Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| துணைபோ | (பெரும்பாலும் நியாயமற்றதாகக் கருதப்படும் ஒன்றிற்கு) உதவ முற்படுதல் | abet |
| துணைவன்1 | நண்பன் | friend |
| துணைவன்2 | (மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குப் பயன்படும் வகையில் பாடநூலுக்கு எழுதப்படும்) வினாவிடை நூல் | guide (for the prescribed text providing answers to likely questions) |
| துணைவி | மனைவி | wife |
| துணைவேந்தர் | (பல்கலைக்கழகத்தின்) நிர்வாகப் பணியையும் கல்விப் பணியையும் ஏற்றுத் தலைவராகச் செயல்பட ஆளுநரால் நியமிக்கப்படுபவர் | vice-chancellor (of a university) |
| துத்தநாகம் | இரும்புக் குழாய், தகடு முதலியவை துருப்பிடிக்காமலிருக்கப் பூசும் வெளிர் நீல நிறம் உடைய உலோகம் | zinc |
| துதி1 | தொழுதல், வழிபடுதல் | worship |
| துதி2 | (தெய்வத்திற்கு) வணக்கம்/(வணக்கத்திற்கான) தொழுகைப் பாடல் | worship/a song of worship |
| துதிகை குமாரத்தி | (பெரும்பாலும் திருமண அழைப்பிதழில்) இரண்டாவது பெண் | (mostly in wedding invitation) second daughter |
| துதிபாடி | (ஒருவரை) துதிபாடுபவர் | sycophant |
| துதிபாடு | (தான் பயன் அடைவதற்காகப் பதவியில் இருப்பவர்களை அல்லது வசதி படைத்தவர்களை) புகழ்ந்து பேசுதல் | sing the praises of |
| துப்பட்டா | தோளில் போட்டுக்கொள்ளும் பெரிய அகலமான துணி | a kind of shawl |
| துப்பட்டி | போர்வை | sheet of cloth (used as a blanket) |
| துப்பறி | (கொலை, திருட்டு, மோசடி போன்ற குற்றங்களில்) தடயங்களைச் சேகரித்தல்/(குற்றவாளியை) அறிவதற்காகத் தகவல் சேகரித்தல்(வழக்கை) ஆய்வுசெய்தல் | collect evidence/investigate (a crime) |
| துப்பாக்கி | நீண்ட குழாய் வழியே வெடிப்பொலியுடன் குண்டுகளை விசையுடன் செலுத்தும் ஆயுதம் | gun |
| துப்பாக்கிச்சூடு | (கலவரம், வன்முறை போன்றவை கட்டுக்கடங்காமல் போகும்போது நிலைமையைச் சமாளிக்கக் காவல்துறையினர்) துப்பாக்கியால் சுடும் நடவடிக்கை | firing (by the police) |
| துப்பு2 | (எதிர்மறைச் சொற்களோடு அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சாமர்த்தியம் | ability |
| துப்பு3 | (குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு உதவும்) தடயம் | (of crime) trace |
| துப்புக்கெட்டு/துப்புக்கெட்ட | (ஒன்றைச் செய்துமுடிக்கத் தேவையான) சாமர்த்தியம் இல்லாமல்/சாமர்த்தியம் இல்லாத | without competence/having no competence |
| துப்புத்துலக்கு | துப்பறிதல் | gather more information (to trace the criminal, to find the motive, etc.) |
| துப்புரவாக | முழுமையாக | entirely |
| துப்புரவு | (இடம், பொருள் முதலியவற்றின்) சுத்தம் | cleanness |
| தும்பி | தட்டான் பூச்சி | dragonfly |
| தும்பு1 | (மாட்டையோ கன்றையோ கட்டிப்போடும்) நீளம் அதிகம் இல்லாத கயிறு | tether |
| தும்பு2 | தேங்காய் மட்டையிலிருந்து உரித்த நார் | coconut fibre |
| தும்பு3 | வம்பு என்பதோடும் தூசி என்பதோடும் இணைந்து வரும் சொல் | a word which occurs in combination with வம்பு and தூசி |
| தும்புக்கட்டு | தென்னந் தும்பினால் கட்டப்பட்ட துடைப்பம் | broomstick |
| தும்பை | (மருந்தாகப் பயன்படும்) சிறிய வெள்ளை நிறப் பூவைத் தரும் ஒரு சிறு குத்துச்செடி | white dead nettle |
| தும்மல் | மூக்கிலிருந்து வெடிப்பொலியோடு வெளிப்படும் மூச்சுக் காற்று | sneeze |
| துய் | (இன்பத்தை, பயனை) அனுபவித்தல் | enjoy (pleasure) |
| துயர் துடைப்புப் பணி | (வறட்சி, வெள்ளம் முதலியவற்றால்) பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் போக்கும் நிவாரண நடவடிக்கை | steps to bring relief to the distressed |
| துயரம் | (-ஆன) துன்பம் | sorrow |
| துயில்1 | உறங்குதல் | sleep |
