Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கொசுவம் | இடைப் பகுதியில் செருகிக்கொள்ளும் புடவையின் மடிப்பு | folded gathering (of a saree) |
| கொசுவலை | கொசுக்கள் உள்ளே புகாதவாறு படுக்கையைச் சுற்றித் தொங்கவிடப்படும் வலை | mosquito net |
| கொசுவு | (புடவையைக் கட்டும்போது) கைவிரல்களால் மடிப்பு உண்டாக்கிச் சுருக்குதல் | gather into folds (as done with the loose end of the saree) |
| கொசுறு | உணவுப் பொருளை வாங்கிய பின் அதே பொருளில் இனாமாகக் கிடைக்கும் சிறு அளவு | quantity obtained gratis (when buying vegetables, etc.) |
| கொஞ்சநஞ்சம் | குறைந்த அளவு | the little (that remains) |
| கொஞ்சம்1 | சிறிது | a little (to refer to quantity) |
| கொஞ்சம்2 | சிறிதளவு | a wee bit |
| கொஞ்சல் | குழைந்த பேச்சு அல்லது நடத்தை | (of men and women) soft and loving talk or behaviour |
| கொட்டகை | (விழாக் காரியங்களுக்குப் போடப்படும்) பந்தல் | temporary thatched shed (to conduct rituals, etc.) |
| கொட்டம் | (மற்றவர்களின் அமைதியைக் குலைக்கும்) ஆரவாரம் மிகுந்த விளையாட்டு | boisterous play or behaviour |
| கொட்டாங்கச்சி | பருப்பை எடுத்த பிறகு உள்ள தேங்காய் ஓடு | shell of a broken coconut (without the kernel) |
| கொட்டாப்புளி | (உளியின் மேல் அடிப்பதற்குத் தச்சர் பயன்படுத்தும்) பருத்த மரத் துண்டாலான சுத்தியல் போன்ற கருவி | mallet |
| கொட்டாரம் | அரண்மனை | royal house |
| கொட்டாவி | (களைப்பு, தூக்கம் முதலியவற்றால்) வாயை அகலத் திறந்து வெளியே விடும் காற்று | yawn |
| கொட்டாவிவிடு | ஏங்குதல் | long for |
| கொட்டான் | சிறிய ஓலைப் பெட்டி | small basket |
| கொட்டில் | (ஆடு, மாடுகளைக் கட்டிவைக்கும்) தொழுவம் | cow-shed |
| கொட்டு1 | (ஓர் இடத்திலிருந்து திரவம்) வழிதல் அல்லது விசையுடன் கீழே விழுதல் | pour |
| கொட்டு2 | பெரும்பாலும் ஒரு பக்கத்தில் மட்டும் தட்டி வாசிக்கக் கூடிய தோல் கருவிகளின் பொதுப் பெயர் | a common name for percussion instruments with only one side covered with skin |
| கொட்டு3 | கிணற்றுக்கட்டு | parapet wall of a well |
| கொட்டுக்கொட்டு-என்று | (விழி என்னும் வினையோடு இணைந்து வரும்போது) சிறிதும் கண்ணயராமல் | wide awake |
| கொட்டுவாய் | (தேள், குளவி முதலிய விஷப் பூச்சிகள்) கடித்த இடம் | tip of the sting |
| கொட்டை | பழம், காய் முதலியவற்றில் இருக்கும் (பெரும்பாலும்) உருண்டை வடிவ விதை | seed |
| கொட்டைப்பாக்கு | பச்சையாகக் காயவைக்கப்பட்ட முழுப் பாக்கு | raw but dried arecanut |
| கொட்டைபோடு | (ஒரு தொழிலில்) எல்லா நுணுக்கமும் தெரிந்திருத்தல் | be an old hand |
| கொடாக்கண்டன் | பிறருக்கு எதுவும் தராதவன் | one who would not easily part with money |
| கொடி1 | துவளும் தன்மை கொண்டதும் ஒன்றின் மேல் படரக் கூடியதுமான தாவரம் | creeper |
| கொடி2 | (ஒரு நாட்டின், ஒரு குழுவின்) சின்னம் பதித்துக் கம்பத்தில் பறக்க வசதியாக வெட்டிய துணி | flag |
| கொடிக்கால் | வெற்றிலைக் கொடி பயிரிடும் தோட்டம் | garden for growing betel |
| கொடிகட்டிப் பற | மிகுந்த செல்வாக்கோடு இருத்தல் | live in great prosperity |
| கொடிதினம் | (ராணுவத்தினர் மேம்பாட்டுக்காக நிதி திரட்டும் வகையில்) குறிப்பிட்ட சின்னம் அச்சிடப்பட்ட தாள், துணி முதலியன விற்கப்படும் நாள் | flag day (to raise funds for ex-service men) |
| கொடிது | கொடுமையானது | that which is harsh |
| கொடிமரம் | கொடி ஏற்றுவதற்காக உள்ள கம்பம் | flagstaff |
| கொடிமின்னல் | கொடி போல் நீண்டு பிரிந்து தோன்றும் மின்னல் | streak of lightning (resembling a creeper) |
