் நிலை | widowhood |
| கைமா | நன்றாக நறுக்கி மசித்த இறைச்சி அல்லது அதைக் கொண்டு செய்த ஒரு வகைத் தொடுகறி | meat minced to a pulpy consistency or a side dish prepared with that |
| கைமாற்று | உடனடித் தேவைகளுக்கு வாங்கிக்கொள்ளும் வட்டி இல்லாத சிறு தொகை | petty loan (without interest) |
| கைமாறு1 | (உரிமை, தொகை முதலியவை) ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் செல்லுதல் | change hands (as things, money, etc when sold, etc.) |
| கைமாறு2 | (செய்த உதவிக்கு) நன்றியறிதலாகச் செய்வது | a return (made out of gratitude) |
| கைமீறு | (காரியம், பிரச்சினை முதலியவை) கட்டுப்பாட்டுக்கு உட்படாத அல்லது சமாளிக்க முடியாத நிலை அடைதல் | (of a problem) get out of hand |
| கைமேல் | சற்றும் தாமதம் இல்லாமல் | in quick return |
| கையகப்படுத்து | (அரசு) தன் வசத்தில் எடுத்துக்கொள்ளுதல் | take over |
| கையளி | ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என்ற முறையில் மாறிச் செல்லுதல் | hand down (from person to person) |
| கையளிப்பு | ஒப்படைப்பு | handing over |
| கையறுநிலை | வருந்திச் செயலற்று இருக்கும் நிலை | the state of being helpless and in distress |
| கையாடல் | (பண) மோசடி | embezzlement |
| கையாடு | (பொதுப் பணத்தைச் சொந்த உபயோகத்திற்கு) நம்பிக்கைக்கு மாறாக எடுத்துக்கொள்ளுதல் | embezzle |
| கையாலாகாத்தனம் | எதிர்த்துச் செயல்பட முடியாத (வலிமைக் குறைவான) நிலை | impotence |
| கையாலாகாத | தேவையான விதத்தில் செயல்பட இயலாத | impotent |
| கையாள்1 | (ஒன்றை உரிய முறையில்) பயன்படுத்துதல் | use |
| கையாள்2 | (ஒருவரின்) தவறான செயல்களுக்கு ரகசியமாகத் துணைபுரியும் ஆள் | crony |
| கையிருப்பு | சிறு அளவில் சேமித்துவைத்திருப்பது | (of money) that which is in hand |
| கையில்பிடித்துக்கொடு | (பெண்ணை) ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுத்தல் | give a (girl) in marriage (to s |
| கையிறுக்கம் | கஞ்சத்தனம் | stinginess |
| கையும்களவுமாக | குற்றம் அல்லது தவறு செய்யும் அதே நேரத்தில் | red-handed |
| கையுறை | (துணி, ரப்பர் முதலியவற்றால் செய்து) விரல்களைத் தனித்தனியாக நுழைத்து மணிக்கட்டுவரையில் மாட்டிக்கொள்ளும் பாதுகாப்புச் சாதனம் | a pair of gloves |
| கையூட்டு | லஞ்சம் | bribe |
| கையெழுத்தாகு | (ஒப்பந்தம் முதலியவை அங்கீகரிக்கப்பட்டதற்கு அடையாளமாக அவற்றில்) கையெழுத்திடப்படுதல் | (of deeds, agreement) get signed or executed |
| கையெழுத்து | தன் அடையாளமாக ஒருவர் ஒரே மாதிரியாக எழுதும் தன் பெயர் | signature |
| கையெழுத்து இயக்கம் | (கோரிக்கை அல்லது மகஜர் போன்றவற்றுக்காக) ஆதரவாளர் பலரிடமிருந்தும் கையெழுத்து சேகரிக்கும் இயக்கம் | a campaign canvassing for subscription to a petition, etc |
| கையெறிகுண்டு | கையால் வீசி வெடிக்கச்செய்யும் குண்டு | hand grenade |
| கையேடு | (ஒரு துறையில் பணிபுரிவோருக்குப் பயன்படும் வகையில்) செயல்முறைகளைக் கூறும் சிறிய நூல் | handbook |
| கையைக்கடி | (செலவு முதலியவற்றால்) பாதிப்பு ஏற்படுதல் | be affected (by spending more than what one can afford) |