| துயில்2 | உறக்கம் | sleep |
| துயிலெழு | தூக்கத்திலிருந்து விழித்தல் | wake up |
| துர்க்கை | வெற்றி வேண்டி வழிபடும் தெய்வமாகிய காளி | goddess of victory |
| துர்நாற்றம் | பொறுத்துக்கொள்ள முடியாத நாற்றம் | foul smell |
| துர்பாக்கியம் | நற்பேறு இன்மை | misfortune |
| துர்மரணம் | இயற்கையாக இல்லாமல் தற்கொலை, கொலை முதலியவை காரணமாக நேரும் மரணம் | unnatural or violent death (as by suicide, murder, drowning, etc.) |
| துர்லபம் | முடியாத ஒன்று | almost impossible |
| துரத்தல் | இருமல் | cough |
| துரத்து | (பிடிப்பதற்காக) ஓடிப் பின்தொடர்தல் | chase |
| துரதிர்ஷ்டம் | ஏன் என்று விளக்க முடியாத வகையில் நேரும் கெடுதல் | bad luck |
| துரதிர்ஷ்டவசம் | அதிர்ஷ்டக் குறைவின் விளைவாக ஏற்படுவது | being unfortunate |
| துரப்பணக் கிணறு | நிலத்தடியிலிருந்து நீர் எடுப்பதற்காகத் தோண்டப்படும் ஆழ்குழாய்க் கிணறு | deep borewell |
| துரவு1 | கிணறு கட்டுவதற்காகத் தோண்டப்படும் பெரிய குழி | deep pit dug for a well |
| துரிதகதியில் | (மிகவும்) வேகமாக | speedily |
| துரிதம் | (-ஆக, -ஆன) (செயல்பாடு, வளர்ச்சி முதலியவற்றைக் குறிக்கையில்) வேகம் | (of action, development, etc.) quickness |
| துரு | சில உலோகங்களின் மீது (குறிப்பாக இரும்பின் மீது) காற்றும் தண்ணீரும் படும்போது அவற்றின் வெளிப்புறத்தில் ஏற்படுகிற (வேதியியல் மாற்றத்தின் விளைவாகத் தோன்றுகிற) செம் பழுப்பு நிறப் படிவு | rust |
| துருத்தி | (பட்டறையில் அல்லது தொழிற்சாலையில் நெருப்பு எரிவதற்குக் காற்றை உட்செலுத்தப் பயன்படும்) சுருங்கி விரியக் கூடிய வகையில் தோல் அல்லது ரப்பரால் ஆன கருவி | bellows |
| துருத்து | (பை முதலியவற்றிலிருந்து அல்லது ஒரு பரப்பிலிருந்து ஒன்று) வெளியே நீட்டிக்கொண்டிருத்தல் | stick out |
| துருதுரு | (ஒன்றைச் செய்யவேண்டும் என்று) வேகம் கொள்ளுதல் | have the itch |
| துருதுரு-என்று | ஒரு நிலையில் இல்லாமல் சுற்றித் திரிந்து | lively |
| துருதுருப்பு | சுறுசுறுப்பு | active habit |
| துருப்பு1 | (பெரும்பாலும் பன்மையில்) ராணுவம் | army |
| துரும்பு | (மரம், செடி, கொடி முதலியவற்றின் பயன்படாத) மெல்லிய சிறு குச்சி | thin piece (of straw, chaff, etc.) |
| துருவநட்சத்திரம் | வானத்தில் வடக்குத் திசையில் தெரியும் ஒரு பிரகாசமான நட்சத்திரம் | pole star |
| துருவம் | பூமியின் வடக்கு அல்லது தெற்கு முனை | (north or south) pole |
| துருவல் | (தேங்காய், கேரட் முதலியவற்றிலிருந்து) துருவி எடுக்கப்பட்ட மெல்லிய துகள்கள் | fine scrapings (of coconut, carrot, etc obtained by grating) |
| துருவு | (தேங்காய்ப் பருப்பு, கேரட் முதலியவற்றை) தேய்த்து மெல்லிய துகள்களாக விழச்செய்தல் | grate (coconut kernel, carrot, etc.) |
| துரை | ஐரோப்பியரைக் குறிப்பிடும் சொல் | word used (formerly) to refer to a European |
| துரைசாணி | துரை என்பதன் பெண்பால் | feminine of துரை |
| துரைத்தனம் | ஆங்கிலேயர் நடத்திய ஆட்சி | British rule or government |
| துரோகம் | (தன்னை நம்பும் ஒருவரின்) நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாக அல்லது எதிராகச் செய்யும் செயல் | betrayal |
| துரோகி | காட்டிக்கொடுப்பவன் | traitor |
| துல்லியம் | தவறோ குறையோ இல்லாதது | accuracy |
| துலக்கம் | (ஒன்றை மற்றவற்றிலிருந்து) வேறுபடுத்தும் வெளிப்படை | obviousness |
| துலக்கு | (பற்களை) சுத்தம்செய்தல்(பாத்திரத்தை) (அழுக்கு நீக்கி) பளிச்சிடச்செய்தல் | brush (the teeth) |
| துலா | (பெரிய) தராசு | (large) balance |
| துலாபாரம் | ஒருவரைத் தராசின் ஒரு தட்டில் அமரச்செய்து மறு தட்டில் மதிப்புடைய பொருள்களை அவருடைய எடைக்குச் சமமாக வைத்துக் காணிக்கை செலுத்துதல் | offering made to god by a person weighing himself against valuable articles |