| கொடிய | உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய | likely to cause danger to life |
| கொடியடுப்பு | பெரிய அடுப்பிலிருந்து கிடைக்கும் வெப்பத்தால் பயன்படுத்தக் கூடிய முறையில் உள்ள சிறு அடுப்பு | an oven with a connected smaller oven on its side |
| கொடியேற்றம் | கோயில் திருவிழாவில் கொடியைக் கம்பத்தில் பறக்கவிடும் துவக்க விழா | the ceremony of flag hoisting to mark the beginning of festival in a temple |
| கொடு1 | (ஒருவர் ஒன்றை) பெற உதவுதல் | give |
| கொடு2 | பிறருக்குப் பயன்படும்படி ஒரு செயல் செய்யப்படுவதைக் குறிப்பிடும் துணை வினை | an auxiliary verb to indicate that the action is done for the benefit of s |
| கொடுக்கல்வாங்கல் | தருவது, பெறுவது என்ற முறையில் பரிமாறிக்கொள்ளும் செயல் | act of exchanging |
| கொடுக்காய்ப்புளி | சுருண்ட வடிவமும் பச்சை நிறப் புறத்தோலும் வெண்ணிறச் சதைப் பகுதியில் கரு நிற விதையும் கொண்ட (துவர்ப்பும் இனிப்பும் உடைய) ஒரு வகைக் காய் | manilla tamarind |
| கொடுக்கு | (தேள், குளவி முதலிய சில உயிரினங்களின்) வளைவான கூரிய நுனியைக் கொண்ட கொட்டும் உறுப்பு | sting (of a wasp, scorpion, etc.) |
| கொடுங்கை | மடக்கிவைத்திருக்கும் கை | folded arm (at the elbow) |
| கொடுங்கோல் | (ஒரு நாட்டில் மனித உரிமை, சுதந்திரம், நியாயம் முதலியவற்றை மதிக்காமல்) கொடும் அடக்குமுறையைக் கையாண்டு நடத்தப்படும் நிர்வாகம் | tyrannical rule |
| கொடுங்கோன்மை | கொடுங்கோல் நிலை | tyranny |
| கொடுப்பனவு | கொடுக்க வேண்டிய தொகை | amount to be paid (to s |
| கொடுப்பினை | கொடுத்துவைத்தது | luck |
| கொடுப்பு | கடைவாய் | region in the mouth near molar teeth |
| கொடும் | கொடிய | terrible |
| கொடும்பாவி | (மழை இல்லாத குறை, பஞ்சம் முதலியவற்றை நீக்குவதற்கு அல்லது ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்) (வைக்கோலால் அல்லது அட்டையால் செய்து) தெருவில் இழுத்துச் சென்று எரிக்கும் உருவம் | effigy (burnt as a remedy for the want of rain, etc, or as a protest) |
| கொடுமை | (-ஆக, -ஆன) ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம் | severity |
| கொடுவாள் | கொக்கி போல் வளைந்திருக்கும் நுனி உடைய அரிவாள் | sickle |
| கொடூரம் | அருவருப்பையும் பயத்தையும் உண்டாக்கக் கூடிய கடுமை அல்லது கொடுமை | horrifying severity or cruelty |
| கொடை | நன்கொடை | gift |
| கொண்டவன் | ஒரு பெண்ணை மணம் செய்துகொண்டவன் | husband |
| கொண்டாட்டம் | (குடும்ப, சமூக, மத) சிறப்பு நிகழ்ச்சி | (family, social) celebration |
| கொண்டாடு | (பலரும் பங்கேற்பதால்) சிறப்புடன் நடத்தல் | celebrate (a festival, birthday, etc.) |
| கொண்டி | இணைப்புக்கான கொக்கியும் சங்கிலிக் கண்ணியும் | (metal) fastener |
| கொண்டிரு | (தோற்றம், நடத்தை முதலியவற்றில் ஒருவரை) போலிருத்தல் | look like |
| கொண்டு | மூன்றாம் வேற்றுமை உருபாகிய -ஆல் என்பதற்கு இணையான சொல்லுருபு | a word expressing (the grammatical concept of) instrumentality |
| கொண்டுபோ | (ஒருவரை) அழைத்துச்செல்லுதல்(ஒன்றை) எடுத்துச்செல்லுதல் | drop |
| கொண்டுவிடு | (ஒருவரை ஓர் இடத்துக்கு) அழைத்துச்செல்லுதல் | take (s.o. to a place) |
| கொண்டை | (பெண்களின்) முடிச் சுருட்டு அல்லது முடிக் கட்டு | hair-do (in coil or any other fashion) |
| கொண்டை ஊசி | (பெண்கள் போட்டிருக்கும்) கொண்டை அல்லது ஜடை அவிழாதபடி செருகும் இரு பகுதியாக வளைக்கப்பட்ட மெல்லிய கம்பி | (U-shaped) hairpin (to keep the hair-do intact) |
| கொண்டைக்கடலை | (வறுத்தோ அவித்தோ பயன்படுத்தும்) உருண்டை வடிவத்தில் இருக்கும் பழுப்பு நிறப் பருப்பு | bengalgram |
