903 words starting with அ · page 12 of 19
Tamil Word
Tamil Meaning
English Meaning
அம்மைக்கட்டு
தாடையின் கீழ்ப்பகுதியில் வீக்கம் உண்டாகிற வகையில் உமிழ்நீர்ச் சுரப்பிகளைப் பாதிக்கும் நோய்
English Meaning:
mumps
அம்மைத் தழும்பு
அம்மை நோயால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறிய பின் அவை விட்டுச்செல்லும் குழிவான தடம்
English Meaning:
pock-mark
அம்மைப் பால்
பெரியம்மை நோய் வராமல் இருப்பதற்குப் போடப்படும் தடுப்பு ஊசிக்கான மருந்து
English Meaning:
small pox vaccine
அம்மையார்
பொதுவாழ்வில் புகழ் பெற்ற பெண்மணியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ஒரு மரியாதைச் சொல்
English Meaning:
a respectful way of referring to a lady, a public figure
அயச்சத்து
(உணவுப் பொருள்களில் இயற்கையாக இருக்கும்) இரும்புத் தாதுவின் சத்து
English Meaning:
iron (content)
அயன்
(பிறவற்றோடு ஒப்பிடும்போது) மேம்பட்டது
English Meaning:
excellence
அயர்
அதிக ஆச்சரியம் அடைதல்
English Meaning:
be greatly surprised
அயர்ச்சி
(உடல்) சோர்வு
English Meaning:
fatigue
அயர்ந்து
ஆழ்ந்து, தன்னை மறந்து (உறங்குதல்)
English Meaning:
(sleep) sound
அயலவர்
அருகில் வாழ்பவர்
English Meaning:
next door neighbour
அயலான்
உறவினன் அல்லாதவன்
English Meaning:
stranger
அயலுறவு
வெளியுறவு
English Meaning:
foreign affairs
அயல்1
தொடர்பற்றது
English Meaning:
that which has no connection or relation
அயல்2
பக்கம்
English Meaning:
side (of s
அயல்நாடு
வெளிநாடு
English Meaning:
foreign country
அயிரை
ஆறுகளில் கூட்டமாக வாழும் ஒரு வகைச் சிறிய மீன்
English Meaning:
loach
அயோக்கியன்
நேர்மையும் நாணயமும் இல்லாதவன்
English Meaning:
dishonest person
அரக்கன்
(புராணத்தில்) ராட்சசன்
English Meaning:
a male demon
அரக்கப்பரக்க
அவசரம்அவசரமாக
English Meaning:
hurriedly
அரக்கி
அரக்கன் என்பதன் பெண்பால்
English Meaning:
female of அரக்கன்
அரக்கு1
(உள்ளங்கையில் ஒன்றை வைத்துக் கசக்கி அல்லது காலால் மிதித்து) அழுத்தித் தேய்த்தல்
English Meaning:
crush
அரக்கு2
முத்திரையிடப் பயன்படுத்தும் கரும் சிவப்பு மெழுகு
English Meaning:
sealing wax
அரங்கம்
(நாடகம், நாட்டியம் முதலியவை நடக்கும்) மேடை
English Meaning:
stage (for plays)
அரங்கேறு
அரங்கேற்றம் செய்யப்படுதல்
English Meaning:
have premiere
அரங்கேற்று
அரங்கேற்றம் செய்தல்
English Meaning:
make a debut/present a new work for acceptance
அரசகரும மொழி
ஆட்சிமொழி
English Meaning:
official language
அரசன்
(பெரும்பாலும்) பரம்பரை முறையில் ஒரு நாட்டை ஆளும் உரிமையைப் பெற்றவர்
English Meaning:
king
அரசமரம்
கூரிய முனையும் அகன்ற அடிப்பகுதியும் உடைய இலைகளைக் கொண்டதும் உயரமாக வளரக் கூடியதுமான மரம்
English Meaning:
pipal
அரசல்புரசலாக
அரைகுறை நிலையில்
English Meaning:
in a way one cannot specify
அரசாங்கம்
ஒரு நாட்டை நிர்வகிக்கும் (அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட) அமைப்பு
English Meaning:
government
அரசாட்சி
அரசனுடைய ஆளுகை
English Meaning:
rule or reign of a king
அரசாள்
(அரசன் நாட்டை) ஆட்சிபுரிதல்
English Meaning:
(of a king) rule
அரசி
(ஆண் வாரிசு இல்லாத) அரசனின் மகளாக இருந்து நாட்டை ஆளும் உரிமையைப் பெற்றவள்
English Meaning:
queen
அரசிதழ்
(அரசின் முக்கிய அறிவிப்புகள், பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் முதலியவை வெளியாகும்) அரசின் அதிகாரப்பூர்வமான ஏடு
English Meaning:
gazette
அரசியல்
நாட்டை ஆட்சிபுரியும் முறை
English Meaning:
politics
அரசியல் கைதி
ஓர் அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கைதுசெய்யப்பட்ட நபர்
English Meaning:
political prisoner
அரசியல் சட்டம்
குடிமக்களின் உரிமை, அரசின் கடமை, அதிகாரம் முதலியவற்றை வரையறுக்கும் அடிப்படைச் சட்டம்
English Meaning:
constitution (of a country)
அரசியல் சாசனத் திருத்தம்
பாராளுமன்றத்தின் வழியாக அரசியல் சாசனத்தில் (இருப்பவற்றை மாற்றியோ நீக்கியோ புதிய ஷரத்துகளைச் சேர்த்தோ) செய்யப்படும் திருத்தம்
English Meaning:
amendment to the constitution (made by the parliament adopting special procedure)
அரசியல் யாப்பு
அரசியல் சட்டம்
English Meaning:
constitution (of a country)
அரசியல்வாதி
அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்
English Meaning:
politician
அரசு வழக்கறிஞர்
அரசுத் தரப்பில் வழக்கை நடத்தும் வழக்கறிஞர்
English Meaning:
public prosecutor
அரசுடமை
அரசின் உடமையாக இருப்பது
English Meaning:
nationalized property
அரசுடமை ஆக்கு
தனியாரால் தொடங்கப்பட்ட ஒரு தொழிலை அல்லது நிறுவனத்தை அரசு தன் உரிமையாக்குதல்
English Meaning:
nationalize
அரசுத் தலைமை வழக்கறிஞர்
மாநில, மைய அரசுகளின் சார்பில் வழக்குகளை நடத்த (அரசியல் சட்டத்தின் கீழ்) நியமிக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர்
English Meaning:
advocate-general (in states)
அரசுரிமை
(முடியாட்சியில்) நாட்டை ஆளுகிற உரிமை
English Meaning:
(in monarchy) the right to rule (over a country)
அரசோச்சு
அரசாளுதல்
English Meaning:
rule
அரட்டை
பொழுதைப் போக்கக் கூடியிருந்து பேசும் பேச்சு
English Meaning:
chat
அரணை1
அசையக் கூடிய இமையும் பளபளப்பான செதில்களும் உடைய பல்லி இனத்தைச் சேர்ந்த பிராணி
English Meaning:
skink
அரணை2
(கணிதத்தில்) வகுத்தல் குறி
English Meaning:
(in arithmetic) sign of division
அரண்
பாதுகாப்பு
English Meaning:
protection
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.