iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

903 words starting with அ · page 17 of 19

அள்ளிக்கொண்டு போ திட்டமிட்டதற்கு அல்லது எதிர்பார்த்ததற்கு மாறாகக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாகச் செலவாதல் English Meaning: go beyond all calculations
அழகன் அழகிய தோற்றமுடையவன் English Meaning: handsome man
அழகாக சுலபமாக English Meaning: very easily
அழகி அழகிய தோற்றமுடையவள் English Meaning: beautiful woman
அழகிய அழகான English Meaning: beautiful
அழகியல் (கலைகளில்) அழகைப்பற்றிய கொள்கை English Meaning: aesthetics
அழகு கண்ணாலோ காதாலோ மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி English Meaning: beauty
அழகுகாட்டு (நாக்கை நீட்டுதல், முகத்தைச் சுளித்தல் போன்ற செய்கைகளால்) கேலிசெய்தல் English Meaning: make faces at
அழகுசாதனம் ஒப்பனை செய்துகொள்வதற்கு வேண்டிய பொருள்கள் English Meaning: cosmetics
அழற்சி தொற்று நோயால் பாதிக்கப்பட்ட உடல் பகுதி சிவந்தும் வீங்கியும் சற்றுச் சூடாகவும் இருக்கும் நிலை English Meaning: inflammation
அழல் நெருப்பு English Meaning: fire
அழி1 இருப்பது மறைதல் English Meaning: become extinct
அழி2 இல்லாமல்செய்தல் English Meaning: cause to perish
அழிச்சாட்டியம் முரண்டு English Meaning: stubborn behaviour
அழிந்துபடு இல்லாமல்போதல் English Meaning: go to rack and ruin
அழிபாடு (கட்டடம் போன்றவற்றின்) இடிந்த சிதைவு English Meaning: ruin(s)
அழிப்பான் (எழுதப்பட்டதை அல்லது தட்டச்சு செய்யப்பட்டதை) அழிக்கப் பயன்படும் ரப்பர்த் துண்டு English Meaning: eraser
அழிப்பு அழித்தல் English Meaning: destroying
அழிவு சிதைவு English Meaning: destruction
அழு (துன்பம், வலி, பசி முதலியவற்றால்) கண்ணீர் விடுதல் English Meaning: weep
அழுகல் (பழம், முட்டை முதலிய) பொருள்களின் கெட்டுப்போன நிலை English Meaning: the state of being rotten or putrefied
அழுகு (பழம், முட்டை முதலியன) கெட்டுப்போதல் English Meaning: (of fruits, eggs, etc.) rot
அழுகுணி (பெரும்பாலும் சிறுவர்களைக் குறிப்பிடும்போது) அழுமூஞ்சி English Meaning: crybaby
அழுகை (துன்பம், வலி, பயம் போன்றவற்றால்) அழுதல் English Meaning: weeping
அழுக்கு (-ஆக, -ஆன) (உடை, உடல் முதலியவற்றில் சேரும்) அசுத்தம் English Meaning: dirt (on clothes, body, etc.)
அழுதுவடி (எதிர்பார்க்கும்) இயல்பு முதலியன வெகுவாகக் குறைந்து காணப்படுதல் English Meaning: look gloomy
அழுத்தம் உறுதி English Meaning: firmness
அழுத்தம்திருத்தம்-ஆக/-ஆன (சிறிதும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல்) உறுதியோடு தெளிவாக/உறுதியோடு தெளிவான English Meaning: firmly and precisely/firm and precise
அழுத்தி வலியுறுத்தி English Meaning: with stress
அழுத்து உள் அல்லது கீழ் நோக்கிப் போகச்செய்தல்(ஒன்று) ஒரு பரப்பை விசையோடு நெருக்குதல் English Meaning: press
அழுந்த (ஒன்றில்) பதியும்படியாக அல்லது படியும்படியாக English Meaning: close
அழுந்து (ஈரப் பதமுடைய தரையில் அல்லது மென்மையான பொருளில்) உள்ளிறங்குதல் English Meaning: sink (in a wet soil or on a soft material)
அழுமூஞ்சி சிறிய விஷயங்களுக்குக்கூட அழுதுவிடும் குணமுடைய நபர் English Meaning: a sulky person
அழைத்துக்கொள் ஒருவர் மற்றொருவரைத் தம்மோடு கூட்டிக்கொள்ளுதல் English Meaning: take
அழைத்துவா (ஓர் இடத்துக்கு) கூட்டிக்கொண்டு வருதல் English Meaning: bring
அழைப்பாளர் (விழா, கருத்தரங்கு முதலியவற்றில் கட்டணம் செலுத்தியோ அழைப்பின் பேரிலோ) பங்குபெறுபவர் English Meaning: delegate
அழைப்பிதழ் கலந்துகொள்ளுமாறு அல்லது காண வருமாறு வேண்டி ஒருவருக்கு அனுப்பப்படும் அச்சிட்ட தாள் English Meaning: invitation
அழைப்பு எழுத்து அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள் English Meaning: call (to appear)
அழைப்பு மணி வீட்டுக்குள் இருப்பவருக்குத் தன் வரவைத் தெரிவிக்க அல்லது ஒருவரைத் தன்னிடத்துக்கு வரச் சொல்லப் பயன்படுத்தும், ஒலி எழுப்பக் கூடிய (மின்) சாதனம் English Meaning: calling bell
அவகாசம் (ஒரு வேலையைச் செய்துமுடிப்பதற்கு ஆகும்) நேரம் English Meaning: time
அவசரக்குடுக்கை (விளைவுகளைப்பற்றி நினைக்காமல்) ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர் English Meaning: one who is rash and hasty
அவசரக்கோலம் (திருத்தமாகச் செய்ய முடியாத அளவுக்கு) மிகுந்த அவசரம் English Meaning: something done in haste
அவசரச் சிகிச்சைப் பிரிவு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுபவருக்கு உடனடிச் சிகிச்சை வழங்கும் பிரிவு English Meaning: emergency ward or unit (in a hospital)
அவசரச்சட்டம் நாடாளுமன்றத்தின் அல்லது மாநிலச் சட்டமன்றத்தின் கூட்டம் நடைபெறாத காலத்தில் குடியரசுத் தலைவராலோ மாநில ஆளுநராலோ அவசரத் தேவை கருதிப் பிறப்பிக்கப்படும் தற்காலிகச் சட்டம் English Meaning: (in India) an ordinance promulgated by the President or the Governor (of a state) when the legislature is not in session
அவசரப்படு (ஒன்றைச் செய்வதில் தேவை இல்லாமல்) வேகம்காட்டுதல் English Meaning: show undue haste
அவசரம் (கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும்) விரைவு English Meaning: haste
அவசியம்1 (இன்றியமையாத) தேவை English Meaning: necessity
அவசியம்2 கட்டாயமாக English Meaning: certainly
அவதரி (கடவுள், புகழ்பெற்றோர் ஆகியோரின் பிறப்பைக் குறிப்பிடும்போது) தோன்றுதல் English Meaning: (of god) descend
அவதானம் கூர்மையாகக் கவனித்தல் English Meaning: observation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together