Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பொரிவிளங்காய் உருண்டை | பாசிப்பருப்பு மாவுடன் நிலக்கடலையைச் சேர்த்து வெல்லப்பாகில் இட்டு உருண்டையாகப் பிடிக்கப்படும் (கடிப்பதற்குக் கடினமாக இருக்கும்) தின்பண்டம் | a hard ball-shaped sweetmeat made of different kinds of flour |
| பொருக்கு | (பாத்திரத்தில்) ஒட்டிக் காய்ந்த உணவுத் துண்டு | bits of dried food sticking (to the vessel) |
| பொருக்கு விதை | தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ரக விதை | improved seed |
| பொருட்காட்சி | பொதுமக்கள் பார்வையிடவும் வாங்கவும் ஏற்ற வகையில் பொருள்களைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி (சில நாட்கள் அல்லது மாதங்கள்) நடக்கும் நிகழ்ச்சி | exhibition |
| பொருட்டு1 | (ஒரு என்பதோடு இணைந்தும் எதிர்மறை வாக்கியத்திலும்) கவனத்தில் கொள்ள வேண்டியது | matter worth considering |
| பொருட்டு2 | (முன் குறிப்பிடப்பட்டதன்) காரணமாக | because of |
| பொருட்படுத்து | (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) முக்கியத்துவம் அளித்துக் கருத்தில் அல்லது கவனத்தில் கொள்ளுதல் | give due consideration to |
| பொருட்பெயர் | பொருளைக் குறிக்கும் பெயர் | name of things |
| பொருண்மை | (உண்மையான) பொருள் நிலை | true meaning or substance |
| பொருண்மையியல் | மொழியில் பொருள் என்பதுபற்றி விளக்கும் துறை | semantics |
| பொருத்தம் | (ஏதேனும் காரணத்தால் அல்லது அம்சத்தால் ஒன்று மற்றொன்றுக்கு) ஏற்றதாகவோ இசைந்ததாகவோ இருப்பது | appropriateness |
| பொருத்து1 | இணைத்தல் | join (one with another) |
| பொருத்து2 | (எண்ணெய் விளக்கு, அடுப்பு, மெழுகுவர்த்தி முதலியவற்றை) எரியச்செய்தல் | light (a lamp, candle, etc.) |
| பொருத்து3 | ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் இடம் அல்லது இணைப்பு | joint |
| பொருந்திய | (ஒன்று) கொண்ட | with (in the sense of possessing) |
| பொருந்து | (ஒன்றில்) இணைந்து அல்லது சேர்ந்து அமைதல் | fit (properly) |
| பொருபொருப்பு | மொரமொரப்பு | crispness |
| பொருமல் | (அஜீரணம் முதலியவற்றால் வயிறு) உப்பி இரைகிற சத்தம் | rumbling noise (of a flatulent stomach) |
| பொருமு | (அஜீரணம் முதலியவற்றால்) (வயிற்றில்) இரைச்சல் உண்டாதல் | (of stomach) rumble |
| பொருள்படு | (சொல், பேச்சு முதலியவை குறிப்பிட்ட விதத்தில்) பொருள் தொனித்தல் அல்லது வெளிப்படுதல் | give the meaning |
| பொருள்முதல்வாதம் | உலகாயதம் | materialism |
| பொருளடக்கம் | புத்தகத்தில் தொடர்ச்சியாக வரும் அத்தியாயங்களின் தலைப்புகள், அவை தொடங்கும் பக்கம் முதலியவற்றின் வரிசைக்கிரமமான பட்டியல் | contents (of a book) |
| பொருளாகுபெயர் | ஒரு முழுப் பொருளின் பெயர் உறுப்புக்கு வழங்குவதாகிய ஆகுபெயர் | a kind of metonymy in which the whole stands for a part |
| பொருளாளர் | (ஓர் அமைப்பின்) நிதி நிர்வாகத்துக்குப் பொறுப்பு வகிப்பவர் | treasurer (of an organization) |
| பொருளியல் | மனிதனின் பொருள் தேவைகளை நிறைவுசெய்யும் சாதனங்கள், கிடைப்பதற்கு அரியதாகவும் கிடைத்தாலும் அவை வேறு பலவற்றிற்குப் பயன்படக் கூடியதாகவும் இருப்பதால் அத் தேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கும் துறை | economics |
| பொல்லாங்கு | தீமை | anything bad or injurious |
| பொல்லாத்தனம் | தீமை விளைவிக்கும் குணம் | wickedness |
| பொல்லாத | தீமை விளைவிக்கிற | bad |
| பொல்லாப்பு | (பிறருடைய) வெறுப்பு | displeasure (of another) |
| பொலபொல-என்று | (மண், காரை முதலியவற்றைக் குறித்து வருகையில்) பிடிப்பில்லாமல் உதிரிஉதிரியாக | (in a) crumbling (manner) |
| பொலி1 | சிறப்புடன் வெளிப்படுதல் | flourish |
| பொலி2 | (களத்தில்) குவித்து வைக்கப்பட்டிருக்கும் (தூற்றாத) நெல் | heap of paddy (which is yet to be winnowed) |
| பொலிகடா/பொலிகாளை | (எருமையில், ஆட்டில்) இனவிருத்தி செய்வதற்காக வளர்க்கப்படும் (கொழுத்த) கடா | bull or ram reared for purposes of breeding |
