903 words starting with அ · page 3 of 19
Tamil Word
Tamil Meaning
English Meaning
அசாத்தியம்
(நம்ப முடியாத அளவுக்கு) மிகுதி
English Meaning:
in excess
அசிங்கம்
(-ஆக, -ஆன) தரக்குறைவு
English Meaning:
obscenity
அசிரத்தை
ஆர்வமின்மை
English Meaning:
lack of interest
அசுத்த ஆவி
மனிதரின் மனங்களை மாற்றக் கூடிய தீய சக்தி
English Meaning:
the evil spirit
அசுத்தம்
(-ஆக, -ஆன) சுத்தக் குறைவு
English Meaning:
lack of cleanliness
அசுமாத்தம்
சந்தடி
English Meaning:
noise
அசுர
மிகக் கடுமையான
English Meaning:
tremendous (work, speed, etc.)
அசுரன்
தேவர்களின் எதிரிகளான அரக்கர் குலத்துள் ஒருவன்
English Meaning:
a member of the class of demons at loggerheads with the devas, the celestial beings
அசுவமேத யாகம்
(பண்டைக் காலத்தில்) பேரரசர் தம் அரசாணையைப் பிறரும் ஏற்கும் முறையில் பட்டத்துக் குதிரையை அண்டை நாடுகளுக்கு அனுப்பி, அதனைப் பிடிக்க வந்தோரை வென்று, அதனைக் கொண்டுவந்து பலியிட்டுச் செய்யும் வேள்வி
English Meaning:
(in olden days) a ceremonial sacrifice of the invincible horse brought back after being sent to other kingdoms by the emperor who by means of this asserted his sovereign power
அசுவாரசியம்
ஈடுபாடு இல்லாமை
English Meaning:
lack of interest or enthusiasm
அசூயை
பொறாமை
English Meaning:
jealousy
அசை1
(மேலும் கீழும் அல்லது பக்கவாட்டில் மென்மையாக) ஆடுதல்
English Meaning:
(gently) sway
அசை3
(யாப்பில்) ஓர் உயிரெழுத்தை அல்லது உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்த இணையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட அலகு
English Meaning:
metrical syllable
அசைபோடு
(மாடு, மான் போன்ற சில விலங்கினம்) இரைப்பையிலிருந்து உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து தொடர்ந்து மெல்லுதல்
English Meaning:
(of cow, deer, etc.) chew the cud
அசையாப் பொருள்
ஓர் இடத்தில் நிலையாக இருக்கும் (நிலம், வீடு போன்ற) சொத்து
English Meaning:
immovable property (such as lands, house, etc.)
அசையும் பொருள்
ஓர் இடத்திலிருந்து எடுத்துச்செல்லக் கூடிய (வண்டி, கால்நடை போன்ற) சொத்து
English Meaning:
movable property (such as vehicles, cattle, etc.)
அசைவம்
(உணவில்) இறைச்சி, மீன் முதலியவை/மேற்சொன்னவற்றை உணவாகக் கொள்ளும் முறை
English Meaning:
(in food) meat and fish/the practice of eating meat and fish
அசைவு
(உடல் உறுப்புகளின்) இயக்கம்
English Meaning:
(of the body, parts of the body) movement
அசௌகரியம்
(-ஆக, -ஆன) வசதியின்மை(உடல்) நலக்குறைவு
English Meaning:
inconvenience
அசௌக்கியம்
(உடல்) நலமின்மை
English Meaning:
indisposition
அச்சகம்
அச்சுத் தொழில் நடைபெறும் இடம்
English Meaning:
printing press
அச்சம்
தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு
English Meaning:
fear
அச்சவாரம்
முன்பணம்
English Meaning:
advance
அச்சாகு
அச்சிடப்படுதல்
English Meaning:
get printed
அச்சாணி
சக்கரம் கழலாமல் இருக்க வண்டி இருசில் செருகப்படும் முளை
English Meaning:
axle pin (of a wheel)
அச்சாரம்
முன்பணம்
English Meaning:
money given in advance (to confirm a contract)
அச்சிடு
(எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப்பொறிகொண்டு) பதித்தல்
English Meaning:
print (a book, etc.)
