iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

903 words starting with அ · page 1 of 19

அகங்காரம் இறுமாப்பு English Meaning: haughtiness
அகச்சான்று ஒரு கருத்தை நிறுவ ஒரு நாட்டின் மொழி, இலக்கியம், வரலாறு முதலியவற்றிலேயே கிடைக்கும் ஆதாரம் English Meaning: internal evidence
அகடவிகடம் சிரிப்பு வருவிக்கும் கோமாளிச் செயல்கள் English Meaning: antics
அகட்டு (கால்களை) பரப்புதல் English Meaning: keep (the legs) apart (while standing)
அகண்ட விசாலமான English Meaning: wide
அகதி சமயம், அரசியல் போன்ற நிலைமைகளால் தம் நாட்டிலிருந்து வெளியேறிப் பிற நாட்டில் அடைக்கலம் புகுந்தவர் English Meaning: refugee
அகத்தி கீரையாகப் பயன்படுத்தும் இலைகளை உடையதும் கொடிக்காலில் நடப்படுவதுமான ஒரு வகை மரம் English Meaning: west Indian pea-tree
அகத்திக்கீரை (உணவாகப் பயன்படுத்தும்) அகத்தி மரத்தின் கரும் பச்சை நிற இலை English Meaning: leaves of the tree அகத்தி (used as greens)
அகந்தை இறுமாப்பு English Meaning: arrogance
அகன்ற அகலமான English Meaning: broad
அகப்படு பிடிபடுதல் English Meaning: get caught
அகப்பை நீண்ட கைப்பிடியுள்ள மரக் கரண்டி English Meaning: wooden ladle
அகம்1 வெளியில் தெரியாதபடி அமைந்திருப்பது English Meaning: that which is inside
அகம்பாவம் அகங்காரம் English Meaning: arrogance
அகரவரிசை ஒரு மொழிக்கு உரிய எழுத்து வரிசையில் சொற்களை அமைக்கும் முறை English Meaning: alphabetical order
அகராதி சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பொருள் முதலியன தரும் நூல் English Meaning: dictionary (of a language)
அகராதி பிடித்தவன் பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவன் English Meaning: one who is impudent
அகற்று நீக்குதல் English Meaning: remove
அகல (கண், வாய் அல்லது கதவு, ஜன்னல் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) பெரிதாக English Meaning: (of eyes, mouth, door, window, etc.) wide
அகலம் (நீளம் அல்லது உயரம் உள்ள பொருளில்) இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள தூரம் English Meaning: breadth
அகல்1 அப்பால் செல்லுதல்(திரை முதலியன) விலகுதல் English Meaning: leave (a place)
அகல்2 (சுட்ட மண்ணாலோ உலோகத்தாலோ செய்து) எண்ணெய்யும் திரியும் இட்டு ஏற்றப்படும் குழிவு அதிகம் இல்லாத விளக்கு English Meaning: small shallow lamp (made of fired clay or metal)
அகழாய்வு பண்டை நாகரிகச் சின்னங்களைத் தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சி English Meaning: archaeological excavation
அகழி (கோட்டை மதிலைச் சுற்றித் தற்காப்பு ஏற்பாடாக) ஆழமாகத் தோண்டி நீர் நிரப்பிய அமைப்பு English Meaning: moat
அகழ் (புதைந்து கிடக்கும் பொருளை அறிந்துகொள்ளும் அல்லது வெளிக்கொண்டுவரும் முறையில்) தோண்டுதல் English Meaning: excavate
அகவயம் (தன்னையே பரிசோதிப்பதான) உள்நோக்கு English Meaning: introspection
அகவல் தமிழின் நான்கு வகைச் செய்யுள்களுள் ஒன்று English Meaning: one of the four major metres of Tamil prosody
அகவிலைப் படி விலைவாசி ஏற்றம் காரணமாக அடிப்படை ஊதியத்தோடு தரப்படும் கூடுதல் தொகை English Meaning: a special allowance given along with the basic pay according to the cost of living index
அகவு (மயில்) கரகரப்பான குரலில் ஒலி எழுப்புதல் English Meaning: (of peacock) crow
அகவை வயது English Meaning: age
அகஸ்மாத்தாக முன்னேற்பாடு இல்லாமல் English Meaning: accidentally
அகாரணமாக காரணம் இல்லாமல் English Meaning: without (proper) reason
அகால மரணம் வாழ வேண்டிய வயதில் (ஒருவருக்கு) ஏற்படும் மரணம் English Meaning: premature or untimely death
அகாலம் (பெரும்பாலும் இரவில்) உரிய நேரம் அல்லாத நேரம் English Meaning: unearthly time
அகிம்சை உயிர்களுக்குத் தீங்கு செய்வதிலிருந்தும் வன்முறையில் ஈடுபடுவதிலிருந்தும் நீங்கிய நிலை English Meaning: non-violence
அகில நாடு அல்லது உலகு தழுவிய English Meaning: all
அகிலம் அனைத்து உலகம் English Meaning: entire world
அகில் கட்டைகளாக வெட்டி நறுமணப் பொருளாகப் பயன்படுத்தும் ஒரு வகை மரம் English Meaning: eagle-wood
அகோரம் அருவருப்பான தோற்றம் English Meaning: unsightliness
அகௌரவம் அவமதிப்பு English Meaning: disrespect
அக்கக்காக தனித்தனியாக English Meaning: part by part
அக்கடா-என்று (கடும் வேலைக்குப் பின்) ஓய்வாக English Meaning: (after hectic activity) leisurely
அக்கப்போர் தகராறு English Meaning: squabble
அக்கம்பக்கம்1 சுற்றியிருக்கும் பகுதி English Meaning: neighbourhood
அக்கரை வெளிநாட்டுக்கு உரிய அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த English Meaning: foreign
அக்கரைச் சீமை அயல்நாடு English Meaning: foreign country or land
அக்கறை (ஒரு துறையில் அல்லது ஒருவர் மேல்) ஈடுபாடு English Meaning: interest (in a field or in a person)
அக்கா உடன்பிறந்தவருள் தன்னைவிட மூத்தவள் English Meaning: elder sister
அக்காக்குருவி எளிதில் பார்க்க முடியாததாக, குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயிலினத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை English Meaning: hawk cuckoo
அக்கார அடிசில் நிறைய நெய் ஊற்றிச் செய்த சர்க்கரைப் பொங்கல் English Meaning: boiled rice mixed with sugar and clarified butter

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together