| கையொப்பம் | கையெழுத்து | signature |
| கையோடு | (முடித்த வேலையை) தொடர்ந்து(முடிய இருக்கும் வேலையோடு) கூட | along with |
| கைராசி | (ஒருவரிடம் கிட்டுவதாக நினைக்கும்) நன்மையான விளைவைத் தரும் அதிர்ஷ்டம் | lucky hand |
| கைராட்டினம்/கைராட்டை | கையால் சுற்றி இயக்கி நூல் நூற்கும் கருவி | a hand-operated spinning wheel |
| கைரேகை | உள்ளங்கையில் அமைந்திருக்கும் ரேகை | line on the palm |
| கைலாகுகொடு | (ஏறுவதற்கு, இறங்குவதற்கு, நடப்பதற்கு) ஆதரவாகக் கையைக் கொடுத்தல் | assist |
| கைலாயம் | சிவனின் இருப்பிடம் | the abode of Siva |
| கைலி | (பெரும்பாலும் பூவோ கட்டமோ போட்ட) இரு ஓரங்களும் சேர்த்துத் தைக்கப்பட்ட வேட்டியை ஒத்த உடை | a piece of cloth sewn together at both ends worn by men (mostly with chequered pattern or floral design) |
| கைலேஞ்சி | கைக்குட்டை | handkerchief |
| கைவசப்படுத்து | தன் பிடிக்குக் கீழ்க் கொண்டுவருதல் | take control of |
| கைவண்ணம் | (கலைப் படைப்பு, கைவினைப் பொருள்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகையில்) கைத்திறன் | handiwork |
| கைவரிசை | (செயல்களைச் செய்வதில் ஒருவருக்கு உள்ள) திறமை | sleight of hand |
| கைவா | (ஒரு துறையில் ஒருவருக்கு ஒன்று) திறமையானதாக இருத்தல் | be gifted with |
| கைவிடு | (முடிவு, திட்டம், எண்ணம் முதலியவற்றை) ஒதுக்குதல் | drop (an idea, plan, etc.) |
| கைவிலங்கு | (காவல்துறையினர் தாம் கைது செய்பவரின்) கையில் மாட்டும் இரண்டு இரும்பு வளையங்கள் இணைக்கப்பட்ட சங்கிலி | handcuffs |
| கைவினை | இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளாலேயே சிறு கருவிகள்கொண்டு செய்வது | (anything) handmade |
| கைவினைஞன் | கைவினைப் பொருள்கள் செய்பவன் | craftsman |
| கைவை | அடித்தல் | lay hands on |
| கைவைத்தியம் | (சிறு உபாதைகள் நீங்க மருத்துவர் உதவி இல்லாமல் வீட்டிலேயே செய்துகொள்ளும்) மரபுவழி வந்த சிகிச்சை | home remedy |
| கொக்கரக்கோ | சேவல் எழுப்பும் உரத்த சத்தம் | cock-a-doodle-doo |
| கொக்கி | ஒன்றில் மாட்டத்தக்க வகையில் வளைவாக இருக்கும் உலோகம் முதலியவற்றால் ஆன இணைப்பு | clasp |
| கொக்கிப்புழு | குடலில் காணப்படும் புழு போன்ற (நோயை உண்டாக்கும்) சிவப்பு நிற ஒட்டுண்ணி | hookworm |
| கொக்கு | ஈட்டி போன்ற அலகும், நீண்ட கால்களும், வளைந்த கழுத்தும் உடைய வெள்ளை நிறப் பறவை | crane |
| கொக்கோகம் | ஆண்பெண் உடலுறவு முறைகளைப் படத்தின்மூலம் அல்லது எழுத்தின்மூலம் விளக்குவது | pornography |
| கொச்சிக்காய் | மிளகாய் | chilli |
| கொச்சை | (எழுத்தில் அல்லது பண்பட்டவர்களின்) நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படாத மொழி | slang |
| கொச்சைப்படுத்து | மலினப்படுத்துதல் | vulgarize |
| கொசு | மெல்லிய கூர்மையான உறிஞ்சு குழலால் தோலைத் துளைத்து இரத்தத்தைக் குடிக்கும் சிறிய உயிரினம் | mosquito |
| கொசுவத்தி | (பற்ற வைத்தால் புகை எழுப்பி) கொசுக்களை விரட்டும் ரசாயனப் பொருள்களால் செய்யப்பட்ட சுருள் | mosquito coil (that produces smoke to keep off mosquitoes) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.