iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

903 words starting with அ · page 11 of 19

அமர்த்தல் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாத விதம் English Meaning: thinly veiled manner
அமர்த்து2 அணைத்தல் English Meaning: put out
அமர்வு (ஒத்த நோக்கத்துடன் குறிப்பிட்ட காலத்துக்குக் குறிப்பிட்ட இடத்தில்) பங்கேற்போர் கூடியிருத்தல் English Meaning: session (in a conference, meeting)
அமல் (இயற்றப்பட்ட சட்டத்தை அல்லது வகுத்த திட்டத்தை) நடைமுறைப்படுத்துதல் English Meaning: being in force or bringing
அமளி (கூச்சல் நிறைந்த) குழப்பம் English Meaning: tumult
அமானுஷ்யம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது English Meaning: that which is superhuman
அமாவாசை தேய்பிறையின் (இருள் மிகுந்த) கடைசி நாள் English Meaning: dark side of the moon
அமினா/அமீனா உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுகளை உரியவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பிற்கான அலுவலர் English Meaning: subordinate officer of civil court to serve legal processes
அமிர்தம் (புராணத்தில்) சாகாமையைத் தரக் கூடிய தேவர் உணவு English Meaning: food of the celestial beings (devas)
அமிலம் அரிக்கும் தன்மையும் புளிப்புச் சுவையும் கொண்ட திரவம் English Meaning: acid
அமிழ் (நீர், சதுப்பு நிலம் முதலியவற்றில்) ஆழத்தை நோக்கிக் கீழ் இறங்குதல் English Meaning: go down (under the surface of water, mire, etc.)
அமிழ்த்து (நீர், சேறு முதலியவற்றில்) அமுக்குதல் English Meaning: cause to go down (under the surface of water)
அமுக்கம்-ஆக/-ஆன கமுக்கமாக/கமுக்கமான English Meaning: secretively/secretive
அமுங்கு (பளு காரணமாக) அமிழ்தல் English Meaning: be pressed down
அமுதசுரபி (புராணத்தில்) அள்ளஅள்ள வற்றாமல் உணவு தரக் கூடிய கலம் English Meaning: a mythical vessel which never becomes empty of food
அமுது அமிர்தம் English Meaning: ambrosia
அமை1 உருவாகுதல் English Meaning: form
அமை2 உருவாக்குதல் English Meaning: (generally) make
அமைச்சகம் ஓர் அமைச்சரின் பொறுப்பில் இருக்கும் அரசு நிர்வாகத் துறை English Meaning: ministry
அமைச்சரவை அரசுத் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள் அடங்கிய குழு English Meaning: council of ministers
அமைச்சர் (முதல் அமைச்சரால்/பிரதம மந்திரியால்) அரசுத் துறையைத் தலைமை வகித்து நடத்தத் தேர்ந்தெடுக்கப்படுபவர் English Meaning: minister (in a cabinet)
அமைதி சப்தமோ பேச்சோ இல்லாத நிலை English Meaning: silence
அமைதிப்படுத்து சப்தம் இல்லாமல் இருக்குமாறு செய்தல் English Meaning: quieten
அமைப்பாக வசதியாகவும் எடுப்பாகவும் English Meaning: in proportion
அமைப்பியல் ஒரு முழுமையில் அதன் பகுதிகள் அமைந்துள்ள முறையையும் அவற்றிடையே உள்ள உறவையும் விளக்கும் ஆய்வு English Meaning: structural approach
அமைப்பு (ஒன்றின்) பல்வேறு கூறுகள் தம்முள் இணைந்து நிற்கும் முறை English Meaning: structure
அமோகம் (பாராட்டத் தகுந்த வகையில்) அதிகம் அல்லது சிறப்பு English Meaning: abundance
அம்சம் பல பகுதிகளாக அல்லது பன்முகமாக உள்ள திட்டம், ஆலோசனை முதலியவற்றில் குறிப்பிட்ட ஒரு பகுதி English Meaning: aspect (of an affair, idea, plan, etc.)
அம்பர் சர்க்கா பஞ்சை இழையாக்கப் பயன்படுத்தும், கையால் இயக்கப்படும் சாதனம் English Meaning: hand spinning wheel
அம்பறாத்தூணி (முற்காலத்தில் வீரர் அல்லது வேடர் முதுகில் தொங்கவிட்டு) அம்பு வைத்துக்கொள்ளும் கூம்பு வடிவக் கூடு English Meaning: (in former times) quiver
அம்பலம் (முன்னாளில்) கிராமத்தில் ஊர்ப் பொதுக் காரியங்கள் விவாதிக்கப்படும் அல்லது மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பொது இடம் English Meaning: community place in a village where (in former times) public hearing was held or public entertainment took place
அம்பாரம் (தானியம் முதலியவற்றின்) பெரும் குவியல் English Meaning: huge heap or pile (of grains, etc.)
அம்பாள்/அம்பிகை கோயிலில் பார்வதியைக் குறிக்கும் பொதுப்பெயர் English Meaning: a general term of the Goddess Parvati in temples
அம்பு கூரிய முனை கொண்டதாகச் செய்து வில்லின் நாணில் வைத்து எய்யப்படுவது English Meaning: arrow (of a bow)
அம்புலி நிலா English Meaning: moon
அம்போ-என்று விடு ஆதரவு அற்ற நிலையில் விடுதல் English Meaning: leave (someone) in the lurch
அம்மட்டில் அந்த அளவில் English Meaning: at that point
அம்மட்டுக்கு அந்த அளவுக்கு English Meaning: to that extent
அம்மணம் உடை உடுத்தாத நிலை English Meaning: nakedness
அம்மணம் பேசு அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசுதல் English Meaning: talk in obscenities
அம்மன் அம்பாள் English Meaning: the Goddess Parvati
அம்மம்மா அம்மாவின் அம்மா English Meaning: maternal grandmother
அம்மா1 பெற்றோரில் பெண் English Meaning: mother
அம்மான் தாய்மாமன் English Meaning: maternal uncle
அம்மாள் வயதான பெண்ணை மரியாதையுடன் குறிப்பிடும் சொல் English Meaning: (old fashioned) term of respect to refer to a woman
அம்மி குழவிகொண்டு மசாலா முதலிய பொருள்களை அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல் English Meaning: a (rectangular) slab of stone with a stone roller used for grinding (spices, etc.)
அம்மி மிதி திருமண நாளில் மணமகள் வலது காலை அம்மியின் மீது வைத்தல் என்னும் சடங்கை நிகழ்த்துதல் English Meaning: perform the ceremony of placing the right foot (of the bride) on the grinding stone on the wedding day
அம்மை குத்து அம்மை நோய் வராமல் இருக்கத் தடுப்பு ஊசி போடுதல் English Meaning: vaccinate against small pox
அம்மை வார் (ஒருவருக்கு) அம்மை நோய் உண்டாதல் English Meaning: have an attack of small pox
அம்மை2 தாய் English Meaning: mother

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together