903 words starting with அ · page 16 of 19
Tamil Word
Tamil Meaning
English Meaning
அலாதி
(வேறுபட்டதாக இருப்பதால்) சிறப்பானது
English Meaning:
something special or unique
அலாரிப்பு
நாட்டியம் கற்பவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் முதல் பாடமான, குறிப்பிட்ட அடிப்படையான சொற்கட்டுகளுக்கு ஏற்ப ஆடும் முறை
English Meaning:
the first invocatory item in a dance recital which helps the dancer to warm up and become capable of rhythmic coordinated movements
அலி
ஆண் என்றோ பெண் என்றோ சொல்ல முடியாத நபர்
English Meaning:
a person who is neither male nor female
அலுகோசு
தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அரசாங்க ஊழியன்
English Meaning:
hangman
அலுங்கு
அசைதல்
English Meaning:
move slightly
அலுப்பு
சலிப்பு
English Meaning:
boredom
அலுமினியம்
(பாத்திரம், மின் கம்பி முதலியன செய்யப் பயன்படும்) எளிதில் வளையக் கூடிய, கனம் அற்ற வெண்ணிற உலோகம்
English Meaning:
aluminium
அலுவலகம்
(மாத ஊதியம் பெற்று) பணி அல்லது தொழில் செய்யும் இடம்
English Meaning:
a place of work
அலுவலர்
அலுவலகத்தில் பணி செய்பவர்
English Meaning:
employee
அலுவல்
மாத ஊதியம் பெற்றுச் செய்யும் பணி
English Meaning:
work (at the office)
அலை1
(ஒன்றைத் தேடி நேரம் செலவிட்டு) பல இடங்களுக்குப் போதல்
English Meaning:
go all around
அலை2
(மனத்தை) அலைபாயச்செய்தல்
English Meaning:
toss about
அலை3
காற்றின் இயக்கத்தால் நீர்ப் பரப்பிலிருந்து கரை நோக்கி உயர்ந்தும் சுருண்டும் வரும் நீர்
English Meaning:
wave
அலைக்கழி1
(அலைச்சலால், முடிவுக்கு வர முடியாததால்) தத்தளித்தல்
English Meaning:
be beset
அலைக்கழி2
தத்தளிக்கச்செய்தல்
English Meaning:
torment
அலைச்சல்
அலைதலால் ஏற்படும் சிரமம்
English Meaning:
trouble caused by hectic moving about
அலைபாய்
(கூட்டம்) திரண்டு வருதல்
English Meaning:
(of crowd) surge (up)
அலைவரிசை
ஒலிபரப்புக்காகவோ ஒளிபரப்புக்காகவோ ஒரு வினாடிக்கு இத்தனை என்னும் முறையில் அனுப்பும் மின்காந்த அலைகளின் தொடர்
English Meaning:
(radio) frequency
அலோகம்
திட, திரவ, வாயு ஆகிய மூன்று நிலைகளில் காணப்படுவதும் பளபளப்புத் தன்மை அற்றதுமான தனிமம்
English Meaning:
non-metal
அல்குல்
பெண்குறி
English Meaning:
female genital organ
அல்லது
ஒரே வாக்கியத்திலும் இரு வேறு வாக்கியங்களிலும் மாற்றாக இருப்பவற்றின் இடையில் இடப்படும் இணைப்புச் சொல்
English Meaning:
(the disjunctive) or
அல்லன்
உயர்திணையில் (தன்மையிலும் படர்க்கையிலும்) ஆண்பால் எழுவாய்க்கு உரிய எதிர்மறை முற்று(ஒப்பிடுக: அல்ல)
English Meaning:
a negative verb concord to the human masculine (first or third person) subject
அல்லர்
மறுத்துக் கூறுதலுக்குப் பயன்படுத்தும் உயர்திணைப் பலர்பால் எழுவாய்க்கு உரிய எதிர்மறை முற்று(ஒப்பிடுக: அல்ல)
English Meaning:
a negative verb concord to the human plural subject
அல்லல்
துன்பம்
English Meaning:
trouble
அல்லா
ஆண்டவன்
English Meaning:
allah
