903 words starting with அ · page 13 of 19
Tamil Word
Tamil Meaning
English Meaning
அரண்மனை
அரசன் வசிக்கும் மாளிகை
English Meaning:
palace
அரப்பு
(எண்ணெய்யைப் போக்குவதற்குப் பயன்படுத்தும்) சில வகை இலைகளை அல்லது பட்டையை அல்லது பாசிப் பயற்றை இடித்து உண்டாக்கிய பொடி
English Meaning:
the flour of certain leaves, bark or lentils (used to remove oily or greasy substance from the body, vessels, etc.)
அரம்
(இரும்பைத் தேய்ப்பதற்கும் வழவழப்பாக்குவதற்கும் பயன்படுத்தும்) முப்பட்டை முதலான வடிவங்களில் வரிவரியான கோடுகள் கொண்ட சிறு கருவி
English Meaning:
file
அரம்பையர்
(புராணத்தில்) தேவலோகப் பெண்கள்
English Meaning:
celestial damsels
அரளி
(வழிபாட்டுக்குப் பயன்படும்) கரும் சிவப்பு அல்லது வெள்ளை நிறப் பூக்களையும் குறுகிய நீண்ட இலைகளையும் உடைய ஒரு வகைச் செடி
English Meaning:
oleander
அரள்
(பீதி தரும் நிகழ்ச்சியால்) மிரட்சி அடைதல்
English Meaning:
get scared
அரவணை
(ஆதரவோடு) அணைத்தல்
English Meaning:
take
அரவணைத்துக் கொண்டுபோ
அன்பும் பரிவும் காட்டி நடத்துதல்
English Meaning:
carry on by being tolerant and willing to make concessions
அரவணைப்பு
பாதுகாப்பு
English Meaning:
protection
அரவம்1
(ஆள், விலங்கு நடமாட்டத்தால் ஏற்படும்) சப்தம்
English Meaning:
noise (made by the movement of human beings, animals)
அரவம்2
பாம்பு
English Meaning:
snake
அரவை
அரிசி, மிளகாய் முதலியவற்றைப் பொடியாகும்படி அல்லது நெல்லை அரிசியாகும்படி அரைத்தல்
English Meaning:
milling (rice, dry chillies, etc.) or husking (paddy)
அராஜகம்
நியாயம் அற்ற அதிகாரப் போக்கு
English Meaning:
anarchy
அராவு
(அராவ, அராவி) அரத்தால் தேய்த்தல்
English Meaning:
smooth (a hard surface, rough edge) with a file
அரி1
சிறுசிறு துண்டுகளாக நறுக்குதல்
English Meaning:
cut into pieces
அரி3
சொறியத் தூண்டும் உணர்வு உண்டாதல்
English Meaning:
cause a feeling of irritation
அரிக்கன் விளக்கு
காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட, கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு
English Meaning:
a kind of hurricane lamp
அரிசி
உணவாகப் பயன்படும் உமி நீக்கப்பட்ட நெல்மணி
English Meaning:
rice (grain)
அரிசிப் பல்
(குழந்தைகளுக்கு முதலில் தோன்றுவதைப் போன்ற) சிறிய பல்
English Meaning:
little teeth (as of baby teeth)
அரிச்சந்திரன்
(பெரும்பாலும் கேலியாக) பொய் பேசாதவர்
English Meaning:
(often jocularly) an honest chap
அரிச்சுவடி
எழுத்துகளையும் சில சொற்களையும் எண்களையும் கொண்ட ஆரம்பப் பாட நூல்
English Meaning:
a primer (for children with the alphabet and numbers)
அரிஜனம்
(இந்துச் சமூகத்தில்) தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் சார்ந்திருக்கும் சாதிகளைக் குறிக்கும் பொதுப்பெயர்
English Meaning:
a term (coined by Gandhi) to refer to people of certain castes of Hindus who were considered untouchables
அரிதாரம்
(நாடகக் கலைஞர் போன்றோர்) முக ஒப்பனைக்குப் பூசிக்கொள்ளும் ஒரு வகைப் பொடி
English Meaning:
cosmetic powder (applied by performing artistes to their face)
அரிது
எப்போதாவது ஒரு முறை காணக் கூடியது அல்லது நிகழக் கூடியது
English Meaning:
that which is unusual or rare
அரிப்பு1
(ஒன்றிற்கு ஏற்படும்) சேதம்
English Meaning:
damage (to objects by erosion, corrosion, etc.)
அரிப்பு2
(உடம்பில் ஏற்படும்) நமைச்சல்
English Meaning:
itch
அரிய
அபூர்வமான
English Meaning:
rare
அரியணை
(அவையில்) அரசன் அல்லது அரசி அமரும் அலங்கார இருக்கை
English Meaning:
throne
அரிவரி
(முதல் வகுப்புக்கு முன் உள்ள குழந்தைகளுக்கான) ஆரம்ப வகுப்பு
English Meaning:
preschool
அரிவாள்
(பெரும்பாலும்) உள்வளைவான வெட்டும் பரப்புடைய இரும்புக் கருவி
English Meaning:
different types of sickle
அருகதை
தகுதி
English Meaning:
competence
அருகம்புல்
வேர் விட்டுப் பரவலாகப் படர்ந்து வளரும் ஒரு வகைப் புல்
English Meaning:
a kind of grass
அருகாமை
சமீபம்
English Meaning:
proximity
அருகால்
கதவு நிலை
English Meaning:
door frame
அருகில்
பக்கத்தில்
English Meaning:
near
அருகு2
அண்மை
English Meaning:
nearness
அருங்காட்சியகம்
பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் சான்றாகும் பொருள்கள், அறிவியல் விளக்கப் பொருள்கள் முதலியவை காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் இடம்
English Meaning:
museum
அருணோதயம்
சூரியன் எழும் காலைப்பொழுது
English Meaning:
daybreak, esp
அருந்ததி
சப்தரிஷி மண்டலத்தில் உள்ளதும் காண்பதற்கு அரிதானதுமான ஒரு நட்சத்திரம்
English Meaning:
scarcely visible Alcor (of the Great Bear constellation)
அருந்ததி காட்டு
அருந்ததி நட்சத்திரத்தை மணமகள் பார்க்கும்படி செய்தல் என்னும் சடங்கை நிகழ்த்துதல்
English Meaning:
perform the ceremony of making the bride see the star அருந்ததி
அருந்து
(சுவைத்து) குடித்தல்
English Meaning:
drink (with relish)
அருமந்த
பிரியமான
English Meaning:
dear
அருமை
மிகவும் பாராட்டும்படியானது, உயர்வாகச் சொல்லக் கூடியது
English Meaning:
that which is highly praiseworthy
அரும்
அரிய
English Meaning:
precious
அரும்பதவுரை
(இலக்கிய, இலக்கண நூல் பதிப்பில்) கடினச் சொற்களுக்குப் பொருள் விளக்கம்
English Meaning:
meaning of difficult words (in an edition of literary and grammatical texts)
அரும்பாடுபடு
பெரு முயற்சி செய்தல்
English Meaning:
take great effort
அரும்பு மீசை
சிறு கோடு போன்ற மீசை
English Meaning:
moustache like a thin line
அரும்பு1
(மொட்டு, தளிர்) துளிர்த்தல்
English Meaning:
(of buds, tender leaves) sprout
அரும்பு2
(இள) மொட்டு
English Meaning:
(tender) bud
அருள்1
(கருணை நோக்கத்துடன்) தருதல்
English Meaning:
grant
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.