| கொணர் | கொண்டுவருதல் | bring |
| கொத்தடிமை | நியாயமற்ற ஒப்பந்தத்தின் காரணமாக (தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ) மிகக் குறைந்த கூலிக்கு ஒருவரிடத்தில் அடிமைப்பட்டு வேலைபார்ப்பவர் | bonded labourer |
| கொத்தமல்லி | (அரைத்துத் துவையலாகவும் ரசம் முதலியவற்றில் வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தும்) புளிப்புச் சுவையுடைய துளிர்துளிரான பச்சை இலை | coriander leaf |
| கொத்தவரங்காய் | சற்று நீளமாகவும் தட்டையாகவும் வெளிர்ப் பச்சை நிறமாகவும் இருக்கும் காய்கறி | cluster beans |
| கொத்தனார் | கட்டடம் கட்டும் வேலை செய்பவர் | mason |
| கொத்திக்கொண்டுபோ | (கிடைப்பதற்கு அரியதாக இருப்பதால்) தவறவிடாமல் கைப்பற்றுதல் | swoop |
| கொத்து1 | (பறவை அலகாலும், பாம்பு, அணில் முதலியன பல்லாலும்) குத்துதல் | (of birds) peck |
| கொத்து2 | ஒன்றோடு ஒன்றாக இணைந்து காணப்படும் நிலை | bunch |
| கொத்து3 | ஒன்றேகால் கிலோவுக்குச் சமமான அளவு கொண்ட முகத்தல் அளவை | a measure roughly equal to one and a quarter kilo |
| கொத்து4 | அறுவடை செய்தவர்களுக்குக் கூலியாகத் தரப்படும் தானியம் | grain given as wages to those who harvested paddy |
| கொத்துக்கறி | சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய இறைச்சி | minced meat |
| கொத்துமானம் | (வெள்ளி அல்லது பொன்னாலான) அணிகலன்களில் செய்யப்படும் அலங்கார வேலை | filigree |
| கொத்துவேலை | கட்டடம் முதலியன கட்டும் வேலை | masonry |
| கொதி1 | (திரவங்கள்) சூடாகி ஆவி எழும் நிலைக்கு வருதல் | boil |
| கொதி2 | திரவம் கொதிக்கிற நிலை | (in relation to cooking) boil |
| கொதிகலன் | (தொழிற்சாலை, புகைவண்டி முதலியவற்றில்) நீராவி உண்டாக்கப் பயன்படுத்தும் கலன் | boiler (in a factory, engine, etc.) |
| கொதிநிலை | ஒரு திரவம் கொதிக்கத் தொடங்கும் வெப்பநிலை | boiling point |
| கொதிப்பு | அளவுகடந்த கோபம் | rage |
| கொந்தராத்து | ஒப்பந்தம் | contract |
| கொந்தளி | (காற்றால் கடல் நீர்) அலைக்கப்பட்டுப் பொங்குதல் | (of sea) be rough |
| கொந்தளிப்பு | (கடலின் நீர்ப்பரப்பு) அலைக்கப்பட்டுப் பொங்கிவரும் நிலை | turbulence (of the sea) |
| கொந்து | (பறவைகள் அலகால்) கொத்துதல்(கூர்முனை கொண்ட கருவியால்) குத்துதல் | (of birds) peck |
| கொப்பரை1 | பிடித்துத் தூக்குவதற்கான வளையமுடைய வாய் அகன்ற பெரிய பாத்திரம் | brass or copper cauldron with rings as handles |
| கொப்பரை2 | (எண்ணெய் எடுக்கப் பயன்படும்) முற்றிய தேங்காய்ப் பருப்பு | dried coconut kernel (for extracting oil) |
| கொப்பளி | (வாய்க்குள் நீரை வைத்து) அலைத்துச் சுத்தம்செய்தல் | gargle |
| கொப்பி | குறிப்பேடு | notebook |
| கொப்பு | கொம்பு | branch (of a tree) |
| கொப்புளம் | (உடலில் உண்டாகும்) நீர் அல்லது சீழ் நிரம்பிய மெல்லிய சிறு புடைப்பு | blister |
| கொப்பூழ் | தொப்புள் | navel |
| கொப்பூழ்க்கொடி | தொப்புள்கொடி | umbilical cord |
| கொம்பன்யானை | நீண்ட பெரிய தந்தங்களை உடைய யானை | tusker |
| கொம்பு | (ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின்) தலைப்பகுதியில் உள்ள உறுதியான நீண்ட உறுப்பு | horn |
| கொம்புசீவு | (ஒருவரை) சண்டை போடுமாறு வெறியேற்றுதல் | incite |
| கொம்புத்தேன் | (மரக் கொம்புகளில் கட்டிய) தேனடையில் உள்ள தேன் | honey (gathered from the honeycomb on branches) |
| கொம்புமுளை | (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) பிறர் எவருக்கும் இல்லாத சிறப்புக் குணம் கொண்டிருத்தல் | be exceptional |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.