அல்லாடு
(ஒன்றைச் செய்வதற்கு) திண்டாடுதல்
English Meaning:
struggle
அல்லாத
(சொல்லப்பட்டது) நீங்கலாக உள்ள
English Meaning:
other than (what is said)
அல்லாமல்
(சொல்லப்பட்டதோடு) கூடுதலான மற்றொரு செய்தி தொடர்வதை அல்லது மாறாக ஒன்று அமைவதைக் காட்டும் சொல்
English Meaning:
not only
அல்லி
அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டையும் உடைய, நீரில் மிதக்கும் ஒரு வகைத் தாவரம்/அந்தத் தாவரத்தின் வெண்ணிறப் பூ
English Meaning:
water lily (the plant and the flower)
அல்லிவட்டம்
பூவின் இதழ்கள் வட்ட வடிவமாக அமைந்திருக்கும் ஒழுங்கு
English Meaning:
corolla
அல்லும்பகலும்
இடைவிடாமல்
English Meaning:
day in and day out
அல்லோலகல்லோலப்படு
பெரும் பரபரப்பு அடைதல்
English Meaning:
be in commotion
அல்வா
கோதுமை மாவில் பாகு ஊற்றிக் கிளறிச் செய்யப்படும் (வழுவழுப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்) இனிப்புப் பண்டம்
English Meaning:
(a soft, smooth jelly like) sweet-meat made of sugar treacle and wheat flour
அள1
(ஒரு பொருளின் முப்பரிமாணங்களையோ எடையையோ அதற்கான கருவிகளால்) கணக்கிடுதல்
English Meaning:
measure
அள2
(ஒன்றை) பல மடங்காக்கி (சொந்தக் கற்பனையோடு) கூறுதல்
English Meaning:
exaggerate
அளப்பரிய
அளவிட முடியாத
English Meaning:
immeasurable
அளப்பு1
(ஒன்றை) அளத்தல்
English Meaning:
measurement
அளப்பு2
கட்டுக்கதை
English Meaning:
exaggeration
அளவளாவு
(நட்பு முறையில்) மனம்விட்டுப் பேசுதல்
English Meaning:
talk in a friendly way
அளவிடு
மதிப்பிடுதல்
English Meaning:
assess
அளவு
(-ஆக, -ஆன) நீளம், அகலம், உயரம், எடை, எண்ணிக்கை ஆகியவற்றுள் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதைக் கொண்டு அமைக்கும் வரையறை
English Meaning:
measurement
அளவுகோல்
ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கு உரிய அலகு குறிக்கப்பட்ட கோல்
English Meaning:
measuring rod
அளவுக்கு
(பெயரெச்சத்தின் பின்) (கூறப்படும்) நிலைக்கு
English Meaning:
(after relative participle) to the extent of
அளவுச் சாப்பாடு
(உணவு விடுதியில்) குறிப்பிட்ட அளவுடைய உணவும் அதற்குத் தரப்படும் உப உணவுகளும்
English Meaning:
set meal (in a restaurant)
அளவெடு
(உடை போன்றவற்றைத் தயாரிக்க நீளம், சுற்றளவு முதலியவற்றை) கணக்கெடுத்தல்
English Meaning:
take measurements
அளவை
ஒரு பொருளின் எடை, எண்ணிக்கை, நிறை முதலியவற்றை அறியும் நிறுத்தல், எண்ணுதல், முகத்தல் போன்ற முறை
English Meaning:
measure (of length, count, weight, etc.)
அளாவு
(வானம், உலகு முதலிய சொற்களுடன் இணைந்து வரும்போது) தொடும் அளவுக்குப் போதல்
English Meaning:
(when combining with words such as sky, world, etc.) extend up to
அளி
வழங்குதல்
English Meaning:
give
அளை
(விரல்களால் அங்குமிங்கும்) ஒதுக்குதல்
English Meaning:
fiddle about or around
அள்ளி
(இறை, வீசு போன்ற வினைகளுடன்) மிகுதியாக
English Meaning:
in large measure
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.