iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

903 words starting with அ · page 18 of 19

அவதாரப் புருஷன் செய்வதற்கு அரிதான செயலைச் செய்துமுடிக்க என்றே (மனிதனாக) பிறந்தவன் English Meaning: man born with a mission
அவதாரம் ஏதேனும் ஓர் உருவத்தில் தெய்வம் எடுக்கும் பிறப்பு English Meaning: incarnation (of god)
அவதி1 துன்பம் English Meaning: distress
அவதி2 (கால நெருக்கடியால் ஏற்படும்) அவசரம் English Meaning: haste
அவதூறு (நற்பெயரைக் கெடுக்கும் அல்லது உண்மைக்கு மாறான) பழி English Meaning: ill report
அவநம்பிக்கை நம்பிக்கையின்மை English Meaning: lack of faith
அவமதி (தரப்பட வேண்டிய மதிப்பைத் தராமல்) இழிவுபடுத்துதல் English Meaning: treat with indignity or disrespect
அவமதிப்பு இழிவு English Meaning: disrespectful treatment
அவமரியாதை மரியாதைக் குறைவு English Meaning: disrespectful treatment
அவமானம் மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை English Meaning: shame
அவயவம் உடல் உறுப்பு English Meaning: human organ
அவரை இரு பகுதிகளாகப் பிரியக் கூடிய மெல்லிய பச்சை நிறத் தோலினுள் விதைகளைக் கொண்ட சிறு காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் ஒரு வகைக் கொடி English Meaning: field bean (the seed and the creeper)
அவரோகணம் ஏழு ஸ்வரங்களையும் படிப்படியாக மேலிருந்து கீழாக ஒலி அளவில் குறைக்கும் முறை English Meaning: descending scale of the seven notes from the highest to the basic
அவலட்சணம் அழகின்மை English Meaning: unsightliness
அவலம் வருந்தத்தக்க அல்லது இரங்கத்தக்க நிலை English Meaning: regrettable state
அவல் ஊறவைத்த நெல்லைக் காயவைத்து வறுத்து இடித்துப் பெறும் உணவுப் பண்டம் English Meaning: rice flakes prepared by soaking paddy, parching it and pounding it
அவஸ்தை துன்பம் English Meaning: distress
அவா ஆவல் English Meaning: desire
அவி1 வேகுதல் English Meaning: boil (in water)
அவி2 அணைதல் English Meaning: be extinguished
அவி3 வேகவைத்தல் English Meaning: steam (paddy, groundnut, etc.)
அவி4 (விளக்கு, அடுப்பு முதலியவற்றை) அணைத்தல் English Meaning: extinguish (lamp, furnace, etc.)
அவிசாரி சோரம்போன மனைவி English Meaning: adulteress
அவிசுவாசி கடவுள் நம்பிக்கை இல்லாதவன் English Meaning: unbeliever
அவிட்டம் இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்து மூன்றாவது English Meaning: the twenty third of the twenty seven stars
அவித்தியம் அஞ்ஞானம் English Meaning: ignorance
அவியல் பல வகைக் காய்கறிகளை அவித்து ஒன்றாகச் சேர்த்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி English Meaning: vegetable mix cooked with grated coconut
அவிழ்1 (கட்டு, முடிச்சு முதலியவை) பிரிதல் English Meaning: (of a knot, etc.) get untied
அவிழ்2 (கட்டு, முடிச்சு முதலியவற்றை அல்லது பிணைத்துக் கட்டியிருப்பதிலிருந்து ஒன்றை) பிரித்தல் English Meaning: untie
அவுரி நீல நிறச் சாயம் எடுக்கப் பயன்படும் சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகைக் குத்துச் செடி English Meaning: indigo plant
அவை முன்னவர் அவை நடவடிக்கைகளுக்கான நாள், நேரம் முதலியவற்றைக் குறிப்பதற்கும் ஆளுங்கட்சியின் தேவைகளைப் பேரவைத் தலைவரிடம் எடுத்துக்கூறுவதற்கும் நியமிக்கப்பட்ட ஆளுங்கட்சி உறுப்பினர் English Meaning: leader of the ruling party in the parliament or legislative assembly
அவை1 அரசன் தன் அமைச்சர்களுடன் காட்சி தரும் இடம் English Meaning: royal court
அவைத்தலைவர் மக்களவை, சட்டமன்றம் ஆகியவற்றில் சபை நடவடிக்கைகளை நடுவர் போல் இருந்து நடத்தும் பொறுப்பு வகிப்பவர் English Meaning: speaker (of the parliament or the state legislative assembly)
அவ்வப்போது முடிந்தபோதெல்லாம் English Meaning: from time to time
அவ்வளவாக (எதிர்மறை வினைகளோடு மட்டும்) அதிக அளவில் English Meaning: much
அவ்வளவு அந்த அளவு English Meaning: (that/so) much
அவ்வாறு அப்படி English Meaning: in the specified or required or desired manner
அவ்விடம்2 (பெரும்பாலும் கடிதம் எழுதும்போது) (கடிதம் பெறுபவர் இருக்கும் இடமான) அங்கு English Meaning: (mostly in letter writing) at your end
அஷ்டகோணம் எண்கோணம் English Meaning: octagon
அஷ்டகோணல் பலவிதமாக வளைந்து நெளிந்த நிலை English Meaning: contortion
அஷ்டதரித்திரம் அதிக வறுமை English Meaning: penury
அஷ்டமத்துச் சனி சந்திர லக்கினத்துக்கு எட்டாவது இடத்தில் இருப்பதால் தீமை பயக்கும் சனி English Meaning: Saturn in the eighth house from the position of the moon having malignant power
அஷ்டமி வளர்பிறையில் அல்லது தேய்பிறையில் எட்டாவது நாள் English Meaning: the eighth day of the waxing or waning moon
அஷ்டாவதானம் ஒரே நேரத்தில் நிகழும் எட்டுச் செயல்களைக் கவனித்து நினைவில் இருத்தும் கலைத் திறமை English Meaning: the skill of attending to many (eight) acts simultaneously and the ability to remember them
அஷ்டாவதானி அஷ்டாவதானம் செய்பவர் English Meaning: one who performs அஷ்டாவதானம்
அஸ்கா சீனி English Meaning: (loose) sugar
அஸ்தமனம் (சூரியனின் அல்லது சந்திரனின்) மறைவு English Meaning: setting (of the sun or moon)
அஸ்தமி (சூரியன், சந்திரன்) மறைதல் English Meaning: (of sun, moon) set
அஸ்தம் இருபத்தேழு நட்சத்திரங்களில் பதின்மூன்றாவது English Meaning: the thirteenth of the twentyseven stars
அஸ்தி இறந்தவரை எரித்த பின் எஞ்சும் சாம்பல் English Meaning: ash obtained by cremation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together