| துலாம் | தராசைக் குறியீட்டு வடிவமாக உடைய ஏழாவது ராசி | seventh constellation of the zodiac having the balance as its sign |
| துலாம்பரம் | வெளிப்படை | clearness |
| துவக்கப் பள்ளி | ஆரம்பப் பள்ளி | primary school |
| துவக்கம் | தொடக்கம் | beginning |
| துவக்கு1 | தொடங்குதல் | begin |
| துவக்கு2 | துப்பாக்கி | gun |
| துவங்கு | தொடங்குதல் | commence |
| துவட்டு1 | (உடலில் உள்ள ஈரத்தைத் துணியால்) அழுத்தித் துடைத்தல் | dry (the body with a towel) |
| துவட்டு2 | (காய்கறி, கீரை போன்றவற்றை) வதக்குதல் | fry |
| துவம்சம் | அழிவு | (total) destruction |
| துவர்1 | துவர்ப்புச் சுவை கொண்டிருத்தல் | have the taste of astringency |
| துவர்2 | துவர்ப்பு | astringent taste |
| துவர்ப்பு | பாக்கு, வாழைப்பூப் போன்றவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை | astringent taste |
| துவரம்பருப்பு | (சாம்பாருக்குப் பயன்படுத்தும்) உடைத்துத் தோல் நீக்கிய மஞ்சள் நிறப் பருப்பு | broken pigeon pea |
| துவரம்பொட்டு | (மாட்டிற்கு உணவாகப் பயன்படக் கூடிய) துவரையின் புறத்தோல் | pod (seed-case) of the pigeon pea (used as cattle feed) |
| துவரை | மெல்லிய சிவப்பு நிறத் தோல் மூடிய சற்றே உருண்டையான தானியம் | pigeon pea |
| துவஜஸ்தம்பம் | (கோயிலில்) கொடிமரம் | flagstaff (in a temple) |
| துவாதசி | (ஏகாதசிக்கு அடுத்த நாள் வரும்) பன்னிரண்டாவது திதி | 12th day of the lunar fortnight |
| துவாபரம் | (புராணத்தில்) நான்கு யுகங்களுள் மூன்றாவது யுகம் | (in purana) the third of the four aeons |
| துவாய் | (துடைக்கும்) துண்டு | towel |
| துவாரபாலகர் | கோயில் வாயிலின் இரு புறத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் காவல் தெய்வம் | images on either side of the entrance to the sanctum sanctorum of temples, supposed to act as sentries |
| துவாரம் | (பெரும்பாலும் இயற்கையாகத் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் அல்லது உடலின் உறுப்புகளில் அமைந்திருக்கும்) துளை | (natural) hole |
| துவாலை | இழைகள் மேலெழுந்தாற்போலக் காணப்படும் நெருக்கமாக நெய்யப்பட்ட துண்டு | a towel with a fluffy surface |
| துவேஷம் | பகை | enmity |
| துவை1 | (நெற் பயிரின் தாள் மிதிக்கப்பட்டு) துவளுதல்/(மாவு முதலியவை) குழைதல் | (of sheaves of paddy) become soft (when trodden)/(of soaked rice, etc.) acquire the right consistency (in grinding) |
| துவை2 | (துணிகளை அடித்து) தூய்மைசெய்தல் | wash (the clothes by beating against a hard surface) |
| துவைதம் | ஆன்மாவும் இறைவனும் இரண்டு என்னும் நிலை நீங்கி ஒன்று என்னும் நிலையை அடைவதில்லை என்றும் இரண்டும் இரண்டாகவே இருக்கும் என்றும் கூறும் தத்துவக் கொள்கை | the doctrine of duality |
| துவையல் | தேங்காய், இஞ்சி, கறிவேப்பிலை முதலியவற்றில் ஏதோவொன்றுடன் மிளகாய், உப்பு முதலியவை கலந்து அரைத்து (பெரும்பாலும் தாளிக்காமல்) செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி | a kind of strong relish prepared by adding paste of chilli to coconut, ginger, curry leaf, or to similar things |
| துளசி | (வைணவக் கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும்) காரச் சுவையும் மணமும் கொண்ட சிறு இலை | basil (considered sacred in worship) |
| துளசிமாடம் | (வீட்டில் வழிபாட்டிற்காக) துளசிச் செடி வளர்க்கப்பட்டிருக்கும் தொட்டி போன்ற மேற்பகுதியுடைய மேடை | basil plant on a raised platform (for worship) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.