அச்சு நாடுகள்
இரண்டாம் உலகப் போரில் கூட்டாக இயங்கிய ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள்
English Meaning:
the Axis
அச்சு1
(நூல் முதலியன) அச்சிடுவதற்கான (பெரும்பாலும் உலோகத்தால் செய்த) எழுத்து, எண் முதலியன
English Meaning:
type in printing
அச்சு2
வாகனத்தின் இரு சக்கரங்களையும் இணைக்கும் இரும்புத் தண்டு
English Meaning:
axle
அச்சுக்கோ
(இயந்திரத்தின்மூலம் தாளில் பதிப்பதற்கு ஏற்ற வகையில்) உலோக அச்சு எழுத்துகளை உரிய வரிசையில் அமைத்தல்
English Meaning:
(of printing) compose
அச்சுப் பிழை
அச்சிடும்போது நேரிடும் எழுத்து மாற்றம், எழுத்து விடுபடுதல் முதலிய தவறுகள்
English Meaning:
errors in printing
அச்சுப்பொறி
நூல் முதலியன அச்சிடுவதற்கான இயந்திரம்
English Meaning:
printing machine
அச்சுறுத்தல்
பயப்படும்படியான கெடுதலுக்குக் காரணமாக இருப்பது
English Meaning:
threat
அச்சுறுத்து
பயமுறுத்துதல்
English Meaning:
threaten
அச்சுவெல்லம்
அச்சைப் பயன்படுத்திச் செய்யப்படும் சிறு வெல்லம்
English Meaning:
jaggery moulded in the shape of a cone with the top flattened
அச்சேறு
(நூல்) அச்சிடப்படுதல்
English Meaning:
get printed
அச்சேற்று
(நூலை) அச்சிடுதல்
English Meaning:
get (a work) printed
அச்சொட்டாக
சரியொப்பாக
English Meaning:
exactly (as it is)
அஜாக்கிரதை
கவனமின்மை
English Meaning:
carelessness
அஜீரணம்
(உணவு) செரிக்காத நிலை
English Meaning:
indigestion
அஞ்சனம்
கண்ணில் தீட்டிக்கொள்ளும் மை
English Meaning:
eye cosmetic, black in colour (prepared traditionally by burning coconut shell and mixing oil with it) to be applied on the rim of the eyes
அஞ்சறைப்பெட்டி
கடுகு, மிளகு முதலிய மளிகைச் சாமான் வைப்பதற்காகச் சில அறைகள் உள்ளதாக (பெரும்பாலும்) மரத்தால் செய்யப்பட்ட பெட்டி
English Meaning:
a box (normally of wood) with compartments to keep spices
அஞ்சலி
இறைவனுக்கும் பெரியோருக்கும் அல்லது இறந்தவர் நினைவுக்குச் செலுத்தும் மரியாதை
English Meaning:
worship
அஞ்சல்
ஓர் இடத்தில் இருப்பவர் மற்றோர் இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவற்றை அனுப்பிவைக்கும் (அரசு நிர்வகிக்கும்) அமைப்பு முறை
English Meaning:
postal system
அஞ்சல் அட்டை
அஞ்சல் நிலையம் விற்கும் கடிதம் எழுதுவதற்கான அட்டை
English Meaning:
post card
அஞ்சல் ஆணை
ஓர் அஞ்சல் நிலையத்தில் செலுத்திய பணத்தை மற்றோர் அஞ்சல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளத் தரும் மதிப்புச் சீட்டு
English Meaning:
postal order
அஞ்சல் உறை
அஞ்சல் நிலையம் விற்கும் கடிதம் அனுப்புவதற்கான காகித உறை
English Meaning:
envelope for letters sold by post office
அஞ்சல் எழுத்தர்
(அலுவலகத்தில், நிறுவனத்தில்) கடிதங்களை அனுப்புவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர்
English Meaning:
clerk in charge of dispatching letters (in an office)
அஞ்சல் குறியீட்டு எண்
அஞ்சல் துறை நாட்டிலுள்ள எல்லா ஊர்களுக்கும் குறிப்பிட்ட முறைப்படி வழங்கியிருக்கும் எண்
English Meaning:
(of postal service) postal index number (also known as pincode)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.