iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

903 words starting with அ · page 10 of 19

அபஸ்வரம் (குரல், இசைக் கருவி முதலியவை இசைத் தன்மை கெடும் முறையில்) ஒலிக்க வேண்டிய நிலையிலிருந்து விலகுதல் English Meaning: singing or playing a discordant note (owing to failure of voice or loss of control)
அபாக்கியம் துர்ப்பாக்கியம் English Meaning: misfortune
அபாண்டம் (ஒருவரை) களங்கப்படுத்தும் நோக்கத்தோடு கூறப்படுவது English Meaning: atrociousness
அபாயச் சங்கிலி புகைவண்டியின் பெட்டியில் பயணிகள் ஆபத்து நேரத்தில் வண்டியை நிறுத்த இழுக்க வேண்டிய சங்கிலி பொருத்தப்பட்ட சாதனம் English Meaning: alarm chain (in trains)
அபாயச்சங்கு அபாயத்தை அறிவிப்பதற்கான ஒலிக் கருவி English Meaning: siren (for warning or to signify danger)
அபாயம் ஆபத்து English Meaning: danger
அபாரம் பாராட்டத் தகுந்த முறையில் சிறப்பாக இருப்பது English Meaning: exceptionally good
அபிநயம் ஆடல் கலையில் களம், கருத்து, காலம் முதலியவற்றை முகபாவத்தாலும் உடல் உறுப்புகளாலும் உணர்ச்சியோடு வெளிப்படுத்துதல் English Meaning: communication and interpretation of meaningful ideas and emotions through facial expressions and rhythmic gestures of hands
அபிநயி ஆடல் கலையில் உடல் உறுப்புகளை (உணர்ச்சியோடு) அசைத்தல் English Meaning: show in gestures and postures (the feelings, emotions, etc.)
அபின்/அபினி (கசகசா விதையிலிருந்து தயாரிக்கப்படும்) ஒரு வகை போதைப்பொருள் English Meaning: opium
அபிப்பிராய பேதம் கருத்து வேற்றுமை English Meaning: difference of opinion
அபிப்பிராயம் (ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்த) சொந்தக் கருத்து English Meaning: personal opinion
அபிமானம் நன்மதிப்பு English Meaning: esteem
அபிமானி (ஒருவரின் அல்லது ஒன்றின்) நலனில் ஆர்வமுடையவர் English Meaning: enthusiast
அபிலாஷை விருப்பம் English Meaning: desire
அபிவிருத்தி (தொழில், பொருளாதார உற்பத்தி அளவில்) வளர்ச்சி English Meaning: development
அபிஷேகம் நீர், தேன் முதலியவற்றைக் கடவுளின் முழு உருவத்திலும் படும்படி சொரிதல் English Meaning: pouring fluid substances such as water, honey, etc over the consecrated idol
அபூரிதக் கரைசல் கலக்கப்படும் பொருளைத் தொடர்ந்து கரைய விடும் திரவம் English Meaning: unsaturated solution
அபூர்வம் எப்போதோ ஒரு முறை நிகழ்வது அல்லது காணப்படுவது English Meaning: that which occasionally occurs or is seen
அபேட்சகர் வேட்பாளர் English Meaning: candidate (for an election)
அபேஸ்செய் திருடிக்கொண்டுபோதல் English Meaning: walk off with
அப்சரஸ் (மிகவும் அழகு வாய்ந்த) தேவலோகப் பெண்கள் English Meaning: a class of celestial nymphs
அப்படியானால்/அப்படியென்றால் (நிலைமை) கூறியபடி இருக்குமானால் English Meaning: in this or that case
அப்படியே (மாற்றாமலும் சேர்க்காமலும்) உள்ளபடியே(ஒன்று அது) இருக்கிற நிலையில் English Meaning: (without alteration) as it is
அப்பட்டமாக/அப்பட்டமான ஒளிவுமறைவு இல்லாமல் English Meaning: blatantly/blatant
அப்பன் தந்தை English Meaning: father (considered as a standard term in religious context but non-standard in other contexts)
அப்பப்பா1 ஏதேனும் ஒன்றின் மிகுதியை உணர்ந்து உணர்ச்சியுடன் வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் தொடர் English Meaning: an expression uttered
அப்பப்பா2 அப்பாவின் அப்பா English Meaning: paternal grandfather
அப்பம் அரிசி மாவில் வெல்லம் சேர்த்து எண்ணெய்யில் வேகவைத்த தின்பண்டம் English Meaning: a flat round cake made by frying a paste of sweetened rice flour
அப்பளம் எண்ணெய்யில் பொரித்து உண்பதற்கு ஏற்ற முறையில் உளுத்தம் மாவைப் பிசைந்து மெல்லிய வட்டத் தகடாகச் செய்து தயாரிக்கப்படும் உணவுப் பண்டம் English Meaning: a thin and round wafer made of the flour of blackgram normally fried in oil
அப்பழுக்கு (பற்றியுள்ள) அழுக்கு English Meaning: (accumulated) dirt
அப்பா1 பெற்றோரில் ஆண் English Meaning: father
அப்பாடா/அப்பாடி நிம்மதி அல்லது ஓய்வு கிடைத்ததை வெளிப்படுத்தும் சொல் English Meaning: an expression of relief and relaxation
அப்பாவி தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர் English Meaning: innocent
அப்பியாசம் பயிற்சி English Meaning: exercise
அப்பிராணி அப்பாவி English Meaning: a person who is meek, docile and unresisting
அப்பு (சந்தனம், மை முதலியவற்றை) அதிகமாகப் பூசுதல் English Meaning: apply thick
அப்புக்காத்து வழக்கறிஞர் English Meaning: advocate
அப்புறம் (ஒன்று கழிந்த) பின் English Meaning: subsequently
அப்பேர்ப்பட்ட (சிறுமைக்கும் உயர்வுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்) அந்த மாதிரியான English Meaning: (while exemplifying meanness or greatness) such a kind of
அப்பொழுது/அப்போது (நிகழ்ச்சி நடந்த/நடைபெறும்) அந்த நேரத்தில் English Meaning: at the time
அப்போதைக்கப்போது உடனுக்குடன் English Meaning: at once
அப்போதைக்கு அந்த நேரத்தில் English Meaning: for a while
அமங்கலம் மங்கலம் அல்லாதது English Meaning: that which is inauspicious
அமங்கலி கணவன் இறந்த பின் மங்கலமாகக் கருதப்படும் பொருள்களை அணிவதற்கும் நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்கும் உரிமை இழந்த பெண் English Meaning: woman who is considered to have lost the right to auspicious things
அமர (புகழுடன்) என்றும் நிலைத்துநிற்கக் கூடிய English Meaning: immortal
அமரத்துவம் (புகழுடன்) என்றும் நிலைத்துநிற்கும் தன்மை English Meaning: eternity
அமரர் (அழிவு அற்றவராகிய) தேவர் English Meaning: (immortal) devas
அமர் உட்கார்தல் English Meaning: sit
அமர்க்களம் (-ஆக, -ஆன) கோலாகலம் English Meaning: grandness

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together