| பொழி | (மழை, பனி முதலியவை) அதிக அளவில் கீழே இறங்குதல்/(வானம் மழை, பனி முதலியவற்றை) கொட்டுதல் | (of rain, snow, etc.) pour down or fall heavily/shower on |
| பொழிப்புரை | (செய்யுளின்) பொருளைத் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்த உரை | paraphrase (of a poem or verse) |
| பொழில் | சோலை | garden |
| பொழிவு | (மழை, பனி முதலியவை) பெய்தல் | (rain, snow) fall |
| பொழுதிருக்க | பகல் பொழுது முடியும் முன் | before sunset |
| பொழுது1 | (பொதுவாக) நேரம் | time |
| பொழுதுபோ | இனிமையாக நேரம் கழிதல் | (of time) be spent |
| பொழுதுபோக்கு1 | (பொதுவாக ஒருவர் தன் விருப்பப்படி) நேரத்தைக் கழித்தல் | spend time (in recreation) |
| பொழுதுபோக்கு2 | ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காகச் செய்வது அல்லது கழிப்பதற்கேற்ற வகையில் அமைவது | pastime |
| பொளி | (அம்மி, ஆட்டுக்கல் முதலியவை சொரசொரப்பாக இருக்க) கொத்துதல் | make the surface (of a grinding stone) rough (so as to make grinding easy) |
| பொற்காலம் | (நாடு பல துறைகளிலும் அல்லது பல துறைகள்) சிறப்புற்று விளங்கும் காலம் | golden age |
| பொற்கிழி | (பழங்காலத்தில்) பொற்காசுகள் முடிந்த துணி | gold (coins) tied up (in a piece of cloth) |
| பொற்கொல்லன் | தங்கத்தினால் நகை முதலியவை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர் | goldsmith |
| பொறாமை | (ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிட்டவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும்) எரிச்சல் கலந்த மனக் குறை | envy |
| பொறி1 | (கல், உலோகம், மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து, உருவம் முதலியவற்றை) வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல் | inscribe (letter, figure, etc.) |
| பொறி2 | (நெருப்பின்) சிதறும் துகள் | spark |
| பொறி3 | உணர்வதற்கு உடலில் அமைந்த கருவி | sense organ |
| பொறி4 | (விலங்கு, பறவை முதலியவற்றை) அகப்படுத்துவதற்கு உரிய சாதனம் | trap |
| பொறிகலங்கு | (அதிர்ச்சிக்கு உள்ளாகி சுயக் கட்டுப்பாட்டை இழக்கும் வகையில்) புலன்கள் குழம்புதல் | be dazed |
| பொறியாளர் | இயந்திரம், கட்டடம் முதலியவற்றை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய தொழில்நுட்பக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர் | engineer |
| பொறியியல் | இயந்திரம், கட்டடம் முதலியவற்றை உருவாக்குதல், பராமரித்தல் ஆகியவை குறித்த தொழில்நுட்பம் | engineering |
| பொறு | (வலி, துன்பம் முதலியவற்றை அல்லது அவற்றின் விளைவை) தன்னளவில் ஏற்றல் | bear |
| பொறுக்கியெடு | தெரிவுசெய்தல் | select |
| பொறுக்கு | ஒவ்வொன்றாகச் சேர்த்தல் | pick |
| பொறுத்த | (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்த | depend on |
| பொறுத்து | (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்து | depending on |
| பொறுப்பாசிரியர் | பத்திரிகை, புத்தகம் போன்றவற்றை வெளியிடுவதில் நிர்வாகப் பொறுப்பை வகிப்பவர் | managing editor (of a journal, etc.) |
| பொறுப்பாளர் | (சங்கம், மையம், விடுதி முதலியவற்றை) நிர்வகிக்கும் பொறுப்பை வகிப்பவர் | organizer |
| பொறுப்பாளி | (ஒன்றுக்கு) பொறுப்புடையவர் | one who is responsible |
| பொறுப்பு | (-ஆக, -ஆன) (செயலைச் செய்வதோடு) விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை | responsibility |
| பொறுமை | (சிரமம், அசௌகரியம் முதலியவற்றை) பொறுத்துக்கொண்டு அல்லது (சூழ்நிலையை) புரிந்துகொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை | patience |
| பொறை | மைதா மாவில் தயாரிக்கும் ரொட்டி போன்ற ஒரு தின்பண்டம் | a kind of snack (something like a biscuit) |
| பொன் | தங்கம் | gold |
| பொன்மெழுகு | தங்கத்தை உரைத்துப் பார்க்கும் மெழுகு | wax used in testing the quality of gold |
