903 words starting with அ · page 2 of 19
Tamil Word
Tamil Meaning
English Meaning
அக்கி
அடையடையாக வேர்க்குரு போல் தோன்றிச் சிவந்து அரிப்பு ஏற்படுத்தும் தோல் நோய்
English Meaning:
herpes
அக்கினி
(பெரும்பாலும் சமயச் சடங்குகளில்) நெருப்பு
English Meaning:
fire
அக்கினி சாட்சியாக
(திருமணச் சடங்கில்) தீ வளர்த்து அதன் முன்னிலையில்
English Meaning:
in the presence of sacred fire
அக்கினி நட்சத்திரம்
கோடையில் (சித்திரை, வைகாசியில்) மிகுந்த வெப்பமான நாட்கள்
English Meaning:
hottest days (in May)
அக்கினி மூலை
தென்கிழக்குப் பக்கம்
English Meaning:
south-east part
அக்கிரமம்
கொடும் செயல்
English Meaning:
unjust or unfair act
அக்குள்
தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு
English Meaning:
armpit
அக்குவேறுஆணிவேறாக
கூறுகூறாக
English Meaning:
in bits and pieces
அக்ரகாரம்
நீண்ட காலமாக பிராமணர் குடியிருந்துவரும் பகுதி
English Meaning:
the area (in a village or town) where Brahmins traditionally live
அங்ககீனம்
உறுப்புக் குறை
English Meaning:
deformity
அங்கங்கே
தொடர்ச்சியாக இல்லாமல் பரவலாக
English Meaning:
here and there
அங்கசேஷ்டை
உடல் உறுப்புகளின் மிகையான அசைவு
English Meaning:
antics
அங்கணம்
(பழங்காலத்து வீடுகளில்) பயன்படுத்திய நீர் வெளியேறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட குழிவான அமைப்பு
English Meaning:
a ridged drainage basin in front of the house or in a corner of a room
அங்கதம்
(இலக்கியம், நாடகம் போன்றவற்றில்) மரபுகளை, பழக்கவழக்கங்களைப் பழித்துக் கேலிக்கு உள்ளாக்கும் முறை
English Meaning:
satire
அங்கத்தவர்
(ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றின்) உறுப்பினர்
English Meaning:
member
அங்கத்தினர்
உறுப்பினர்
English Meaning:
member (of an organized group)
அங்கத்துவம்
(ஓர் அமைப்பு, கட்சி முதலியவற்றில் ஒருவருக்கு உள்ள) உறுப்பினர் தகுதி
English Meaning:
membership
அங்கப்பிரதட்சிணம்
(வேண்டுதலை நிறைவேற்ற) கோயில் பிரகாரத்தில் படுத்துப் புரண்டு வலம் வருதல்
English Meaning:
rolling oneself clockwise around the inner passage of a temple (in fulfilment of a vow)
அங்கம்
ஒரு முழுமையின் அல்லது அமைப்பின் பகுதி
English Meaning:
part of a whole or an organization
அங்கலாய்
குறையைத் தெரிவித்துப் புலம்புதல்
English Meaning:
complain persistently
அங்கலாய்ப்பு
மனக்குறை
English Meaning:
complaint
அங்கவஸ்திரம்
(ஆண்கள் தோளில் போட்டுக்கொள்ளும்) அடுக்கடுக்கான மடிப்புகள் உள்ள நீண்ட துண்டு
English Meaning:
a long pleated piece of ornamental cloth (worn by men) on the shoulder
அங்காடி
பல பொருள்களை விற்பனைசெய்யும் பெரிய கடை அல்லது பல கடைகளின் தொகுதி
English Meaning:
(modern) market
அங்காத்தல்/அங்காப்பு
(மொழியில்) ஓர் ஒலியை ஒலிப்பதற்காக வாயைத் திறத்தல்
English Meaning:
opening of the mouth in pronouncing a sound
அங்கி
நீண்ட மேலுடை
English Meaning:
a long loose upper garment
அங்கீகரி
ஏற்றுக்கொள்ளுதல்
English Meaning:
accept
அங்கீகாரம்
(ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும்) ஒப்புதல்
English Meaning:
approval
அங்குசம்
யானையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க (பாகன்) பயன்படுத்தும் கருவி
English Meaning:
goad (used by mahouts)
அங்குலம்
ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பாகம்
English Meaning:
an inch
அங்குஸ்தான்
(தைக்கும்போது குத்தாமல் இருக்க) விரல் நுனியில் அணியும் உலோக உறை
English Meaning:
thimble
அங்கே
அந்த இடத்தில்
English Meaning:
there
அங்ஙனம்/-ஆக
அவ்வாறு
English Meaning:
in that manner
அச
அதிர்ச்சி அடைதல்
English Meaning:
be stunned or astonished
அசகாயசூரன்
பிறரால் செய்யக் கடினமாக இருப்பதை எளிதாக முடித்துவிடும் திறமை உள்ளவன்
English Meaning:
a person capable of accomplishing a difficult task with ease
அசக்கு
அசைத்தல்
English Meaning:
cause (even the) slightest movement
அசங்கு
அசைதல்
English Meaning:
move (slightly)
அசடுதட்டு
அசடுவழிதல்
English Meaning:
look foolish
அசடுவழி
முட்டாள்தனம் வெளிப்படுதல்
English Meaning:
look sheepish or foolish
அசட்டுச் சிரிப்பு
அர்த்தமற்ற சிரிப்பு
English Meaning:
foolish grin
அசட்டுப்பிசட்டு-என்று
முதிர்ச்சி வெளிப்படாத வகையில்
English Meaning:
foolishly
அசட்டை
(ஒருவரை அல்லது ஒன்றைப் பொருட்படுத்தாத) புறக்கணிப்பு
English Meaning:
neglect
அசதி
(வேலையால்) களைப்பு(பலக் குறைவால்) சோர்வு
English Meaning:
tiredness
அசத்து
திணறடித்தல்
English Meaning:
overawe
அசந்தர்ப்பம்
அசௌகரியமான அல்லது பொருத்தமற்ற வேளை
English Meaning:
inconvenient or inopportune time
அசப்பில்
சட்டென்று ஒரு பார்வையில்
English Meaning:
at a fleeting glance
அசமந்தம்
சுறுசுறுப்பும் உற்சாகமும் இல்லாத தன்மை
English Meaning:
dullness
அசம்பாவிதம்
நடக்கக்கூடாதது
English Meaning:
untoward incident
அசரீரி
(நிகழப்போவதைக் கூறும் முறையிலோ அறிவுறுத்தும் முறையிலோ) வானத்திலிருந்து எழுவதாகக் கூறப்படும் குரல்
English Meaning:
voice from heaven (making a prediction or instructing s
அசல்1
போலி அல்லாதது
English Meaning:
that which is real or genuine
அசாதாரணம்
பொதுவானதிலிருந்து வேறுபட்டது
English Meaning:
that which is extraordinary
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.