903 words starting with அ · page 15 of 19
Tamil Word
Tamil Meaning
English Meaning
அறிவாளி
கூர்ந்த அறிவு உடையவர்
English Meaning:
man of knowledge
அறிவிப்பு
நடந்து முடிந்ததை அல்லது நடக்க இருப்பதை அனைவரும் அறியும்படியான கூற்று அல்லது வெளியீடு
English Meaning:
announcement
அறிவிப்புப் பலகை
(சில அலுவலகங்களில் அல்லது பொது இடங்களில்) அறிவிப்புத் தாங்கிய அல்லது ஒட்டப்பட்ட பலகை
English Meaning:
notice board (in offices or public places)
அறிவியல்
உலகில் இருப்பவற்றை, இயற்கை நியதிகளைக் கவனித்தும் சோதித்தும் நிரூபித்தும் பெறும் அறிவு அல்லது மேற்குறிப்பிட்ட அறிவை வகைப்படுத்திய ஒரு துறை
English Meaning:
science or branch of science
அறிவியல் கூடம்
அறிவியல் செய்முறைப் பயிற்சி செய்வதற்குத் தேவையான கருவிகளுடன் அமைக்கப்படும் இடம்
English Meaning:
science laboratory
அறிவிலி
அறிவு இல்லாதவர்
English Meaning:
ignorant person
அறிவீனம்
முட்டாள்தனம்
English Meaning:
ignorance
அறிவு
அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றுத் தெரிந்துவைத்திருப்பது
English Meaning:
understanding gained by experience, thinking, etc
அறிவுஜீவி
சிந்தனையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்
English Meaning:
intellectual
அறிவுரை
நன்மை விளைவிக்கும் என்னும் நோக்கில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் கருத்து
English Meaning:
advice
அறிவுறுத்து
(தெரிவித்தபடி நடந்துகொள்ளுமாறு) கேட்டுக்கொள்ளுதல்
English Meaning:
instruct
அறு1
(கயிறு, இழை, தந்திக் கம்பி முதலியன) துண்டாதல்
English Meaning:
(of rope, metal string, etc.) be cut off
அறு2
(கூரிய பரப்புடைய ஒன்றை) முன்னும் பின்னும் நகர்த்தி வெட்டுதல்
English Meaning:
cut (as with a saw)
அறுகோணம்
ஆறு (சம) கோணமுடைய வடிவம்
English Meaning:
hexagon
அறுசுவை
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு, கசப்பு ஆகிய ஆறு சுவைகள்
English Meaning:
the six kinds of tastes in relation to food viz
அறுதி
(மாற்ற முடியாத) முடிவு
English Meaning:
final
அறுதிப்பெரும்பான்மை
பிற கட்சிகளின் கூட்டு இல்லாமல் தனித்தே ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர் எண்ணிக்கை
English Meaning:
absolute majority (for a political party)
அறுதியிடு
வரையறுத்தல்
English Meaning:
state
அறுபதாம் கல்யாணம்
ஒருவருக்கு அறுபது வயது நிறைகிறபோது, அவருடைய மகனாலும் மகளாலும் (மீண்டும் ஒரு திருமணம் போலவே) நடத்தப்படும் சடங்கு
English Meaning:
a ceremony similar to marriage celebrated by the sons and daughters of one on his completing sixty years
அறுபது
பத்தின் ஆறு மடங்கைக் குறிக்கும் எண்
English Meaning:
(the number) sixty
அறுப்புக் கூலி
பயிர் அறுவடை செய்பவர்களுக்கு அல்லது மரம், செங்கல் போன்றவற்றை அறுப்பவர்களுக்குத் தரப்படும் கூலி
English Meaning:
wages given to the workers employed for harvesting, sawing wood or making bricks, etc