| பொன்மொழி | (அறிஞர் போன்றோரின்) கருத்து நிறைந்த சுருக்கமான சொற்றொடர் | saying |
| பொன்வண்டு | பளபளப்பான கரும் பச்சை அல்லது மஞ்சள் நிற உடல் கொண்ட ஒரு வகை வண்டு | a kind of beetle which has a shiny dark green or yellow colour |
| பொன்விழா | ஐம்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் விழா | golden jubilee |
| பொன்னாங்கண்ணி | (நீர்ப்பாங்கான இடங்களில் வளரும்) வழுவழுப்பான சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கீரை | a kind of greens with shiny little leaves |
| பொன்னாடை | (ஒருவரை கௌரவிக்கும் விதத்தில் அணிவிக்கப்படும்) பட்டு அல்லது பட்டுப் போன்ற துணி | braided shawl (presented to s |
| பொன்னான | (வாய்ப்பு, நேரம் முதலியவற்றைக் குறிக்கையில்) கிடைப்பதற்கு அரியதும் பெரும் பலனை அளிப்பதுமான | golden (opportunity, etc.) |
| பொன்னிறம் | (வறுக்கப்படும் உணவுப்பொருளைக் குறிப்பிடும்போது) சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம் | reddish-yellow |
| பொன்னுக்குவீங்கி | அம்மைக்கட்டு | mumps |
| போ1 | (பெரும்பாலும், பேசுபவரிடமிருந்து விலகி அல்லது பேசுபவர் குறிப்பிடும் இடத்துக்கு) செல்லுதல் | go (mostly away from the speaker or to the place mentioned by the speaker) |
| போக்கிடம் | தங்குமிடம் | refuge |
| போக்கிரி | பிறருக்குத் தொல்லை தருபவன் | one who creates nuisance |
| போக்கு1 | இல்லாமல்செய்தல் | dispel |
| போக்கு2 | இயங்குதல் | course |
| போக்குக்காட்டு | (உண்மையாக இல்லாமல்) செய்வது போல் நடித்தல் | put s |
| போக்குவரத்து | வாகனங்கள் சென்று வருதல் | traffic |
| போக | நீங்கலாக | other than |
| போகணி | (நீர் அருந்தப் பயன்படுத்தும்) அடிப்பகுதி அகன்ற குவளை | a kind of drinking vessel broad at the bottom |
| போகப்போக | நாளடைவில் | as time goes by |
| போகம்1 | அறுவடை செய்த பின் நிலத்தில் இருக்கும் தாளிலிருந்து விளையும் பயிர் | crop that grows from the stalk after harvesting |
| போகம்2 | (உணவு, ஆடை முதலியவற்றால் அனுபவிக்கிற) இன்பம் | pleasures of life |
| போகி1 | வீட்டில் உள்ள பழைய துணிகள், பொருள்கள் முதலியவற்றைக் குவியலாக வைத்து எரித்துப் பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகை | festival on the eve of பொங்கல் in which people make a bonfire of discarded things |
| போகி2 | (பல விதமான இன்பம், வசதி முதலியவற்றை) அனுபவிப்பவர் | one who is given to the pleasures of life |
| போட்டா போட்டி | போட்டி என்பதன் (இரண்டாவது பொருளையும் மூன்றாவது பொருளையும் மிகுவிக்கும் நோக்கத்தில்) இரட்டித்துவரும் வடிவம் | reduplication of போட்டி (to intensify the meaning of senses two and three given in போட்டி) |
| போட்டி | (விளையாட்டில்) பந்தயம் | (of sports) match |
| போட்டித்தொடர் | (விளையாட்டுகளில்) இரு அணிகளுக்கு இடையே ஓர் ஆட்டத்தைத் தொடர்ந்து மற்றோர் ஆட்டம் என்ற முறையில் நடைபெறும் போட்டி வரிசை | (of sports) series (of matches) |
| போட்டி மனப்பான்மை | தன்னோடு போட்டிபோடுபவர்களைக் கெடுக்காமல் தன் கடும் உழைப்பால் அவர்களை மிஞ்சிவிட வேண்டும் என்னும் உந்துதல் | competitive spirit |
| போட்டியாளர் | (தேர்தல், விளையாட்டு போன்றவற்றில்) போட்டியிடுபவர் | competitor |
| போட்டியிடு | வெற்றி பெறக் களத்தில் இறங்குதல் | contest |
| போட்டு | (அடித்தல், கேலிசெய்தல் முதலிய வினைகளோடு வருகையில்) (ஒரு செயலின் அதிகமான நிலைக்கு) உள்ளாக்கி அல்லது உட்படுத்தி | subjecting |
| போட்டுவை | (வேலை முதலியவற்றை உடனடியாகச் செய்யாமல்) கிடப்பில்வைத்தல் | (leave sth.) lie over |
| போட்டோ | புகைப்படம் | photo |
| போடியார் | (தன்னுடைய நிலங்களைப் பிறரைக் கொண்டு பயிர் செய்விக்கும்) நில உரிமையாளர் | landlord |
| போடு2 | சில பெயர்ச்சொற்களோடு இணைந்து அவற்றை வினைப்படுத்தும் வினை | with certain nouns it serves as a verbalizer |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.