அறுவை
(நோயுற்ற பாகத்தைக் குணப்படுத்த) அறுத்துச் செய்யப்படும் மருத்துவம்
English Meaning:
surgery
அறை2
(விரித்த கை முதலியவற்றால் ஒரு பரப்பில்) வேகத்துடன் வந்து விழும் வலிக்கும்படியான தாக்கம்
English Meaning:
slap
அறை3
வீட்டின் அல்லது கட்டடத்தின் உள்ளே கதவு, ஜன்னல் முதலியன வைத்துச் சுவரால் தனித்தனியாகத் தடுக்கப்படும் இடம்
English Meaning:
room (in a house)
அறைகூவல்
(ஒரு பொது நன்மைக்கு) ஒத்துழைக்குமாறு விடுக்கப்படும் அழைப்பு
English Meaning:
a call (for action or for cooperation)
அறைந்து
(மூடு, சாத்து போன்ற வினைகளுடன்) சத்தத்துடன் பலமாக
English Meaning:
(with verbs such as மூடு, சாத்து) with a bang
அற்பசொற்பம்
மிகவும் குறைவு
English Meaning:
negligible (amount or measure)
அற்பம்
கேவலம்
English Meaning:
meanness
அற்பாயுசு/அற்பாயுள்
குறைந்த வாழ்நாள்
English Meaning:
short lease of life
அற்புதம்
(-ஆக, -ஆன) வியப்பு தரும் வகையில் சிறப்பானது
English Meaning:
wonder
அற்ற
இல்லாத
English Meaning:
without-less
அற்று
இல்லாமல்
English Meaning:
without
அலகு2
(நிறுத்தலளவை, முகத்தலளவை போன்றவற்றில்) அடிப்படை அளவு
English Meaning:
unit (of measurement)
அலக்காக
(அநாயாசமாக) அப்படியே தனியாக
English Meaning:
(with ease and facility) as it is
அலக்கு
துறட்டி
English Meaning:
pole fixed with a hook (to pluck fruit, etc.)
அலங்கமலங்க
(பார், விழி ஆகிய வினைகளுடன்) ஒன்றும் புரியாமல்
English Meaning:
confusedly
அலங்காரம்
அலங்கரிக்கப்பட்ட நிலை
English Meaning:
make-up
அலங்காரி
சற்று மிகையாக ஒப்பனை செய்துகொண்ட பெண்
English Meaning:
a woman with heavy make-up
அலங்கோலம்
(பொருள்களின்) சீர்குலைவு(ஆடை, அலங்காரத்தில்) தாறுமாறான தோற்றம்
English Meaning:
(of things) disorderliness
அலசல்1
அடர்த்தியின்மை
English Meaning:
sparseness
அலசல்2
பல்வேறு அம்சங்களையும் அடக்கிய விளக்கம்
English Meaning:
threadbare analysis
அலசு
(அழுக்கு நீங்குவதற்காகத் துணி, பாத்திரம் போன்றவற்றை நீரில்) முக்கி ஆட்டி எடுத்தல்
English Meaning:
rinse (clothes, vessels, etc.)
அலட்சியமாக
அநாயாசமாக
English Meaning:
with ease
அலட்டு
(சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி மனத்தை) வருத்துதல்
English Meaning:
bother
அலமாரி
பொருள்கள் வைப்பதற்கு வசதியாகச் சில தட்டுகள் கொண்டதும் (பெரும்பாலும்) கதவு போடப்பட்டதுமான அமைப்பு
English Meaning:
a cupboard (usually) with doors
அலம்பு
கழுவுதல்
English Meaning:
wash
அலறல்
(பயத்தினால் எழுப்பும்) பெரும் குரல்
English Meaning:
scream
அலறியடித்துக்கொண்டு
(ஒன்று ஏற்படுத்தும் பாதிப்பால் அல்லது விளைவால்) பதறிப்போய்
English Meaning:
agitatedly
அலறு
(பயம், வலி முதலியவற்றால்) கூக்குரலிடுதல்
English Meaning:
scream (out of fear, grief, pain, etc.)
அலவாங்கு
கடப்பாரை
English Meaning:
crow-bar
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.